தனித்தனி தேசங்களாக இருந்துவந்த இலங்கைத் தீவினை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர்,இலங்கையைவிட்டு 1948ம் ஆண்டில் வெளியேறிய பின்னர், ஜனநாயகம் என்ற போர்வையில் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றிவரும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகள் கட்டம் கட்டமாக திட்டமிட்ட தமிழின அழிப்பை 1950 களில் இருந்து இன்றுவரை அரங்கேற்றி வருகின்றனர். தமது சொந்த நலன்களுக்காக பல்வேறு வல்லாதிக்க நாடுகளும் தமிழின அழிப்பில் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுஆட்சியாளர்களுக்கு உடந்தையாக இருந்துவந்துள்ளன. இதில் “அகிம்சை”, “ஜனநாயகம்” போன்ற வேடங்களைப் பூண்டிருக்கும் அண்டைநாடான இந்தியாவின் பங்களிப்பு மிகையானது.
ஈழத்தமிழர் மீது “கணிசமான” அக்கறை கொண்டிருந்த அன்னை இந்திரா காந்தியின் காலத்தின் (1984 ஒக்டோபர் இன்) பின்னர், வந்த அனைத்து இந்திய ஒன்றிய அரசுஆட்சியாளர்களும் தமிழின விரோத இந்திய கொள்கைவகுப்பாளர்களினது வழிகாட்டல்களின் படி தமிழர்களின் பலத்தை சிதைப்பதிலும் தமிழர் பிரச்சினைகளை வைத்து சிறீலங்காவின் பொருளாதார வளர்ச்சியை தடுப்பதிலும் பகீரதப்பிரயத்தனம் கொண்டுவந்துள்ளனர் என்பதை ஆழமான அரசியல் அறிவுள்ளவர்கள் அறிந்திருப்பார்கள்!
சிங்கள-பௌத்த வெறியர்களும், தமிழின விரோத ஹிந்திய வெறியர்களும், ஏனைய சந்தர்ப்பவாத சக்திகளும் இணைந்து ஈழமண்ணில் நடத்திய, தொடர்ந்து நடத்திவரும் தமிழின அழிப்பு / தமிழின ஒடுக்குமுறைகள் பல இலட்சம் தமிழ் மக்களின் படுகொலைக்கும், தொடரும் தமிழின அழிப்புக்கும் காரணமாக அமைந்திருப்பது கொடுமையின் கொடிய வரலாறு!
இந்த தமிழினவழிப்பு வரலாற்றில் ஓர் அங்கமாக 1987 ஜூலை முதல் 1990 மார்ச் வரை “இந்திய அமைதிப்படை” / “Indian Peace Keeping Force” (IPKF) என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தால் ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள். இவற்றில் ஒருசில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பல சம்பவங்கள் வெளிவராமல் உள்ளன.இது ஒருபுறம் இருக்க தனி ஈழம் ஒன்றே தீர்வு என்று கபட நாடகம் ஆடும் கருணாநிதியின் கடந்தகால துரோகங்களை நாம் ஒரு நாளும் மறக்கக் கூடாது.
1946ம் ஆண்டு அயல் நாட்டார் சட்டம் 3(2) நூல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் ஒன்றிய அரசு குற்றம் சாட்டியது. அப்போது இந்தியா ஒன்றிய அரசைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தச் சிறப்பு முகாம் ஒன்று 1990ம் ஆண்டு உலகத் தமிழினத் தலைவர் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களால் வேலூர் கோட்டையில் உள்ள திப்புமகாலில் தொடங்கப்பட்டது. அந்தச் சிறப்பு முகாம் தமிழீழ விடுதலை புலிகளைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கப்பட்டதாக அப்போது கூறியிருந்தார். ஆனால், உண்மையில் அதில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல. அகதியாக வந்து அகதி முகாமில் வாழ்ந்து வந்த அப்பாவி ஈழத் தமிழர்களை அடைத்து வைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது பின் நாளில் வெளிச்சத்திற்கு வந்தது.
ஈழப்போர் கருணாநிதியை நம்பி நடக்கவில்லை. ஆனால் கருணாநிதி ஈழப்போரில் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தார். 1973-ஆம் ஆண்டில் இவர் முதலமைச்சராக இருந்தபோது தில்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசிவிட்டு சென்னை திரும்பி 30-4-1973 ஆம் தேதியன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில்,
“”இலங்கைத் தமிழர்களின் போராட்டத்துக்கு உங்களின் தார்மிக ஆதரவு உண்டா?” என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “”போராட்டத்துக்கு ஆதரவில்லை” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
1987-ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் சம்மதமில்லாமல் இலங்கைப் பிரதமர் ஜெயவர்த்தனவுடன் ஒன்றியப் பிரதமர் ராஜீவ் காந்தி செய்திருந்த இலங்கை-இந்திய ஒப்பந்ததைக் கண்டிக்க இறுதிவரை கருணாநிதி முன்வரவில்லை. கருணாநிதியின் அழைப்பை மதித்து, அதனை ஏற்று அவருடன் பேசுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், போராளி யோகி ஆகியோரை தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அனுப்பி வைத்தார். அப்போது கருணாநிதி தெரிவித்த தீர்வுத் திட்டம் என்ன தெரியுமா?
இந்திய ராணுவத்தினால் இலங்கையின் வட-கிழக்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பொம்மை முதலமைச்சரான வரதராசப் பெருமாளுடன் இணைந்து அம்மாநில நிர்வாகத்தில் பங்குகொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்துடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுமாறு கூறினார் கருணாநிதி.
