இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.
எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை. – இது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து.
ஈழப் போராட்டத்தில் பாடல்களின் பங்கு அளப்பரியது. வெற்றிகளின் பின்னால் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாடல்கள், வீழ்ந்த வீரர்களின் நினைவுப்பாடல்கள், மக்களின் துன்பதுயரங்களை வெளிப்படுத்தும் பாடல்கள், தலைவரைப் பற்றிய பாடல்கள் என பலவிதங்களில் அமைந்த பாடல்கள் போராட்டத்தில் மிகப்பெரும் உந்துசக்தியாக அமைந்தன. ஈழப்போராட்டத்தின் இசையுலகில் தனக்கென்றொரு முத்திரை பதித்துச் சென்ற பாடகன் போராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு.
சிற்றம்பலம் சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு 04.11.1971 அன்று மகனாக பிறந்தார் மேயர் சிட்டு. வத்திராயன்,தாளையடி மருதங்கேணி, வடமராட்சிக்கிழக்கு, யாழ்ப்பாணத்தை , பிறப்பிடமாகக் கொண்டவர். மெல்லிசைப்பாடகர் கே. எஸ். பாலச்சந்திரனின் அவர்கயின் இளைய சகோதரன்.
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு, மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் இன்று போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.
தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.
“கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்”
போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.
கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடல் . ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?’
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.
[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல ‘தெருக்கூத்து’ எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]
ஜெயசிக்குறு என்ற பெயரில் சிங்கள அரசு தமிழர்மேல் போர் தொடுத்தபோது வன்னிப்பெருநிலப்பரப்பே போர்க்கோலம் கொண்டது. விடுதலைப்புலிகள் பல படையணிகளை உருவாக்கிக் களம்காண ஆயத்தமாகினர். தென் தமிழீழத்திலிருந்து ஆயிரத்துக்குமதிகமான போராளிகள் ஜெயசிக்குறுவை எதிர்கொள்ளவென வன்னிக்கு வந்து சேர்ந்தனர்.
இந்நேரத்தில்தான் சிட்டுவும் களத்துக்குச் சென்றார். ஓரணியைத் தலைமைதாங்கி புளியங்குளம் பகுதியில் காப்பரண்கள் அமைக்கும் பணியைத் திறம்படச் செய்துமுடித்தார். “சோகப்பாட்டுக்கு சிட்டு” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமும் உண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.
01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.
“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தானாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
இன்று மேஜர் சிட்டு அவர்கள் வீரச்சாவடைந்த நாள். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் ‘உயிர்ப்பூ’ படத்தில் இவர் பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில்’ என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.
அப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.
சிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.
அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.
இதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.
போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை.
தான் வீரச்சாவடைந்தால் தனக்காக ஒரு பாடலைத் தயாரியுங்கள் என்று பகடியாகச் சொல்லிச் சென்ற சிட்டுவுக்குரிய முதலாவது நினைவுப்பாடலான ‘சிட்டுச் சிட்டு சிட்டு எங்கள் மண்ணில் பூத்த மொட்டு’ என்ற பாடலை சாந்தன் அவர்கள் பாடினார்.
நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.
எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.- இது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து.
ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
வன்னி மண்ணை ஊடறுத்து யாழில் நிலை கொண்டிருந்த படையினருடன் இணைப்பை ஏற்படுத்த ஜெயசிக்குறு என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை மூலம் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது 01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது.
பூமித்தாயேசிவந்தாயா…?
ஏற்கனவே தாண்டிக்குளம், மற்றும் பெரியமடுப் பகுதியில்களில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து உச்சவழிப்பு நிலையில் படையினர் மீது நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலின்போது படைத் தரப்பிற்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
வானூர்தி எதிர்ப்பு சுடுகலன்கள், கிரனைட் செலுத்திகள் உட்பட பெருமளவு படைக்கலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
தாய்மண்ணின் விடியலுக்காக இந்த ஊடறுப்புத் தாக்குதல் நடவடிக்கையின்போது பகை என்னும் தடையரண் மோதி தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 வரையான போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர்.
