தமிழீழத்தின் கட்டமைப்புக்கள் முக்கியமாக 5 ஆகப் பிரிக்கப்பட்டிருந்தன:
- அரசியல்துறை
- நிதித்துறை
- நீதிநிருவாகத்துறை
- படைத்துறை
- புலனாய்வுத்துறை
புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பல்வேறு வகையான மக்கள் கட்டமைப்புகளை மக்கள் தேவைகளை நிறைவு செய்வதற்காக கட்டியெழுப்பியிருந்தனர்… அவையாவன
- விடுதலைப்புலிகள் மாணவர் அமைப்பு
- தமிழீழப் பல்கலைக்கழகம் (கிளிநொச்சி அறிவியல் நகரில் இதற்கான கட்டடப் பணிகள் முழுமையடைந்த போதும் இது திறக்கப்படவில்லை)
- தமிழீழ நுண்கலைக்கல்லூரி
- தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி
- வன்னி தொழில்நுட்பக் கல்லூரி
- அரசறிவியற் கல்லூரி
- சிறுவர் கணினி பூங்கா
- தமிழீழ விசேட பயிற்சிக்கல்லூரி
- சதீஸ் இயந்திரவியல் கல்லூரி
- சுமையா மகளீர் அரபு கல்லூரி
- அராபிய மொழி பாடசாலை
- ஆங்கில மொழி பாடசாலை
- போரால் பாதிக்கப்பட்ட மாணவர் பாடசாலை
- பன்னாட்டுப் பாடசாலை (International school)
- ஆதவன் திரைப்படக் கல்லூரி
- தமிழ்மாறன் பயிற்சிக்கல்லூரி (நிதித்துறைப் பொறுப்பாளர்களுக்கானது)
- விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
- கிராம கடற்றொழிலாளர் கட்டமைப்புகள் = சங்கம் – சமாசம் – சம்மேளனம் – இணையம்
- மலரவன் மழலைகள் அறிவியல் பூங்கா
- குருகுலம் சிறுவர் மனமகிழ்வுப் பூங்கா (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் – TRO இன் கீழ் செயல்ப்பட்டது )
- காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
- செஞ்சோலை சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
- புனிதபூமி சிறுவர் இல்லம்
- பாரதி சிறுவர் இல்லம்
- முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களுக்கானது)
- தளிர்கள் (தாய் தந்தை இருவரும் போராளிகளாக இருப்பவர்கள் அல்லது தாய் தந்தை ஒருவர் மாவீரராக உள்ள சிறார்களின் முன்பள்ளி)
- இனிய வாழ்வு இல்லம் (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத மாற்றுதிறனாளி சிறுவர் சிறுமிகளுக்கானது)
- நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
- மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
- சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது)
- கணினி கலையகம் (மாற்றுத்திறனாளிகளுக்கானது)
- அன்பு முதியோர் பேணலகம்
- பெண்கள் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு மையம் (SWRD)
- பயிற்சி நிறுவகம்
- பல மளிகைக் கடைகள்
- கோழி பண்ணைகள்
- பப்படம் உற்பத்தித் தொழிற்சாலைகள்
- சணல் கயிறு உற்பத்தித் தொழிற்சாலைகள்
- மறுசுழற்சிக் காகிதம் உற்பத்தி தொழிற்சாலை
- சீமெந்துக்கல் உற்பத்தி தொழிற்சாலை
- இனிப்பு உற்பத்தி தொழிற்சாலை
- அரிசி அரைவை ஆலை
- செங்கல் சூழை
- வெதுப்பியகம்
- உதயதாரகை (விதவைகளுக்கானது)
- உதயதாரகை தையல் மையம்
- வெற்றிமனை பெண்கள் உளவளத்துணை நிலையம் (போரால் உளநலம் குன்றிய பெண்களுக்கானது)
- மலர்ச்சோலை (தாய்-சேய் பராமரிப்பு நிலையம்)
- செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
- நிறைமதி இல்லம் (நுண்ணறிவு ஊனமுற்ற பெண்களுக்கானது)
- மேரி இல்லம் (பெற்றோருடனான தொடர்பிழந்த பெண்களுக்கானது)
- அன்புமனை (குடும்பச் சூழலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கானது)
- தமிழீழப் போக்குவரவுக் கழகம்
- ஓட்டுநர் பயிற்சிக்கல்லூரி
- தமிழீழ நீதிநிருவாகத்துறை