24-8-1990-இல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழக சட்டமன்றத்தில் ஈழப்பிரச்னையில் ஒன்றிய அரசை நடவடிக்கை எடுக்கக்கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் “”தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவோம்” என்று கூறினார். ஆனால், அதில் உறுதியாக இருந்தாரா என்றால் இல்லை. இவ்வாறு கூறியதையே பிற்காலத்தில் மறுத்தார்.
தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதர்கள் சந்தித்து காயமடைந்த,போராளிகள் சிகிச்சை பெறவும் தங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிச் செல்லவும் அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். அதை நம்பி தமிழகம் வந்து பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த போராளிகளைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி. மருந்துகள் வாங்குவதற்காக புலிகள் கொண்டுவந்த பணத்தையும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி காவல்த் துறை மூலம் பறிமுதல் செய்தார்.
இந்த உண்மையை 23-7-1997 அன்று தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் பழ. நெடுமாறன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். நம்பி வந்தவர்களுக்கு கருணாநிதி செய்த கைமாறு இதுதான்.
மீண்டும் அவர் முதலமைச்சர் பொறுப்பு வகித்தபோது 14-5-2000 அன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பின்வருமாறு அறிவித்தார்: “”தனி ஈழம் அமைந்தால் மகிழ்ச்சி என்று கூறியதற்கு அவ்வாறு தனி ஈழத்தை அமைக்கக் குரல் கொடுப்பதாகப் பொருள்கொள்ளக் கூடாது. தனி ஈழத்தை அங்கீகரிப்பதும் அங்கீகரிக்காததும் வேறுவிஷயம். தனி ஈழம் அமையத் தமிழ்நாட்டின் சார்பில் குரல் கொடுப்பேன் என்ற பொருளில் அல்ல நான் பேசியது. அங்குள்ள தமிழர்கள் எல்லா உரிமைகளையும் பெற்று அமைதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் தனி ஈழம் அமைந்தால் மகிழ்வேன்” என்று கூறினேன் என்றார்.
இரண்டே நாட்களில், 16-5-2000 அன்று அவருடைய உள்ளக் கிடக்கையையும் புலிகள் மீதான வெறுப்பையும் அப்பட்டமாக வெளியிட்டார். “”விடுதலைப் புலிகள் மூலம் தமிழீழம் அமைவதை ஆதரிக்கிறேன் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தமிழீழம் அமைந்தால் வரவேற்பேன் என்று சொல்லியிருக்கிறேன். இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன” என்றார்.
2004ம் ஆண்டு முதல் மன்மோகன் சிங்- சோனியா அண்ட் கோ தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாளர்கள் தான் ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருந்தனர். அந்தக் கூட்டணியில்- வெற்று அறிக்கைகளை வெளியிட்டபடி இருந்த கருணாநிதியின்- திமுகவும் இருந்தது. அதை தொடர்ந்து 2009 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை இனப்படுகொலைக்கு பதிலடியாக தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று உலகமே எதிர்பார்த்தது. ஆனால் நடந்தது என்ன? மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 27 தொகுதிகளில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வென்றது. ஈழத் தமிழரின் சர்வ நாசத்துக்குக் காரணமான இக்கட்சிகளுக்கு வாக்களித்தமக்கள் இந்தக் கூட்டணியானது ஈழத்தமிழர்களை கொத்துக் கொத்தாக கொல்வார்கள் என்று இம்மியளவும் எண்ணியிருக்க மாட்டார்கள். அப்போது பத்திரிக்கையாளர்கள்கருணாநிதியிடம், “ஈழத்தில் ஈவு இரக்கமற்ற கொடூரத் தனத்தோடு தமிழர்கள் கொத்து கொத்தாக செத்திருக்கிறார்களே?” என்று கேள்வி எழுப்பியபோது, அவர் “மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்களே அது போல..” என்று ரோம் எரியும் போது நீரோ பிடில் வாசித்தது போல தமிழ் புலமையை காட்டிக்கொண்டிருந்தார். ஒரு இன அழிப்பை நடத்தி முடித்திருக்கிற ஆதிக்கச் சக்திகளின்அகந்தைப் பசப்பல் வார்த்தைகள் அவை. அந்த வார்த்தைகளுக்கு நாம் மயங்க முடியாது, மயங்கவும் கூடாது.
2006 முதல் 2009 வரை இந்தியா முழு மூச்சோடு இலங்கைஅரச படைகளுக்கு நிதி, இராணுவம் நிலைப் பயிற்சிகளும், இராணுவ தொழில்நுட்ப உபகரணங்களும், முப்படை உதவிகள் உட்பட இலங்கை அரசு எதிர்கொண்ட பல்வேறுபட்ட அயல் நாட்டு அழுத்தங்களையும் கையாண்டு வந்தது. தமிழ் நாட்டு ஆசிபீடத்தில் இருந்த திமுக அரசு மாநிலத்திலும் மத்தியிலும் தனது பதவியை இறுதி வரை தக்கவைத்திட, தமிழர் விரோத காங்கரசு அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்தது. தமிழர்கள் அங்கு கொத்துக் கொத்தாககொல்லபட்டுக் கொண்டிருக்க, நீங்கள் இங்கு தில்லியில் பதவிக்காக முகாமிட்டுள்ளீர்களே? என்றுபத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “புறநானூற்றில் ஒரு தெருவில் சாவு பறை கேட்டாலும் மற்றொரு தெருவில் மங்கள இசையும் கேட்டுள்ளது” என்று பதிலளித்தவர்தான் இந்த தமிழ் தேசிய விரோதி ஊழல் நிறை முத்துவேல் கருணாநிதி. காலம் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது, ஒரு நாள் எங்கள் தமிழ் தேசிய தெருவெங்கும் மங்களப் பறையிசை கேட்கும் போது அவர்களின் திராவிடத் தெருவில் சாவு பறை கேட்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை மறந்துவிட்டார் போலும்.
