இலங்கையில் இடம்பெற்ற கொடூர விபத்தொன்றில் சிக்கிய பிரித்தானிய பெண்ணொருவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Ivana Tensek என்ற யோகா பயிற்றுவிப்பாளரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் கால்கள், இடுப்பு மற்றும் கைகளின் எலும்புகள் உடைந்துள்ள நிலையில், யோகா பயிற்றுவிப்பாளர் 12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தற்போது அவர் இலங்கை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிக சிகிச்சை வழங்குவதற்காக அவரை லண்டன் அழைத்து செல்வதற்கான முயற்சிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக Ivana விபத்துக்கு விபத்தொன்றுக்கு முகம் கொடுத்து விட்டார் என அவரது நெருங்கிய நண்பி Yenabi Talitha-Cumi Araújo தெரிவித்துள்ளார்.
Ivana ஒரு வாரத்திற்குள் பிரித்தானியா செல்ல தயாராக இருந்த போதிலும் இவ்வாறு ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Ivanaவின் சிகிச்சைக்காக அவரை லண்டன் அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக அவரது நண்பி GoFundMe page என்ற பக்கம் ஒன்றை ஆரம்பித்து உதவி கோரியுள்ளார்.
50,000 பவுண்ட்களை பெற்றுக்கொள்ள முயற்சி செய்கின்றோம். அவருக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டால் முழுமையாக குணமடைந்து அவர் குடும்பத்தினருடன் இணைய முடியும் என அவரது நண்பி குறித்த பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Ivana வின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் இதுவரை 15,000 பவுண்ட்களுக்கு அதிகமாக சேகரித்துள்ளார்.
அவரது விபத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் மாத்தறைக்கு அருகிலுள்ள Hangtime Hostel இல் யோகா பயிற்றுவிப்பாளராக பணியாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.