எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.- இது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து.
விடுதலைப் புலிகள் வாழ வேண்டும் என்றோ, ஆளவேண்டும் என்றோ ஆசைகொள்ளவில்லை. எமது மக்களுக்கு நிரந்தரமான, சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராக உள்ளோம். இது திலீபனின் சிந்தனையில் இருந்து
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூறிய லெப் கேணல் திலீபனின் முழக்கம், இற்றைக்கு 35 ஆண்டுகளுக்கு பின்னரும் மக்கள் எழுச்சி, மக்கள் போராட்ட அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றது. தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு, எட்டாம் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுடன் இணைந்திருக்கின்றோம்
இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்தின் அரசியல் முகமூடியைக் கிழித்தெறிந்து சாகும்வரை நீராகாரமுமற்ற உண்ணாவிரதம் இருந்து பன்னிரண்டாவதுநாள் தனது உயிரை தற்கொடை செய்தவன் திலீபன்- தமிழீழமக்களிற்கும் உலகிற்கும் இந்திய சிறீலங்கா அரசின் நயவஞ்சக செயலை வெளிக்காட்டின மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் லெப் கேணல் திலீபனின் அவர்கள். இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
- பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
- புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
- வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்திஇ 1987 செப்டம்பர் 15-ல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை தொடங்கி தொடங்கி 12 நாள்கள் தொடர் ந்து ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட அருந்தாமல் கோரிக்கைகளில் உறுதியாக இருந்தார் திலீபன்
தியாக தீபம் திலீபன் அண்ணையின் வீரச்சாவிற்கு பிறகு ஒவ்வொரு வருடமும் திலீபன் அண்ணை உண்ணா நோண்பை தொடங்கிய நாள் முதல் அவர் வீரச்சாவடைவதற்கு முதல்நாள்வரை (செப் 15முதல் 25வரை) தேசியத்தலைவர் திலீபன் அண்ணையின் நினைவாக காலை உணவருந்துவதில்லை. திலீபன் அண்ணை வீரச்சாவடைந்த செப் 26 அன்று முழுநாளும் உண்ணா நோண்பு இருப்பார்.
இப்படியொரு தலைவருக்காக அவர்கொண்ட உன்னதமான இலட்சியத்திற்காக உயிரை கொடுத்தல் என்பது அதுவொரு வரம், அதுவொரு அலாதியான சுகம்.பிறவிபயனது இந்த சுகத்தை எல்லோராலும் அனுபவிக்ககேலாது. தன்மானத்தையும், வீரத்தையும், இனப் பெருமையையும், தன்னின மக்களின் விடிவையும் நேசிப்பவர்களால் மட்டுமே அதை அனுபவிக்க முடியும்.
நாட்டுக்காக இலட்சியத்திற்காக தமிழ் மக்களின் விடிவிற்க்காக வீரச்சாவடைய வேண்டும் இறந்தாலும், மீண்டும் தமிழனாக பிறக்கவேண்டும், மீண்டும் தேசிய தலைவரின் பிள்ளையாக வாழவேண்டும்.வாழ்வும் சாவும் அந்த மாமனிதனின் வழிநடாத்தலில் அமையவேண்டும்.
உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனி இடம் பெற்று விட்டான். உயிர் துறந்த பின்னும் கூட மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்ததும் தனது உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் திரண்டடிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி விடுதலைப்புலிகளினால் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
திலீபனின் உண்ணாநிலைப் போராட்டமென்பது தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட நிகழ்வு. இப்பிராந்தியத்தின் நாடுகளில் தங்குதடையின்றி தன்னால் இராணுவதலையீடு செய்துவிட முடியுமெனும் பேராசை இந்திய வெளியுறவு, பாதுகாப்பு வட்டங்களால் உருவாக்கப்பட்டதை நம்பிய இராஜீவ்காந்தி அரசின் எதேச்சதிகாரப் போக்கை முடிவுக்குக் கொண்டுவந்த பெரும் அரசியல் நிகழ்வே திலீபனின் போராட்டம்.
