“தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழ் மக்களை தொடர்ந்தும் குழப்ப நிலைக்குள் வலிந்து திணித்து இன அழிப்பின் நிகழ்சி நிரலே போதைப்பொருளின் பயன்பாடு” – நிலவன்.
நிலவன் துறைசார் உளநல ஆலோசகர் மற்றும் உளச்சமூகப்பணியாளர். போராட்ட காலங்களிலும் சரி, போராட்ட மௌனிப்புக்குப் பின்னும் சரி, தொடர்ந்து இயங்கி வரும் பல்துறை ஆளுமை கொண்டவர். 2009க்கு பின் ஈழம் சார்ந்த கனதியானது மட்டுமல்ல, தேவையான பல விடயங்களைப் பேசி வருபவர். விடுதலைப்போராட்ட காலத்திலும் அதன் பினரும் அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து உளச்சமூகப் பணியாற்றியவர். பல துறைசார் நிபுணர்களிடம் பயிற்சிகளை பெற்று புலம் பெயர் தேசத்தில் உளச்சமூகப் பணியுடன் தனது துறைசார் மேட்படிப்புக் கல்வியினையும் கற்று வருகின்ற உளவளத்துனை மற்றும் உளச்சமூகப் பணியாளர் நிலவனுடன் இன்றைய சந்திப்பை மேற்கொள்கின்றோம்.
சேயோன் :- வணக்கம் நிலவன்; வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு என்பது, தமிழ்ச்சமூக அலகுகலிலும் நிறுவனங்கள் மத்தியிலும் கட்டமைக்கப்பட பண்பாட்டினை சிதைத்துவரும் விடயம் தொடர்பாக உங்களுடன் பேசலம் என நினைக்கின்றேன்
நிலவன்:- வணக்கம் சேயோன், நிச்சயமாக நாமும் எமது சமூகமும் எங்கள் பிரதேசங்களும் எதிர்கொண்டுவரும் ஒருவகை இன அழிப்பு பற்றி நாம் நிச்சயமாக பேச வேண்டும், தொடர்ந்து பேசலாம்
உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுள் 80% ஆண்களும் 20% பெண்களும் அடங்குவர். கடந்த மூன்றாண்டு காலமாக 6 லட்சம் பேர் போதைவஸ்து பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகப் போதைப்பொருள் பாவனையாளர்கள் தொடர்பான அறிக்கையின் புள்ளிவிபரப்படி உலகில் 2 கோடி பேர் ஹெரோயின் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் உள்ளனராம்.
மாணவ சமுதாயத்தில் தற்போது போதைப்பொருள் பாவனையின் வீதம் அதிகரித்த வண்ணமே உள்ளது. போதைப்பொருளை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்படினும் பல்வேறு சட்டங்கள் இருப்பினும் அதனை முற்றாக ஒழித்துவிட முடியாதுள்ளது. இளம் வயதினரில் 13 தொடக்கம் 20 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் பலர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தெரிவிக்கின்றது.
2020ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 27 கோடியே 50 இலட்சம் (275 million) மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியதில், சுமார் 3 கோடியே 60,00,000 (36 million) மக்கள் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) வெளியிட்டுள்ள 2021 ஆண்டறிக்கையில் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொடர்பில், 2022ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே காலக்கட்டத்தில் 377 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டமை, தொடர்பில் 2022 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 67,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
netrative sexual Assault – பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல், Aggravated penetrative sexual assault – தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல், Sexual Assault – பாலியல் தொல்லை, Aggravated Sexual Assault – எல்லைமீறிய பாலியல் தொல்லை, Sexual Harassment – பாலியல் தொந்தரவு, Taking pornographic pictures of children – குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்.
இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் சட்டங்களும் சர்வதேச நிகழ்வுகளும் எழுத்துருவில் இருக்கத்தான் செய்கின்றன .
சேயோன் :- சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் பற்றி உங்கள் பார்வை ?
நிலவன்:- உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்தும் வகையில் 1987ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
மேற்கத்திய நாடுகளில் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தற்போது சதவிகிதத்தின் அடிப்படையில் குறையத் தொடங்கியுள்ள நிலையில் ஆசிய நாடுகளில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் வீதம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றமை துரதிஷ்டமானதாகும்.
