தமிழீழம் என்பதை நாம் எதற்காகக் கேட்கிறோம் என்பதை திலீபன் உறுதியாகச் சொன்னார்.
“எமது நாட்டில் எமது ராணுவம் நிலைபெறும் வரை, எமது நாட்டில் நாம் நிலைபெறும் வரை, எமது சுதந்திரத்தை எவரும் உறுதிபடுத்த முடியாது. அதற்காகத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் நாம் தமிழீழம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
தமிழீழம் என்பது சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்த ஓர் சமதர்ம சோசலிச தமிழீழமாகத் தான் மலரும். அதுவரை நாம் ஒருபோதும் எமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை.
ஒன்றை மிகத் தெளிவாகவும் அறுதியாகவும் கூறுகின்றோம். நாம் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம். எமது மக்கள் அழிக்கப்படும் நிலை தோன்றுமானால் நாம் மீண்டும் ஆயுதம் ஏந்திக்கூட போராடுவோம்.”
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இனவாதப் பூதம் விழுங்கும் போது, இந்தியா எமது நிலைப்பாட்டை ஆதரிக்கவேண்டி ஏற்படும். எமது மண்ணின் விடுதலைக்காக யார் போராடுகிறார்களோ அவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்.
விடுதலைப் புலிகள் வாழ வேண்டும் என்றோ, ஆளவேண்டும் என்றோ ஆசைகொள்ளவில்லை. எமது மக்களுக்கு நிரந்தரமான, சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராக உள்ளோம்.இது திலீபனின் சிந்தனையில் இருந்து
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு, 3நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுடன் இணைந்திருக்கின்றோம்
”திலீபண்ண” ஒரு தாயிற்கு மகனாக பிறந்தவர், ஆனால் மக்களின் மகனாக வாழ்ந்தார் மக்களின் விடுதலைக்காக வீடுகொண்டு எழுந்தார் ,அவருக்கு பிற்பட்ட காலத்தில் தாயகத்தில் எல்லாக்குடும்பங்களிலும் அவரும் ஒரு மூத்த மகன் அதனால் தான் திலீபண்ண என்று பாசமாக இன்றுவரை அவரை எல்லோரும் அழைக்கிறோம்.
திலீபன் அண்ணாவை … அண்ணா என்றுதான் கூப்பிட வேண்டும் என்டு யாரும் எமக்கு சொல்லி தந்ததில்லை , சாதாரண வாழ்வியல் உறவு நிலைக்குள் வரையறுத்துக்கொள்ள முடியாத உறவு நிலைக்கூடாக வந்த சொந்தம் அது. திலீபண்ண வாழ்ந்த காலத்தில் பிறந்தவர்கள் நாம் , அவர் இருக்கிறபோது இந்த மண்ணில் பிறந்திருக்காத உறவுகளும் அவரின் வாழ்வை அந்த சூழல் இன்றைம் எல்லா குழந்தைகளுக்கும் கற்று கொடுத்துள்ளது , அவரின் நினைவு என்று நெஞ்சில் தூக்கி சுமக்க அவரின் தியாக புரட்சி எப்படி அழியாமல் இருக்கிறதோ அப்படிதான் அவரை வழிபட்ட நிகழ்வுகளும் அவரின் நினைவாக எங்கள் இருதயத்தில் விடுதலையின் பறை முரசு ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை தொடர்பாக இந்திய- இலங்கை அரசாங்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாமல் சாகும் வரை உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் இருந்து உயிர்த்தியாகம் புரிந்த தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் அவர்களின் 35 நினைவேந்தல் ஆண்டின் மூன்றவாது நாள் இன்று பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை தமிழினம் அவ்வளவு எளிதில் மறந்து போகாது.
திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து வீரச்சாவடைந்தவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டம் செய்து சாவடைந்தவர் . 1987 செப்டம்பர் 15ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடங்கியவர் செப்டம்பர் 26 ஆம் திகதி 12வது நாள் அவர் தியாக தீபம் லெப் கேணல் திலீபனாக மாவீரனாக தன்னையும் இணைத்துக் கொண்டான்.
மருத்துவ மாணவரும், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளருமான லெப் கேணல் திலீபனுக்காக நல்லூர் கோவில் அருகில் கட்டப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இப்போது சுதைவடைந்து காணப்படுகிறது. மக்களுக்காகப் போராடிய ஏனைய போராளிகள், சண்டையின் போது மக்களின் கண்களுக்குத் தூரவாகவே வீரச்சவடைந்தார்கள் அவர்களின் இழப்புக்கள் ஈடுசெய்ய முடியுமான செய்தியாகவே மக்களின் காதுகளை வந்து தாக்கின.
