கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள். எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள். -தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் தரைக் கரும்புலிகள் மறைமுகக் கரும்புலிகள் கடற் கரும்புலிகள் வான் கரும்புலிகள் எனப் படைப்பிரிவுகளைக் கொண்டு திகழ்ந்தார்கள்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கரும்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது. போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.
‘கரும்புலிகள்’ (Black Tigers) என்பது தற்கொடைப் பிரிவைச் சேர்ந்தவர்களைக் குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தைமுன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காகத் துறப்பதற்கு எப்பொழுதுமே தயாராய் இருப்பவர்கள். இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே குப்பி (சைனைட்) கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர். கரும்புலிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதை விட தமது உயிரைக் கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மிக அரிதாக அவர்கள் தப்பித் திரும்பி வரும் சந்தர்ப்பங்களும் உண்டு. எப்படியிருந்த போதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும் போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காகவும் தியாகம் செய்யத் தயாராகவே இருப்பார்கள்.
மறைமுகக் கரும்புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியைச் சேர்ந்தவர்கள். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடை நீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் கொண்டவர்கள். தற்கொடைத் தாக்குதலை நடத்துபவர்கள்.
வீரச்சாவடையும் கரும்புலிகளுக்கு இராணுவ நிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். நினைவு நாட்களில் அவர்களின் பெயர் அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும் கௌரவமும் வழங்கப்பட்டுக் கல்லறையிலோ நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர்.
தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். இவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்படமாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வராது. கல்லறைகளோ நினைவுக்கற்களோ இவர்களுக்காக இருக்காது. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெற மாட்டாது. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள் இவர்கள். இவர்களே மறைமுகக் கரும்புலிகள்.
விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல தமிழர்கள் தான் விடுதலைப் புலிகள் என உலகத்துக்கு எடுத்துக் கூறியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். கரும்புலிகள். உலகளாவிய ரீதியில் வல்லரசு நாடுகளிலும் கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் பேசப்பட்டது. சக்திமிக்கதொரு விடுதலைப் புலிகளின் தற்கொடைப் படை- தரை கடல் வானிலும் எங்கள் வீர வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்கள் எங்கள் கரும்புலிகள். உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் கரும்புலிகளின் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன்மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கரும்புலிகள் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு விடுதலைப் புலி வீரனும் வீராங்கனையும் சாவைச் சந்திக்க தயாரான நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் தங்களுடைய சாவு எப்போது வரும் என்பது அவர்களுக்கு தெரியாது பல கரும்புலித் தாக்குதல்களில் ஆண்கள், பெண்கள் என முன்னூறுக்குமதிகமான வீரர் வீராங்கனைகள் தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரச்சாவடைந்துள்ளார்கள். போர் வீரர்களில் கரும்புலிகள் நிலை வேறுபட்டது. களம் புகுவதற்கு பல நாட்கள் முன்னமே தங்களுடைய வீரச்சாவை தெரிந்து விடுகிறார்கள். நாள் குறித்து அடுத்த நிமிடத்தில் சாகப்போகிறேன் என்ற உண்மையை பூரணமாக தெரிந்து கொண்டுதான் கரும்புலிகள் வெடிமருந்தை தங்களுடன் கொண்டு சென்று இலக்கினை அழித்தார்கள்.
போராட்டம் இக்கட்டுக்குள்ளான பல நேரங்களில் இவ்வாறான தாக்குதல்கள் தான் போர்க்களத்திலும் அரசியலிலும் வெற்றியைத் தேடித்தந்தது. இன்றுவரை சிங்களக் கடற்படையின் போக்குவரத்துக்களைக் குலைத்து அவர்களின் மேல் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்தது கடற்புலிகள் அணி. இதைவிட முக்கியமாக போராட்டதுக்கான முழு விநியோகமும் கடல்வழி மூலந்தான். அதைச் சரியாகச் செய்துவந்ததும் கடற்புலிகள் அணி. பல கடற்கலங்களை மூழ்கடித்து பெரும்பொருளாதார இழப்பைக் கொடுத்ததும் இந்தக் கடற்கரும்புலிகள் அணிதான்.
இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் பல தாக்குதல்களில் 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு சிறீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீரவரலாறானார்கள். 2007ஆம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம்மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர்சூட்டப்பட்ட கரும்புலித்தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
தரையிலும் கடலிலும் வான் தாக்குதல்கள் புலிகளாளும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை, ஆண்கள், பெண்கள் என 350க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரமிகு வரலாறுகளைகளைப் படைத்து வீரச்சாவடைந்துள்ளார்கள். இவற்றைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறையவுள்ளன. 2009 ஆம் ஆண்டு வான்கரும்புலிகளும் தற்கொடைத் தாக்குதல்களை நடத்தினார்கள். இவை வெளிப்படையாக பேசப்படும் தாக்குதல்கள். இவற்றைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறையவுள்ளன.
தேச பக்தியையும் வீர உணர்வையும் அடித்தளமாக் கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தமையால் உலகில் எவரும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தை நாம் பெற்றுக் கொள்ள முடியும் என பெண்களின் பங்களிப்பு இத்தாக்குதல்களில் சரிசமமாயுள்ளது. 2009 முள்ளிவாய்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீரவரலாறானார்கள். வெளியில் தெரியாத அந்த அற்புதமனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்ள வேண்டும்.
பல வல்லரசுகளின் துணையோடு போரிடும் ஒரு நாட்டுப் படைக்கு எதிராக தன் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு விடுதலை இயக்கம் போராடும்போது அது சில அதீதமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனஉறுதியும் தியாகமுமே அவ்விரு படைகளுக்குமிடையிலான வித்தியாசமாகும். தற்கொடைத்தாக்குதல் வடிவம் ஓரளவுக்கு இராணுவச் சமநிலையைப் பேணியது என்றுதான் சொல்ல வேண்டும். ‘பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். அவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் கரும்புலிகள்.
கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரைக் கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தாக்குதல் நடவடிக்கைக்கு செல்லும் தற்கொடை வீரர்கள் அரிதாக, மிக அரிதாக தப்பி திரும்பி வரும் சந்தர்ப்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது நாள் நேரம் குறித்து தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பார்கள். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் தரைக் கரும்புலிகள் மறைமுகக் கரும்புலிகள் கடற் கரும்புலிகள் வான் கரும்புலிகள் என முதலில் வீரச்சாவடைந்தவர்கள் பற்றி சற்றுப் பார்போம்.
தமிழீழத்தின் முதல் கரும்புலி
கப்டன் மில்லர் என அழைக்கப்படும் வல்லிபுரம் வசந்தன் 1966 தை 01 நாள் பிறந்தார். வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் கூடப்பிறந்தவர்கள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றார்.
இளம் வயதிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த வசந்தன் இயக்கத்தில் மில்லர் என அழைக்கப்பட்டார். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறார். ஒவ்வொரு மோதலிலும் மில்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றார் பின்னர் கரும்புலிகள் பிரிவு உருவாக்கத்தில் கரும்புலியாக இணைக்கப்பட்டார்.
‘விடுதலை நடவடிக்கை’ (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியான வடமராட்சியைக் கைப்பற்ற 1987 இன் நடுப்பகுதியில் நடவடிக்கையொன்றை மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது. இலங்கை இராணுவம் வடமாராட்சி மீதான தாக்குதலை ஆரம்பித்தபோது, மில்லர் (வசந்தன்) இயக்கத்திற்காகத் தனது உயிரைக் கொடுக்கத் துணிந்தார். 1987 யூலை மாதம் 05 ஆம்நாள் இலங்கை இராணுவத்திற்கு எதிராக மில்லரினால் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சுமையுந்து ஒன்றை கரவெட்டியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரின் முகாம் மீது செலுத்தி வெடிக்கத்திட்டமிட்டார்.
