- அனுராதபுரத் தாக்குதலுக்குப் புலிகளின் கரும்புலி அணிகள் வன்னி முன்னரங்க நிலைகளிலிருந்து அரணக்(இராணுவ) கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொதுமக்கள் போன்றதாகவோ அல்லது மறைவாகவோ ஊடுருவி அனுராதபுரக் காட்டு வழிகளால் அனுராதபுர வான்தளம் அமைந்திருக்கும் பகுதிக்கு அதனருகில் உள்ள ஆழம் குறைந்த குளத்தைக் கடந்து சென்றடைந்தார்கள் எனக் கூறப்படுகின்றது.
சிங்கள அரணத்தால் வெளியிடப்பட்ட இறந்த கரும்புலிகளின் படங்களின்படி, தாக்குதலுக்குச் சென்ற கரும்புலிகள் அனுராதபுரத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள அரணப் படையணிகளில் ஒன்று அணிந்திருந்த சீருடையை அணிந்திருந்தார்கள். அதற்குக் காரணம் வான்தளத்தை அண்மிக்கும்போது யாரேனும் கண்ணில் தென்பட்டால் தங்களை சிங்கள அரணம்(Army) என அறிமுகம் காட்டித் தப்பிக்க உதவியாக இருக்கும் என்பதற்காக என்று ஊகிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடைபெறுவதற்கு முதல்நாள் பின்னேரம் கயபா உந்துருளிக் குறுக்கோட்டம்(Gajaba Motor Cross (Motorcycle Cross Country)) நடைபெற்றது. எனவே அன்று அனுராதபுரத்திற்கு வந்த 100,000 பார்வையாளர்களால் எல்லோரது கவனமும் அங்கு செல்ல, பாதுகாப்பு நடவடிக்கைகளில் சில தளர்வு இருந்ததது.
அடுத்தநாள் அதிகாலை 3:20 மணியளவில் வான்தளத்திற்குள் ஊடுருவிய புலிகளின் கரும்புலிகள் அங்கு நிலைகொண்டிருந்த வானூர்திகள், போர்ப்பறனைகள்(war planes), சுரினைகள்(உலங்கூர்திகள்; helicopters), வேவுப் பறனைகள்(spy planes) போன்றவற்றின் மேல் சரமாரியாக ஏவுகணை, உந்துகணைத் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள்.
தரைவழியாக சென்ற கரும்புலிகளின் தாக்குதலில் வான்படை முகாமில் குழப்பம் நிலவ, சுமார் 70 நிமிடங்களின் பின்னர் வான்புலிகள் அனுராதபுர வான்தளத்தின்மேல் வட்டமிட்டுக் குண்டுபோட்டுத் தாக்கிவிட்டுச் சென்றார்கள்.
இத்தாக்குதலில் வான் மற்றும் தரைவழி கையாளப்பட்டிருந்தாலும், தரைவழிக் கரும்புலித் தாக்குதலின் பின்னர் வான்புலிகள் மேல்பறந்து தாக்கியதற்கு இரு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
காரணம் 1:
வான்புலிகளும் கரும்புலிகளும் ஒரே நேரத்தில் வான்தளம்மீதான தாக்குதலைத் தொடுத்திருந்தால் அனுராதபுர வான்தளப் பொறுப்பதிகாரி அங்கிருந்த அனைத்து(100%) சூட்டு வலுவையும்(Fire Power) வான்நோக்கித் தாக்க உத்தரவு விட்டிருப்பார். அதற்கு முக்கிய காரணி என்னவென்றால் தரைவழியாக வந்தவர்கள் களத்தைவிட்டு அகல சில மணித்தியாலங்கள் எடுக்கும், ஆனால் புலிகளின் வானூர்திகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கே வான்தள சூட்டெல்லைக்குள் நிற்கும். மேலும் தாக்குதல் நடைபெற்றது வான்தளம் மீதானது என்பதால் அந்தத் தளப் பொறுப்பதிகாரி அநேகமாக புலிகளின் வானூர்திகளை வீழத்தப் பார்த்திருப்பார்.
எனவே தரைவழித் தாக்குதலில் தளத்திலிருந்த படையினர்கள் நிலைகுலைய, தளத்திலிருந்த தாக்குதல் வலு பெரும்பாலும் தரையை நோக்கிக் கவனம் செலுத்த, மேலும் வெடிபொருட்களில் தீப் பிடியாது இருக்கப் படையினர்கள் அவற்றைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த, வான்தளத்திலிருந்த வானெதிர்ப்பு ஆயுதங்கள் கரும்புலிகளது கட்டுப்பாட்டிற்குள் வர, அந்தச் சண்டைக் குழப்பத்தில் வான்புலிகள் வந்து குண்டுகளைப் போட்டுவிட்டு சென்றதாகக் கூறப்படுகின்றது.
காரணம் 2:
கரும்புலிகளிடம் தாக்கச்சொல்லிக் கூறிய இலக்கு வான்தளத்தில் இருந்த படையினரோ, ஆயுதங்களோ அல்ல, அவர்களது பிரதான இலக்கு அங்கு தரித்துநின்ற வானூர்திகளாகும் (படையினரைத் தாக்க வேண்டும் என்றால் அனுராதபுரம் செல்லத் தேவையில்லை, வன்னிக்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் வவுனியாவில் பெரிய முகாம் உள்ளது). எனவே 3:20 இற்குத் தாக்குதலைத் தொடுத்த கரும்புலிகள் தளத்தில் நிலைகொண்டிருந்த வானூர்திகள் பலவற்றைத் தாக்கியழிக்க, அதன்பின் ஒரு மணித்தியாலம் கழித்துப் பறந்து வந்த வான்புலிகளது வானூர்திகள் தளத்தின்மேல் பறந்து கரும்புலிகளின் தாக்குதலில் இருந்து எந்தெத்த வானூர்திக் கூடங்கள்(Hangars) மற்றும் தரிப்பிடங்கள்(Parking Bay) அழிவுறாமல், சேதமடையாமல் உள்ளன என்ற தகவலை தரையில் நின்ற கரும்புலிகளுடன் வானலைத் தொடர்பு சாதனத்தால் தொடர்புகொண்டு கூற, அவற்றின்மேல் கரும்புலிகள் இலகுவாகத் தாக்குதல் தொடுத்து அழித்தார்கள் என எண்ணப்படுகிறது. அதனால்தான் பெருமளவான வானூர்திகள் தாக்கியழிக்கப்பட்டிருக்கிற