உலக அளவில் போதைப்பொருள் இல்லாத ஒரு சர்வதேச சமூகத்தின் இலக்கை அடைவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக போராடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை என்பனவற்றால் நவீன போதைவஸ்துக்கள் நாட்டினுள் பிரவேசிக்க வழிவகுத்தன. இலங்கையை பொறுத்தவரையில் நவீன போதைவஸ்துக்கள் 1980ஆம் ஆண்டளவில் பரவத் தொடங்கின. இலங்கையில் முதலாவது ஹெரோயின் விற்பனையாளர் 1981ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி 270 கிராம் ஹெரோயினுடன் களுத்துறை மாவட்டத்திலுள்ள ஓர் ஊரில் கைது செய்யப்பட்டார்.
போதைவஸ்து பொருட்கள் பாவிப்பது, கடத்துவது, வைத்திருப்பது போன்றவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அநேகமான நாடுகளில் இவற்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இலங்கையிலும் போதைவஸ்து கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பதன் மூலமே போதைவஸ்து பாவிப்பதனால் ஏற்படும் தீங்குகளில் இருந்து எமது நாட்டு சமுதாயத்தை பாதுகாக்க முடியும்.
குடும்ப வாழ்வை சீரழிக்கும், நாட்டை குட்டிச் சுவராக்கும் போதைவஸ்து பாவனையை வேரோடு களைய ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணுதல் அவசியம்.
இதற்காக போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் 1984ஆம் ஆண்டு தொடக்கம் அக்கறையுடன் செயற்படுகிறது.
பௌத்த சிங்கள பேரினவாதம் போதைப்பொருட்களை தமிழர் பகுதிகளில் விதைத்து இலகுவில் இன அழிப்பினையும் இனப்பரம்பல் குறைப்பையும் செய்துவிடலாம் என்ற நோக்கு எண்ணத்தையும் அதன் செயற்பாட்டையும் மிகத் துள்ளியமாகவும் நேர்த்தியாகவும் கையாண்டது தமிழீழ தேசம்
விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழ தேசத்தில் இதற்கான விசேட நாள் அதன் தேவை ஏற்படவில்லை என்றுதான் சொல்ல முடியும்.
ஆண்ட இனம் தமிழர்கள் என அரசை நிறுவி மாதிரி பல நிறுவனங்களை உருவாக்கி அரசை 30 அண்டுகள் நிழல் அரசை இயக்கி பண்ணாட்டு சக்திகளிடம் இருந்து கடலையும், நிலத்தையும் , இனத்தையும், மரபுகளையும், பண்பாட்டு வழக்காறையும் பாதுகாத்தவர் தேசியத்தலைவர் அவர்கள். பல கோடிக்கணக்கான தமிழ் மக்கள் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் மட்டுமே இனத்தின் இருப்பு பண்பு என இனப்பெருமையினை சர்வதேசத்திற்கு சமூகத்திற்கு பறைசாற்றி காட்டினார்.
இளையோரை இலட்சியப்பற்று மிக்கவர்களாகவும், உன்னதமான சமூகக் குறிக்கோளை நோக்கி எய்யப்பட்ட அம்புகளாகவும் மாற்றுவதற்கு தனியாக கும்பத்தால் மட்டுமல்ல ஆசிரியர்களால், மருத்துவர்களால் மட்டும் முடியாது. உளவளத் துணையாளர்களால், புனர்வாழ்வு நிலையங்களால் மட்டும் முடியாது. அது ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதை கூட்டாக செயற்படுத்தி காட்டியவர்கள்.
சேயோன் :- போதை என்றால் என்ன? அதன் விளைவு என்ன?