திட்டமிட்டதைவிட இன்னும் உள்ளே சென்று இரு கட்டடங்களுக்கிடையில் வாகனத்தை நிறுத்தி வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரபூர்வ செய்தியின்படி 1987 யூலை 5 நாள் அன்று சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3நிமிடத்திற்கு மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. அதன் பின் கப்டன் மில்லர் என மதிப்பளிக்கப்பட்டார். நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்திட கரும்புலிகள் வரலாறு உதயமானது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர்கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 34 ஆண்டுகள் கடந்துவிட்டன. கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தார். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது.
நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது. மில்லரின் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகள் இராணுவத் தளம் மீது தாக்குதல்களைத் தொடர்ந்தனர். கரும்புலி கப்டன் மில்லர் முதலாவது கரும்புலியாகவும் புலிகளின் முதலாவது தற்கொடைப் போராளி எனவும் புகழப்படுகிறார். இவரது நினைவாக தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 2002 ஆம் ஆண்டில் கப்டன் மில்லரின் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.
கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில், நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐPவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.
இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சினையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் அப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்குக் கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டார்.
தமிழீழத்தின் முதல் கடற்கரும்புலிகள்
யோகராசா கோணேஸ்வரன் என்னும் இயற்பெயரைக்கொண்ட மேஜர் காந்தரூபன் 1971 செப்டம்பர் 10 நாள் பிறந்தார். சின்ன வயது முதல் பெரியதாயுடன் கூடவே வல்வெட்டித்துறை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தான். இயக்கத்திற்குப் போய் கொஞ்சக் காலத்தில பெரிய அறிவாளியாக இருந்தார். பெரிய அரசியல் மேதைகளைப் போல் விளக்கம்கொடுப்பார். அந்தளவுக்கு அவரை விடுதலைப் போராட்டம் தான் வளர்த்து விட்டது.
1987 இன் ஆரம்பத்தில். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தார். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில் எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக சக நண்பர்களால் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
இருந்தபோதும், குப்பி (சயனைட் ) விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர் வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது. தலைவரின் துணைவியார் (மதிவதனி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார். அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிற்பார்.
1988, 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றார். ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தார். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர். ‘அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ’ என்றார்.
தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னார்;. தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள்… அப்பா அம்மா இல்லாம சொந்தக்காரரின் ஆதரவில்லாமல் அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாமல் படிக்க வசதி இல்லாமல் எவ்வளவோ ஏக்கங்களோடையும் துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை நான் அனுபவித்ததில் கண்டார் அண்ணை….நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேண்டும் என்றார்.
அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. தலைவரின் இதயத்தை இது தொட்டது.
1990 ஆடி10ம் நாள் அன்று வல்வெட்டித்துறைக் கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் ‘எடித்தாரா’ மீதான கரும்புலித் தாக்குதலில் முதாலாவது கடற்கரும்புலிகளில் கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோருடன் மேஜர் காந்தரூபனும் ஒருவராவார்.
காந்தரூபனின் வேண்டுகோள் தலைவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவனது வேண்டுகோளுக்கு அமைய காந்தரூபன் அறிவுச்சோலை என்ற சிறுவர் இல்லம் 1993 நவம்பர் 13ம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வேலுப்பிள்ளை திலகராசா இயற்பெயரைக்கொண்ட கப்டன் வினோத் 1970 ஆவணி 19ம் நாள் அன்று பிறந்து வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வாழ்ந்து. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இயல்பாகவே மற்றவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களை மகிழ்வில் ஆழ்த்தக்கூடிய சுபாவம் கொண்டிருந்தவர் வினோத்.
1988ம் ஆண்டுக் காலப்பகுதி… வினோத்தின் வீட்டை இந்தியப் படைகள் அடிக்கடி சுற்றி வளைத்தனர். அவனைத் தேடி இந்திய சிப்பாய்கள் அங்கு பாய்வதும் வழமையாகிவிட்டது. அந்த ஆபத்தான பொழுதுகளில் வீட்டுக் கூரைக்குள் ஏற்றி பெற்றோரால் அவன் மறைத்துக் காக்கப்படுவார்.
