பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கானஅமெரிக்காவின் பதில் பிரதி செயலாளர் பில் டெதட் ஆகியோருக்கும் இடையில் முக்கியசந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப்பும்பங்கேற்றுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகள் குறித்துகலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையின் மறுசீரமைக்கும் பணிகளுக்கு அமெரிக்கா வழங்கும் ஒத்துழைப்பு குறித்துஇதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெற்ற நிலையில், தெற்கு மற்றும் மத்திய ஆசியவிவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி செயலாளர் பில் டெதட் ஐ பிரதமர்சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.