மேஜர் கிளியன் (கந்தசாமி விஸ்வநாதன் – கிளிநொச்சி)
மேஜர் மதியன் ( மதி) (சிதம்பரம் நடராஜா – மன்னார்)
மேஜர் முருகையன் ( நியூமன்) (இராஜு சௌந்தரராஜன் – முல்லைத்தீவு)
மேஜர் சிட்டு ( தங்கத்துரை) (சிற்றம்பலம் அன்னலிங்கம் – யாழ்ப்பாணம்)
மேஜர் சஞ்சீவி (சின்னையா முத்துக்கிருஸ்ணன் – கிளிநொச்சி)
மேஜர் அன்பு ( கதிர்ச்செல்வன்) (கனகு தவராசா – யாழ்ப்பாணம்)
மேஜர் இளங்குமரன் ( பாபு) (பேரானந்தம் ஜெயராஜ் – மட்டக்களப்பு)
கப்டன் சேரலையான் ( பிரதீப்) (சிதம்பரப்பிள்ளை கருணாகரன் – மட்டக்களப்பு)
கப்டன் துகிலன் (கந்தசாமி சிவகுமார் – மட்டக்களப்பு)
கப்டன் தமிழரசன் (செல்வராசா சந்திரதாசன் – யாழ்ப்பாணம்)
கப்டன் சோழன் ( தமிழன்) (சிவபாலசிங்கம் தயாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் பாலகிருஸ்ணன் (சிவசம்பு சேகரன் – மட்டக்களப்பு)
கப்டன் தூதுவன் (பெரியசாமி முத்துவேல் – மாத்தளை)
கப்டன் கரிகாலன் ( நெல்சன்) (பெஞ்சமின் சகாயநாதன் – மன்னார்)
கப்டன் ஈழப்பிரியா (ஆறுமுகம் ஜெனற்கிருஸ்ரினா பிரியதர்சினி – யாழ்ப்பாணம்)
கப்டன் சாந்தீபன் ( முத்தமிழ்வேந்தன்) (கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி – யாழ்ப்பாணம்)
கப்டன் தணிகைநம்பி (சின்னையா கந்தராசா – திருகோணமலை)
கப்டன் பிறைமாறன் (இராசதுரை கருணாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் எழுச்சிமாறன் (கிறிஸ்ரியாம்பிள்ளை ஜெயப்பிரகாஸ் – மன்னார்)
கப்டன் நிர்மலன் (தர்மராஜசிங்கம் பிரசன்னா – யாழ்ப்பாணம்)
கப்டன் பாலகிருஸ்ணன் (இரத்தினகோபால் அகிலன் – யாழ்ப்பாணம்)
கப்டன் உருத்திரன் (சிவபாதம் சிவாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் செந்தூரன் ( செல்லப்பா) (அருளானந்தர் ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் வன்னியன் (அன்ரன் றேமன் – மட்டக்களப்பு)
கப்டன் ஜெயஜோதி (கனகலிங்கம் விஜிதா – யாழ்ப்பாணம்)
கப்டன் கல்யாணி (குணரட்ணம் மதிவதனி – திருகோணமலை)
கப்டன் எழிலரசன் ( விந்தரன்) (பஞ்சலிங்கம் பாலமுரளி – யாழ்ப்பாணம்)
கப்டன் வேணுகா (கணபதிப்பிள்ளை திருச்செல்வி – யாழ்ப்பாணம்)
கப்டன் சிவானந்தன் (இராசேந்திரன் அன்ரன்ஜேசுராஜா – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் கவியரசு ( கவியரசன்) (சோமசேகரம் சிறிகண்ணதாசன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் ஈழச்செல்வன் (தர்மலிங்கம் கோகுலநாதன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் வெண்சாகரன் (சதாசிவம் சுந்தரலிங்கம் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கதிரவன் (சின்னத்தம்பி சச்சுதானந்தன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் விஜயமுரளி (இராமலிங்கம் கந்தசாமி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் சேரமான் (சோதி சிவனேசன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வீரத்தேவன் (குமாரசிங்கம் சண்முகநாதன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் பேரின்பன் (கனகசபை தவராசா – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் சின்னத்துரை ( நாதன்) (வேலாயுதம் புஸ்பராஜ் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கண்ணன் (சதாசிவம் தேவகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கீர்த்தி (திருஞானசம்பந்தன் நவநீதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் துலாஞ்சினி ( லதா) (முத்தையா பிரிஸ்சிலா அருள்மணி – வவுனியா)
லெப்டினன்ட் வித்தகா (சிவகுரு சிவநந்தி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் விதுபாலா (நவரத்தினம் சசிகலா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அழகியநம்பி (கருணதாஸ் அஜித்விஜயதாஸ் – திருகோணமலை)
லெப்டினன்ட் வேலன் (சண்முகராசா சபேசன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கற்பகன் (கந்தசாமி பராக்கிரமராசா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வண்ணன் ( ஜீவன்) (சந்தனம் முத்துக்குமார் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் தொண்டமான் (பெரியதம்பி சோதரராசன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அறிவொளி ( அற்புதன்) (கதிரேசன் மகேந்திரன் – வவுனியா)
