இந்திய அமைதிப் படைகளின் காலத்தில் அவர்கள் தமிழ்பெண்கள் மீதுபரவலான பாலியல் வல்லுறவுகளையும் மேற்கொண்டார்கள்.
இதுபற்றிய முறைப்பாடுகளுடன் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்த இந்திய இராணுவத் தளபதியிடம் சென்றபோது, இப்படியான முறைப்பாடுகளுடன் தன்னிடம் வரவேணட் hம் என்றும், யாரையாவது அவரது படைகள் சுட்டால் மட்டுமே முறைப்பாடுகளுடன் வரவேணடு; ம் என்று சொல்லியிருக்கின்றார். இந்திய இராணுவத்தால் பாலியல் வன்முறைகளை மிகப் பரவலாக இடம்பெற்று வந்ததால் இதை ஒரு குற்றச்செயலாக கருதவேணட் hம் என்று இராணுவத் தளபதிகள் மக்களை நிர்ப்பந்தித்துள்ளர்கள்.
இக்காலப்பகுதியில் தமிழர் தாயகத்தில் பணியாற்றிய பல தமிழ் வைத்தியர்கள் இந்தியப் படைகளால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய நூற்றுக்கணக்கான இளம் பெண்களுக்கு சிகிச்சையளித்திருக்கின்றார்கள். பல்கலைக்கழக ஆசிரியரும் சமூகப்பணி ஆர்வலருமாக இருந்து பின்னர் படுகொலை செய்யப்பட்ட ரஜினி தினகரகம இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுகள் பற்றி விரிவாக எழுதியிருக்கின்றார். இந்தியப் படைகள் புரிந்த பாலியல் கொடுமைகள் சர்வதேச மன்னிப்புக் சபையின் அறிக்கைகளிலும் ஒரு தலைப்பாக இடம்பெற்றுள்ளன. இக்காலப்பகுதியில் வெளிவந்த உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களிலும் இந்தியப் படைகள் புரிந்த பாலியல் குறற் ஞ்செயல்கள் பற்றிய செய்திகள் அதிகமாக வெளிவந்திருக்கின்றன.
இக்காலப்பகுதியில்நிலவியபாலியல்வல்லுறவுக்குட்படும்பயம்காரணமாக இளம்பெணக்ள்அதிக அளவில் தமிழ் ஆயுதக்குழுக்களில் இணைந்து கொண்டார்கள். தங்களது நணப் ர்களும் அயலவர்களும் இந்தியப் படைகளால் பாலியல் வல்லுறவுக்குடபடுத்தப்பட்டதே தாங்கள் இவ்வாறு இணைவதற்கு உந்து சக்தியெனறு; பலர் கூறியுள்ளார்கள். மானுடவியலாளர்கள் கூற்றில் கூறுவதானால்,ஒருஇளம்பெணண்pன்இம்முடிவானது,அவரைபாதிக்கப்படக்கூடியவர்என்ற நிலையை களைந்து சமூகத்தில் சக்தியுள்ள ஒருவராக மாற்றுகிறது எனலாம்.
புள்ளிவிபரங்கள்
இக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுகள் தொடர்பான ஆவணங்கள் தமிழ்ச் செயற்பாடட்hளர்களால்பரந்தளவில்சேர்க்கப்பட்டுள்ளன.1987ஒக்ரோபருக்கும்1988யூனிறகு;ம் இடையில் தனித்தனியாக 60 இற்கும் மேற்பட்ட பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதற்கான ஆவணங்கள் உள்ளன. இவ்வாறன சில ஆவணங்களில் மருத்துவ அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட சம்பவங்களில் 350 வரையான பெண்களும் யுவதிகளும் இவ்வாறாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.இவ்வாறுபாதிக்கப்பட்டவர்களில்14வயதுஇளம்பெணக்ள்தொடக்கம்45 வயதான பெண்கள் வரைக்கும், கர்ப்பிணிகள்கூட உள்ளடங்குகின்றனர். ஏறத்தாழ அரைவாசிக்கும் மேல் 18 வயதுக்குட்பட்டவர்களேயாவர்.