மேலேயிருந்து ‘சயனைட்’ குப்பியைப் பற்களுக்கிடையில் செருகிக்கொண்டு எதனையும் எதிர்பார்த்து நொடிகளை எண்ணிக்கொண்டிருப்பான் வினோத். இவ்வாறு ஓர் நாள் அதிகாலைப் பொழுதில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த இந்தியராணுவத்திடம் வினோத் சர்ந்தப்பவசமாகச் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. வீட்டில் எல்லோரும் பார்த்து நிற்க துவைத்து எடுத்துவிட்டு அவர்கள் அவனை இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
இந்தியனிடம் பிடிபட்டு காங்கேசன்துறையில் இருக்கும்போதும் குடும்பம் பார்க்கப் போகும்போதும் வீட்டில தான் வைத்துவிட்டுப்போன சாமான்களைப் பற்றித்தான் சொல்லுவார்…. ‘அதுகளைப் பத்திரமா எடுத்துப் பெடியளிட்டை குடுத்து விடோணும் என்கிறதிலதான் அவரின் கவனமெல்லாம் இருந்திருக்கிறது’. இந்தியப்படை இங்கிருந்து வெளியேற்றப்பட்ட போது ஏனையவர்களுடன் வினோத்தும் விடுவிக்கப்பட்டார்.
கடற்கரும்புலியான இவர் 1990 ஆடி 10ம் நாள் அன்று வல்வெட்டித்துறை கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் ‘எடித்தாரா’ மீதான கரும்புலித் தாக்குதலில் முதாலாவது கடற்கரும்புலிகளில் மேஜர் காந்தரூபன் கப்டன் கொலின்ஸ் ஆகியோருடன் கப்டன் வினோத்தும் ஒருவராய் வீரச்சாவடைந்தார்.
பர்ணாந்து சில்வஸ்டர் என்னும் இயற்பெயரைக்கொண்ட கப்டன் கொலின் பிறந்து 1969 வைகாசி 12 ம் நாள் அன்று பிறந்தார். நறுவிலிக்குளம், மன்னாரில் வாழ்ந்தார். விளையாட்டில் கெட்டிக்காரர். நல்லாப் படிப்பார். அவர் படித்துக் கொண்டிருந்த வேளை ஊரிலையும் சிங்கள இராணுத்வதின் சுற்றி வளைத்து அங்கிருந்த பலரை பிடித்துக் கொண்டு போனார்கள்.
அதனால் அவனுக்கு சரியான கவலை, பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லும்போதும் இராணுத்வதின் கையில் பிடிபட்டு சாவதைவிட ஒரு இராணுத்வதினைத் தானும் சுட்டுட்டு சாகலாம் என்று சொல்லுவார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டு ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார். அவர் பிறந்து வளர்ந்தது மன்னார் மாவட்டத்தின் நறுவிலிக்குளம் என்னும் கிராமத்தில். இவனது பெற்றோர் ஏதிலிகளாயாய் இருந்தார்கள்.
ஊருக்கு வந்தபோது தான் படித்த பாடசாலை, பழகிய இடங்கள் எங்கும் சென்றார்;. கூடித்திரிந்த நண்பர்களுடன் பாசத்தோடு கதைத்தார். இவன் விடுமுறை முடிந்து செல்வதற்கு முதல் நாள் தாயைப் பார்த்து, அம்மா …. நான் இயக்க வேலையாக ஒரு இடத்திற்கு போக இருக்கிறன். இது முக்கியமான வேளை, இந்த வேலையின் உழைப்பு வீட்டிற்கு வராது, அது நாட்டிற்கு மட்டும்தான். என்று சொன்னான். அப்போது அவனது பெற்றோர் அதனை பெரிதாக கருதவில்லை. அவனோடு படித்த கூடித்திரிந்த நண்பர்களிடம் ‘நாட்டுக்காகச் சாக ஒருக்காலும் பயப்படக்கூடாது’ என கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் கூறியிருக்கின்றார்;.