உலக நாடுகளின் உரிமைப் போராட்டங்களையெல்லாம் ஆதரிப்பதாக தன்னை முன்நிலைப்படுத்திய இந்தியாவும், ஒடுக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து தேசிய உரிமைக்காக போராடிய மக்களுக்கு ஆதரவாக நின்ற தமிழக அரசும், தங்களது சுயநலனுக்காக இலங்கைப் பௌத்த சிங்களப் பேரினவாத இனவெறி அரசுக்கு ஆதரவாக நின்றது மட்டுமல்லாமல் புலிகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த உணவுப்பொருள்கள், மருந்து, மருத்துவ உபகரணங்கள், இரத்த பொட்டலங்கள் உட்பட எந்த உதவியும் கிடைக்க விடாமல் செய்தது. அந்தக் கடினமான போர் சூழலிலும் உலகத் தமிழர்களின் பெருமுயர்ச்சியில் ஜாபர் சேட் மூலம் தயார் செய்து அனுப்ப திட்டமிட்டிருந்த உதவி பொருட்களையும் இரத்த பொட்டலங்களையும் தனது பூட்ஸ் காலால் தரையில் கொட்டி மிதித்து பாழாக்கினார்கள்! இவை அனைத்தும் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் நடைபெற்ற துரோகம்.
ஈழத்தில் நடைபெற்றுவரும் தமிழின அழிப்பானது இலங்கைத் தீவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்லி, போராளிகளுக்கோ, மக்களுக்கோ எந்த வகையிலும் உதவாமல் தமிழ் மக்களின் கோரிக்கையை உதாசினம் செய்த அன்றைய இந்திய ஒன்றியத்தின் காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்துகொண்டிருக்க, இங்கு தமிழகத்தில், தமிழால் தமிழர்களால் பிழைத்துச் செழித்து அன்று ஆட்சியிலும் இருந்த முத்துவேல் கருனாநிதி ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவ முன்வரவில்லை!மாறாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரனை அவர்களை எப்படியாவது கொன்று விடுங்கள் என்று மன்றாடியதாக சிவசங்கர மேனன் தனது சுய சரிதையில் எழுதியுள்ளார். இதற்கு பெயர் தான் பச்சை துரோகம்!
தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள ராணுவம் லட்சக்கணக்கானத் தமிழர்களைச் சுற்றிவளைத்து குண்டு மழை பொழிந்தபோது தமிழக மக்கள் கொதித்தெழுந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்திய அரசிற்கு எதிரான தமிழர்களின் தமிழ்த்தேசிய உணர்வு வெடித்து வெளிப்பட்டது.
இந்திய அரசையும் தனது அரசையும் மக்களின் கோபாவேசத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி 14-10-2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.
இக்கூட்டத்தில் இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு ஆவன செய்யாவிட்டால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வற்புறுத்தினார்கள். நிலைமை சரியில்லாததைக் கண்ட கருணாநிதி, “அமைச்சர்கள் என்ன, தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே பதவி விலக வேண்டும்‘ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதை வரவேற்றனர். ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் உலகமெலாம் இருந்த தமிழர்களின் மனதில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியது.
ஆனால், 12 நாள்கள் கழிவதற்குள் கருணாநிதி தலைகீழான நிலையெடுத்தார். 26-10-2008 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்குப் பறந்து வந்து கருணாநிதியைச் சந்தித்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது வெளியிடப்படவில்லை. போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கான முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை எனக் கருணாநிதி அறிவித்தார்.
ஈழத்தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்டு, உடைமைகள் சிதைக்கப்பட்டு, உயிர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து தமிழ் நாட்டுத்தமிழர்கள் என்றும் குரல்கொடுத்த வண்ணமே இருந்திருக்கின்றார்கள். இலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசு நடாத்தும் இன அழிப்புக்கு எதிராகவும், இந்திய ஒன்றிய அரசு இலங்கை படைத்துறைக்கு வழங்கும் உதவிகளுக்கு எதிராகவும், நடைபெற்று வரும் தமிழின அழிப்பை கண்டும் காணாததைப் அமைதி காத்த அன்றைய தமிழ் நாட்டின் ஆட்சிபீடத்தில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவும் ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டில் பல முனைகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற ஆரம்பித்தன.
