இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வீழத்தினால் பாகிஸ்தான் வீரர்கள் ஹீரோக்களாக ஜொலிப்பார்கள், என அந்த அணியின் முன்னாள் வீரர் அசார் மகமுது தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 1-ஆம் திகதி மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.
இதில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் மோதுகின்றன. இதுவரை ஐசிசியால் நடத்தப்படும் உலகக்கோப்பை (50 ஓவர், டி-20) தொடர்களில், இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்ததே இல்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை இரு அணிகளும் 3 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் வென்றுள்ளது.
இந்நிலையில் இத்தொடர் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் அசார் மகமுது கூறுகையில்,’பாகிஸ்தான் வீரர்களுக்கு இதை விட மிகச்சிறந்த வாய்ப்பு இனி கிடைக்குமா என தெரியவில்லை.
அது சீனியர் வீரர்களாக இருந்தாலும் சரி, ஜூனியராக இருந்தாலும் சரி. பல ஆண்டுகளாக இந்திய அணியுடன் விளையாட கூட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டால், அவர்கள், ஹீரோவாக ஜொலிக்கலாம் என்று கூறியுள்ளார்.