மாலபே தனியார் கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு கோரி வவுனியாவில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் இன்று காலை எட்டு மணி தொடக்கம் நாளை காலை எட்டு மணி வரையில் 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டமொன்றினை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு முழுமையாக இயங்காததன் காரணமாக நோயாளர்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.