இன்று ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள். (Jan 24, 2006)
ஊடகதர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உண்மையை உலகிற்கு கொண்டு சென்ற சுகிர்தராஜனைஊடகத்துறையால் காப்பாற்ற முடியாமல் போனது என்பது கசப்பான உண்மையே.
மட்டக்களப்பு குருமண்வெளியில் பிறந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் என்ற ஊடகவியலாளர் தனது தொழில்நிமிர்த்தமாக திருமலையில் தங்கியிருந்த நேரத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி இனம்தெரியாத நபர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
சுகிர்தராஜன் மட்டக்களப்பு, குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள்ஞானம்மா. அம்பாறை வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், திருகோணமையில் பணி நிமித்தம்தங்கியிருந்தார்.
பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் தாபகத் தலைவரான இவர், 1997 இல் இலங்கைத் துறைமுகஅதிகார சபையின் ஊழியராக பணியாற்றினார். அத்துடன், சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின்திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய இவர் – வீரகேசரி, மெற்றோ நியூஸ் ஆகியவற்றில் அரசியல்கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் – எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும், மெற்றோநியூசில் – ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார்.
திருகோணமலையில் இருந்து சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக்கடமையாற்றிய சுகிர்தராஜன் வீரகேசரி, மெற்ரோ நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார்.
வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்ரோ நியூஸ் பத்திரிகையில் ஈழவன்என்ற பெயரிலும் அரசியல் விடயங்களை எழுதி வந்தார்.
2006 இல் உயர்தரக் கல்வியை முடித்து பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2006 சனவரி 2 ஆம் நாள் திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு இராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த படையினரால் இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் தமது உயர்தர சோதனையை முடித்து விட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள்.
இலங்கைக் காவல்துறையினரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்றும், அரசுப் படைகள் மீது கிரனைட்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கிரனைட்டு வெடித்து இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினர்.
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:
மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)
யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)
லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)
தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)
சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)
இறந்த மாணவர்களின் உடல்களைப் பரிசோதித்த அரசுப் பிணை ஆய்வாளர், இறந்த மாணவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
இன்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் வைத்து பல்கலைகழகத்திற்குதெரிவாகியிருந்த ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக்காட்டியிருந்தார் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் இதன் காரணமாக அவர் குறிவைக்கப்பட்டிருந்தார்.
அன்று இருந்த பொலீஸ் அதிகாரிகள் குறித்த ஐந்து மாணவர்களின் இறப்புக்கு கைக்குண்டு தாக்குதலேகாரணம் எனக் கூறி விசாரணையை திசைதிருப்ப முயற்சிசெய்த நேரத்தில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன்மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டு சுட்டுகொல்லப்பட்ட மாணவர்களின் சூட்டுக்காயங்களை நுட்பமாகபடமெடுத்து குறித்த மாணவர்கள் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டே இறந்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட இந்த மாணவர்களை இவர் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.
மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்பமுயற்சிக்கப்பட்டபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக்காட்டின. இதனால் அரசுக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரும், அழுத்தங்களும் ஏற்பட்டன.
அவர்களின் தலையில் உள்ள காயங்கள் கைக்குண்டு தாக்குதலாள் ஏற்பட்டவை அல்ல அது துப்பாக்கிகுண்டுகளால் ஏற்படுத்தப்பட்டவை என்பதை உலகிற்கு வெளிக்காட்டியிருந்தார்.
சுகிர்தராஜனின் குறித்த செய்தி அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தத்தை கொடுத்ததுடன் அதுஐக்கியநாடுகள் சபையின் விசாரணைக்கும் உள்வாங்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியே அன்று சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்படக் காரணமாக அமைந்திருந்தது என கூறப்படுகிறது.
அத்துடன், கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள், அரசு சார்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர்திருகோணமலையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அடங்கிய தகவல்களை, இவர் சுடரொளியில்வெளியிட்டிருந்தார்.
தமிழ் சமூகத்தின் ஊடகப்போராளியாக செயற்பட்ட சுகிர்தராஜனின் இழப்புக் குறித்த செய்திகள் அப்போதுஏற்பட்ட கடுமையான யுத்த சூழ்நிலைகாரணமாக பெரிதாக கவனம்செலுத்தப்படவில்லை என்பதோடுபின்நாட்களில் அதுகுறித்து கவனம் செலுத்தப்படாமல் போனமையானது வேதனையானதே.
குறிப்பாக யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டைவிட்டு பல தமிழ் ஊடகவியலாளர்கள் வெளியேறி பாதுகாப்பாகஇருந்தாலும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதோடு நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் குறித்துகவனம்செலுத்த தவறிவிடுகின்றனர்.
மிகமுக்கியமாக ஊடகத்துறைக்காக தங்களது உயிரை அர்ப்பணித்த ஊடகவியலாளர்களின் குடும்பங்கள்குறித்து கவனம் செலுத்த தவறிவிடுகின்றனர்.
சுகிர்தராஜன் போன்ற ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இலங்கையில் உள்ள ஊடகநண்பர்களை விடபுலம்பெயர் தேசத்தில் உள்ள ஊடகநண்பர்களினாலே இப்போதைக்கு உதவி செய்யமுடியும்.
இவருக்கு மிதுசா, சதுர்சன்எ என்று 2 பிள்ளைகள் இருக்கின்றனர்.
உள்ளதை உள்ளபடி உலகுக்கு வெளிப்படுத்தும் ஊடக பணியை, நேர்மையாக செய்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருப்பதில்லை. இதில் பலியானவர்களின் தொகை எண்ணிலடங்கா. அவர்களுக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக்கடன், அவர்களின் நினைவு நாளில் அவர்களுக்கான மரியாதையை செலுத்துவதும், அவர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் நினைவு கூருவதுமாகும்.
தனது 36 ஆவது வயதில் உயிரிழந்த சுகிர்தராஜன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் உரித்தாகட்டும்!