- தமிழீழ சட்டக் கல்லூரி
- தமிழீழ சட்டவாக்கக் கழகம்
- நீதிமன்றுகள்
- உச்ச நீதிமன்று
- மேன் முறையீட்டு நீதிமன்று
- விசேட நீதிமன்றுகள் (தேவையேற்பட்டால் மட்டும் அமர்வுகள் இடம்பெறும்)
- மேன் நீதிமன்று
- மாவட்ட நீதிமன்று ( குடியியல் & குற்றவியல்)
- அரசியல்துறை
- அரசியல் தொடர்புப்பிரிவு
- மக்கள் தொடர்புப்பிரிவு
- நிதித்துறை(அரசியல்துறைக்கானது)
- பரப்புரைப்பிரிவு
- கொள்கை முன்னெடுப்புப்பிரிவு
- தமிழீழ அரும்பொருள் காப்பு நடுவம்
- சமூக மேம்பாட்டுப்பிரிவு (1990-2009)
- தமிழீழ வன-வளத் திணைக்களம்
- வன-வளப்பாதுகாப்பு பிரிவு
- நெய்தல் வளம்
- வன-வளப்பாதுகாப்பு பிரிவு
- தமிழீழ மீன்பிடித் திணைக்களம்
- தமிழீழ நிதித்துறை
- நிர்வாக நிதிப்பிரிவு
- கணக்காய்வுப்பிரிவு
- கொடுப்பனவுப்பிரிவு
- அன்பகம் (கணக்காய்வுப் பகுதி, நடுவப்பணியகம்)
- வருவாய்த்துறை
- வருமானவரிப்பிரிவு
- சுங்கவரித்துறை
- ஆயப்பகுதி – வரித் தீர்வு
- புலனாய்வுத்துறை (வருவாய்த்துறைக்கானது)
- தமிழீழ நிர்வாக சேவை
- சமூகப் பொருளாதார அபிவிருத்தி வைப்பகம்
- கிராமிய வைப்பகம்
- வேளாண் வாணிபம்
- மருந்துச்சாலை
- முன்பள்ளி மேம்பாட்டுப்பிரிவு
- தொழில்பயிற்சி மையம்
- கல்வி பொருளாதார ஆய்வு அபிவிருத்தி நிறுவனம்
- சிறுவர் இல்லங்கள்
- நிர்வாகம்
- புள்ளவிபரம்
- காணிப்பகுதி
- திட்டமிடல் ஆலோசனைப்பகுதி
- நிதிப்பகுதி
- நில அளவைப்பகுதி
- கூட்டுறவுப்பகுதி
- பொறியியல் பகுதி
- உள்ளூராட்சி மன்றம்
- மேம்பாட்டுப்பகுதி
- ஆய்வு அபிவிருத்தி நடவடிக்கை நிறுவனம்
- வேளாண் பகுதி
- கடல் வாணிபப்பகுதி (தமிழீழ மீனவர்கள் மீன்பிடிக்கும்போது கடற்புலிகள் கடலில் தரித்துநின்று காப்புக் கொடுத்தனர்)
‘கிளிநொச்சி தமிழர் புனர்வாழ்வுக்கழக அலுவலகம்’ | படிமப்புரவு: யூடியூப்பில் இருந்து என்னால் உருவாக்கப்பட்ட படிமமாகும்.
- தமிழர் புனர்வாழ்வுக்கழகம் (TRO)
- யாழ்ப்பாண மாவட்டம்:
- வடக்கு – கிழக்கு அபிவிருத்தி புனர்வாழ்வுக்கழகம்
- யாழ்ப்பாண அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம்
- சிறுவர் பாடசாலை ஆசிரியர் பயிற்சி நிலையம்
- முன்பள்ளிக் கல்வி மேம்பாட்டு நிலையம்.
- உழைப்பாளரை இழந்த பெண்களுக்கான வாழ்வு நிலை
- வலுவிழந்தோருக்கான வாழ்வு நிலையம்
- போசாக்கு புனர்வாழ்வு நிலையம்
- வாழ்வகம்
- அறிவு வளர்ச்சி நிலையம்
- வெண்புறா செயற்கை உறுப்பு தொழில்நுட்ப நிறுவனம்
- சமூகப் பொருளாதார வளர்ச்சி நிறுவனம்
- சமுதாய முன்னேற்றக் கழகம்
- கிளிநொச்சி மாவட்டம்:
- வடக்கு-கிழக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம்
- கிளிநொச்சி அபிவிருத்தி அகதிகள் புனர்வாழ்வுக்கழகம்
- கிராமியப் புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனம்
- அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்
- கிளிநொச்சி கிழக்கு புனர்வாழ்வு நிறுவனம்
- பூநகரி அபிவிருத்தி புனர்வாழ்வுக்கழகம்
- பூநகரி – முழங்காவில் அபிவிருத்தி நிறுவனம்
- அக்கராயன் அபிவிருத்தி நிறுவனம்
- கரைச்சி வடக்கு அபிவிருத்தி நிறுவனம்
- தெந்தமிழீழம்:
- பல பாடசாலைகள்
- யாழ்ப்பாண மாவட்டம்:
- ஊடகப்பிரிவு
- ஊடக இணைப்புச் செயலகம்
- – தொலைக்காட்சிகள்
- தமிழீழ தேசிய தொலைக்காட்சி (NTT) – (இதுவொரு செய்மதி தொலைக்காட்சி சேவை ஆகும். இதில் Intelsat – 12 ( Eurostar) என்ற செய்மதி ஒளிபரப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது.)