இந்திய அரசிற்கு எதிராக பெரும் மக்கள் திரளை இந்தியாவிற்கு வெளியே திரட்டிவிட முடியுமென்பதை இந்தியா எதிர்பார்க்கவில்லை. மேலும் தெற்காசியாவில் விரிந்து கிடந்த ஒரு இனத்தை அரசியலாக பிணைத்த முதல் நிகழ்வு எனவும் இதைச் சொல்ல முடியும்.
கருப்பு ஜூலை உலக தமிழினத்திற்குள் அதிர்வை ஏற்படுத்தியதெனில், திலீபனின் போராட்டம் தமிழர்களை அரசியல் ஆற்றலாக திரட்டியது. தமிழீழம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புலம்பெயந்த தேசங்களையும் என அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களை முதன்முறையாக தமிழ்த்தேசிய அரசியலால் ஒன்றிணைக்க இயலுமென்பதை உலகிற்கு காட்டியது.
வங்கதேசத்தில் இராணுவ தலையீடு, மாலத்தீவில் இராணுவ தலையீடு, தென்னிலங்கையில் இராணுவத்தலையீடு என இந்திய இராணுவத் தலையீடுகள் தங்குதடையின்றி இருந்ததை எதிர்கொண்ட முதற்போராட்டம் ஈழத்தில் திலீபனால் வெடித்தது.
இந்திய பார்ப்பனீய அதிகார வர்க்கம் வழக்கம்போல தனது மேலாதிக்க திமிரில் உதாசீனப்படுத்தியப் இப்போராட்டம், இந்தியப் படைகளை தனது சொந்தப் படைகள், தம்மைக் காக்க வந்த படைகள் எனக் கொண்டாடிய தமிழர்களை உறக்கத்திலிருந்து கலைத்தது.
இந்தியப் படை என்பது ஆதிக்கப் படை, ஆக்கிரமிக்க, சிங்கள அரசிற்கு ஆதரவாகவே களமிறக்கப்பட்டது என்பதை திலீபன் தன் உண்ணாநிலையின் மூலமாக உணர்த்தியதை கண்டுணர்ந்தார்கள். தன் உடல் எவ்வாறு சிறிது, சிறிதாக சிதைக்கப்படுகிறதோ அதுபோல தமிழீழமும் சிதைக்கப்படு மென்பதை திலீபன் தன் உண்ணாநிலையின் மூலமாகக் காட்சிப்படுத்தினார். இவ்வாறான காட்சிப்படுத்தல் இதற்கு முன் எந்த ஒரு உண்ணாநிலைப் போராட்டத்திலும் நடந்ததில்லை. அனைத்தும் மக்கள் முன்பு நிகழ்த்தப்பட்டது.
எளிய கோரிக்கைகளுக்காக, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளுக்காக, வாக்குறுதி கொடுக்கப்பட்டவற்றை நிறைவேற்று எனும் கோரிக்கைக்காக உறுதியோடு போராடினால் மரணத்தையே இந்திய அரசு பரிசாகத் தருமென்பதை திலீபன் எனும் ஒற்றைத்தமிழன் நிரூபித்துக் காட்டினான்.
இராணுவம் என்பது அரசியல்-அதிகார வர்க்கத்தின் ஆதிக்கக் கருவி என்பதை செயலற்று நின்று போன இந்திய இராணுவத்தினைச் சுட்டிக்காட்டினார் லெப்.கேணல்.திலீபன். மக்கள் இராணுவமே மக்களுக்காகப் போராடுமென்பதையும், அரசின் இராணுவம் ஆதிக்க நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமெனும் அரசியல் பாடத்தை நலூர் திடலில் விடுதலைப் புலிகள் நடத்தினார்கள்.
ஒரு பேரரசின் இராணுவத்தை எதிர்த்துப் போர் புரியவேண்டி இருக்கும் எனும் அறத்தை திலீபனின் போராட்டம் மக்களுக்கு உணர்த்தியதே இப்போராட்டத்தின் மாபெரும் அரசியல்-வரலாற்று வெற்றி. இதன் பின்னர் தமிழீழ நிலம் இந்தியப் படைகளை அடித்துவிரட்டும் ஓர்மைக்குள் வந்தடைந்தது. விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டின் அறத்தை அறிந்த மக்கள் பிற போராட்ட குழுக்களிடமிருந்து விலகி புலிகளின் பின்னே அணிதிரண்டார்கள்.
