‘தற்போது செய்தித் தலைப்புகளைப் படிக்கும்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு, சூடான் போன்ற ஒருசில பகுதிகளில் பாலியல் வன்புணர்வு என்பது ஒரு போர்த்தந்திரமாகப் பயன்படுகிறது என்று சிலர் நினைக்கக்கூடும். இது மோசமானதாக இருக்கலாம். ஆனால் யதார்த்த நிலை இன்னும் படுமோசமானது.
போஸ்னியா, பர்மா, இலங்கை உள்பட பல்வேறு இடங்களில் வன்புணர்வு என்பது ஒரு போர்த்தந்திரமாகவே பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில், பல்வேறு சம்பவங்களில் இந்த குற்றச் செயல்களைச் செய்பவர்கள் தண்டிக்கப்படுவதே இல்லை. இந்த தண்டனையில்லாத தன்மை, மேலும் மேலும் இதுபோன்ற தாக்குதல்களைச் செய்யத் தூண்டுகிறது
-மனித உரிமை கண்காணிப்பகம்
பள்ளி மாணவிகள், இளம்பெண்கள் உள்பட பல ஆயிரம் தமிழ்ப்பெண்கள் இலங்கை ராணுவத்தினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பெரும் அளவில் வெளிச்சத்துக்கு வந்த சில பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள்
இலங்கை இனப்படுகொலையில் பாலியல் வன்புணர்வு என்பது ஒரு தந்திரமாகக் கையாளப்பட்டது. அது தொடர்பான மாதிரி அட்டவணை
(1996 முதல் 2001)
1. கொடிகாமம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்குப்பின் கொலை செய்யப்பட்டார் – 11.05.1996
2. ஸ்ரீ ரஞ்சனி (18), புவனேஸ்வரி (36), ராஜேஸ்வரி (38) ஆகியோர் சரசாலை பகுதியில் அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் வன்புணர்வுக்குப் பின் கொலை செய்யப்பட்டனர். ராஜேஸ்வரி, ஸ்ரீ ரஞ்சனியின் தாயாரும், புவனேஸ்வரியின் சகோதரியும் ஆவார். 19.05.1996
3. பெண் ஒருவர் (பெயர் வெளிப்படுத்தப்படவில்லை) கொழும்புத்துறையில் ராணுவத்தினரால் வன்புணர்வுக்குப் பின் கொல்லப்பட்டார். 19.05.1996
4. பெண் (45) (பெயர் வெளிப்படுத்தப்படவில்லை) தியவெட்டுவான் பகுதியில் ராணுவத்தினரால் வன்புணர்ச்சிக்குப்பின் கொலையுண்டார் 07.04.1996
5. புஷ்பமலர் (22). கச்சாய் பகுதியில் ராணுவத்தினரால் வன்புணர்வுக்குப்பின் கொலை செய்யப்பட்டார் 01.05.1996
6. கே. பாலேஸ்வரி. ராணுவத்தினரால் வன்புணர்வுக்குப்பின் கொலை செய்யப்பட்டார். 09.08.1996
7. கிருஷாந்தி குமாரசாமி (18) கைத்தடி பகுதியில் செம்மணி தேடுதல் சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தினரால் வன்புணர்வுக்குப்பின் கொலை செய்யப்பட்டார். 07.09.1996
8. வாசுகி. யாழ்ப்பாணத்தில் ஆறு ராணுவத்தினரால் வன்புணர்வுக்குப்பின் கொல்லப்பட்டார் (இடம் தெரியவில்லை) 09.09.1996
9. திருநெல்வேலியைச் சேர்ந்த 55 வயதான முதிர்ந்த பெண்மணி யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினரால் வன்புணர்வுக்குப்பின் கொலையுண்டார். (இடம் தெரியவில்லை) 10.09.1996