- தரிசனம் (இதுவொரு செய்மதி தொலைக்காட்சி சேவை ஆகும். இதில் Optus B3 என்ற செய்மதி பயன்படுத்தப்பட்டு அவுஸ்ரேலியாவிற்கும் Hot Bird என்ற செய்மதி பயன்படுத்தப்பட்டு ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு ஆசியா ஆகிய கண்டங்களுக்கும் ஒளிபரப்பப்பட்டது. இது தொடக்க காலத்தில் ‘மக்கள் ரிவி’ என்ற தமிழ்நாட்டு செய்மதி தொலைக்காட்சியோடு இயைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.)
- நிதர்சனம் (உள்ளூர் தொலைக்காட்சி)
- வானொலிகள்
- புலிகளின் குரல் (தமிழ் , சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் ஒலிபரப்பப்பட்டது)
- தமிழீழ வானொலி
- IBC Tamil
- – நெம்பு (வி.மா.அ. வெளியிடப்பட்ட இரு மாதங்களுக்கு ஒரு தடவை வெளிவரும் இதழ்)
- – ஈழநாதம் (நாளிதழ்)
- – – வெள்ளிநாதம் [வார இதழ் (வெள்ளிக்கிழமைகளில் மட்டும்) ]
- – சுதந்திரப் பறவைகள் (பெண்களுக்கான இருமாத இதழ்)
- – அக்கினி வீச்சு (கையெழுத்து இதழ் | போராளிகளின் கவிதைகள் ஓவியங்கள், மாவீரர் நினைவுகள், கட்டுரைகள், பொதறிவுத் தகவல்கள் முதலான ஆக்கங்களை வெளியிட்டு அவர்களின் படைப்பாற்றல் வளர்க்கப்பட்டது.)
- – விடுதலைப்புலிகள் (மாத இதழ்)
- – வெளிச்சம் (மாத இதழ்)
- – நுணுக்குக்காட்டி (மாத இதழ்)
- – வானோசை (அறிவியல் மாத இதழ்)
- – தமிழீழ நோக்கு (மாத இதழ்)
- – நிர்மாணி (மாத இதழ்)
- – நாற்று (மாத இதழ்)
- – காப்பரண் (பனை-தென்னைவள அபிவிருத்தி ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட மாத இதழ்)
- – செய்திக் கதிர் (இருவார இதழ்)
- – எரிமலை (மாத இதழ்)
- – களத்தில் (மாத இதழ்)
- – ஆதாரம் (சமூக, பொருளாதார, விஞ்ஞான ஆய்வு மாத இதழ்)
- – சூரியப் புதல்வர்கள் (மாத இதழ்)
- – சுதந்திரதாகம் (மாத இதழ்)
- – தமிழீழச் செய்திகள் (மாத இதழ்)
- – Hot Spring (ஆங்கில மாத இதழ்)
- – දේදුන්න (சிங்கள நாளேடு)
- – விழி (மருத்துவ இதழ்)
- – தலைநகர் (திருமலை மாதயிதழ்)
- – விடுதலைச்சுடர் (1985-1986: மட்டக்களப்பில்)
- – சுதந்திரச்சுடர் (1990-1992: மட்டக்களப்பில்)
- – தாய்மண் (மட்டக்களப்பில்)
- – கணிணுட்பம் (தொழினுட்ப இதழ்.. கணினிப் பிரிவால் வெளியிடப்பட்டது ஆகும்)
- – படியுங்கள் அறியுங்கள் (உள்ளக இதழ் – போராளிகளுக்கு மட்டும்)
- – திரைப்பட உருவாக்கப் பிரிவு
- – ரதன் கலையகம் (திரைப்பட மொழியாக்கப்பிரிவு)
- – தர்மேந்திரா கலையகம் (திரைப்படக் கலைகள் தொடர்பானது)
- – மாங்கனி கலையகம்
- – ஸப்தமி கலைக்கூடம்
- – இணைய செய்தி நிறுவனங்கள் (தமிழ்நெற் என்ற ஆங்கில செய்தி வலைத்தளமும் புதினம் என்ற தமிழ் செய்தி வலைத்தளமும் நேரடி தொடர்பாடலுடன் செயற்பட்டிருந்தன)
- – பல சமூக செய்தி வலைத்தளங்கள் ( போர் முடிவுக்குப் பின்னர் பல மூடப்பட்டு விட்டன)
- – பல அதிகாரநிறைவு வலைத்தளங்கள்
- ஊரகவளர்ச்சி பிரிவு