சென்னை உயிர்நீதி மன்றம் வழக்கறிஞர் மன்றம் (Madras High Court Advocate’s Association (MHAA)) ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 2008 அக்டோபர் 15ம் திகதி வேலை நிறுத்த போராட்டம் நடாத்தியது ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்வதை நிறுத்தச் செல்லி போராடிய வழக்கறிஞர்களை அடித்து உதைத்து பலரது மண்டையை பிளந்தது மட்டுமல்லாமல் பல்கலைக்கழகம் , கல்லூரி மாணவர்கள் எங்கே தெருவில் இறங்கி போராடிவிடப்போகிறார்களோ என்ற அச்சத்துடன் கூடிய பயத்தில் கல்லூரிகளுக்கு விடுப்பு கொடுத்து மாணவர்களை வலுக்கட்டாயமாக ஊருக்கு அனுப்பி வைத்தது திமுக அரசு
மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் அமைப்புகள் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், மறியல்கள், சிறை வாசங்கள் எதுவும் ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவிடக் கூடாது என்றும் அவர்களது துயர் துடைக்கும் நோக்கில் எந்த விளைவையும் ஏற்படுதிவிடக் கூடாது என்பதிலும் குறியாக இருந்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு
தமிழக மக்கள் கிளர்ச்சி ஏதும் செய்துவிடாமல் இருக்க முத்துக்குமார் தீக்குளித்து இறந்ததை, காதல் தோல்வி என கதை கட்டி விட்டவர் தான் இந்தக் கருணாநிதி. அந்த சவ ஊர்வலம் கூட தன் தெரு வழியாகவோ இல்லை சட்டமன்ற சாலை வழியாகவோ செல்லக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் கருணாநிதி. அவரது உடலை வைத்துக்கொண்டு மக்கள் கிளர்ச்சி செய்வார்களோ என்று அஞ்சினார். இந்தச் செயலை துரோகம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?
கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி போன்ற தனது சொந்த தொலைக்காட்சி நிறுவனங்களில் தமிழர் படுகொலை நிகழ்வுகளைப் பற்றிய செய்தியை ஒளிபரப்பாமல், மானாட மயிலாட போன்ற பல கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, அங்கு போர் நடப்பதையே தெரியாத வண்ணம் பொதுமக்களை வைத்திருந்தது இந்தக் கருணாநிதி அரசு. மக்களின் மனங்களில் தமிழ் இன அழிப்பின் தாக்கம் ஏற்பட்டு,எந்த எழுச்சியும் ஏற்பட்டுவிடமால் இருக்க அனைத்துத் தந்திரங்களையும் கையாண்டவர் இந்தக் கருணாநிதி. அதிலிருந்து மக்களை மடைமாற்ற இறையாண்மையே இல்லாத போலியான பாசிச இலங்கை அரசிடம் இறையாண்மை இருப்பதாக இங்கு பேசியது திமுக.
கருணாநிதி, டெல்லிக்கு சென்று பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியையும் சந்திப்பதற்காக ஒரு கூட்டத்தைக் கூட்டி
அந்தக் கூட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்காக டிசம்பர் 4ம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்ற அளவில் தீர்மானத்தை நிறைவேற்றி ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
அன்று முதல்வர் பதவியை வேண்டாம் என்றிருந்தாலே மத்திய அரசு கவிழ்ந்து போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழர் என்ற ஒன்றினைதல் உருவாகும்பட்சத்தில், தமிழர்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் தேசிய இனமாக தமிழர்கள் தலையிடுவார்கள் என்கிற ஒரு நிலை வரும், அப்போது தம்மை தமிழர்களாகிய தமிழினத் தலைவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் திராவிட துரோகிகளின் இருப்பும் அவர்களது பிழைப்பும் கேள்விக்குரியாகும், தமிழரின் இனவுணர்வும் தமிழ்த் தேசிய இரையாண்மையும் காக்கப்படும் என்ற அச்சத்தில்
இன்றைக்கும் அந்த அற்ப பதவிக்காக ஏன் மகன், பேரன் என்று 380 கோடி கொடுத்து வரிசைக்கட்டி நிற்கிறீர்கள்? இராஜபக்சேவிடம் பரிசுப்பொருள் சிரித்துக்கொண்டே வாங்க முடிகிறது என்றால் திமுக இந்த போரை எவ்வளவு உளப்பூர்வமாக காங்கிரசுடனும் இலங்கையுடனும் இணைந்து நடத்தியது என்பதற்கு வேறு சான்று வேண்டுமா?.
தமிழர்கள் பிரச்சனையை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு தானும், தன் குடும்ப உறுப்பினர்களும் அடைந்த பணத்தை பாதுகாத்துக் கொள்ள, கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் நலனுக்காக பல கோடி ரூபாயை சுரண்டிக் கொடுத்த மத்திய அமைச்சர் ராசாவை சந்திக்க பாதுகாக்க 2008 டிசம்பர் 4ம் தேதி அன்று கருணாநிதி அரசு செலவில் டெல்லி செல்கிறார். அதுவும், இவர் மட்டும் செல்லாமல், அனைத்துக் கட்சி தலைவர்களையும் அரசு செலவில் அழைத்துச் செல்கிறார். கருணாநிதியின் சுய நலத்திற்காக அரசுப் பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப்பட்டிருக்கிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் மத்திய அரசை மிரட்டிப் பார்ப்பார் கருணாநிதி. மிரட்டலுக்கு பணியவில்லை என்றால் கெஞ்சுவார். இல்லையென்றால், தமிழர்களின் உரிமைகளை அடகு வைப்பதற்கு ஏதாவது இருந்தால் அதையும் செய்யத் தயாராக இருப்பார் கருணாநிதி. எது எப்படியோ, இலங்கையில் நிச்சயமாக போர் நிறுத்தம் ஏற்பட எந்த முயற்சியும் மேற்கொள்ளப் போவதில்லை. கருணாநிதியின் டெல்லி பயணத்தால் லாபம் அடைந்தவர்கள் கருணாநிதியும், அவரது குடும்பத்தாரும் மட்டுமே, இது மிகவும் வெட்கக்கேடான செயல்.