லெப்டினன்ட் காவியன் (மரியநாயகம் ரொறன்ஸ் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கல்யாணி ( வண்ணநிலா) (தியாகராஜா ஜெயராணி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பொற்சிலை (சின்னத்துரை பாலகௌரி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தீந்தமிழ்ச்செல்வன் (கனகரட்ணம் ராஜன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாகமணி (அப்பையா கலையழகன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சின்னக்குட்டி (செல்வராசு மகேந்திரன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் சொரூபி (தங்கவேல் ஜெனிற்சுஜாதா – மன்னார்)
லெப்டினன்ட் வினோதராஜ் (தெய்வநாதன் மோகநாதன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் யாழிசை (வல்லிபுரம் கிரிஜா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அப்பன் (தேவதாஸ் கிருசாந்தன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இனியவன் (கனகரத்தினம் செல்வக்குமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாயகன் (தெய்வேந்திரன் சீலன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கனியவன் (கந்தையா பாஸ்கரன் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் எத்திராஜ் (வடிவேல் கோகுலராஜ் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இசைரூபன் (தர்மன் நிசாந்தன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கவியழகு ( கவிவாணன்) (சுபந்திரராஜா கண்ணன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பிறேமிலன் ( வரதன்) (கணபதிப்பிள்ளை இராசரத்தினம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் ரதிசீலன் (குருநாதபிள்ளை கோணேஸ்வரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் வைத்தி (கனகசூரியம் உதயசூரியம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பேரரசன் (குழந்தைவேல் பாவேந்திரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கிருபராஜன் (இளையதம்பி மனோகரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அன்புவரதன் (சுந்தரம் மோகேந்திரன் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் கபில்குமார் (சீவராஜா மனோரூபன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பிரியமஞ்சன் ( பிரகலாதன்) (நாகராசா ஜெயக்கணேஸ் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் தமிழன் (அழகையா வேலாயுதம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் செல்வசுந்தரம் (சின்னத்தம்பி சந்திரகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் திவ்வியநாதன் (பெரியதம்பி நகுலேந்திரம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தரணியாளன் (வேல்முருகு ஜெயநேசன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மிருநாளன் (பிள்ளையான்தம்பி இளங்கோ – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் ஈகையன் ( ஈழமாறன்) (கனகசிங்கம விநாயகலிங்கம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சித்திராஜன் (சிறிராமன் திவாகரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பழனிராஜ் (கனகசூரியம் சிறிதரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கலைக்கோயில் (முனியாண்டி பெரியதம்பி – கண்டி)
2ம் லெப்டினன்ட் பாடினி (தர்மு அமுதா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அருண் (மாயழகு பரமானந்தம் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் மலர் ( உசா) (இராஜேந்திரம் தவராணி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் குட்டிமோகன் (பெரியசாமி சண்முகராஜா – மன்னார்)
2ம் லெப்டினன்ட் மோகனராசா (கிருஸ்ணசாமி கிருஸ்ணராஜா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் மது ( கயல்க்கொடி) (மாதகராசா சுசிகலா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அமரன் (முத்துக்குமார் சிவகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சிலம்பரசன் (நாகலிங்கம் கோணேஸ்வரன் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் முத்தமிழன் (நவரத்தினம் வசந்தன் – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் செங்கதிர்ச்செல்வி ( மகேந்திரா) (பழனிமுத்து நவலட்சுமி – மன்னார்)
2ம் லெப்டினன்ட் ரமா ( கலைக்குயில்) (இராசு சிவனேஸ்வரி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் திருமகன் (வேலுப்பிள்ளை கலாநிதி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தமிழேந்தன் ( ரவிவர்மன்) (சிவராசா சிவகுமார் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஈழவாசன் (விஸ்வலிங்கம் சுரேஸ் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பிரபா (செல்லத்துரை மாலதி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மதி (சிவகணகநாதன் விமலரத்தினேஸ்வரி – மன்னார்)