- சிறுவர் போசாக்கு பராமரிப்புப் பூங்கா
- மின் வழங்கல்
- கிராம அபிவிருத்திச் சங்கம்
- கோழித்தீவன உற்பத்தி நிலையம்
- விலங்கியல் பண்ணைகள்
- பொருண்மிய மதியுரையகம்
- படகு கட்டுமான பயிற்சி மையம்
- #பதல் வெதுப்பக – பயிற்சி நிலையம்
- பனைசார் கைப்பணிப் பயிற்சி நிலையம்
- கால்நடைகள் செ.மு.சி.ப. நிலையம்
- மருது முன்பள்ளி
- தொழில்நுட்ப பயிற்சி நிலையம்
- தொழில்நுட்பக் கல்லூரி
- உற்பத்தி விற்பனை நிலையம்
- கணனிப் பயிற்சி நிலையம்
- மின் உற்பத்தி திட்டம் (10 கிலோவாற்று காற்றாலை மின்பிறப்பாக்கியுடன் சூரிய மின்கலத் தொகுதி)
- தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
- பயிரமுது தொழிற்சாலை (இயற்கை உரம்)
- பொருண்மிய வைப்பகம்
- கிராமிய வைப்பகம்
- அனைத்துலகச் செயலகம்
- நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
- அனைத்துலகச்செயலகம்
- வெளிநாட்டுக் கிளைகள்
- தலைமைச்செயலகம்
- தலைவருக்கான தனிச்செயலகம்.
- மணாளன் தலைமைச்செயலகப் பாதுகாப்பு அணி
- நடுவப்பணியகம்
- போராளிகள் தொடர்புப்பகுதி
- மக்கள் தொடர்பகம்
- அனைத்துலகத் தொடர்பகம்
- தொலைத்தொடர்பு அறிக்கைப்பகுதி
- ஆளணி அறிக்கைப்பகுதி
- ஆயுத அறிக்கைப்பகுதி
- வெடிபொருள் வழங்கற் பகுதி
- புதிய போராளிகள் இணையும் செயலகம்
- தமிழ் மொழி காப்புக் கழகம் –
- தமிழ் வளர்ச்சிக் கழகம் (மக்கட் பெயர்க் கையேடு-460000, சமற்கிருத-தமிழ் அகராதி, அறிவியல் அகராதி ஒன்று இவர்களால் அணியமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது மற்றும் பல புத்தகங்கள்.. அனைத்தும் முள்ளிவாய்க்காலில் எரிந்து அழிந்தன; அழிக்கப்பட்டன )
- தமிழீழக் கல்விக் கழகம்
- தமிழீழ மாணவர் அமைப்பு
- சிறுவர் இல்லங்கள்
- கல்வி நிறுவனங்கள் (‘அன்னை பூபதி’ பொதறிவுப்போட்டி இவர்களால் நடாத்தப்பட்டது)
- கணினி நிலையங்கள்
- அர்ச்சயா பழச்சாறு உற்பத்திகள் (இந்தியப் படைகள் வருமுன்வரை)
- பசுமை வேளாண் சேவை – (கமக்காரர்களுக்கானது)
- தமிழீழ ஆய்வு நிறுவனம்
- அறிவமுது பொத்தகசாலை
- வன்னியம் வாணிபம்
- தங்ககம்
- போக்குவரவுச் சேவை
- இரும்பு உருக்கும் ஆலை
- மருதம் வாணிபம்
- மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்)
- சேரன் வாணிபம்,
- சேரன் சுவையகம்
- சோழன் வாணிபம்
- சோழன் தயாரிப்புகள்
- சோழன் எண்ணை வாணிபம்
- பாண்டியன் வாணிபம்
- பாண்டியன் பல்பொருள் வாணிபம்
- பாண்டியன் புடவை வாணிபம்
- பாண்டியன் சுவையூற்று
- பாண்டியன் எரிபொருள் வாணிபம்
- பாண்டியன் உதிரிகள் வாணிபம்
- பாண்டியன் அச்சகம்
- பாண்டியன் உற்பத்திப் பிரிவு
- பொன்னம்மான் உரவகை வாணிபம்
- இசைவிழி வாணிபம் (விளையாட்டுச் சாமான், உடுப்பு என்று எல்லாம் கிடந்தது.. கிளிநொச்சி வருவாய்த்துறைக்கு கீழ் இருந்தது.)
- இளவேனில் வாணிபம் (எரிபொருள் உதிரிகள் கட்டடப்பொருள் விற்பனை நிலையம்).
