வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான போராட்டம் இன்று 88ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் மற்றும் அவசரகால சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.