ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா உள்ளிட்ட அதன் சில கூட்டணி நாடுகள் மீளாய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அது குறித்து இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் ஈரான் குறித்து விழித்துக் கொள்ள வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிக அணு ஆயுதங்களை விற்க விரும்புகிறது. இதற்கானவே சர்வதேசம் தொடர்பான கொள்கைகளை மாற்றிஅமைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது என பென்னட் கூறியுள்ளார்.
ஆனால் இஸ்ரேல் பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.
ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து டிரம்பின் ஆட்சியின்போது அமெரிக்கா வெளியேறியது. எனினும் அந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து வருவதாக ராஜீய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மேலும் சில தீர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் அதில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இப்ராஹிம் ரைசி, உலகத்துடனான ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளை வலுவாக்குவது தனது அரசின் முன்னுரிமையாக இருக்கும் என அறிவித்தார்.
எங்களை எதிரிகளாக பார்க்க விரும்பாதவர்களுடன் நட்பு, கண்ணியத்துடன் நாங்கள் சிறப்பான தொடர்புகளைப் பேணுவோம் எனவும் இப்ராஹிம் ரைசி கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.