பெரும்பான்மையான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இடம்பெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான நிகழ்வுகள் இடம்பெற்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் இந்திய இராணுவத்தின் கைகளில் அகப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாகினர். தமிழர் கலாச்சாரத்தில் இக்குற்றச்செயல் மிகவம் பாரதூரமான தன்மையில் பார்க்கப்படுவதால், பெருந்தொகையான சம்பவங்கள் ஆவணப்படுத்தப்படவில்லை. எனினும் இந்தியப் படைகளின் பாலியல் வல்லுறவானது ஒரு திட்டமிட்ட வன்முறை வடிவமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை இச்சம்பவங்களின் சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களும் ஏனைய விபரங்களும் காட்டுகின்றன.
இந்தியப் படைகளின் பாலியல் வல்லுறவுகளின் பொதுவான அம்சங்கள்.
பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் காட்டுவது போன்று, அவை ஒரு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியப் படைகள் மத்தியில் இது ஒரு பரவலான ஒரு செயற்பாடாகவும் இருந்துள்ளது. பல சம்பவங்களில் இந்தியப் படையினர் பெணக்ளை அவர்களது வீடுகளில் வைத்தே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
மற்றைய சம்பவங்களில் பெண்களைக் கடத்தி தமது முகாம்களுக்கோ அல்லது கைவிடப்பட்ட இடங்களுக்கோ கொணடு; சென்று வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்கள். முகாம்களிலும் காவலரண்களிலும் நிலைகொண்டிருந்த படைவீரர்கள் மக்களுடைய குடியிருப்புக்களுக்குச் சென்று, வீடுகளுக்குள் நுழைவார்கள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படைவீரர்கள் குடும்ப அங்கத்தவர்களைத் தாக்கிவிட்டுப் பின்னர் பெணக்ளையும் யுவதிகளையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவார்கள் அல்லது பாலியல் துஸ்பிரயோகம் செய்வார்கள்.அதன்பினன்ர்,அவர்கள்வீட்டைச்சூறையாடி,குடும்பத்தின்தனிப்பட்டஉடைமைகளை அல்லது பெறுமதியான பொருட்களை தம்முடன் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். சில சம்பவங்களில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின்னர் பெண்கள் கொலைசெய்யப்பட்டும் உள்ளார்கள்.
1988 ஜனவரி 2 ஆம் திகதி, யாழ்மாவட்டத்திலுள்ள புன்னாலைக்கட்டுவன் என்னும் இடத்தில் மூத்ததம்பி கனகேஸ்வரி என்பவரின் வீட்டிற்குள் மூன்று இந்திப்படையினர் நுழைந்தார்கள். அவர்கள் அவரை தொல்லைப்படுத்தி, பாலியல் ரீதியாகத் துஸ்பிரயோகம் செய்துவிட்டு அவரது வீட்டையும் சூறையாடினர். அதே இடத்தில், நாகமுத்து சரவணை என்பவருடைய வீட்டிற்குள் நுழைந்த வேறு மூன்று இந்தியப் படையினர் அவருடைய மகள்மாரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்திருக்கின்றார்கள்.
1987 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தின் கோணட் hவில் கிழக்கில் இரண்டு இந்தியப் படையினர் காங்கேசன் துறை வீதி மற்றும் முதட்டு மடம் வீதிச் சந்தியிலிருந்த எஸ். சற்குணதேவியின் வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார். அவர்கள் அவரது கணவரைக் கட்டி அவரைத் தாக்கியும் இருந்தனர். 1987 நவம்பர் 26 ஆம் திகதி. ஜி.செல்வநாயகத்தின் வீட்டுக்குள் நுழைந்த சில படையினர் அவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். இவ்விரு சம்பவங்களும் எவ்வாறு இந்தியப் படையினர் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்களை பாலியல் வல்லுறவுக்குடப் டுததினார்கள் என்பதை காட்டுகின்றன.
1987 நவம்பர் 21 ஆம் திகதி. யாழ்மாவட்டத்திலுள்ள உடுவிலைச் சேர்ந்த பல பெண்கள் உடுவில் இராணுவ முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்த படையினரால் பாலியல்வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்கள்.
1987 ஒக்ரோபர் 17 அம் திகதி. யாழ்ப்பாண மாவட்டத்தின் உரும்பிராய் என்னும் இடத்தில் 30 பெண்கள் இந்தியப் படைவிரர்களால் கடத்தப்பட்டார்கள். அவர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது.