முதலமைச்சர் கருணாநிதியின் சுய நலத்திற்கு, கபட நாடகத்திற்கு என்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
27 ஏப்ரல் 2009. தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள். கருணாநிதி தமிழினத்துக்கு செய்த துரோகத்தின் உச்சம் அந்த உண்ணாவிரத நாடகம். பொங்கியெழுந்தபோராட்டங்களை முனை மழுங்கி நீர்த்துப் போகச் செய்த ஒரு கருப்பு தினம் ஏப்ரல் 27. தலைமாட்டில் துணைவியும், கால்மாட்டில் மனைவியும் அமர, குளிர்சாதன வசதியோடு கருணாநிதி அரங்கேற்றிய வேதனையான நாடகம் ஏப்ரல் 27. காலை 6 மணிக்குத் தொடங்கி பகல் 12 மணிக்குள் வெகு விரைவாக முடிந்து விட்டது. மற்ற ஒட்டுக் கட்சிகளெல்லாம் காலை உணவை முடித்துக் கொண்டு பகல் உணவை மட்டும் தவிர்க்கும் பழைய பாணி உண்ணாவிரத நாடகத்துக்குப் பதிலாக, அதிகாலையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கி பகல் சாப்பாட்டுக்கு முன்னரே உண்ணாவிரதத்தை முடித்து, புதுமைப்பாணியில் அவர் இந்த நாடகத்தை நடத்தியுள்ளார்.
உண்ணாவிரதம் தொடங்கிய அடுத்த சில மணி நேரத்தில், “எனக்கு தொலைபேசி செய்தி வந்துள்ளது” என்று அவரே ஒரு அறிக்கை வாசித்து விட்டு, ‘ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி அவரே உண்ணாவிரத நாடகத்தை முடித்துக் கொள்கிறார். தமிழர்களைப் பார்த்தால் உங்களுக்கு அவ்வளவு இளிச்சவாயர்களாகத் தெரிகிறதா? என்று தமிழை நேசிக்கும் ஏதேனும் ஒரு கூட்டணிக் கட்சித் தலைவர் கேட்டிருக்க வேண்டும்!
இந்தியாவின் போரை தான் தாங்கள் நடத்தியதாக தெரிவித்திருக்கிறது இலங்கை. இந்தியாவை அப்போது ஆண்டுகொண்டிருந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி போரை தடுத்து நிறுத்தும் உயரத்தில் இருந்தது திமுக. காங்கிரஸ் ஒவ்வொரு முடிவையும் கருணாநிதியிடம் தெரிவித்த பின்பே செயல்படுத்தியது. அது தெளிவாக சொல்லிவிட்டது எக்காரணத்தை முன்னிட்டும் போரை நிறுத்த முடியாது என்று, ஆனால் திமுக என்ன சொன்னது போரை நிறுத்த உண்ணாவிரத நாடகமாடியது, போர் நின்றுவிட்டதாக பொய் கூறியது. இதற்கு பெயர் தான் பச்சை துரோகம்!.
இந்த நாடகத்தின் துணை வசனகர்த்தாவான ப.சிதம்பரம், மைய அரசின் கோரிக்கையை ஏற்று ராஜபக்சே போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார் என்று பின்பாட்டுப் பாடுகிறார். “கலைஞரின் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி! போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அறிவிப்பு!” என்று சன் டி.வி.யும் பிற ஊடகங்களும் பரபரப்பூட்டின. மாலையில் “இலங்கையைப் பணிய வைத்த கலைஞரின் உண்ணாவிரதம்” என்று கொட்டை எழுத்துக்களில் நாளேடுகளில் கோலாகல உருட்டுச் செய்திகள் வெளியாகின.
ஆட்சியதிகாரத்திலிருக்கும் கருணாநிதியின் அரைநாள் பட்டினிக்கே, இலங்கை அரசு அஞ்சி நடுங்கி போர் நிறுத்தத்தை அறிவிக்கிறதென்றால், அவ்வளவு வலிமை கொண்ட அவர் இதை ஏன் முன்னரே செய்யவில்லை? ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் செத்து மடிந்த பின் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? ஈழத் தமிழர்களின் கொலைகளைத் தடுத்து நிறுத்துமளவுக்கு அதிகாரம் கொண்ட அவர் இத்தனை காலமும் முடங்கிக் கிடந்தது ஏன்? தியாகி முத்துக்குமார் தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு தரப்பு மக்களும், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் போர் நிறுத்தம் கோரி தொடர்ந்து போராடி வந்த நிலையில் அவர்களுடைய போராட்ட உணர்வுகள் மீதும் தியாகங்கள் மீதும் மலத்தில் தோய்த்தெடுத்த செருப்பால் அடித்தது போல் அமைந்திருக்கிறது, கலைஞரின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்த அறிவிப்பு என்ற மோசடி.