- இளந்தென்றல் குடிவகைப் பிரிவு
- இளந்தென்றல் தங்ககம்
- எ9 தங்ககம்
- தென்றல் இலத்திரனியலகம்
- தமிழ்மதி நகை மாடம், தமிழ்நிலா நகை மாடம், தமிழரசி நகை மாடம், தமிழரசு நகை கொள்வனவு நிலையம்……. என மொத்தம் எட்டு நகைக் கடைகள் இருந்தன.
- அந்திவானம் பதிப்பகம்
- அன்பு அச்சகம்
- காலணி (பாதணி உற்பத்தி மையம்)
- மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி)
- கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை
- தளவாட உற்பத்தி நிலையம்
- எழுகை தையல் பயிற்சி மையம்
- விடிவெள்ளி (பெண்கள் மட்டுமே- அனைத்து விதமான அலுவல்சார் வேலைகள்)
- ஈழநிலா படைப்பகம்
- இசைவாணி தொலைத்தொடர்பகம்
- அருச்சுனா புகைப்படக் கலையகம்
- நிர்மலன் புகைப்படக் கலையகம்
- பொற்காலம் வண்ணக்கலையகம்
- ஒளிநிலா திரையரங்கு
- ஆவணப்படுத்தல் பிரிவு
- ஆவணக்காப்பகம்
- அறிக்கை / ஆவணப்பகுதி
- தமிழீழ பதிப்புத்துறை
- நளன் வானொலி தொலைத்தொடர்புப் பிரிவு
- நடராசன் ஒளிப்பதிவுப்பிரிவு
- உள்ளகப் படப்பிடிப்பு
- களப் படப்பிடிப்பு
- விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
- மகளீர் கலை பண்பாட்டுக் கழகம்
- அரங்க செயற்பாட்டுக்குழு
- தமிழீழ இசைக்குழு
- ரசிகன் கலைக்குழு
- வீதி நாடகக்குழு
- தமிழீழ பொறியியல் தொழினுட்ப வளர்ச்சித் துறை
- தமிழீழ விளையாட்டுத்துறை
- தேசிய விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழு
- மாவட்ட விளையாட்டு அபிவிருத்திக் குழு
- பிரதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழு
- கழகங்கள்
- அமைப்புக்கள்
- காலநிலை அவதானிப்பு நிலையம், தமிழீழம் – INTELSAT 12 என்னும் செய்மதி இவர்களால் பயன்படுத்தபட்டது.
- தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்
- தமிழீழ வைப்பகம் ( ‘சிறப்பு ஊற்றுக்கண்’ தேட்டத்திட்டம், ‘தமிழமுதம்’ சேமிப்புத் திட்டம் )
- தமிழீழக் கல்வி மேம்பாட்டுக் பேரவை (தமிழீழ வரலாற்றுக்கல்வி நூல் வெளியீடு)
- மனிதவளச் செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு)
- மனிதநேய கண்ணிவெடியகற்றம் பிரிவு
- திட்டம் மற்றும் மேம்பாட்டிற்கான பிரதேசச் செயலகம்
- தமிழீழ வரலாற்றுப் பதிவேடுகள் பேணிக்காத்தல் பகுதி
- சூழல் நல்லாட்சி ஆணையகம்
- வடகிழக்கு மனிதவுரிமைச் செயலகம் (NESHOR)
- நிருவாகச் செயலகம்
- வாணிபப் பிரிவு
- தேசிய உட்கட்டுமானப் பாதுகாப்புப்பிரிவு
- தமிழீழ கல்வி மேம்பாட்டுக் கழகம்
- ராஜன் கல்விப்பிரிவு
- தமிழீழ வழங்கல் பிரிவு
- கொள்வனவுப்பகுதி
- உணவுப்பகுதி
- தமிழீழ ஆட்பதிவுத திணைக்களம்
- வானதி வெளியீட்டகம்
- காயப்பட்ட போராளிகள் பயிற்சிக்கல்லூரி
- தமிழீழ மாவீரர் சிற்பக்கலைக் கூடம்
- தமிழீழ வைப்பகம் (TE Bank)
- தற்சார்பு தொழில் முயற்சி நிதியம்
- தமிழீழ பெண்கள் ஆய்வு நிறுவனம்
- பண்டாரவன்னியன் உற்பத்திச்சாலை (பெண்களுக்கானது-வவுனியா கொந்தக்காரன் குளம் – இங்கு மாச்சில்லு(விசுக்கோத்து), இனிப்பு, மிட்டாய் என்பன விளைவிக்கப்பட்டன.)
