தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறுகளையும், அதனை வழி நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் அண்மைக்காலத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இத் திரைப்படங்களில் சில விடுதலைப் போராட்டம் சார்ந்த வரலாற்றுத் தவறுகளுடனும், விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. இத் திரைப்பட உருவாக்கங்கள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பிரதான ஊடக நிறுவனமாக இயங்கி வந்த நிதர்சனம் நிறுவனம் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இவை தொடர்பாக ஒர் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்ந்த வரலாற்றுத் திரைப்படங்களை உருவாக்க விரும்பும் படைப்பாளிகளுக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்ந்த வரலாற்றுச் சாண்றுகளையும், உண்மையான தகவல்களை வழங்கவும், அவை தொடர்பான மேதிக ஆலோசனைகளையும் தம்மால் வழங்கமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நிதர்சனம் நிறுவனத்தின் ஆலோசனைக்கும், பகுப்பாய்வுக்கும் உட்படுத்தப்படாத தமிழீழ விடுதலைப் போராட்டங்கள் சார்ந்த படைப்புக்களை, திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.