1990 ஆடி 07நாள் அன்று வல்வெட்டித்துறைக் கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் ‘எடித்தாரா’ மீதான கரும்புலித் தாக்குதலில். முதலாவது கடற்கரும்புலிகளில் மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத் ஆகியோருடன் ஒருவனாய் வீரச்சாவடைந்தார் இந்த 21 வயது இளைஞன் கரும்புலி கொலின் கரும்புலியாகி வீரம் விளைந்த வடகடலின் நீரிலும், காற்றிலும், கலந்து வாழ்கிறார். இவரது தாய் தனது துயரைத் துடைக்க பேரக் குழந்தைக்கு (மூத்த மகளின் மகனுக்கு) ‘கொலின்’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். அந்த அழியாத பெயர் இவர்களுக்கு ஓர் ஆறுதலையும், துணிவின் உறுதிப்பாட்டையும் தந்து நிற்பதை அந்த வீட்டாருடன் உரையாடக்கிடைத்த போது உணர முடிந்தது.
தமிழீழத்தின் முதல் பெண் கடற்கரும்புலி
அங்கயற்கண்ணி என்னும் இயக்கப் பெயர் கொண்ட துரைசிங்கம் புஸ்பகலா 1973 மே 10ம் நாள் அன்று பிறந்தார். இளம்வயதில் தன்னை விடுதலைப் புலியாக்கினார். அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளில் முக்கிய உறுப்பினராக இருந்து செயல்பட்டவர்.
கடற்புலிகள் மகளிர் படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவர் குழுத் தலைவியாக இருந்து வந்தார்.. வரலாற்றுப் புகழ் மிக்க தவளை நடவடிக்கையின்போது லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருவராகக் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
விளையாட்டில் இவர் திறனுடன் விளங்கினார். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தார். எட்டு மணித்தியாலம் இருபத்தேழு நிமிடங்களில் பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்தினார்.
எமது மக்கள் ஸ்ரீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வருவதும் அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானார். ஸ்ரீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித் தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழ வேரோடியிருக்க வேண்டும்.
சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டார். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினார். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவரால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, தன் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.
இலக்கை அடிக்காமல் நான் திரும்பமாட்டேன்.என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றார். காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலை கொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.
1994 ஆவணி 16 ம் நாள் அன்று அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
காங்கேசன்துறை துறைமுகத்திற்குள் ஊடுருவி அங்கு தரித்து நின்ற கண்காணிப்புக் கப்பலைத் தகர்த்த முதற் பெண் கடற்கரும்புலி கடற்பரப்பில் காற்றோடு கலந்த கப்டன் அங்கயற்கண்ணி தன்னையும் சரித்திரமாக்கினார்;. ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டு ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டார். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வீர வரலாற்று கப்டன் அங்கயற்கண்ணி கரும்புலித் தாக்குதல்.
முதல் பெண் தரைக் கரும்புலி
வவுனியா சேமன் மடுவில் 1971ம் ஆண்டு மாசி ஐந்தாம் நாள் பிறந்தாள் சுப்புரமணியம் ராகினி என இயற்பெயரைக் கொண்டு பத்து பிள்ளைகளை பெற்றடுத்த இவள் தந்தையார் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். இராணுவ ஆக்கிரமிப்பு இவர்களது குடும்பத்திற்கு பெரும் தும்பியலைக் கொடுத்தது.
இவளது மூத்த சகோதரி தர்சினி என்ற பெயருடன் மகளிரின் முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்து 1987 ம் ஆண்டு வீரச்சாவை தழுவிக்கொண்டார். இதன் பின்னர் 1991 ம் ஆண்டு யாழினி விடுதலைப் புலியாக தன்னையும் இணைத்துக் கொண்டார்.
இயக்கத்தில் இணைந்த யாழினி 20 தாம் பயிற்சி முகாமில் அடிப்படை பயிற்சி முடித்து ஒளிக்கலைப் பிரிவில் தனது பணியை தொடங்கியிருந்தார் கலை உணர்வு இவரிடம் இயல்பாகவே இருந்தது. நன்றாக ஓவியங்கள் வரையும் ஆற்ரல் இருந்தது, அறிவு சார் புத்தகங்களை வாசித்து வந்தமையால் எல்லோருக்கும் அறிவுரை கூறிக்கொண்டிருப்பார்.