போர் நிறுத்தமுமில்லை; புண்ணாக்குமில்லை என்று அடுத்த நாளே அறிவித்து விட்டது இலங்கை அரசு. “பயங்கரவாதப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் எந்தவிதத் தற்காலிக இடைநிறுத்தமும் இல்லை. போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசும் ஊடகங்களும் கூறுவது தவறான தகவல்” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது, இலங்கை இராணுவ அமைச்சகம். விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இந்தியா மற்றும் உலக நாடுகளின் நிர்பந்தங்கள் காரணமாக இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது என ஊடகங்கள் திரிக்கப்பட்ட தவறான செய்தியை வெளியிட்டுள்ளன என்று இராணுவ அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழனை இளிச்சவாயனாகக் கருதிக் கொண்டு காதில் பூ சுற்றுகிறார் கருணாநிதி. இலங்கை இராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைக்கு புதிய விளக்கமும் பொழிப்புரையும் எழுதுகிறார் ப.சிதம்பரம். போர் நடவடிக்கைகள் அதன் இறுதி முடிவை எட்டியுள்ளன என்ற இலங்கை அரசின் கூற்றுக்கு, இதன் பொருள் போர் நடவடிக்கைகள் தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன என்று அயோக்கியத்தனமாக விளக்கமளிக்கிறார் அவர். கனரக ஆயுதங்களுடன் தாக்குதல் இருக்காது பீரங்கித் தாக்குதலுக்குப் பதிலாக துப்பாக்கிச் சூடும் எறிகணைத் தாக்குதலும் தொடரும் என்று இலங்கை இராணுவ அமைச்சகம் குறிப்பிடுவதை தொடரும் போர்த் தாக்குதல்கள் முடிவுக்கு வந்து விட்டதாக இந்திய அரசு பொருள் கொள்கிறது; இந்த அறிவிப்பு எமக்கு ஆறுதல் அளிக்கிறது என்று தமிழனைக் கேணையாகக் கருதிக் கொண்டு விளக்கமளிக்கிறார்.
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துக் கொண்டே, மறுநாளே சிங்கள பாசிச இராணுவம் பீரங்கித் தாக்குதலையும் வான்வழித் தாக்குதலையும் நடத்தி, போர் நிறுத்தப் பகுதியிலேயே நூற்றுக்கணக்கானோரைக் கொன்றொழித்துள்ளது. கயவாளிகளின் புளுகு அடுத்தநாளே நாறியது. இருப்பினும் “மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்று இப்போர்த் தாக்குதலுக்கு வெட்கங்கெட்ட முறையில் விளக்கமளித்தார் கருணாநிதி.
ஈழத் தமிழர்களின் குலையறுக்கும் இக்கொடிய போரின் சூத்திரதாரியே இந்திய மேலாதிக்க அரசுதான். எனவேதான் இந்தக் கயவாளிகள் சொல்லி வைத்த மாதிரி நாடகத்தைத் திறமையாக நடத்துகிறார்கள். தமிழகத் தேர்தலுக்கு முன்னதாக, பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்து, புலிகளை அழித்தொழித்து, போர் வெற்றிக்கு இலக்கு தீர்மானித்துக் கொண்டு தான் இந்தியஇலங்கை அரசுகள் போர்த் தாக்குதலைத் தீவிரப்படுத்தின.
ஆனால் போர் நிறுத்தம் கோரி போராட்டங்கள் வலுப்பெற்று நிர்பந்தம் ஏற்பட்டதால் இந்திய அரசின் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனும் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் இலங்கைக்குப் பறந்து ராஜபக்சேவிடம் விரைவில் இலக்கை நிறைவேற்றக் கோரி பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்படி 2 நாளில் இலக்கை முடித்துவிட ராஜபக்சே உறுதியளித்திருக்கிறார். அதைத்தான் 2 நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதியும் கூறிவந்தார். அந்த நல்ல முடிவு இலங்கை அரசிடமிருந்து அறிக்கையாக வெளிவரும் என்று தெரிந்துதான் அரசியல் ஆதாயமடையும் நோக்குடன் திடீர் உண்ணாவிரத நாடகத்தை நடத்தியுள்ளார். இந்தக் கபட நாடகத்துக்கு ஒத்தூதிக் கொண்டு தங்கபாலுவும் சேலத்தில் உண்ணாவிரதமிருந்ததுதான் கயமையின் உச்சகட்ட காட்சி.
காங்கிரசு தி.மு.க. கம்பெனிகளின் இந்த மோசடி நாடகத்தை விஞ்சும் வகையில் பார்ப்பனபாசிச ஜெயா, தமிழனை அடி முட்டாளாகக் கருதிக் கொண்டு அதிரடி நாடகத்தை அரங்கேற்றினார். தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று கூட்டணி கூஜாக்களைத் திருப்திபடுத்த தேர்தல் பிரச்சாரம் செய்துவந்த அவர் இப்போது, “இந்தியாதான் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து இந்தப் போரை நடத்துகிறது. இதை நான் இரண்டு ஆண்டுகளாக எதிர்த்து வந்தேன். ஈழத் தமிழரின் துயர் போக்க தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன்” என்று சாமியாடத் தொடங்கிவிட்டார்.
தேர்தல் நெருங்க நெருங்க தமிழனைக் கேணையனாகக் கருதிக் கொண்டு, இக்கயவாளிகள் நடத்தும் மோசடி நாடகங்கள் தீவிரமாகலாம். ஈழத் தமிழின அழிப்புப் போருக்கு எதிராகப் போராடி வரும் தமிழக மக்கள், இக்கேடு கெட்ட மோசடி நாடகக் கூட்டத்தை முச்சந்தியில் கட்டி வைத்து தோலுரிக்காவிட்டால், இனித் தமிழினம் சூடு சொரணையற்ற கூட்டம் என்ற அவப்பெயர்தான் வரலாற்றில் எழுதப்படும்.
