நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் சிங்கள வான் வல்லூறுகள் “புக்காரா”வின் தாக்குதலின் பலியான
மாணவ செல்வங்களை தமிழினம் மறக்குமா?
யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் “புக்காரா” வின் குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட 21 மாணவச்செல்வங்களின் அவலச்சாவை தமிழினம் மறக்குமா?
தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் பாடசாலை சென்ற அந்த மாணவச் செல்வங்கள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ தெரியவில்லை.
பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்டாள் என அம்மாவுக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டது. பாடசாலை சென்ற பையன் இனி வீட்டிற்கு பிணமாகத் தான் வருவான் என அப்பா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
நாகர் கோவில் மாணவர் மீதான வான் தாக்குதல்….
இலங்கை புக்காரா ரக விமானங்கள் பாடசாலை என்று கூடப்பாராமல் குண்டுகளை சரமாரியாக வீசிச் சென்றது. அதில் 21 பாடசாலை மாணவர்கள் ஸ்தலத்திலேயே உடல்சிதறி துடிதுடித்து பலியானார்கள்.
பாடசாலையில் எஞ்சியிருந்த மாணவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக பாடசாலையை விட்டு சிதறி நாலா பக்கமும் ஓடியதைக் கண்ணுற்ற சிங்கள இனவெறியன் கிராமத்தின் எல்லாஇடங்களிலும் கண்டபடி குண்டு மழைகளை சரமாரியாக பொழிந்து தள்ளினான். அதன் காரணமாக வீதியில் விடுகளில் இருந்த பொதுமக்களும் பலியாகினார்கள் எங்கும் புழுதியுடன் கரு மேகம் சூழ்ந்தவண்ணம் இருந்தது.
அந்தக்கொடூரத் தாக்குதலில் மாணவர்கள், பொதுமக்கள் வயது வேறுபாடுன்றி பலர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லக்கூட வாகனவசதி கூட இல்லாத நிலையில் எத்தனையோ பேர் உயிரிழக்கவேண்டிய பரிதாபம் ஏற்பட்டது. ஓலத்தின் குரல்கள் அந்த விதிகளில், தெருக்களில் ஏன் அந்த கிராமத்தையே நிறைத்தது.
நாகர் கோவில் படுகொலை நினைவில்…
சில மாணவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி இருந்தாலும், இரத்தப்போக்கு காரணமாக ஆசிரியரின் மடியில் பிணமானர்கள். சில ஆசிரியர்கள் மனநலம் பாதிப்படைந்தனர்.
ஒரு சில மணிநேரங்களில் அயற்கிராமங்களில் இருந்த வாகனங்களை கொண்டு வந்து காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் இடைவழியில் எத்தனையோ உயிர்கள் பிரிந்தன.
கருவறை பற்றி எரிய பிள்ளை மடிந்த சோகம், அப்படியாக அன்று அந்த கிராமத்தில் நடந்த இனக்கருவழிப்பு இன்றும் தன இயல்பை முழுவதுமாக இழந்த நிலையில் அந்த மண் மயான பூமியாக காட்சியளிப்பதை எம்மவர்களால் மறக்கத்தான் முடியுமா…?
நாகர் கோவில் மண்ணில் 22.09.1995 அன்று எம்மைவிட்டு பிரிந்து சென்ற மாணவர்களின் நினைவை சுமந்து வண்ணம் பயணிக்கின்றோம். எமது இனத்தைக் கருவறுக்க, சிங்கள இனவாதிகள் மாணவர்களைக் குறிவைத்தனர். கள்ளம் கபடம் ஏதுமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட மாணவச் செல்வங்கள் அணிந்திருந்த வெள்ளை சீருடைகளில் எல்லாம் இரத்தக் கறைகள்!
தமது குண்டு வீச்சில் 21 தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டோம் என்ற இறுமாப்பு சிங்கள வான்படைக்கு, கொன்றது பச்சை குழந்தையானாலும் சரி, அல்லது பிறந்து 3 நாள் ஆன குழந்தையானாலும் சரி, கொல்லப்பட்டது தமிழன் தானே என்று அவனுக்கு திருப்தி.
உறவை இழந்த ஒரு சகோதரனின் உள்ளத்திலிருந்து ….
இள வயதில் மடிந்த உங்களை
இன்றும் நினைத்து அழுகின்றோம்
27 ஆண்டுகள் கடந்தாலும்
பாசத்துடன் நினைவு கூருகின்றோம்!.
பள்ளி சென்ற உங்களோடு பலரை
அள்ளி எடுத்தான் ஒருநொடிப் பொழுதில்
அந்நியனின் “புக்காரா” வடிவில் காலனவன் அன்று
முப்பொழுதும் நினைத்து வாடுகின்றோம் என்றும்!
எங்களை விட்டு பிரிந்து சென்ற
உங்களின் நீங்கா நினைவுகளோடு….