இயற்கையுடன் ஒன்றிய வாழ்வியல் ஏதாவது புதுமையைச் செய்ய தூண்டியது. இரண்டு வருடங்கள் விசேட வேவுப் பிரிவில் வேவுப்பணியில் நின்று கட்டைக்காடு, பத்தமேனி, பூநகரி போன்ற சமர்களுக்கான வேவுப் பணியை செய்திருந்தார்.
அதன் பின் 1996ம் ஆண்டு கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். தலைமையின் அனுமதி கிடைத்ததும் கரும்புலி பயிற்சியைத் தொடங்கினார். கடுமையான பயிற்சி எந்தவொரு ஆயுதமாக இருந்தாலும் அதை இலகுவில் இயக்கப் பழகிக்கொள்ளும் திறன் கொண்டிருந்தார்.
ஆண்போராளிகளுக்குப் போட்டியாகவே தனது அணிப் போராளிகளையும் மிகவும் துணிச்சல்மிக்கவர்களாக வளர்த்தெடுத்தார். கலகலப்பு இல்லாத பொறுப்புவாய்ந்த நேர்மையான போராளி. எப்போதும் எதையும் தட்டிக்கேக்கும் இயல்பு கொண்டவர் ஆண்போராளிகளின் துணையின்றி பெண் போராளிகள் தனித்து எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இவரது ஆழ்மனதில் இருந்தது.
மணலாற்றில் அரசபடைகளின் கஜபார இராணுவ நடவடிக்கையை முறியடிக்க அமைத்த சண்டைக்களம் இவரது முதற்களம். அந்தச் சண்டையின்போது அவர் மணலாற்றுக் காட்டிலே நின்றார். ஆரம்பப்பயிற்சி ஆரம்பித்து ஏழு நாட்கள்தான் முடிவுற்ற நிலையில் இவர்களுக்கு காவும் குழுவேலை கொடுக்கப்பட்டது. இறுதிநேரச் சண்டை எதிர்பார்த்ததைவிட அமர்க்களமாக நடந்ததால் அதுவே இவருக்கு பெரிய அனுபவமாக இருந்தது.
மணலாற்றிலிருந்து புகைப்படப்பிரிவிற்குவந்து புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டிருந்த போதுதான் கரும்புலியாகப் போகவேண்டும் என்பதே அவரின் மூச்சாகிப்போனது. அங்கிருந்தபடியே மாதத்திற்கு குறைந்தது ஒருதடவையாவது தலைவருக்குக் கடிதம் எழுதுவார். அதன்படி அவர் கரும்புலியாகத் தெரிவுசெய்யப்பட்டு வேவுப்பயிற்சி அளிக்கப்பட்டு வேவுகளில் ஈடுபட்டார்.
ஒருமுறை இயக்கச்சிப்பகுதியில் வேவு எடுக்கச்சென்ற சமயத்தில் நாரிப்பகுதியில் அவருக்குப் பலமான காயம். அந்தக் காயத்தினால் சிறிதுகாலம் நாரிப்பகுதியில் உணர்வின்றி இருந்தார். அந்த நாட்களிலும் கரும்புலியாகப்போய் சாதிக்கவேண்டும் என்ற உறுதிமட்டும் குறையவில்லை.
‘வேவு நான் போய் எடுத்துவாறன்’ என்று உறுதியளித்தபடி யாழினி போயிருந்தார். சொன்னபடியே பகல்போல நிலவு எறிந்த அந்த இரவில் மின்சார வெளிச்சங்களும் தேடொழியும் சேர்ந்து இரவைப்பகலாக்க மண் அணைதாண்டி உட்சென்று அவள் எடுத்துவந்த வேவு அவள்மீது எல்லோருக்கும் அசையாத நம்பிக்கையைக் கொடுத்தது.