இலங்கை அரசு பாகிஸ்தான் பக்கமோ, சீனா பக்கமோ அதிகம் சாய்ந்து விடாமல் இருக்க, இலங்கையைத் தனக்குச் சாதகமாக தன் ஆதிக்க நலனுக்கு உகந்தவாறு வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்தியா இலங்கைக்கு இவ்வளவு உதவி களையும் இந்திய ஒன்றிய அரசு செய்தது. எவ்வளவு தமிழர்கள் மாண்டாலும், அழிந்தொழிந்தாலும் பரவாயில்லை மத்திய அரசுடனான நல்லுறவும் நட்பும் நீடிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தன்னகத்தே கொண்ட கருணாநிதி கடிதம் எழுதினால், உடனே பிரணாப் முகர்ஜி கோபாலபுரத்தில் வந்து மண்டியிடுவார். ஆனாலும், கருணாநிதி, நாடகம் மட்டுமே நடத்துகிறார், உண்மையில் தமிழர்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என்பதை சோனியா நன்றாகவே உணர்ந்திருந்தார். அதனால்தான், இறுதிப் போரில் அத்தனை தமிழர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் கூட கருணாநிதி பல “கண்ணீர்” நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தாரே தவிர, உருப்படியாக எதுவும் செய்யவில்லை.
கருணாநிதி நினைத்திருந்தால், யுத்தம் நின்றிருக்கும் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால், கருணாநிதி நினைவில், ஈழத் தமிழர்கள் இல்லை. தன் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.
மூன்று மணிநேரம் உண்ணாநோன்பு இருந்து ‘இராசபக்சே போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்’ என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான். அவரிடம் ‘இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?’ என்று செய்தியாளர்கள் கேட்ட போது ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று பதிலளித்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!
தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை இராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது கருணாநிதியின் அதிகார வெறியல்லவா? இனமா? பதவியா? என வந்தபோது பதவிதான் முக்கியம் என்று முடிவெடுத்தவர் தானே இந்த முத்துவேலின் வாரிசு கருணாநிதி.
நினைத்தாலே நெஞ்சு வேதனைப்படுகிறது….. போர் நின்றுவிட்டது என்று போலி அறிவிப்பு செய்த நாள் ஏப்ரல் 27. அன்று போரை நிறுத்தியிருந்தால் கூட மே 17 நிகழ்ந்திருக்காது. அன்று ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தால் கூட, போர் நிறுத்தம் நடைபெற்றிருக்கும். தொடர்ந்து இன அழிப்பு,தொடர் குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மழை விட்டாலும் தூவானம் விடாது என்று படுகொலையை நியாயப்படுத்திய கருணாநிதியை தமிழினம் இருக்கும் வரை மன்னிக்கக் கூடாது .
தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்து வைத்து அழகுபார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்
இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் முன்னணியில் நின்று போரை நடத்திய தளபதி பொன்சேகா தனது பதவியை ராஜினாமா செய்கையில் இராணுவம், சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சந்தேகித்து 2009 அக்டோபர் 15ஆம் திகதி இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கையாக இருக்குமாறும் அந்நாட்டு இராணுவத்தை மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் இன்று வரை இந்திய அரசாங்கத்தால் மறுக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இப்படி ஈழப் போரில் இந்தியாவின் / சோனியாவின் பங்கு வெளிப்படையாக தெரிந்த நிலையில்தான் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ராஜபஷேவை சந்தித்து, தமிழகம் திரும்பி, சென்னை வந்தும் கருணாநிதியை சந்திக்காமல் திரும்பியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், கருணாநிதி, சென்னையில் நடந்த ஒரு விழாவில் என்ன பேசியுள்ளார் தெரியுமா ?
”திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும். காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர வேண்டும், என்றும் இந்த கூட்டணி நிலைத்தால்தான் இந்தியாவும், தமிழகமும் வளமாக இருக்க முடியும்.காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே எந்த அளவிற்கு ஒற்றுமை உள்ளது என்பது குறித்து விரிவாக பேசுவதற்கு கால நேரம் போதாது. காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்ந்தால் தான் தமிழகத்திற்கு மேலும் நல்ல பல திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என்பது நாடு அறிந்த உண்மை.
சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி, என்னைப் பற்றியும், திமுக பற்றியும் எந்த அளவிற்கு புகழ்ந்து பேசினார் என்று இங்கே சிலர் எடுத்துக் கூறினார்கள். அந்த ஒற்றுமை இவ்விரு கட்சிகளிடையே மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றார்.” என்று பேசியுள்ளார்.
இத்தனையும் செய்து விட்டு, “மொழிக்காக” மட்டும், தமிழ் மொழி மாநாடு நடத்தும் கருணாநிதியை என்ன சொல்லி அழைப்பீர்கள்.
துரோகி அல்லவா ? அதனால்தான் சொல்கிறேன். வரலாற்றில் மிகப் பெரிய துரோகி.
ஈழத்தில் இப்படி ஒரு இன படுகொலை நடக்கிறது என்பதே தமிழகத்தில் பலருக்கு தெரியாத வண்ணம் வைத்திருந்தது திமுக அரசு, ஈழம் என்ற வார்த்தையையே தடை செய்து ஈழத்தை பற்றி பேசியவர்கள் எல்லாம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திட ஈழம் என்று அச்சடித்தால் தண்டனை என்றும் அறிவித்திருந்தது. கியூ பிரான்ச் என்ற ஒரு உளவு உட்பிரிவையே தமிழ் பற்றாளர்களை ஒடுக்க என்றே (கியூ பிரான்ச்) தமிழக உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. Central Reserve Police Force (CRPF) மத்திய அரசின்கீழ் இயங்குகிற செயற்பாட்டை தமிழ் நாட்டில் ஏற்படுத்தி வைத்திருந்தார் கருணாநிதி. தமிழ்நாட்டிற்கு வந்த பார்வதி அம்மாவை சிகிச்சைக்காக அனுமதித்தால் ஈழ ஆதரவாளர்கள் சென்று அவரை பார்த்து அதன் மூலம் ஒரு எழுச்சி வந்துவிடப்போகிறது என்று பயந்த கருணாநிதி, வானூர்தி நிலையத்திலேயே வைத்து திருப்பி அனுப்பினார்.
அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தார். எதிர்க்கட்சியான பிறகு மீண்டும் தமிழீழப் பிரச்னையைப் பேசத் தொடங்கி இருக்கிறார். 18-4-2012 அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் “”இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஆதரவு தரவேண்டும்” என வற்புறுத்தினார்.
இப்போது “”ஈழத்தை உருவாக்கும் பணியில் மீண்டும் ஈடுபடப்போவதாகவும் அதை விரைவில் காண்பதற்காகவே தான் உயிரை விட விரும்புவதாகவும்” உருக்கமான வசனம் பேசியிருக்கிறார்.
கடந்த மூன்று முறை இவர் பதவி வகித்த காலகட்டத்தில் தமிழீழத்திற்கு ஆதரவாக எதுவும் செய்ததில்லை. இவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மத்திய அரசு செயல்பட்ட வேளையில் கூட அதை நிர்பந்தித்து ஈழத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க இவர் எதுவும் செய்ததில்லை. மாறாக, ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதுதான் தன்னுடைய நிலைப்பாடு என பலமுறை வெளிப்படையாகவே அறிவித்தவர் கருணாநிதி.
தமிழ் ஈழம் அமைவதற்குக் கருணாநிதி சமீபகாலமாகக் காட்டி வரும் ஆர்வமும், ஈழத் தமிழர்கள்மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் திடீர்ப் பாசமும் புல்லரிக்க வைக்கிறது. ஆட்சியையும், பதவியையும் தக்க வைத்துக் கொள்ள மத்திய ஆட்சியாளர்களுக்கு ஆமாம் சாமி போட்டதைத் தவிர, ஈழப் பிரச்னையில் அவர் எப்போதாவது உள்ளார்ந்த அக்கறை காட்டியிருக்கிறாரா என்பதை அவரது மனசாட்சியிடம் முதலில் கேட்டுவிட்டு, பிறகு அவர் பேசட்டும். “”எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” என நாமக்கல் கவிஞர் பாடிய திரைப்படப் பாடல் கருணாநிதிக்காகவே எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது. என பழநெடுமறன் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளூர்
தேசியத் தலைவரின் தலைமையில் தமிழர்களுக்கு என்று தனி நாடு வந்துவிடக்கூடாது குறிப்பாக ஈழத்தில் தமிழர்களுக்கு என்று ஒரு அங்கிகரிக்கப்பட்ட அரசு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் கருணாநிதி ஏனெனில் தமிழர்கள் ஒன்றினைந்துவிடுவார்கள் என்ற பயம் தமிழகத் தமிழர்களுக்கு தமிழ்த் தேசிய தமிழர்களை இன அழிப்புச் செய்ய வந்திருக்கும் இனமே இல்லாத திராவிடத்தின் ஊழல் தலைமை வெளியில் தெரிந்துவிட விரும்பவில்லை இதற்கு பெயர் தான் பச்சை துரோகம்!
இந்தியா தன் ஆதிக்க நல நோக்கில் தமிழீழ விடுதலைப் போராட் டத்தை ஒடுக்கி, எண்ணற்றத் தமிழர்களின் படுகொலைக்கு உதவி சிங்கள அரசுக்கு துணை போகும் அயலுறவுக் கொள்கையைக் கடைப் பிடித்திட புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் கப்பல்கள் பலவற்றை தங்கள் ரேடார் மூலம் கண்காணித்து காட்டிக்கொடுத்து அழிக்க உதவியது இந்தியா. கருணாநிதி நினைத்திருந்தால் மத்திய அரசையே கவிழ்த்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை ஏனெலில் அழிக்கப்படுக் கொண்டிருந்தவர்கள் தமிழர்கள் இது துரோகமில்லையா?
ஈழச் சிக்கல் தீவிரம் பெற்று இலங்கை அரசு இந்திய அரசின் உதவியோடு தமிழீழ விடுதலைப் போராளிகளை ஒடுக்கியும், தமிழீழ மக்களைக் கொன்று குவித்தும் வந்த போதும், அந்த சிங்கள அரசுக்கு உதவி வந்த இந்திய அரசுக்கு ஆதரவு தந்து வந்தன தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலை ஆதரவுக் கட்சிகள். அதே வேளை ஈழ விடுதலைக்கு ஆதரவாக வெளியில் போராட்டங்களையும் நடத்திவிடக் கூடாது என்பதற்காக கருணாநிதி ஒரு வட இந்தியா ஊடக பேட்டியில் புலிகளை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி புலிகள் மேல் ஒன்றிய அரசு தடைபோடுவதற்கு மிக முக்கிய பங்காளராக கருணாநிதி அங்கம் வகித்தார் என்பதை யாராளும் இலகுவில் மறந்துவிட முடியாது
இந்த எல்லா கொடுமைகளுக்கும் காரணம் என்ன? காரணம் யார்? என்று யோசித்துப் பார்த்தால், நமக்குக் கிடைக்கும் ஒரே விடை, இவையனைத்திற்கும் காரணம், இந்திய அரசு. அதன் நயவஞ்சகம், சூழ்ச்சி, அதன் தமிழின விரோதப் போக்குடன் தமிழர்கள் முதுகில் குத்திய ஈழ துரோகிகள் தமிழின துரோகிகள் கருணாவும் கருணாநிதியும் தான் என்பதை தமிழர் வரலாறு சொல்லும்!.
-நிலவன்.