10. முத்தூர் கிளிவெட்டியைச் சேர்ந்த தனலட்சுமி (17) சிங்களப் படையினரால் வன்புணர்வுக்குப்பின் கொலை செய்யப்பட்டார் 11.09.1996
11. திருகோணமலையில் லட்சுமிப்பிள்ளை – அக்டோபர் 1996
12. வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் – நவம்பர் 1996
13. கல்குடா பாட்டியாச்சோலையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சொர்ணம்மா (35), கல்குடாவில் இருந்த ராணுவத்தினரால் கொல்லப்பட்டார் 03.11.1996
14. எஸ். தேனுகா (பத்து வயதானவர்). அச்சுவெளி பாதைமணியைச் சேர்ந்த இவர் ராணுவ வன்புணர்வுக்குப்பின் கொலை செய்யப்பட்டார். 12.11.1996
15. மண்டூரைச் சேர்ந்த சிவசோதி மண்டூரில் நிலைகொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரால் வன்புணர்ச்சிக்குப்பின் கொலையுண்டார் 31.12.1996
16. மயிலாம்பாவெளி வீட்டுவசதித் திட்டப்பகுதியைச் சேர்ந்த பி.வனிதா, மயிலாம்பாவெளியைச் சேர்ந்த ராணுவத்தினரால் சூறையாடப்பட்டு கொலையானார் டிசம்பர் 1996
17. எஸ்.நவமணி (44) பி.ஜெயந்தி (22) எல்.மேகலா (16) தீயவெட்டுவான் பகுதியைச் சேர்ந்த இவர்கள், வாழைச்சேனை காகிதஆலை முகாமில் தரித்திருந்த ராணுவத்தினரால் வன்புணர்ச்சிக்குப்பின் கொல்லப்பட்டனர். ஜெயந்தியும், மேகலாவும், நவமணியின் மகள்கள் ஆவார்கள். 09.01.1996
1. மட்டக்களப்பு கல்லடி சாலை கலியன்காடு ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த பெண் ஊழியர், அரசு ஆதரவுக் குழுவினரால் வன்புணர்வுக் கொலை மார்ச் 1997
2. வி.ராசம்மா (39), வி.வசந்தா (28) மயிலாம்பாவெளி பகுதியில் நிலை கொண்டிருந்த ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இருவரும் சகோதரிகள் -17.03.1997
3. முருகேசப்பிள்ளை கோணேஸ்வரி (35) அம்பாறை மத்திய முகாம் காலனி-மத்திய முகாம் காவலர்களால் வன்புணர்வுப் படுகொலை – 17.05.1997
4. கிருபாதேவி (37) மத்துவில் வடக்கு ராணுவத்தினரால் கொலை -19.05.1997
5. விஜயராணி (17) அராலி பகுதி ராணுவத்தினரால் கொலை- 17.07.1997
6. சின்னப்பு பாக்கியம் 37) மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த ராணுவத்தினரால் கொலை-05.08.1997
7. எஸ். ரஜினி. வாழைச்சேனை விபுலானந்த தெருவைச் சேர்ந்த இவர் துறைமுகப்பகுதி ராணுவத்தினரால் கொலை- 19.08.1997
8. பாலநிதி (ஆறு வயதானவர்) அச்சுவேலி பகுதியில் ராணுவத்தினரால் கொலை-05.09.1997
9. ரஜினி வேலாயுதம்பிள்ளை (23) கோண்டாவில் உரும்பிராய் வடக்குப்பகுதி ராணுவத்தினரால் கொலை- 12.09.1997
10. தங்கநாயகி (49) அம்பாறை ஊர்க்காவல்படையினரால் கொலை-16.10.1997
11. 40 வயது பெண். மந்திகை பகுதி ராணுவத்தால் கொலை 28.10.1997
12. கே. சந்திரகலா (20) அல்வை ராணுவத்தினரால் கொலை-12.07.1997
13. சியாமளா (17) பளை பகுதி ராணுவத்தினரால் கொலை -06.11.1997
14. கே. அமுதா-விடத்தல்தீவு, மன்னார் (காவல்துறையால்) – 25.12.1997