இலக்குக்குப் போகின்ற கடைசி நேரம்வரை அவளுக்குக் காய்ச்சல். இலக்குக்கான மாதிரிப் பயிற்சியையும் காய்ச்சலுடன்தான் செய்து முடித்தார். விரைவாகத் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் நழுவிப்போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் தனது இயலாமையைக்கூட வெளிப்படுத்தாது இரவிரவாக கடுமையான மாதிரிப் பயிற்சிகளைச் செய்து முடித்த பின்பே தனது இலக்குக்குச் சென்றார்.
‘தற்செயலாய் இலக்கை அடையமுதல் அங்கே காயப்பட்டால் கூட குறோல் இழுத்தாவது இலக்குக்குப் போவன்’ என சொல்லிவிட்டுச் சென்ற கடைசி வார்த்தை. ‘வெற்றி உறுதி’ என்ற பெயரில் எதிரியால் முன்னெடுக்கப்பட்ட சமரை முறியடிக்கும் முகமாக தாண்டிக்குளம் முகாமை தகர்த்தழிப்பதே இலக்காகக் கொண்டு 06-10-1997 அன்று ஜெயசிக்குறுப் படைக்கு விழுந்த முதலாவது மரண அடியாக வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் தாண்டிக்குளம் தாக்குதல் அமைந்துவிட்டது.
இந்த தாக்குதலில் கரும்புலி மேஜர் யாழினியுடன் மற்றும் கரும்புலி மேஜர் நிதன், கரும்புலி கப்டன் சாதுரியன், வீரகாவியமாகி இருந்தனர். முதல் பெண் தரைக் கரும்புலி என்ற பெருமையை எமது நாட்டில் நிலை நாட்டி வீட்டிற்கு இரண்டாவது மாவீரராக சாதனை படைத்தவர் முதல் பெண் தரைக் கரும்புலி என்ற இந்த பெருமைக்குரியவர் மேஜர் யாழினி.
முதல் வான் கரும்புலிகள்
கேணல். ரூபன் , லெப்.கேணல். சிரித்தரன்
சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய வான்கரும்புலி மறவர்கள்
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். திறமையான வீரச்செயல்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்கள் வரலாறு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.
மறைமுகக் கரும்புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியைச் சேர்ந்தவர்கள். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் கொண்டவர்கள். தற்கொடைத்தாக்குதலை நடத்துபவர்கள் கரும்புலிகள் என்ற பெயரால் அழைக்கப்படுவர்.
வீரச்சாவடையும் கரும்புலிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். நினைவுநாட்களில் அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும், கௌரவமும் வழங்கப்பட்டு கல்லறையிலோ, நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர்.
தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். இவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வராது. கல்லறைகளோ, நினைவுக்கற்களோ இவர்களுக்காக இருக்காது. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறமாட்டாது. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள் இவர்கள். இவர்களே ‘மறைமுகக் கரும்புலிகள்’
வேர்கள் வெளியினில் தெரிவதில்லை- சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை – கரும் புலிகளின் கல்லறை வெளியில் இல்லை. என கவிபாடி உள்ளார் புரட்சிக் கவிஞர் புதுவை இரத்தினதுரை.
களம்புகும் கரும்புலிகளின் பிரமிப்பூட்டும் வீரச் சாதனைகள், சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு கிலியை உண்டுபண்ணுகின்ற அதே சமயம், அந்த உன்னதமான அர்ப்பண உணர்வு எற்படுத்தும் சமூகத் தாக்கம், தமிழீழக் குடிமக்களின் மனதில் இருக்கும் சுதந்திர ஒளியை இன்னும் வளர்த்து செல்லும் என்பது உறுதி. தமது உயிர்களைத் தாயக விடுதலைக்காக நம்பிக்கையுடன் மண்ணுக்காக ஈந்த அந்த கரும்புலி மாவீரர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் மாவீரர்களின் கனவுகளையும் மக்களின் பேரிழப்புக்களையும் மனதில் நிறுத்தி எமது அரசியல் விடுதலைக்காக இறுதிவரை உழைப்போம் என்று சிந்தனையில் நிறுத்துவதே இந்நாளில் வாக்குறுதியில் சுதந்திர தமிழீழத்தினை விரைவில் அமைத்திட அணிதிரள்வோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
தொகுப்பு- நிலவன்.