பிரகீத் எக்னலிகொட (Prageeth Eknaligoda) இலங்கையின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியரும்ஆவார். சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த இவர் லங்காநியூஸ்.கொம் இணையத்தளத்தின்ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்.
இவர் இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 2010, சனவரி 24 ஆம் நாள் இரவு08:30 மணியளவில் கொஸ்வத்தையில் வைத்துக் காணாமல் போனதாக முறையிடப்பட்டது. இவர் இலங்கைஅரசு சார்பானவர்களால் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்
இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரகீத் முன்னொரு தடவையும் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுவிடுவிக்கப்பட்டார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மையப்படுத்தி “போர் ஒன்றை வெற்றிகொள்வதற்கான இரகசியங்கள்’ என்ற 40 நிமிட நேர ஆவணத் திரைப்படத்தைத் தயாரித்தவர்களில் இவரும்ஒருவர்.
எக்னலிகொட காணாமல் போன நிகழ்வை விளக்கி பன்னாட்டு மன்னிப்பு அவை அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பும் இவரைப்பற்றித் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு குற்றப்பதிவுத் திணைக்களம் எக்னலிகொட காணாமல் போனமை குறித்து விசாரணைகளைமேற்கொண்டிருந்தது. ஆனாலும் இவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
சிஐடியினர் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் போலியான ஆதாரங்களை வெளியிடுமாறு கோரி தன்னைமிரட்ட முயற்சித்தனர் என பேரினவாத சிங்கள இராணுவபுலனாய்வு பிரிவின் அதிகாரி கனிஸ் குணவர்த்தனதெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனைகுறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்குமாறுசிஐடியினர் அழுத்தம் கொடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளில் சிக்கவேண்டாம், பிரகீத் எக்னலிகொட உங்களுடன் கிரித்தல இராணுவ முகாமிற்கு வந்தார்எனவும் பின்னர் அவர் அக்கரைப்பற்று முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் தெரிவியுங்கள் எனசிஐடியினர் தன்னை வற்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயராஜபக்சவின் உத்தரவின் பேரில் கேணல் சமிகுணரட்ணஎக்னலிகொடவை கடத்தினார் என தெரிவியுங்கள் என சிஐடியினர் வற்புறுத்தினார்கள் எனவும் கனிஸ்குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நான் பொய் வாக்குமூலத்தினை வழங்காததன் காரணமாக ஆத்திரமடைந்தசிஐடியினர் பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கொலை குற்றச்சாட்டுகளை சுமத்தி என்னை நீதிமன்றத்தின் முன் நிறுத்தினார்கள் எந்தவிசாரணைகளும் இன்றி எந்தஆதாரமுமின்றி நான் எட்டு மாதம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டேன் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
பிரேமதிலக என்ற உதவிப்பொலிஸ் அத்தியகட்சகர் துமிந்த சில்வா கோத்தபாய ராஜபக்சவை அதிகம்ஆதரிக்கின்றார் அவர் அதிகம் துள்ளிக்குதிக்கின்றார் நாங்களே அதற்கு அனுமதித்தோம் என குறிப்பிட்டார்எனவும் கனிஸ்க குணரட்ன தெரிவித்துள்ளார்.
நான் சிஐடியினருக்கு ஆதரவளிக்காவிட்டால் எனக்கும் துமிந்தசில்வாவின் நிலையே ஏற்படும்என பிரேமதிலகதெரிவித்தார் எனவும் கனிஸ்க குணரட்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான 9 இராணுவ புலனாய்வு பிரிவுஅதிகாரிகளுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த வழக்கின் சாட்சியாளரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி, அப்போதையஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னர்கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.