1987 ஒக்ரோபர் 20 ஆம் திகதி, யாழ்ப்பாண மானிப்பாயில் ஒரு தாயும் அவருடைய மகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
1989 வரை வடமராட்சியில் பணியாற்றிய தமிழ் வைத்தியர் ஒருவர் இந்தியப் படைவீரர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பலருக்குச் சிகிச்சையளித்தார். அவர் கேடட் தகவல்களின் படி, அதிகமான பாலியல் வல்லுறவுகள், இந்திய இராணுவத்தினர் வீடுகளைச் சுற்றிவளைத்து ஆண்களை பிடித்துச் செல்லும் நடவடிக்கைகளின்போதே இடம்பெற்றிருக்கின்றது. இந்நேரத்தில் இந்தியப் படையினரின் ஏனைய வீரர்கள் வீடுகளுக்குள் நுழைந்து பெண்களையும் யுவதிகளையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவார்கள். இவ்வாறான ஒரு சம்பவத்தில் 8. 10, 12 வயதுடைய மூன்று சகோதரிகள் படைவீரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்காளாக்கப்பட்டார்கள்.
சிகிச்சையின்போது அவர்களது மார்பகங்களைச் சுற்றி கடித்த அடையாளங்கள் இருந்ததை அவ் வைத்தியர் கண்டார்.இவ்வாறு பாலியல் வல்லுறவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவளத்துணைச் சிகிச்சை, உடற்காயங்கள் மற்றும் பாலியல் ரீதியாகக்கடத்தப்படும் தொற்றுநோய்களுக்கும் அவர் சிகிச்சையளித்துள்ளார். பாலியல் வல்லுறவு காரணமாக பெண்கள் கர்ப்பமடைந்த நிலையையும் எதிர்கொண்டிருந்தனர். உடற்காயங்கள் சிகிச்சையளிப்பதற்கு இலகுவானவையாக இருந்தன என்றும், ஆனால் உளவியல் தாக்கங்களுக்குச் சிகிச்சை வழங்குவது மிகவும் கடினமாது என்றும் கூறினார்.
பெரும்பாலான பெண்கள் அது தங்களுடைய தவறே என்று நம்புவதாகக் கூறி ஒரு குற்ற உணர்வினாலேயே மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததை அவ்வைத்தியர் அவதானித்தார். இம் மனநிலையிலிருந்த தனது நோயாளர்களை வெளியில் கொண்டுவருவது அவ்வைத்தியருக்குப் பெரும்பாடாக இருந்தது.
பாதிக்கபப் ட்டவர்களது பதில் நடவடிக்கைகள்;
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமூக்தால் கறை பூசப்படும் என்ற பயம் காரணமாக பாலியல் வன்முறைச் சம்பவங்களைப் பற்றி முறையிடுவது தமிழ் சமூகத்தில் மிகவும் அரிதான செயல். இருந்தும் கூட, சில பாலியல் வன்முறைச்சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களால் வெளிகொண்டுவரப்பட்டன. இப்பாதிப்புகளை எதிர்கொள்ளும் வேறு சில வழிகளையும் இவர்கள் செயற்படுத்தியள்ளார்கள்.
1988 ஏப்ரலில், கிளிநொச்சி இரணைமடு மற்றும் முல்லைத்தீவின் விசுவமடு ஆகிய இடங்களில் ஆறு பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்கள். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட அயலவர்களும் அவ்விடங்களில் வாழ்ந்த மக்களும் தங்களது வீடுகளுக்குள்ளேயே இருந்ததுடன் ஏப்ரல் 10 ஆம் 11 ஆம் திகதிகளில் தங்களது கடைகளைப் பூட்டி, வியாபாரங்களையும் நிறுத்தி வைத்திருந்தார்கள். இச்சம்பவமானது எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாக மட்டுமன்றி, கொடூரமாக தாக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தவர் சோகம் ஆறும்; நேரமாகவும் அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் செயலாகவும் இருந்தது.
1987 நவம்பர் 30 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த 47 குடிமக்களால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று, பின்வருமாறு சொல்கின்றது:
‘இச்சம்பவங்களானது இப்பகுதி மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் அவர்களில் சிலர் இவ்விடத்தைவிட்டு வெளியேறிக்கொண்டும் இருக்கின்றார்கள். பாதுகாப்பாக வாழமுடியும் என்ற நம்பிக்கையில் நாம் எமது வீடுகளுக்குத் திரும்பும்போது, அமைதி காக்கும் படையினரால் நாம் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகின்றோம்.