15. சவரி மெடலீன் (31) சொறிக் கல்முனை. சொறிக் கல்முனை ஐந்தாவது டிவிசன் சிறப்பு அதிரடிப்படையால் கொலை- 27.12.1997
16. எஸ். செல்வராணி (28) மீசாலை பகுதி ராணுவத்தினரால் கொலை- 16.03.1998
17. பி.அஜந்தானா (17) அரியாலை காவல்துறையால் கொலை – 15.04.1998
18. மனநலம் பாதிக்கப்பட்ட 36 வயதுப்பெண். மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் ராணுவத்தினரால் கொலை- 07.05.1998
19. கே.ராகினி (23) பணிச்சன்கேணி. பணிச்சன்கேணி பகுதி ராணுவத்தால் படுகொலை -22.06.1998
20. என். பவானி (46) திருநெல்வேலி, யாழ்ப்பாணம். ராணுவத்தால் கொலை- 16.07.1998‘
21. இடா கார்மெலிட்டா, மன்னார் பல்லிமுனை. பல்லிமுனை பகுதி ராணுவத்தால் கொலை- 11.07.1998
22. என். விஜயலட்சுமி (19) கல்மடு, வாழைச்சேனை. கிழக்கைச் சேர்ந்த தமிழ் ராணுவ ஒட்டுக்குழுவினரால் கொலை- 17.12.1999
23. சரவணபவன் சாரதாம்பாள் (20) புங்குடுத்தீவு, 10வது டிவிசன் கடற்படையினரால் கொலை- 28.12.1999
24. நாகலிங்கம் யோகா. நீர்க்கொழும்பு காவல்துறையால் கொலை- 21.06.2000
25. லிங்கம் விஜிதா. நீர்க்கொழும்பு காவல்துறையால் காவலில் வைக்கப்பட்டு சித்ரவதைக்குப்பின் கொலை- 21.06.2000
26. டி.ஆனந்தி (28) செட்டிப்பாளையம். சிறப்பு அதிரடிப்படையால் கொலை-01.02.2001
27. எஸ்.சிவமணி (22) உப்புக்குளம், மன்னார், நாசவேலைதடுப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையினரால் கொலை -19.03.2001
28. என். விஜிகலா (22) உப்புக்குளம், மன்னார், நாசவேலைதடுப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையினரால் கொலை -19.03.2001
29. சிவ ரஜனி –ஹைய்க் சாலை, பம்பலப்பிட்டிய, காவல்துறை மற்றும் தங்கும்விடுதி நிர்வாகத்தால் படுகொலை -19.05.2001
30. விமலாதேவி–ஹைய்க் சாலை, பம்பலப்பிட்டிய, காவல்துறை மற்றும் தங்கும்விடுதி நிர்வாகத்தால் படுகொலை -19.05.2001
31. 28 வயதான தாய் மற்று இரு குழந்தைகள்- மருதானை சோதனைச் சாவடியில் காவல்துறை, ராணுவத்தால் கூட்டு வன்புணர்ச்சி- 24.06.2001
19 வயதான தமிழ்ப் பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி, அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் படையினரால், பிரிகேடியர் ஜனக பெரேராவின் தலைமையின் கீழிருந்த ராணுவத்தினரால் வன்புணர்ச்சிக்குப்பின் படுகொலை செய்யப்பட்டார். ஜனக பெரேரா, பின்னர் ஆஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட ஐ.டி.பி. முகாம்கள் மூலம் தமிழ்ப்பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வுகள் , பாலியல் ரீதியான தாக்குதல்கள் இது முழுமையான விபரம் இல்லை
இதில் இந்திய ராணுவம் தமிழ்ப்பெண்களைக் கூட்டுக்பாலியல் வல்லுறவு செய்தது விபரங்களும் இதில் உள்ளடங்கவில்லை )
தொடரும்