ஆனால் தியாக தீபம் திலீபனின் மரணம் அப்படி நிகழ்வல்ல ஒவ்வொரு நாளும் மெல்ல மெல்ல உருகி ஆவியாகி மக்களின் கண்முன்னே துடிதுடித்தபடி பிரிந்து கொண்டிருந்தது. தங்கள் கண்களுக்கு முன்னே தங்களுக்காக ஒருவன் தன்னுயிரை அணு அணுவாக மாய்த்ததை எவராலும் மறக்க முடியுமா?
தியாக தீபம் திலீபன்இந்தியத் தலைமை தனக்கு வேண்டும் என்று கேட்டு உண்ணா நோன்பு இருக்கவில்லை! சிங்களர்களைப் பழிவாங்க வேண்டும் என்றுகேட்டு உண்ணா அறப்போர் மேற்கொள்ளவில்லை! திலீபன் வேண்டிய ஐந்து கோரிக்கைகளும் இந்திய வல்லாதிக்க அரசு எண்ணியிருந்தால் எளிதில் முடிந்திருக்கக்கூடியவையே! ஆனால், தமிழரை அழிக்கவேண்டும் என்ற முடிவினை எடுத்துவிட்டுச் செயல்படுபவர்களால் எப்படி ஆக்க பூர்வமான முடிவுகளை எடுக்க முடியம்.
நீங்கள் காவியமாகி 35 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு இன்னும் நனவாகவில்லை. நீங்கள் சாகும் வரை உணவு தவிர்த்து போராடிய பிரச்சினைகள் இன்றும் தீரவில்லை, உண்மைய சொல்ல போனால், பிரச்சினை இன்னும் பெரிசாகிட்டுது. ஆனால் உங்களை போல எங்களுக்காக போராட இன்றும் யாரும் முன்வாரதில்லை… பாராளுமன்ற கதிரைகளுக்காக தான் போராடினம்.
ராஜீவ் காந்தி மற்றும் ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் இந்திய துருப்புக்கள் பங்கு வகிப்பதை எதிர்த்து ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய போராட்டத்தை காந்தியம் பேசும் இந்தியத்தால் பறிக்கப்பட்டது திலீபனின் உயிர். இந்தியம் என்பது என்றென்றைக்கும் தமிழ்ப்பகையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் தயங்காது என்பதை உறுதிப்படுத்திக் காட்ட விரும்பியதால் திலீபனின் அறப்போர், உயிர்ப் பறிப்பில் முடிந்தது.
இந்திய அரசு இறங்கி வரவில்லை. சிறிலங்கா அரசு மீது எந்தவிதமான அழுத்தத்தையும் இந்தியா மேற்கொள்ள வில்லை. தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் 265 மணித்தியாலங்கள் ஒரு சொட்டு நீரும் கூட அருந்தாமல் உண்ணா விரத நோன்பினை மேற்கொண்டு உடல்துடித்து உயிர்விட்டது ஒரு உத்தம ஆத்மா! உண்ணாவிரத வேளையில் சுயநினைவுடன் இருந்தபோது புதுஆடைகளை மாற்றுவதற்கு சகபோராளி ஒருவர் முயன்றதற்கு ‘சாகப்போகின்றவனுக்கு எதுக்கு புதுஉடுப்பு’ என்று சிரித்துக் கொண்டே திலீபன் கேட்டான். எப்போதும் ஒரு சட்டையையே தோய்த்துத் தோய்த்து அணிந்து வந்த எளிமையானவன் அல்லவா அந்த தியாகச் செம்மல்.தியாகி திலீபனின் சாவும் வித்தியாசமான ஒன்றுதான்!
இந்தியா அரசு திலீபனின் கோரிக்கைகளுக்கு இணங்காத பட்சத்தில்; திலீபன் கட்டாயம் சாவைத் தழுவிக் கொள்வான் என்று எல்லோருக்குமே நன்கு தெரிந்திருந்தது. அதனால்தான் அவன் உயிரோடிருந்தபோதே அவன்மீது இரங்கற்பா பாடப்பட்டது. அவன் உயிரோடு இருந்தபோதே அவன் எதிர் கொள்ளப்போகும் சாவுக்காக மக்கள் கலங்கி நின்றார்கள்.