இப்படியான மக்கள் திரட்சியை எதிர்கொள்ளும் வலிமை இந்திய அரசிற்கு மட்டுமல்ல, உலகின் எந்தப் பேரரசிற்கும் சாத்தியமில்லை என்பதை உணர்த்தியிருந்ததை ஏற்காத வீணர்கள் தம் படையினரை தம் அதிகார வெறிக்காக பலி கொடுத்ததை உலகம் கண்டது. இந்தியாவின் அமைதிகாப்புப் படை எனும் ஆதிக்கப் போர் ‘ தமிழர்களையும் புலிகளையும் வெல்ல முடியுமென்பதை 2009 தமிழினப்படுகொலை சுட்டிக்காட்டியது.
மக்களை அரசியல்படுத்தாமல் போராட்டமில்லை, போராட்டமில்லாமல் சுயமரியாதையில்லை. சுயமரியாதையில்லாமல் விடுதலை என்பது உத்திரவாதமில்லை. என்பதை தமிழர்களுக்கு போதித்தவர் லெப்.கேணல் திலீபன் நெருப்பின் துளி. தெற்காசியாவின் மாபெரும் அரசியல்-சமூக-பொருளியல் ஆற்றல் தமிழ்ப் பேரினம். இதை மீண்டுமொரு முறை நினைவுபடுத்தவே லெப்.கேணல் திலீபன் உணவு தவிர்ப்புப் போராட்டம்.
உணவையும் மருந்துப்பொருட்களையும் யுத்தத்தில் ஆயுதமாகப் பாவித்த சிங்கள அரசு வேண்டுமென்றே உள்ளே அகப்பட்டிருந்த மக்கள் எண்ணிக்கையை வெறும் 70இ000 என்று மதிப்பிட்டு சர்வதேசத்திற்குச் சொல்லிவந்தது.; விடுதலைப் புலிகளின் ஆட்சி பிரதேசத்தில் 2006ஆம் ஆண்டு வாழ்ந்தார்கள் ஜந்து இலட்சம் மக்கள் சிங்கள இராணுவம் தான் நடத்திய திட்டமிட்ட இன அழிப்பு இனப் படுகொலை ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்று பெயரிட்டு அழைத்ததோடு மட்டுமல்லாமல், ஓருலட்சத்து நாப்பத்ததி ஆறாயிரத்து அறுநூறிற்கும் மேற்பட்ட 1 46 600 மக்களை படுகொலை செய்தது மட்டுமல்லாது 60 ஆயிரத்திற்கு மேல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்க யுத்தத்தில் ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என தொடந்து கூறிவருகிறது.
ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட பல தீர்மானங்களை இந்தியா முன்னின்று தடுத்தது மட்டுமல்லாமல், போர் முடியும்வரை சர்வதேசம் தலையிடக் கூடாதென்று கூறிவந்தது. ஐ. நா அதிகாரிகளான விஜய் நம்பியார் எனும் மலையாளி இந்திய அதிகாரியும் மற்றும் ஜோன் ஹோம்ஸ் என்பவரும் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டதுடன், கொல்லப்பட்ட மக்களின் சரியான தொகையை எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் கூறக்கூடாதென்று அன்றிருந்த மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர் நவிப்பிள்ளையிடம் வற்புறுத்தியிருக்கிறார்கள்.
தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகள் போரை நிறுத்தும்படி இலங்கையை நிர்ப்பந்திக்கும் தீர்மானங்களை ஐ. நா வில் கொண்டுவந்தபோது, இந்தியா முன்னின்று பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் செய்யும் இலங்கையைத் தடுக்கவேண்டாம், யுத்தம் முடிந்தவுடன் இழப்புகளைப் பார்த்துக்கொள்ளலாம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தது.
