பெலாரஸ் நாட்டில் இடம்பெற்ற போர்த்தளபாடங்கள் தொடர்பான கண்காட்சியில் ஆயுதம் தாங்கிய கவசவாகனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளதாக மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தெரிவித்துள்ளார்.
பெலாரஸ் நாட்டில் MILEX 2017 என்ற அனைத்துலக இராணுவத் தளபாடங்கள் கண்காட்சி கடந்த 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 22ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க, குறித்த கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்நிலையில், புதிய வகையான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொள்வனவு செய்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பெலாரஸ் நாட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களையே இலங்கை இராணுவம் பயன்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெலாரஸ் நாட்டிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ய இலங்கை ஆர்வம் காட்டியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.