அதிகாரிகள் பதில் நடவடிக்கைகள்
பாலியல் வல்லுறவுக்குச் சம்பவங்களுக்கு இந்தியப் படையினரும் இலங்கை அரசாங் அதிகாரிகளும் வழங்கிய பதில்கள் ஒன்றில் அச்சம்பவங்கள் நடக்கவில்லை என்று மறுப்பதாக அல்லது அவற்றை குறைத்துக்காட்டுவதாகவே இருந்தன. இந்தத் தந்திரமானது பொறுப்பிலிருந்தும் நீதியிலிருந்தும் தப்பித்துக்கொள்வதற்கு மட்டுமன்றி, தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் கௌரவத்தையும் இழந்த நிலையினைப் பதியச் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதானது பெண்களையும் அவர்கள் சமூகத்தையும் பாரியளவில் பாதிப்புறச் செய்ததுடன், இவ்வாறு அதனை மறுப்பதானது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த மன அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்தது.
1987 நவம்பர் 21 ஆம் திகதி, உடுவில் இராணுவ முகாமில் வைத்து பல பெண்கள் இந்தியப் படைகளால் பாலியல்வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்கள். பின்னர் இச்சம்பவம் பற்றி முறையிடுவதற்காகப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெணக்ளும் அவர்களது பெற்றோரும் அதிகாரிகளிடம் சென்றார்கள். அதற்கு அதிகாரிகள், பாலியல் வல்லுறவு என்பது பொதுவாக நடக்கும் ஒன்றே. இச்சம்பவம் பற்றி முறைப்பாடு செய்வதற்கு இங்கே வரவேண்டாம். யாராவது சுட்டுக்கொல்லப்பட்டால் நாங்கள் அதைப் பதிவதற்குத் தயாராக இருக்கின்றோம’; என்று சொன்னார்கள்.
பாலியல் வல்லுறவு என்பது ‘பொதுவாக நடக்கும் ஒன்று’ என்று வகைப்படுத்துவதன் ஊடாக, அக்குற்றச்செயலதும் மனித உரிமை மீறலதும் தீவிரத்தன்மையினை குறைத்துக்காட்டும் ஒரு செயற்பாடாகவே இவர்களது பதில் அமைந்திருந்தது.
1988 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் வடக்கு, சிறி துர்க்கா சனசமூக நிலையத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் ஒன்றில் அக்கிராமத்தின் 60 குடியிருப்பாளர்கள் கையொப்பமிட்டிருந்தார்கள். பாலியல் வல்லுறவுக்கு அல்லது துஸ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்ட அக்கிராமத்தைச்சேர்ந்தபலபெணக்ள்பற்றியஒருஅறிக்கைஉட்படஇந்தியப்படைகளால் இழைக்கப்பட்ட அநீதிகளை அவ் ஆவணம் கோடிட்டுக் காட்டியது.
படையினர் தமிழ்ப் பெணக்ளைப் பாலியல் வல்லுறவுக்குடப்டுத்துகின்றார்கள் என்ற ஊடகச் செய்திகளை யாழ்ப்பாண இந்திய இராணுவத் தலைமையகம் மறுத்தது. இவ்வறிக்கைகள் விஷத்தன்மையானதும் படையினரை கேவலப்படுத்துவதுமாக உள்ளது என அவர்கள் இதற்கு பதிலளித்தனர். மேலும், ‘பெண்களை போற்றுவது இந்திய கலாசாரத்தின் ஒரு உன்னதமான அம்சம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லா இலங்கை தமிழருக்கும் மதிப்பளித்து வரும் இந்திய படை வீரர்கள் இப்படி மோசமான குற்றச்செயல்களை புரிவார்கள் என்பது ஏற்க முடியாதது’, என்றும் கூறினார்கள்.
பெண்களுக்கு மதிப்பளிக்கும் இந்திய கலாசாரத்தை காட்டி இந்திய இராணுவம் பாலியல் வல்வுறவுக் குற்றச்சாடடு; களை மறுக்க முயற்சிப்பதையே இது காட்டுகிறது.