தமிழர் தாயகத்தில் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட யுத்த சூனியப் பிரதேசங்களில் தஞ்சமடைந்திருந்த இலட்சக் கணக்கான தமிழர்கள் மீது பல்குழல் பீரங்கிகள், விமானத் தாக்குதல்கள் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட கிளஸ்ட்டர் குண்டுகள் எனப்படும் கொத்தணிக்குண்டுகள் என்று இடைவிடாது அமில மழை பொழிந்து பல்லாயிரக் கணக்கில் மக்களைக் கொன்றுகொண்டிருக்க, இந்தியா சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கெதிராக வரும் அனைத்து அழுத்தங்களையும் தனது ராஜதந்திரச் செல்வாக்கு மூலம் தடுத்துக்கொண்டிருந்தது.
2009 இன் ஆரம்ப நாட்களில் புலிகளுக்கு ஆயுதங்கள் கொண்டுவந்த 8 ஆயுதக் கப்பல்களை இந்திய விமானப்படையும், கடற்படையும் சேர்ந்தே அழித்தன அல்லது அழிப்பதற்கு சிங்கள இராணுவத்திற்கு சகல உதவிகளையும் செய்தன.
பெருமளவு போராளிகள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் இருந்தவேளை, போராட்டத்தில் களைத்திருந்த போராளிகளுக்கு உற்சாகத்தை வழங்கவும், போரின் போக்கை மாற்றவும் நினைத்த புலிகள், ஆனந்தபுரம் எனும் இடத்தில் பாரிய எதிர்த்தாக்குதல் ஒன்றினைச் செய்வதற்கு சுமார் 1000 மேற்பட்ட போராளிகள் அடங்கிய அணியொன்றை ஒருங்கிணைத்திருந்த வேளை இந்திய செய்மதியூடாக இதை அவதானித்த இலங்கை இராணுவம் வேண்டுமென்றே சில கிலோ மீட்டர்கள் பின்னகரத் தொடங்கியது. இராணுவத்தின் சூட்சுமம் பற்றித் தெரிந்துகொள்ளாத புலிகள், இராணுவம் பின்வாங்கிய பகுதிக்குள் உள்நுழைந்தவுடன், நச்சு வாயுவையும், எரிவாயுவையும் செறிவாக புலிகள் நிலைகொண்டிருந்த நிலைகள் மீது வீசித் தாக்கவும் புலிகளின் மிக முக்கிய தளபதிகள் உற்பட சுமார் 600 மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்தார்கள் அடைந்தனர்.
புலிகள் இறுதியாகச் செய்த தாக்குதல் நடவடிக்கை. இத்தாக்குதல் தோல்வியுடன் புலிகளின் போரிடும் வலு முற்றாகக் முடக்கப்பட்டு விட்டது. இதில் குறிப்பிடப்படவேண்டிய விடயம் என்னவென்றால், இத்தாக்குதல்பற்றிய தகவல்களை வழங்கியது முதல், நச்சுவாயுக்களுக்கான உதவியைச் செய்தது வரைக்கும் இந்திய ராணுவமே களத்தில் நின்றிருந்தது என்று போரில் அகப்பட்டு பின்னர் மீண்டுவந்தவர்கள் சாட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
2009 மே மாத ஆரம்பத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கில் காயமடைந்தும் இருக்க, மீதமிருந்த பொதுமக்களும் போராளிகளும் ஒரு சிறிய நிலப்பரப்பினுள் சுற்றிவளைக்கப்பட்டார்கள். கனரக ஆயுதம் தரித்த இராணுவம் சுற்றிவளைத்திருக்க இறுதிப்போர் நடந்துகொண்டிருந்தது.
அப்போதைய சிங்கள ராணுவத் தளபதி சரத் பொன்செக்க ஒரு தடவை இந்திய குழுவினருடன் போர்நடவடிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்பொழுது, இன்னும் எத்தனை நாட்களில் போரை முடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ‘உள்ளே அகப்பட்டிருக்கும் பொதுமக்கள் தாமாக வெளியே வரும்வரை நாம் இறுதிக்கட்ட தாக்குதலை நடத்த முடியாது, ஆகவே குறைந்தது ஆக்ஸ்ட் வரையாவது இறுதித் தாக்குதலை தள்ளிப்போடவேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்.