தியாகச்செம்மல் திலீபன் உயிர்த் தியாகம் செய்து பத்தொன்பது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அன்று அவன் தன் தியாகத்தின் ஊடாகச் சொன்ன செய்தி ஒவ்வொரு ஆண்டும் உறுதிப்படுத்தப் பட்டே வருகின்றது. அன்று இந்திய அரசு தமிழர் விவகாரத்தில் தலையிட்டபோதும் சரி, இன்று உலகநாடுகள் தமிழர் விவகாரத்தில் தலையிட்டுள்ள போதிலும் சரி, சிறிலங்கா அரசு மீது இவை முறையான அழுத்தம் எதையும் கொடுக்க வில்லை. எந்த ஒரு சிறிலங்கா அரசும் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான, நியாயமான, நிரந்தரமான, கௌரவமான சமாதானத்தீர்வை எப்போதும் தராது என்கின்ற உண்மை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது.
செப்டம்பர் 15, 1987 அன்று காலையில் நல்லூர் கந்தன் முன்றலில் வயதான அம்மா ஒருவர் நெற்றி திலகமிட்டு ஆசி வழங்க, சிங்கள குடியேற்றங்களை நிறுத்தல், அரசியல் கைதிகள் விடுதலை, அவசரகால சட்டம் நீக்கல், ஊர்காவல் படையினரின் ஆயுத களைவு மற்றும் பொலிஸ் நிலையங்கள் திறப்பதை நிறுத்துதல் என்ற ஜந்து கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரத மேடையேறினீர்கள்.
உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் இரண்டாம் நாள் நீங்கள் ஆற்றிய உரை தமிழர் தேசமெங்கும் பாரிய உணர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பாக “எனக்கு முன் மரணித்த 650 போராளிகளுடன் தமிழீழம் மலர்வதை வானத்திலிருந்து பார்ப்பேன் அதுவே எனது இறுதி ஆசை” என்று நீங்கள் உதிர்த்த வார்த்தைகள் இன்றும் எங்கள்
நெஞ்சங்களில் எதிரொலிக்கின்றன.
திலீபன் அண்ணா, உங்களிற்கு பின் ஆயிரமாயிரம் மறவர்களை விதைத்தும் நமது மண்ணில் விடுதலை விருட்சம் முளைவிடவில்லையே என்ற ஏக்கம் மரணத்திலும் எம்முடன் பயணிக்கும். “தியாக தீபம் திலீபனின் பசியடங்க, செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்” என்றான் ஒரு ஈழத்து கவிஞன்.. உண்மைதான், அன்று தீரும் எங்கள் சுதந்திர தாகம்.. என்றார்.
திலீபன் அண்ணா, உங்களை நீராவது அருந்தச்சொன்ன நண்பர்களிற்கு நீங்கள் கூறிய பதில், நீரும் அருந்தாத உணவு தவிர்ப்பு என்றால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இருக்கின்றோம் இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது.” என அன்று விடுதலையின் இலட்சிய உறுதியினை பறைசாற்றி நின்றீர்கள்
திலீபன் அண்ணா, உங்களது உணவுதவிர்ப்பு மேடைக்கருகில் அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி பொங்க உங்களுடன் இருந்தார்கள் பலர் பேசினார்கள், உணர்வு நிறைந்த கவிதை படைத்தார்கள். உதயன், முரசொலி, ஈழநாதம், ஈழமுரசு பேப்பர் எல்லாம் நீங்கள் தான். யாழ்ப்பாண மக்களின் மையப்புள்ளியாக நீங்கள், உங்களை இந்தியா சாகவிடாது என்ற நப்பாசையுடன் எங்கள் மங்கள் காத்துக் கிடந்தார்கள் . அந்த நாட்களில் வெளிவந்த பலநூறு கவிதைகளில் இன்றும் எனது நினைவை விட்டகலா வரிகள் உங்கள் வல்லமையின் இலட்சிய தீயை எம்முள் மூட்டுகிறது
.