- பெண்கள் தொழிற்பயிற்சி மையம்
- தொழிற்துறை மேம்பாட்டு நிறுவனம்
- சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச்சபை
- விடுதலைப்புலிகளின் சமாதானச்செயலகம்
- தமிழீழ காவல்துறை
- குற்றத் தடுப்புப் பிரிவு
- குற்றப் புலனாய்வுப் பிரிவு
- விசாரணைப் பிரிவு
- காவல்துறை படையணி
- காவல்துறை சிறப்பு அதிரடிப்படை – ( மக்கள்),
- தமிழீழ போக்குவரவுக் கண்காணிப்புப் பிரிவு
- நுழைவிசைவு வழங்கும் பகுதி
- தமிழீழ காவல்துறை ஆய்வு திணைக்களம்
- நகரப் போக்குவரவுப் பிரிவு
- உள்ளகப் பாதுகாப்புப் பிரிவு
- மக்கள் தொடர்புசேவை பிரிவு
- காவல்துறை மருத்துவப் பிரிவு
- தமிழீழ காவல்துறை பயிற்சிக் கல்லூரி
- தொழினுட்பப் பிரிவு
- சிறுவர் அமைப்பு
- சிறுவர் சீர்திருத்தப் பள்ளி (கருணா நிலையம்)
என இன்னும் பல பிரிவுகள் இருந்தன.
வன்னி பெருநிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ காவல் நிலையங்களின் இருப்பிடத்தைக் காட்டும் நிலவரை(map)
மக்களின் மருத்துவ வசதிக்காக ‘தமிழீழ சுகாதாரப்பிரிவு’ உருவாக்கப்பட்டிருந்தது.
- தமிழீழ சுகாதாரப்பிரிவு
- தமிழீழ சுகாதார சேவைகள்
- சுகாதாரக் கல்வியூட்டல் பிரிவு
- தாய்சேய் நலன் பிரிவு
- பற்சுகாதாரப்பிரிவு
- சுதேச மருத்துவப்பிரிவு
- நடமாடும் மருத்துவ சேவை
- கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம்
- தொற்றுநோய் தடுப்புப்பிரிவு
- பூச்சியியல் ஆய்வுப்பிரிவு
- விசேட நடவடிக்கைப்பிரிவு
- சுகாதார விஞ்ஞானக் கல்வி நிறுவனம்
- உடல்-உளநலன் விழிப்புணர்வு சேவைகள்
- Dr. பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை
- மருத்துவக் கல்லூரி (பொதுமக்களுக்கானது)
- நலவாழ்வு அபிவிருத்தி மையம்
- மருந்தகங்கள்
- போசாக்கு உணவு தயாரிப்பு நிலையம்
- மருத்துவ ஆராச்சிப்பிரிவு
- தமிழீழ சுகாதார சேவைகள்
மக்களின் மருத்துவ வசதிக்காக ‘விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவு‘ உம் சேவைகளை ‘தியாக தீபம் திலீபன் மருத்துவச் சேவை’ என்ற பெயரில் வழங்கி வந்தது.
விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவு:
- தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை
- திலீபன் சிறப்பு மருத்துவமனைகள்:-
- திலீபன் மருத்துவமனை முதலுதவித் தொண்டர்கள்
- முதலுதவியாளர்கள் அணி
- கற்சிலைமடு – (முதலாவது மருத்துவமனை.)
- நெடுந்தீவு
- புங்குடுதீவு
- பூநகரி
- புளியங்குளம்
- நைனாமடு
- அளம்பில்
- மாங்குளம்
- கறுக்காய்குளம்
- முத்தரிப்புத்துறை
- முள்ளிக்குளம்
- பாட்டாளிபுரம்
- கதிரவெளி
- கொக்கட்டிச்சோலை
- கஞ்சிகுடிச்சாறு
- தியாக தீபம் திலீபன் நடமாடும் மருத்துவ முகாம்
- சுகாதாரசேவை
- களஞ்சியப்பகுதி
- கொள்வனவுப்பகுதி
- கள மருத்துவம்
- திலீபன் சிறப்பு கள மருத்துவப்பிரிவு
- மற்றும் பல அலகுகள்
- திலீபன் சிறப்பு மருத்துவமனைகள்:-
விடுதலைப்புலிகள் தங்கள் விடுதலைப்போரில் சிறப்பாகப் பணியாற்றியோருக்காகவும் வேளாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டோருக்காவும் பல்வேறு விருதுகள் வழங்கியிருந்தனர்.. அவை பின்வருமாறு
விருதுகள் :-
- மாமனிதர் – தமிழ்த்தேசியப்பணி, சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கான விருது.
- நாட்டுப்பற்றாளர் – நாட்டிற்காய் வீரச்சாவு எய்திய இயக்கத்தில் அல்லாதோருக்கான விருது.
- வேளாண் மன்னர் – வேளாண்மையில் சிறந்து விளங்கியோருக்கான விருது.
பதக்கங்கள்:-
- ஒளிஞாயிறு – போரியலின் குறிப்பிட்ட துறையில் தனியாள் மிகையியல்பு(extraordinary) செயல்திறனிற்காக வழங்கப்படும் பதக்கம்.