ஆயினும் தொடராய் எத்தனை எத்தனை இப்படியான துயிர் தமிழீழ மண்ணில் செஞ்சோலை முதல், சிங்களவனின் வரம்பு எல்லை மீறிய இனவழிப்பின் உச்சம் முள்ளிவாய்க்கால் வரை சென்றும் வாய் மூடி கிடக்கிறது உலகம்.
தமிழீழத்திலே சிங்கள இனவெறியால் பலியாகிய ஆயிரம் ஆயிரம் உயிர்களின் ஆன்மாக்களின் குமுறலையும் கண்ணீரையும் குருதியையும் பிசைந்து அழியாத சுவடுகள் ஆகிப்போன 21 பூக்களின் உடல்கள் செங்குருதியில் மிதந்த அந்த கோர சம்பவத்தின் நினைவில் தமிழீழ தேசம் …
இன அழிப்பில் படுகொலையான எம் உறவுகளுக்கு எம் சீரம் தாழ்ந்த கண்ணீர் பூக்களை அவர் பாதம் தன்னில் வைத்து செல்கின்றோம்.
பலிகாகிய உறவுகளை நெஞ்சிருத்தி எம் தேசத்தில் இருள் மேகம் விலகி சுதந்திர உதயத்தைக் காண மலரப்போகும் தமிழீழத்தை ஒளிரவைக்க ஒன்று படுவோம் தமிழினமே …
நாகர்கோவில் மண்ணில் செங்குருதியில் மாணவச் செல்வங்களின் நினைவுகளின் என்றும்…
22.09.1995 அன்று யாழ் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் மேல் சிறிலங்கா விமானப்படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 23ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் .
யாழ் மாவட்டத்தில் வடமராட்சியில் நாகர்கோயிற் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல் ஆகும். கிராமத்தில் 15.02.1956 இல் திரு.வி.நாகநாதன் அவர்களின் முயற்சியினால் நாகர்கோயில் வடக்கில் :யாழ் நாகர்கோயில் நாகேஸ்வரா வித்தியாலயம் : அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது.
பின்னர் 1967 இல் யாழ்.நாகர்கோயில் மகாவித்தியாலமாகத் தரம் உயர்த்தப்பட்டது 1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக மயிலிட்டிக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் அறுநூறு குடும்பங்கள் நாகர்கோயிலிற்கு இடம்பெயர்ந்தன. நாநூறு மாணவர்களைக் கொண்டிருந்த பாடசாலையின் மாணவர் தொகை எழுநூறாக உயர்ந்தது . 1991ஆம் ஆண்டு ஆனையிறவுப் பகுதியில் நடைபெற்ற சண்டையினால் வெற்றிலைக்கேணி , ஆழியவளை , கட்டைக்காடு போன்ற கிராமமக்களும் நாகர்கோயிலிலேயே தஞ்சமடைந்தனர். 1993ஆம் ஆண்டுக்குப் பின்பு மாணவர்களின் எண்ணிக்கை எண்ணுற்றுமுப்பதாக அதிகரித்தது. ஆசிரியர்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துக் காணப்பட்டது.
1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் இருபத்தோராம் திகதி வடமராட்சியின் பல பாகங்களுக்கும் பலாலியிலிருந்து இராணுவத்தினர் எறிகணைத் தாககுதலை மேற்கொண்டனர். மறுநாள் இருபத்திரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை 6:30 மணிக்கு வடமராட்சி கிழக்குப் பகுதியில் விமானப்படையின் “புக்காரா ” குண்டுவீச்சு விமானம் மணற்காடு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அருகில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதில் தேவாலயம் சேதமடைந்ததுடன் , மணற்காட்டைச் சேர்ந்த இரத்தினம் அன்ரனிதாஸ் (எட்டு வயது), மனோகரதாஸ் மரியஜித் (பத்து வயது), ஜோன்பொஸ்கோ கார்மிளா (ஐந்து வயது) ஆகிய மூவரும் உயிரிழந்ததுடன் பலர்
படுகாயமடைந்தனர்
அன்றைய தினம் (22.09.1995) வடமராட்சி கிழக்கில் காலை பதற்றமாக இருந்தபோதும் நாகர்கோயில் மகாவித்தியாலயத்துக்கு வழமைபோல மாணவர்கள் வந்தனர். அன்றையதினம் எண்ணுற்றுமுப்பது மாணவரில் என்னுற்றுபத்து மாணவர்கள் வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை என்பதால காலையில் இறைவழிபாடு ஆரம்பித்தது. இறைவழிபாட்டினைத் தொடர்ந்து நற்சிந்தனை இடம்பெற்றது . அன்றைய நற்சிந்தனையினை ஏழாம் ஆண்டில் கல்விகற்கும் “நவரத்தினசாமி உமாதேவி ” எல்லோரையும் கவரக்கூடிய விதத்தில் இனிய குரலில் இருபத்தைந்து நிமிடம் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கல்வி கற்றுக்
