2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் பின்னரான ஆயுத அமைதியின் பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முனைப்பை அதன் தொடர்ச்சியை முற்றாகவே அழித்தொழிக்கும் திட்டமும் எதிரியால் மிகக் கவனமாகவே கையாளப்பட்டு வருகிறது.
தமிழ் மக்களிடமுள்ள போராட்டச் சிந்தனைகளை அகற்றி,அவர்களை ஓர் அச்சுறுத்தலுக்குள் வைத்திருப்பதன் மூலம் இதனைச் சாதித்துவிடலாம் என்பதே மகாவம்ச சிங்களத்தின் அடிப்படைக் கோட்பாடு. யுத்தம் நிறுத்தப்பட்டு 14 ஆண்டுகளாகியும் தமிழர் தாயக நிலத்திலிருந்து எந்தவொரு படை முகாம்களும் அகற்றப்படாததற்கும் இதுவே பிரதான காரணம்.
இலங்கை அரசாங்கத்தின் தமிழர் மீதான அடக்குமுறைகளை எதிர்த்தும்,திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுவரும் தமிழர் இனப்படுகொலை மற்றும் கைதுகள், காணாமல் ஆக்கப்படுதல், நில அபகரிப்பு போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும் அதற்கான நீதிதழுவிய அறப்போராட்டங்களை எமது மக்கள் அரசியற்கட்சிகளின் தலையீடுகள் இல்லாமல் முன்னெடுத்துவரும் வேளையில் இவ்வாறான ஒட்டுக்குழுக்களைப் பயன்படுத்தி அந்த மக்களின் போராட்டங்களை முடக்குவதற்கு சிறிலங்கா அரசும் அதன் இராணுவப் புலனாய்வு அமைப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகிறது.
கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட தங்கை விபூசிகாவைக்கூட சிறுமியென்றும் பாராது சிறைவைத்தும் அவரது தாயாரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தும் மக்களின் போராட்டங்களை கொடியகரங்கள் கொண்டு அடக்கியாண்டது சிங்களப் பேரினவாதம் ஆனாலும் இவையெதனையும் பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் எமது மக்கள் நீதிதழுவிய அறப்போராட்டங்களில் தாயகத்திலும்,புலம்பெயர் தேசங்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதானது, புலிகளிடமிருந்து மக்களை மீட்டோம் என்று உலகை ஏமாற்ற முயன்ற சிறிலங்கா அரசிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இப்போராட்டங்களில் குழப்பத்தை உண்டுபண்ணி தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மக்களுக்குள்ளும் அமைப்புகளுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்தி மக்களுக்குள் இருக்கும் விடுதலைப் பற்றுறுதியை சிதைத்துவிடுவதற்கு சிங்களம் தனது அடிவருடிகளை ஏவியுள்ளது.
தாயகத்தில் இராணுவப் புலனாய்வின் நேரடி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிய போராளிகள் மற்றும் மக்கள் பெரும் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்தபடி விடுதலைச் செயற்பாடுகளில் இருந்து முடக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இறுதிப்போரின் பின்னர் புலம்பெயர் நாடுகளுக்கு வெளியேறிச் சென்ற போராளிகளும்,மக்களும் அங்குள்ள இனவுணர்வாளர்களை அணிதிரட்டி தமிழீழ விடுதலை நெருப்பை அணையவிடாது தொடர்ந்து விடுதலைச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதை சிறிலங்கா அரச புலனாய்வால் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் முகத்திரைகளை பன்னாட்டு சமூகம் மத்தியில் கிழித்துவரும் அறவழிப் போராட்டங்கள் தொடக்கம் தமிழர் இனவழிப்புக்கான நீதிகோரும் போராட்டங்களென புலம்பெயர் நாடுகளில் தமிழர் உரிமைப்போராட்டக் குரல்கள் விஸ்வரூபமெடுத்து எழுவதை சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
எப்பாடு பட்டேனும் இவ்வாறான போராட்டங்களை இல்லாதொழிக்கவேண்டும் என்பதற்காகவே சிங்களப் புலனாய்வு திட்டமிட்டு பல கைக்கூலிகளை உருவாக்கியது. இதற்காக அது தேடிக்கண்டுபிடித்து தேர்ந்தெடுத்த கைக்கூலிகள்
*யுத்தம் நடைபெற்ற காலங்களில் இரட்டை முகவர்களாக செயற்பட்டு பணத்துக்காக போராளிகளையும்,விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான மக்களையும் எதிரிக்கு காட்டிக்கொடுத்தவர்கள்.
- தமிழீழ அரச நிர்வாகத்தில் சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு தமிழீழ புலனாய்வுத் துறையினரால் தண்டனை பெற்றுவந்த கைதிகள்.
- தமிழீழ காவல்துறையால் தண்டனைக்குட்படுத்தப்பட்ட கைதிகள்.
ஏனெனில் இவர்களே இவ்வாறான தேசத்துரோகச் செயல்களை இரக்கமின்றி செய்யக்கூடிய கயவர்கள்.
தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புனிதமான தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் கொச்சைப்படுத்தும் நோக்குடன் இந்தக்கோழைகள் துரோக சக்திகளாக களமிறங்கியுள்ளனர். மிகக் கீழ்த்தரமாக,எமது விடுதலைப் போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் மற்றும் தளபதிகள் பற்றியும், போராளிகள் பற்றியும், போராளிகளின் குடும்ப உறவுகளைப்பற்றியும் பதிவிட்டு,ஆத்திரமடையச் செய்து, மனவுளைச்சலுக்கு உள்ளாக்கி அவர்களை தேசியக்கடமையிலிருந்து ஒதுங்கியிருக்கச் செய்தலே இந்த புல்லுருவிகளுக்கு சிறிலங்கா அரசபுலனாய்வு கொடுத்துள்ள பணியாகும்.
அதில் முக்கியமானவைகள்:
1-விடுதலைப்புலிகள் அமைப்பின் மறைமுக செயற்பாடுகள் பற்றிய தகவல்களை சேகரித்தல்.
2-புலம்பெயர்ந்த போராளிகளின் இயல்பு வாழ்வை கண்காணித்து அவர்கள் மீண்டும் இனவிடுதலைக்கான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்களெனில் அதுபற்றி சிறிரங்கா இராணுவ தரப்பிற்கு
தகவல் தெரிவித்தல்.
3-மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்குள் முன்னின்று வழிநடத்துபவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல்.
4-புலம்பெயர் தேசத்திலிருந்து தாயகத்திற்கு வந்து செல்லும் உறவுகளின் அனைத்து நடவடிக்கைகளையும் அவதானித்தல்.
5-வெளிநாடுகளிலுள்ள போராளிகளினது நடவடிக்கைகளையும் அவர்கள் பற்றிய விபரங்களையும் சேகரித்தல்
6-விடுதலைப் புலிகளின் பெயரில் போலி அறிக்கைகளை தயாரித்து வெளியிடுதல்.வலைத்தளங்கள் மற்றும் அதன் குழுமங்களில் தம்மை விடுதலைப்புலிகளாக கூறி உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகளை உலவ விடுதல்.
7-ஒட்டுமொத்தத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களை அடையாளங்கண்டு அவர்களை அதிலிருந்து ஒதுங்கச்செய்யும் நிலைக்கு ஆளாக்குதல்.
புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது தாயகம் நோக்கிய செயற்பாடுகளையும் முடக்கிவிடலாமென தனது அடிவருடிகளை மக்களுக்குள் ஏவி,பெரும் உளவியல்போரையும் எமது இனத்திற்கு எதிரான சதித்திட்டங்களையும் நடத்தி
வருகிறது சிங்களப் பேரினவாதம்.
எனவே சிறிலங்கா அரச புலனாய்வால் செயற்படுத்தப்படும் இந்த நாகரீகமற்றவர்களின் செயற்பாடுகளை நம்பி ஏமாந்து அவர்களுக்கு துணைபோகாமல் ஒவ்வொருவரும் தங்கள் தேசியக்கடமைகளில் செயற்படுவதே காலச்சிறந்ததாகும். ஏற்கனவே இனங்காணப்பட்ட இலக்கங்கள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் விழிப்புணர்விற்காக அடையாளங் காணப்பட்ட சிறிலங்கா புலனாய்வு முகவர்களின் இலக்கங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
சிறிலங்கா அரசபுலனாய்வு முகவர்களின் இலக்கங்கள்
கீழே…
+447776907548
+33751263045
+393510892215
+41779480503
+ 61470766784
+447440343359
+61413077404
+61452603424
+447466843508
+41791241728
+447459467249
+393511057983
+447440648003
+447466490889
+447438628115
+417910944 89
+447466167800
+351938289273
தமது பெயர்களில் குழுமங்களில் விடுதலைச் செயற்பாட்டாளர்களை இணைக்க முடியாத அடையாளமற்ற இந்த இனத்துரோகிகள் விடுதலைக்கான அரசியல் செயற்பாடுகளில் உள்ள போராளிகளின் பெயரையும், படத்தையும் பயன்படுத்தி ஆளிணைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு கடந்தசில நாட்களாக ‘பிழைகளை தட்டிக்கேட்போம்’ எனும் வட்சப் குழுமம் ஒன்று விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளி புலவர்/தும்பன் அவர்களின் படத்துடன் போலியாக 00447776907548 எனும் இலக்கத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டு இந்த கையாலாகாத கோழைகளால் உருவாக்கப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அதனை நம்பி பலர் இணைந்தும் உள்ளார்கள்.
இறுதிப்போர் காலங்களிலும் அதன் பின்னரும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தேசவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இந்த அரசபுலனாய்வு முகவர்களிடமிருந்து அனைவரையும் விலகியிருக்குமாறும் விழிப்புணர்வோடு செயற்படுமாறும் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் போராளிகள் தெரிவித்து வருகிறார்கள்.
இவ்வாறு இன்று பெரும் உளவியல்போரையும் எமது இனத்திற்கு எதிரான சதித்திட்டங்களையும் நடத்தி வருகிறது சிங்களப் பேரினவாதம் சிங்களத்தின் இந்த சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு ஒவ்வொரு தமிழரும் தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் தொடர்ந்து பயணிப்போம்.
நன்றி
- விடுதலைக்குரல்