- மறமாணி – போரியலில் தனியாள் செயல்திறனிற்கான பதக்கம்.
- மறவர் – கரும்புலிகளுக்கும், குழுத் தாக்குதல்களில் செயல்திறனிற்காக வீரர்களுக்கும், மூன்று தாக்குதல்களில் பங்குகொண்ட வானோடிகளுக்கும் வழங்கப்படும் பதக்கம்.
- நீலப்புலி – 5 தாக்குதல்களில் பங்குகொண்ட வானோடிகளுக்கு வழங்கப்படும் பதக்கம்.
- புயல்வீரன் – கடல் மற்றும் தரைப் போரில் சிறப்பாக செயல்பட்ட புலிவீரர்களுக்கு வழங்கப்படும் விருது. வேவுப்புலிகளுக்கும் வழங்கப்பட்டது.
இவை தவிர புலிகள் தம் விடுதலைப் போரில் இறந்த மாவீரர்களைப் நினைவு கூறுவதற்காக கீழ்கண்டவற்றை உருவாக்கியிருந்தனர்
- மாவீரர் குடும்ப நலன் காப்பகம்
- மாவீரர் பணிமனை
- மாவீரர் துயிலும் இல்லங்கள்
- மாவீரர் துயிலுமில்லம் புனரமைப்புக் குழு
- மாவீரர் அரங்குகள்.
- மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
- மாவீரர் நினைவு வீதிகள்.
- மாவீரர் நினைவு குடியிருப்புத் திட்டங்கள்.
- மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
- மாவீரர் நினைவு பூங்காக்கள் (தியாகசீலம் பூங்கா, சந்திரன் பூங்கா)
- மாவீரர் நினைவு படிப்பகங்கள்.
- மாவீரர் நினைவு நூலகங்கள்.
- மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
இத்துடன் தியாகசீலம் என்னும் ஒன்றினையும் உருவாக்கியிருந்தனர்.. அதன் பணிகளாவன:
- வீரச்சாவடைந்த போராளின் உடலங்களை தூய்மைப்படுத்தி அவர்களின் உடலங்கள் கெட்டுப் போகாத அளவுக்கு தயார்படுத்தி ( அதாவது இன்போம் பண்ணுவது என்று மக்கள் கூறுவது) இராணுவ உடை அணிந்து சந்தனப் பேழையில் அவர்களை கிடத்தி உறவினர்களிடம் கையளிக்கும் வரை அத்தனையையும் செய்யும் இடமான “தூண்டி” என்று ஆரம்ப நாட்களில் அழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பாசறையை பின்னாட்களில் புனிதத்துவம் மிக்க பெயரான ”தியாகசீலம் ” என்று உணர்வுகளில் அணைத்துக் கொண்டனர்.
- முகம் மறைக்கப்பட்ட மறைமுக போராளிகளின் வித்துடல்களை விதைத்த போது அல்லது நடுகற்களை நட்ட போது அவற்றை தியாக சீலம் என்றே அணைத்துக் கொண்டனர். (பல இரகசிய காரணங்களுக்காகவே அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டதும், முகமறியா மறைமுகங்களாய் அவர்கள் தூங்கியதும் வெளிப்படையான உண்மை. தமிழீழ விடுதலைக்கு பின்பான காலம் அவர்களின் முகம் யார் என அடையாளப் படுத்தப் பட்டிருக்கலாம்.)
- வீரச்சாவடைந்த மாவீரர்களின் உடலங்கள் வந்த போது பலவற்றில் அடையாளத் தகடுகள் இல்லாத நிலை இருந்தது. அது எதிரியிடம் பிடிபட்டு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தி னூடாக வந்த போராளிகளின் உடலங்களாக இருக்கலாம் அல்லது சண்டைக்களங்களில் புலிகளால் மீட்கப் பட்டாலும் கழுத்தில் இடுப்பில் கையில் என கட்டப்பட்டிருந்த மூன்று தகடுகளும் தவறி இருக்கலாம். அது எவ்வாறோ போராளிகளின் உடலங்களை புலிகளால் அடையாளப்படுத்த முடியாத சந்தர்ப்ப ங்களில் படையணி அல்லது துறைசார் போராளி நண்பர்கள் அல்லது இறுதியாக எடுக்கப்பட்டிருந்த தனிநபர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த காயவிபரங்களை வைத்து அடையாளம் காண முயன்றும் அதிலும் தோல்விகளை சந்தித்து அடையாளம் காண முடியாத பல நூறு வித்துடல்களை விதைத்த போது அவர்களுக்கான பொதுப்பெயராக “தியாகசீலம்” என்ற உணர்வுமிக்க புனிதத்தை அணைத்துக் கொண்டனர்.
