உலகவல்லாதிக்க நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவோடு,தமிழர் தாயக தேசத்தில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு சுதந்திரத்திற்காய் எழுந்த குரல்கள் பயங்கரவாதம் என்ற ஒற்றைச்சொல்லுக்குள் சிறுமைப்படுத்தி மேற்கொண்ட சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 – பாகம்01 ’ கட்டுரைத் தொகுப்பு நூல் எதிர்வரும் 14.05.2022 சனிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர் கலரி மண்டபத்தில் நிதர்சனம் நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது.
புலம்பெயர் வாழ் ஈழப் படைப்பாளியான அறிவுச்சோலை நிலவனின் ‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 பாகம் 01 நூலானது பௌத்த சிங்கள பேரினவாத அரச ஆட்சி பீடங்கள் உலக வல்லரசுகளின் துணையுடன் திட்டமிட்டு நிகழ்தப்பட்ட தமிழினப்படுகொலைகளின் கொடூரங்கள். ஒடுங்கிய நிலப் பரப்பில் போர் வெறியர்களின் , அகோரத்தாண்டவம் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை இருப்பிடமின்றி,உணவு,மருத்து வசதிகளின்றி பாதுகாப்பு வலயங்கள் , படுகொலைக் கலம் ஆகிட தொடர்ச்சியா விமான குண்டு வீச்சுக்கள் எறிகணைத்தாக்குதல்கள், கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயண எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இன அழிப்பின் (Tamils Genocide) சாட்சிகளாய் கண்ணீர் சிந்திய நாட்களை கண்முன் கொண்டு வருகின்றது.
தமிழினப்படுகொலைகளின் வரலாறு திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில், நினைவுகளை அடைகாத்து உலகத் தமிழரின் மனச்சாட்சியின் முன் ஆவணத்தொகுப்பாக கொண்டுவந்திருக்கும் ‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 பாகம் 01 என்னும் இந் நூல் வெளியீட்டு.
இடம் :- பேர்ன் சிவன் ஆலயம் தமிழர் களறி மண்டபம்
Verein SAIVANERIKOODAM
ShivaTempel Europaplatz1B 3008 Bern
காலம்:- 14-05-2022சனிக்கிழமை
நேரம் :- மாலை 02.00 மணி
இதனைத் தொடர்ந்து நூல் அறிமுக நிகழ்வு இந்தியா ,கனடா, அவுஸ்ரேலயா ,பிரித்தானியா, பிரான்ஸ் , நோர்வே ,யேர்மன் , (திகதி இடம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் ) போன்ற நாடுகளில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைத்தீவில் பரந்துவிரிந்த கொடிய போரில், வாழ்வதற்காய் போராடிவேண்டிய ஒருவரலாற்றுக் கட்டத்தில், எமது தமிழினம் சந்தித்த சவால்களும் அழிவுகளும் பெரியவை. முள்ளிவாய்க்கால் பேரழிவின் இன அழிப்பு நடந்து 12வருடங்கள் கடக்கும் இந்த சூழ்நிலையில் ஒரு தேசமாக, தமிழ்த் தேசிய இனமாக சிந்திக்க வேண்டும். 2009 போர் நடந்த காலத்தில் நடந்த படுகொலைகள் குறித்து மட்டுமே பேசப்படுகிறது. அதற்கும் முன்பு அதற்கு பின்பும் இன்று வரையிலும் தொடரும் இனப் படுகொலை , இன அழிப்பு , இன ஒடுக்குமுறை குறித்து உலக அரங்கில் நாம் பேச வேண்டும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இயங்கு விசையாக உலகத் தமிழர்களை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ் படைப்பாளி அறிவுச்சோலை நிலவன் எழுத்தில் நிதர்சனம் நிறுவனம் வெளியிடும் ‘ஈழப்படுகொலையின் சுவடுகள்2009 பாகம் 01 நூல் வெளியீட்டு நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
அவலங்களும் அழிவுகளுமே வாழ்வாகிப்போனாலும் நாளை நமக்குண்டு என்ற நம்பிக்கையில் எழுந்து நடக்கின்றோம். அவலக்குரல் எழுப்பிய எங்கள் உறவுகளின் குரல் நியாயம் கிடைக்காமல் ஓய்ந்துபோகாது. உலகில் எந்தவொரு தேசிய இனமும் தனது விடுதலைப் போராட்டத்தில் சந்தித்திராத வெங்கொடுமைகளையும் பேரிழப்புக்களையும் சந்தித்துள்ளோம். நடந்து முடிந்த பேரவலத்தின் விளைவுகளை இனியாவது கூட்டாக எதிர்கொள்ளல் வேண்டும். இதிலிருந்து கூடநாங்கள் கூட்டாக மீள எழவில்லை எனில் வரலாறு ஒரு போதும் எம்மை மன்னிக்காது.வெளியீட்டு நி கழ்வுக்கு அனைவரின் ஒத்துழைப்பை யும் எதிர்பார்க்கின்றோம்.
- நன்றி