யாழ்ப்பாணத்தின் நல்லூர் கந்தசாமி கோவில் அருகே உள்ள நிலத்தை திலீபன் தேர்வு செய்த அந்தப் பகுதியை நோக்கி மக்கள் தொகைதொகையாக வந்து ஒன்று கூடினர். பலர் இரவுபகலாக அங்கேயே அமர்ந்திருந்தார்கள் பாடல்களையும் பாடினர்கள்
உங்கள் உருவத்தை தாங்கிய பதாகைகள் அந்த இடத்தை அலங்கரித்தன. இலட்சியத்துக்காக மரணத்தை அண்மித்துக்கொண்டிருந்த அந்த நாட்கள் அவருக்காக பக்திப் பாடல்களைப் பாடிய தமிழ் மக்கள் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நல்லூர் கந்தனை வேண்டுவதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை. கையறுநிலை. உங்கள் போராட்டம் தொடங்கிய ஒவ்வொரு நாட்களும் பெருமூச்சுடன் அந்த இடமெங்கும் கூடி இருந்த தமிழ் மக்களின் கண்களில் இருந்து ஏக்கம் மிகுந்த வேதனையும் கண்ணீரும் பெருமூச்சும் பீறிட்டது.
ஒரு நிராயுதபாணியாகவும் அமைதியாகவும் இலட்சியம் “ஆயுதங்கள் மீதான நம்பிக்கை வன்முறையற்ற போர் வடிவமாக மாற்றுவதற்கான வாய்ப்பு” வெளிப்படுத்தி இருந்தது. திலீபன் உயிரைப்பறித்ததற்கு இந்தியமே காரணம். ஆங்கிலேயர் ஆட்சியில் காந்தியடிகள் எத்தனை முறையோ உண்ணா நோன்பு மேற்கொண்டிருந்திருக்கிறார். சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டங்களிலும் இறங்கிஉள்ளார். ஆனால், அடிமைப்படுத்திய ஆங்கிலேய அரசு அவர் உயிரைக் காத்தது. இங்கோ நட்புறவு என்று கூறி வந்த இந்திய வல்லாதிக்க அரசு அகிப்சைப் போராளி சாவடைய காரணமாக இருந்தது.
மருத்துவத்தை முடிக்காமல், மறத்தமிழனாய்க் களத்தில் இறங்கியவர், அடக்குமுறைகள் இன்றும் இன்னும் பெருகிக்கொண்டுதான் உள்ளன!சிங்களக் குடியேற்றங்கள் முன்னிலும் பெருகிக்கொண்டுதான் உள்ளன! தடுப்புக்காவலில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படாததுடன் மேலும்மேலும் ஈழ மக்கள் வதைகூடாரங்களில் துன்புறுத்தப்பட்டுக்கொண்டுதான் உள்ளனர்!
அவசரக்காலச்சட்டத்திற்கான தேவை இல்லாவிட்டாலும் அதற்கான நடைமுறை என்றும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது! பகைக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுத்தான் வருகின்றன. புதிய காவல் நிலையங்கள் மட்டுமல்ல, சிங்களப் படைமுகாம்களே தமிழர்கள் நிலத்தில் அமைக்கப்பட்டுக்கொண்டுதான் வருகின்றன! மேலும் மேலும் கொடுமைகள் கூடினாலும், 2006 முதல் 2009 வரையில் 1 ,46,600 மேட்பட்ட பொது மக்கள் படுகொலைசெய்ப்பட்டுள்ளார்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடிழந்து, உற்றார் உறவினர் இழந்து, உடல் அவயங்களை இழந்து ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் வன்புனர்வுகளும் சித்திரவதைகளும் தொடர்கின்ற நிலையில் காந்தியம் பேசும் இந்தியம் சிங்களத்திற்குக் காவல் அரணாகத்தான் உள்ளது; சிங்கள இறையாண்மையைக் காக்கத் தமிழர்களை மேலும் மேலும் பலிகொடுக்கவும் தயங்கவில்லை!
இந்தியா அரசு திலீபனின் கோரிக்கைகளுக்கு இணங்காத பட்சத்தில்; திலீபன் கட்டாயம் சாவைத் தழுவிக் கொள்வான் என்று எல்லோருக்குமே நன்கு தெரிந்திருந்தது. அதனால்தான் அவன் உயிரோடிருந்தபோதே அவன்மீது இரங்கற்பா பாடப்பட்டது. அவன் உயிரோடு இருந்தபோதே அவன் எதிர் கொள்ளப்போகும் சாவுக்காக மக்கள் கலங்கி நின்றார்கள்.
நான் என்னுயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே! உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும். எனக் கூறிய உங்கள் எழுச்சிகர சிந்தனை இன்றும் எம்மை இயங்க வைக்கிறது.
எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இவை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையில் இருந்து
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
திலீபனுடன் மூன்றாம் நாள்.!