அமைச்சரவை மாற்றம் சற்று முன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில், ஒன்பது பேருக்கு அமைச்சர் பதவியும் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பதவியை சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களிடம் எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் இவர்கள் ஜனாதிபதி செயலகத்தை விட்டு சென்றுள்ளனர்.
இதேவேளை, நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.