2ம் லெப்டினன்ட் அருள்நிதி (மகேந்திரன் கௌசலா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் இளவதனி (பொன்னுக்குமார் சுதாஜினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (பூராசா கமலேஸ்வரன் – கிளிநொச்சி)
வீரவேங்கை காந்தராஜ் (சுந்தரலிங்கம் விக்னேஸ்வரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை அமிர்தன் ( குலராஜ்) (முருகேசப்பிள்ளை சண்முகராசா – அம்பாறை)
வீரவேங்கை நூதகன் (அப்பாத்துரை ரஜனிக்குமார் – மட்டக்களப்பு)
வீரவேங்கை மதனமாவீ ( சுருளிராயன்) (தம்பிராசா பரமேஸ்வரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பாவாணன் ( பாரதி) (மயில்வாகனம் சங்கரதாஸ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை நவச்செல்லம் (தேவராசா விக்னேஸ்வரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பொதிகன் (சிவராஜா சிவாநந்தராஜா – மட்டக்களப்பு)
வீரவேங்கை நிர்மலன் (சிவராசா சுவிக்காந்தன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை மதுர்சனன் (கார்த்திகேசு நாகராஜா – அம்பாறை)
வீரவேங்கை நவானந்தன் (கோபாலபிள்ளை சசிக்குமார் – அம்பாறை)
வீரவேங்கை பவாதரன் (முத்துலிங்கம் விஸ்வலிங்கம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை கயல்விழியன் (தேவராஜா றதிகரன் – அம்பாறை)
வீரவேங்கை அமுதராசன் (ஸ்ரனிஸ்லாஸ் அன்ரன்கனியூட் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கோணமலை (சிவராசா புண்ணியராசா – மட்டக்களப்பு)
வீரவேங்கை வேணுஜன் (அரசரட்ணம் சுதர்சன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஆனந்தி (திரவியம் சறோ – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுபாநந்தினி (தங்கராசா ராதிகா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அமலி (அரியரட்ணம் மேலின்கிருசாந்தி – மன்னார்)
வீரவேங்கை தமிழவள் (வெலிச்சோர்மியஸ் சுதர்சினி – மன்னார்)
வீரவேங்கை மலர்விழி (கனகலிங்கம் சுதாயினி – கிளிநொச்சி)
வீரவேங்கை கோமதி (சின்னத்துரை சர்மிலா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கடலரசி (திருப்பதி திலகராணி – கிளிநொச்சி)
வீரவேங்கை நவானி (ஆண்டிசுந்தரம் காந்திமதி – முல்லைத்தீவு)
வீரவேங்கை கலைவாணி (ரங்கசாமி கமலினி – கிளிநொச்சி)
வீரவேங்கை கமலேந்தினி (சுந்தரமூர்த்தி சுதாமதி – திருகோணமலை)
வீரவேங்கை விமலகாந் (கதிர்காமப்போடி கிருபராஜா – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஈழத்தமிழன் (பத்மநாதன் மதியழகன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வெண்ணிலவன் (கணபதிப்பிள்ளை பத்மநாதன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சோழன் (பாலசுப்பிரமணிம் ருசிகாந்தன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மணி ( தமிழ்க்கவி) (ஏகாம்பரம் சிவகுமாரி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வெண்மலர் ( அல்லி) (யோகராசா கமலாதேவி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சோபா (நாராயணசாமி லதா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பேரமுதன் (சிவம் சிவரூபன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கோன் (சண்முகம் பாலமுருகன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தேமாங்கனி (மாணிக்கம் சரஸ்வதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பிருந்தா (விஜயகாந்தன் ரேவதி – யாழ்ப்பாணம்)
•போர்குயில் மேஜர் சிட்டு நினைவில்….
தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
எமது தேசிய இனத்தின் இன்றைய சந்ததியையும், எதிர்கால வழித்தோன்றல்களையும் காக்கும் புனிதப் பணியில் எம்மை இணைத்துக்கொள்வோம். எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதற்கான எமது தேசிய விடுதலைப் போராட்டம் இறுதி இலட்சியம் வரை முன்னேறியே தீரும். ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை, மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் வீரவணக்க நாள் நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம்.
இவை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் இருந்து
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”