ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இன்று அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இலங்கையின் அரச தலைவர் ஒருவர் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்லின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்கின்றார்.
இதற்கு முன்னதாக 1954ஆம் ஆண்டில் பிரதமராக பதவி வகித்த சேர் ஜோன் கொத்தலாவல அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
63 ஆண்டுகளின் பின்னர் இலங்கை அரச தலைவர் ஒருவர் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி அவுஸ்திரேலியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளார் என அரசாங்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.