சிறுவர்கள் மத்தியில் புதிய நோய் ஒன்று பரவுகின்றது என எச்சரித்துள்ள மருத்துவ நிபுணர்கள் பெற்றோர் எச்சரிக்கையாகயிருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர் நளின் கித்துல்வட்ட இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் 2020 இல் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பாதிப்பினால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோய் அறிகுறி கொரோனாவைரஸ் தொடர்பிலானது என தெரிவித்துள்ள அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பின்னர் இரண்டு முதல் ஆறு வாரங்களிற்குள் சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காய்ச்சல் வயிற்றுவில உடல்களைப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆபத்தான நிலையேற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகள் தீவிரகிசி;ச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.