- இவ்வாறு இவர்கள் விதைக்கப்பட்ட இவர்களை அடையாளம் காணும் சந்தர்ப்பம் ஓர்நாள் வரும் என்றே எம் தேசியத்தலைவர் நம்பிக்கை கொண்டிருந்தார். தமிழீழம் மலர்ந்த பின் தமிழீழ தேசத்தில் எம் மக்களின் DNA க்கள் பரிசோதிக்கப்படும் போது இந்த மாவீரர்களின் DNA எந்த உறவுகளோடு ஒத்துப் போகுதோ அதை வைத்து இந்த உடலம் யாருடை யது என்பதை இனங்காண முடியும் என்ற தூரநோக்க சிந்தனை அவரை ஆறுதல்படுத்தியது. அதனால் தான் இந்த தியாகசீலர்களை அவர் மாவீரர் துயிலும் இல்லங்களில் அடையாளங்கள் அற்று விதைத்த போதும் தியாகசீலம் என்ற அடையாளத்தை கொடுத்ததனர்.
புலிகள் தங்கள் வீரர்கள் இறக்கும் போது அவர்கள் இறந்து விட்டார் என்று அறிவிப்பதில்லை.. மாறாக வீரச்சாவடைந்து விட்டார் என்றே அறிவித்தனர். அவ்வாறு வீரச்சாவடைந்து விட்டவரின் உடலத்தினை பிணம் என்றோ சடலம் என்றோ அழைப்பதைல்லை.. அவர்கள் விடுதலைப் படையினர் என்பதால் போரில் இறந்த தம் வீரர்களை மாவீரர் என்றும் அவரின் உடலத்தினை வித்துடல் என்றும் அழைத்தனர். அவ்வித்துடல்கள் புதைக்கப்படும் குழிகள் விதைகுழிகள் என்று அழைக்கப்பட்டன.. அங்கு புதைக்கப்படுதல் என்னும் சொல் கையாளப்பட்டதில்லை. மாறாக விதைக்கப்படுதல் என்னும் சொல்லே கையாளப்பட்டது.. இவர்களின் வித்துடல்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் பேழைகள் என்று அழைக்கப்பட்டன. அக்குழிகளில் வித்துடல் இடப்பட்ட பின்னர் அவற்றினைச் சுற்றி கல்லறைகள் கட்டப்படும்.. அவ்வாறு பெருமளவில் கல்லறைகள் கொண்ட இடங்கள் துயிலுமில்லம் என்று அழைக்கப்பட்டது. இத்துயிலுமில்லங்களில் வித்துடல்கள் இல்லாதோருக்காக/ கிடைக்காதோருக்காக நினைவுக்கற்கள் என்பவையும் நடப்பட்டிருந்தன. இவை அவர்களைக் குறித்த தகவல்களையும் நினைவுகளையும் தாங்கி நின்றன.
- எ.கா :-‘அஆ மாவீரரின் வித்துடல் அஆ துயிலுமில்லத்தில் உள்ள அஆ விதைகுழியில் புனித மரியாதையுடன் விதைக்கப்பட்டது’
‘விதைகுழியில் மாவீரரின் வித்துடல் கொண்ட பேழை விதைக்கப்படுகிறது’
- துயிலுமில்ல முகப்புத் தோற்றம்:
இந்த முகப்பினை ஒலிமுகவாயில் என அழைப்பர். அதன் பொருள் புலி வாழும் இடத்தின் முகவாயில் என்பதாகும்.
- நினைவுக்கற்கள்:
- கல்லறைகளின் எழில் மிகு தோற்றம்:
அங்கு பொறிக்கப்பட்டிருக்கும் சொற்றொடர்:
‘போரென வெற்றியென நின்றவர்கள்
போகும்போது தமிழீழம் என்று சொன்னவர்கள்’
உசாத்துணை:
- EelamView
- மாவீரர் துயிலும் இல்லம் – தமிழ் விக்கிப்பீடியா
- வலிசுமந்த பதிவுகள்- 08 (சோகம்) – கொற்றவன்
- தியாகசீலம்…!!! – வி.இ. கவிமகன்
- தமிழீழ விடுதலைப் புலிகள் யார்…? – வி.இ. கவிமகன்
- பூராயம்: June 2005
- https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/
- TamilNet
- களத்தில்-131
- களத்தில் 22/6/1997
- விடுதலைப் பயணத்தில் ஓயாது இறுதிவரை பணி செய்த தமிழீழ காவல்துறை அ.விஜயகுமார்
- https://telibrary.com/tamil-eelam-student-organization/
- https://en.wikipedia.org/wiki/Tharisanam_TV
- http://www.asiantribune.com/index.php?q=node/6151
- https://eelamhouse.com/?p=1100
- c4wdr.com
- https://telibrary.com/கியூபா-மருத்துவத்துறை-போ/
- https://www.eelamview.com/2021/11/27/ltte-doc-maj-vinotharan/