கொண்டிருந்தார்கள்
மதியம் 12:45 மணியளவில் வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நாகர்கோயில் வான்பரப்பிற்குள் பிரவேசித்த விமானப்படையின் இரண்டு “புக்காரா ” விமானங்களிலிருந்தும் மாறி, மாறி எட்டு றொக்கட்
குண்டுகள் பாடசாலையையும், கிராமத்தையும் நோக்கி வீசப்பட்டதினால் அப்பிரதேசம் புகைமண்டலமானது
இத்தாக்குதலில் காலைப் பிரார்த்தனையில் எல்லோராலும் பாராட்டப்பட்ட “நவரத்தினைசாமி உமாதேவி” உட்பட எழு மாணவர்கள் பாடசாலையினுள் உயிரிழந்தார்கள் . படுகாயத்துடன் உயிருக்காகப் போராடிய பதின்மூன்று
மாணவர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும் , வைத்தியசாலையிலும் இறந்தனர். மேலும் நாற்பத்திரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இன்னும் சில மாணவர்கள் தமது உடல் உறுப்புக்களை இழந்தனர். அன்று நடந்த புக்காராக் குண்டுவீச்சில் பாடசாலை மாணவர்களுடன் நாகர்கோவில் கிராமத்தைச் சேர்ந்த இருபதிற்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்ததுடன், எண்பத்தைந்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்
காயமடைந்தார்கள். அன்றைய தாக்குதலில் இருபது மாணவர்கள் உட்பட நாற்பது பேர் உயிரிழந்தனர் நாற்பத்திரண்டு மாணவர்கள் உட்பட நூறு பேர் காயமடைந்தனர்
இச்சம்பவத்தில் வலதுகாலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில்…
“அன்று புக்காரா விமானம் பாடசாலை அருகில் முதல் குண்டை போட்டவுடனர் எல்லோரும் சிதறி ஓடினோம். அப்போது மீண்டும் விமான இரைச்சல் சத்தம் பெரிதாகக் கேட்ட போது நான் பாடசாலையிலுள்ள அத்திமரத்தின் கிழே விழுந்து படுத்துவிட்டேன் . குண்டு பாடசாலை வளாகத்திற்குள் விழுந்து வெடித்தது பாடசாலை முழுக்க புகை மண்டலமாக இருந்தது, எங்கும் ஒரே அழுகுரல்கள் கேட்டது. நானிருந்த இடத்தில் இருந்து தலையைத்துக்கிப் பார்த்த போது எங்கும் இரத்தமாக இருந்தது. எனது உடம்பலும் காலிலும் காயமடைந்திருந்தேர் அப்போது நான் அத்திமரத்தை விட்டு எனக்கருகிலிருந்த எனது ஒன்றுவிட்ட சகோதரியையும் கூட்டிகொடு ஒரும் நோக்குடர் எழும்ப முயற போது எர்னால் ஓடமுடியாமற் போய்விட்டது. அந்தநேரம் எனது அண்ணாதான் வந்து என்னைத்தூக்கிக்கொண்டுபோய் மந்திகை வைத்தியசாலையிற் சேர்த்தார். அங்கு எனது வலது காலினைக் கழற்றினார்கள். அத்துடனர் எனது வலது கையையும் கழற்ற வேண்டுமெறு கூறினார்கள். பர்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்றுகுணமடைந்தேன்.
1995.09.22 அன்று யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்.!
இல பெயர்
- இராமநாதன் மேதினி
02. இராமச்சந்திரன் சங்கீதா
03. இராசரத்தினம் உமாகாந்தன்
04. இராசரத்தினம் கவிதா
05. இரவீந்திரராசா அமிர்தா
06. உ.தர்சினி
07. நாகமுத்து செல்தில்வேல்
08. நவமணி மிதுரா
09. நவரத்தினசாமி உமாதேவி
10. குகசரவணைமலை தர்சினி
11. கிருஸ்கோபால் தவசீலன்
12. பூலோகராசா துஸ்யந்தி
13. பாலச்சந்திரன் றெஜிதா
14. த.சமித்தா
15. தர்மலிங்கம் உசாநந்தினி
16. தாமோதரம்பிள்ளை சகுந்தா
17. தம்பிப்பிள்ளை கோபிதரன்
18. மயில்வாகனம் கணநாதன்
19. மகாலிங்கம் சண்முகவடிவேல்
20. மார்க்க ண்டு நாகலோசனிை
21. அன்ரன் மரிய மனோகரதாஸ் மரியறஜித்
22. அன்ரனி மரியறோஸ் அன்ரனிதாஸ்
23. அல்போன்ஸ் அமலவிஜி
24. யோன் பொஸ்கோ கார்மிலரா
25. செல்வகுலசிங்கம் செல்வதி
26. செல்வம்
27. சிதம்பரப்பிள்ளை சசிரூபி
28. ராகவன்
தமிழினமே.. பலிகாகிய உறவுகளை நெஞ்சிருத்தி எம் தேசத்தில் இருள் மேகம் விலகி சுதந்திர உதயத்தைக் காண மலரப்போகும் தமிழீழத்தை ஒளிரவைக்க ஒன்று படுவோம்
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”