அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்லின் அழைப்பின்பேரில் சுமார் 63 ஆண்டுகளின் பின்னர் அரசமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
1954ஆம் ஆண்டிற்கு பின்னர் அவுஸ்ரேலியாவின் அழைப்பின் பேரில் அங்கு விஜயம் செய்யும் இரண்டாவது அரச தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார்.
எதிர்வரும் 26ஆம் திகதிவரை அவுஸ்ரேலியாவில் தங்கியிருக்கவுள்ள ஜனாதிபதி, இன்று (செவ்வாய்க்கிழமை) கென்பரா பிராந்தியத்தில் நடைபெறும் நிகழ்வொன்றில் பங்கேற்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து அவுஸ்ரேலியாவிலுள்ள ஒரே ஒரு பௌத்த விகாரைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையம் உள்ளிட்ட இடங்களையும் பார்வையிடவுள்ளார்.
பின்னர் அவுஸ்ரேலிய பிரதமர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் மற்றும் அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ ஜோன் கொத்தலாவளையின் அவுஸ்ரேலிய விஜயத்தை தொடர்ந்து சுமார் 63 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டின் அழைப்பின் பேரில் அவுஸ்ரேலியாவிற்கு அரச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அரச தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பது குறிப்பிடத்தக்கது.