இது சோனியாவிற்கு இந்தியக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு சோனியா அளித்த பதில் தன்னை தூக்கிவாரிப் போட்டதாக சரத் பொன்சேகரா ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். புலிகள்கொல்லப்பட்டதை உறுதி செய்யும்படியும், அதற்காக என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்றும் கடுமையான தொனியில் சோனியாவின் பதில் இருந்திருக்கிறது.
தமிழர்களைக் கொல்வதை தமது முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்த இலங்கை இராணுவமும் தமிழர் மீதான தனது முற்றான இனக்கொலையை சோனியாவின் ஆசீர்வாதத்துடன் நடத்தி முடித்து மே 18 இல் வெற்றி வாகை சூடியது. இந்தியாவின் விருப்பத்தின்படியும்இ வழிநடத்துதலிலும் நடத்தப்பட்ட இந்த இனவழிப்புப் போரில் கொல்லப்பட்ட அப்பாவித தமிழர்களின் எண்ணிக்கை 1,46 600. மேல் இதில் இறுதி இரு மாதங்களில் மட்டுமே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000 அதிகம். இதைவிடவும் இராணுவத்திடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் பொதுமக்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சரணடைந்த 15000. மேல் போராளிகளில் ஒரு சில ஆயிரங்களைத்தவிர மற்றையவர்கள் பற்றித் தனக்குத் தெரியாது என்று சிங்கள இராணுவம் கைவிரித்துவிட்டது. சரணடைந்த போராளிகள் மற்றும் பெற்றோரிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட பிள்ளைகளை சிங்கள இராணுவ மிருகங்கள் கூட்டாகப் பாலியல் வன்புணர்வு செய்வதும் பின்னர் அவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதுமான வீடியோக்களை சிங்கள இராணுவம் தனது வெற்றிக்கேடயங்கள் என்று காட்டி மகிழ்ந்தது. சிலதருணங்களில் கொல்லப்பட்டுக் கிடந்த போராளிகளின் உடல்கள் மீது வன்புணர்வு கொண்டு தனது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்ட வீடியோக்களும் வலம்வந்தன.
தமிழர் இனவழிப்பில் இந்தியாவின் பாத்திரத்தை இலங்கை சனாதிபதியான மகிந்த போர்வெற்றிக்குப் பின்னர் நாட்டின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய முதலாவது உரையில் இவ்வாறு தெரிவித்தார்.
‘இது எங்களின் போரல்ல, இந்தியாவின் போர். நாம் இப்போரில் வெறும் கருவிகள் மட்டும்தான். இந்தியா இல்லையென்றால், இப்போரில் எம்மால் வெற்றிவாகை சூடியிருக்க முடியாது. இந்தியாவுடன் பகைத்துக்கொண்டதே புலிகள் விட்ட மிகப்பெரிய தவறு. அதனேலேயே அவர்களை அழிக்க இந்தியா எமக்கு சகல விதத்திலும் உதவியது. இப்போரில் வெல்ல எமக்கு அனைத்து வழிகளிலும் உதவிய இந்திய அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் எமது நன்றிகள்’. இதைவிட தமிழர் மீதான இனவழிப்புப் போரில் இந்தியாவின் பங்கினை விளக்கமாக எவராலும் சொல்லிவிட முடியாது.
ஆனாலும், இந்தியாவின் தமிழர் மீதான இனக்கொலையின் பங்கு போருடன் நிற்கவில்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிரான விசாரணைகளைக் கோரி குறைந்தது மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை இந்தியா முன்னின்று எதிர்த்ததுடன், சிலவற்றை வேண்டுமென்றே வலுவிழக்கப்பண்ணியதுடன் நீர்த்துப் போகவும் செய்தது.
காங்கிரஸ் கட்சியின் போர்வெறியர்களான சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி மற்றும் மலையாளிகளான சிவ்ஷங்கர் மேனன் , நாராயணன், அந்தோணி ஆகியோரது தமிழர் மீதான இனக்கொலையின் பங்களிப்பு வெளித்தெரிய ஆரம்பித்தபோது, இந்தியா சுதாரித்துக்கொண்டது.
