ஒரு விண்ணப்பதாரருக்கு மேன்முறையீடு அனுமதி ஒரு முறை கொடுக்கப்பட்ட நிலையில், மனுதாரர் மீண்டுமொரு முறை மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் அவருக்கு மீண்டும் மேன்முறையீடு உண்டா என்ற கேள்விக்கு பதிலாகும் வகையில் அண்மையில் மேன்முறையீட்டு மன்றத்தில் ஒரு முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
R (Robinson) v SSHD [2017] EWCA Civ 316 எனும் குறித்த இந்த வழக்கில் ஜமைக்கா நாட்டை சேந்த விண்ணப்பதாரர் சிறுவயதில் பிரித்தானியாவுக்கு வந்து குடியேறியிருந்தார்.
ஆயினும் அவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் உள்விவகார அமைச்சு நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடவே மனுதாரர் First Tier Trbunalக்கு முறையீடு செய்தார். ஆயினும் அவரது வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மனுதாரர் மீண்டும் ஒரு மனுவை மனித உரிமை (Article 8 Right to a private and family life) இன் கீழ் தனக்கு ஒரு குழந்தை பிறந்திருப்பதாக கூறி உள்விவகாரத் திணைக்களத்திற்கு விண்ணப்பம் செய்தார்.
ஆயினும் உள்விவகார அமைச்சு அந்த விண்ணப்பத்தை மறுத்ததுடன், அவருக்கு மேன்முறையீட்டு அனுமதியையும் மறுத்து இருந்தது.
இருப்பினும், மனுதாரர் First-tier Tribunalக்கு மேன்முறையீடு செய்யவே, நீதிமன்றம் மனுதாரருக்கு மேன்முறையீடு செய்ய உரிமை இல்லையென கூறி மேன்முறையீட்டை தள்ளுபடி செய்துவிட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் Upper Tribunal க்கு மேன்முறையீடு செய்தார். அதனை தொடர்ந்து அந்த முறையீட்டையும் Upper Tribunal தள்ளுபடி செய்தது. வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு (Court of Appeal ) வந்தது.
இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி கூறியதாவது, ஒரு முறைக்கு மேல் விண்ணப்ப மனுக்கள் செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் மேன்முறையீடு செய்யவேண்டும் என்ற சட்டத்திற்கமை மனுதாரருக்கு இல்லை என்று கூறி தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை மேலும் ஆங்கிலத்தில் முழுமையாக வாசிப்பதற்கு இங்கே அழுத்தவும். http://www.bailii.org/ew/cases/EWCA/Civ/2017/316.html
மேலும் நீதிபதி கூறியதாவது, section 82 of the Nationality, Immigration and Asylum Act 2002 இல் குறிப்பிட்டுள்ள மனித உரிமை மனு என்ற பொருட்பதம், குறுகிய தன்மையிலேயே பொருள் விளக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறியதோடு, மீண்டும் மீண்டும் மனுக்கள் செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் மேன்முறையீடு உரிமை கொடுக்கப்பட வேண்டிய சட்ட கடமைப்பாடு இல்லையென்றும் கூறியது.
இந்த தீர்ப்பானது முக்கிய தீர்ப்பென்றே கருதப்படுகிறது. ஏனெனின் பொதுவாக அகதி அந்தஸ்து மனுக்கள் முற்றிலுமாக மறுக்கப்பட்ட பொழுது மீண்டும் புதிய மனுக்கள் (Fresh Claim) பொதுவாக செய்வது வழக்கம்.
ஆயினும் உள்விவகார அமைச்சு அதிகளவில் மேன்முறையீடு செய்வதற்கான உரிமை கொடுப்பதில்லை. இதற்கு காரணம் கொடுக்கப்படும் புதிய ஆவணங்கள் எந்தவகையிலும் அமைச்சின் முடிவை மாற்றிக்கொள்வதற்கு தகமை உள்ளதாக இல்லை என்று உள்விவகார அமைச்சு முடிவு செய்வதாகும்.
இருப்பினும், ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்படாத புதிய ஆதாரங்கள் மற்றும் சான்றுகள் புதிய மனுவோடு (Fresh Claim) கொடுக்கும் பொழுது, உள்விவகார அமைச்சு உங்கள் மனுவை புதிய மனுவாக ஏற்க மறுத்தாலும் நீங்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு வழியுள்ளது.
தகவல் – Jay Visva Solicitors
மேலதிக தெடர்பு எண் – (+44) 020 8573 6673