உயிர்களுக்கு புலம்பெயர்ந்த புலிகளாலும் ஈழத்தமிழர்களாலும் அச்சுருத்தல் இருப்பதாகக் கூறித் தொடர்ந்தும் தமிழர்களுக்கெதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்துவருவதோடு, தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பையும் ஆதரித்து வருகிறது. அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்திருப்பதும் இதன் ஒரு அங்கம்தான்.
ஈழப் போராட்டத்தின் ஆரம்பக்காலங்களில் இந்திய ஒன்றிய அரசும், அமரிக்க ஏகாதிபத்தியம் அனைத்தும் ஒன்றினைந்து முள்ளிவாய்க்கால் வரையில் செய்த இனவழிப்பு தமிழ் நாட்டுத் தமிழர்களுக்குக் பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறது. இலச்சக்கணக்கில் அப்பாவித் தமிழர்களை கொன்று போட எப்போதும் தயார் நிலையில்ருப்பதாக இந்திய அரசு எஞ்சியிருக்கும் இந்திய அரசை மட்டுமல்ல, சிவப்புச் சீனத்தையும், ஐரோப்பாவையும், ஐக்கிய நாடுகளையும், அமரிக்காவையும் அம்பலப்படுத்த வீட்டுக்கதவுகளைத் தட்டி விளக்கம் கூறவேண்டிய அவசியமில்லை.
தமிழ் ஈழ விடுதலையை அழிப்பதற்கு அதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு.ஆயிரம் ஆயிரம் ஆண்டு கால ஆரிய இனப் பகை அதில் முதன்மையானது மற்றும் தமிழீழம் அமைந்தால் காஷ்மீர், மணிப்பூர், அசாம், காலிஸ்தான் பிரிவினை கோரிக்கைக வலுப்பெறும் என்ற பழைய கற்பனையான கூற்று ஒன்றும் இருக்கிறது. அதோடுகூட தமிழீழம் உருவானால் தமிழ்நாடும் பிரிந்து அதனுடன் இணைய வாய்ப்பு உள்ளது என்ற தமிழ் மக்கள் கூட்டாக இணைந்தாள் தமிழருக்க என்று ஒரு தனிநாடு தழிழர் இராணுவம் எனத் தன்னகத்தே கொண்டிருக்கும் என்ற அச்சம் இன்றுவரை இந்தியாவிற்கு உள்ளதை குறிகாட்டுகிறது. காந்தியின் அகிம்சா தேசம் தேசிய இனமாகிய ஈழத்தமிழர்களுக்குச் செய்த கொடுமைகள் போல வேறு எந்த சக்தியாலும் செய்துவிடமுடியாதென்பது மட்டும் உண்மை !
தியாகதீபம் திலீபனின் ஈகங்களை நெஞ்சில் தாங்கியவர்களாக நாமும் அரசியற் தெளிவும் விழிப்பும் பெற்று எமது மக்களையும் அரசியற் தெளிவும் விழிப்பும் பெறச் செய்து ஒரு புரட்சிகர சமூகமாக அணியமாகி, அணிதிரண்டு அனைத்து ஒடுக்குமுறைகளையும் அடித்து நொருக்கி எமது விடுதலையை வென்றெடுக்க ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்று கூவி, அவர் எங்கள் நெஞ்சுகளில் விதைத்துச் சென்றுவிட்ட, எங்கள் கைகளில் கொடுத்துச் சென்றுவிட்ட புரட்சிகரக் கடமையை நிறைவேற்றி, வீறுகொண்டு எழுந்து அடிமைத்தளை தகர்த்து, தமிழர்தேசத்தை விடுதலை பெறச் செய்து இனமாக
எமது தேசிய இனத்தின் இன்றைய சந்ததியையும், எதிர்கால வழித்தோன்றல்களையும் காக்கும் புனிதப் பணியில் எம்மை இணைத்துக்கொள்வோம். எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதற்கான எமது தேசிய விடுதலைப் போராட்டம் இறுதி இலட்சியம் வரை முன்னேறியே தீரும். ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை. தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு, எட்டாம் நாள் நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம். இவை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் இருந்து