நிலவன்:- போதை என்றால் என்ன? அதன் விபரீதம் எப்படிப்பட்டது? என்பதை அறியாமலே போதை பாவனையில் ஈடுபடுகிறார்கள். போதை என்பது தன்னிலை மறக்கச் செய்து மனிதனின் சுய நிலையை சீர்குலைத்து, புத்தியை மயங்க வைத்து, நல்வாழ்வுக்கு பங்கம் விளைவிக்கும் விடயங்களுள் போதைப்பொருள் முதன்மை பெறுகின்றது. இது தனிமனிதனை மட்டும் பாதிக்கும் பழக்கம் அல்ல. இதனால் அவரைச் சுற்றியுள்ள சமுதாயமும் பாதிப்படைகிறது. மயங்குகின்றான். உடல் பலவீனமடைகிறது. உளம் கெட்டு விடுகின்றது. தன்னால் உறுதியாக நிற்க முடியாமல் ஆடி அசைந்து விழுகின்றான். அதன்பின் அவனுக்கு ஏற்படும் எந்தவொரு விடயத்தைப் பற்றியும் அறியாமல் இருக்கின்றான்.
போதை மருந்துகள் பல வகை. சில மருந்துகள், நிஜத்தில் சாத்தியமாகாத கற்பனை உலகில் சஞ்சரிக்கச் செய்பவை. இன்னும் சில உங்களை `அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ சிந்திக்க வைப்பவை. முக்காலங்களையும் மறந்து ஒருவித பரவச நிலையில் திளைக்கச் செய்பவை வேறு சில. இப்படி ஒருவரின் தேவைக்கேற்ப அவர் பயன்படுத்தும் போதைப்பொருட்களின் தன்மையும் மாறுகிறது
சுயாதீனமான உடல், உள ஆரோக்கியமுள்ள மனிதனின் சாதாரண நிலையை மாற்றி அசாதாரண தன்மைகளான தீமைகள், கொடுமைகள், வன்முறைகள் போன்றவற்றை தனக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் விளைவிற்பதற்குத் தூண்டுகோலாக அமைகின்ற ஒரு விஷக்கிருமியே போதையாகும். கடத்தல்கள், கொலை, கொள்ளை, தற்கொலை, சிறுவர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் வெறிக்கொலைகள், வாள்வெட்டு வன்முறை, வாகன விபத்துக்கள், கணினிக் குற்றங்கள், பாதாள உலகக் கோஷ்டியினருக்கிடையிலான மோதல்கள் என சாதாரண வீட்டு மட்டத்தில் ஆரம்பித்து கிராமம், நகரம், பிரதேசம், மாவட்டம் மாகாணம், நாடு, அயல்நாடு, சர்வதேசம் வரை அதன் தாக்கம் பாரிய அளவில் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது.
போதைப்பாவனையின் நேரடி மற்றும் மறைமுக விளைவாக குடும்ப, சமூக, பொருளாதார, ஆன்மீக, சூழலியல் சார் பாதிப்புக்களை உருவாக்குகின்ற ஒரு அம்சம் போதைப்பொருட் பாவனையாகும் என பொதுவாகக் கூறப்படுகிறது. இவ்வாறான போதைப்பொருள் பாவனையானது உள்நாட்டு யுத்தத்தித்திற்கு அடுத்தபடியாக இலங்கைச் சமூகத்தை பெரிதும் பாதித்திருப்பதில் முதலிடம் பெறுவது போதைப்பொருள் விற்பனையும், பாவனையுமாகும்.
போதைபொருள் தனிமனிதரின் பிரச்சினை அல்ல. சமூகத்தையே பாதிக்கிறது. பிள்ளைகளுடைய எதிர்காலம் குறித்து பொற்றோரினதும் மாணவர்களினதும் கனவுகள், இலட்சியங்கள் நாசமாகின்றன. இலக்கில்லாமல் வாழ்வு அழிந்து விடுகின்றது. புத்தகங்களை சுமந்து செல்ல வேண்டியவர்கள் பல்வேறுபட்ட நோய்களை சுமந்தவர்களாக நடமாட ஆரம்பிக்கின்றார்கள். சட்டவிரேத செயல்களில் ஈடுபடுகின்றார்கள். பதினாறு மற்றும் பதினெட்டு வயதை அடையும் போதே வாழ்க்கையை தொலைத்து வீதிக்கை விடுகின்றகள்.
சேயோன்:- விடுதலைப்புலிகள் காலத்திற்கும் பின்னர் தற்போது உள்ள நிலையினை எப்படி பாக்கின்றீர்கள்?
நிலவன்:- தமிழரின் ஜனநாயகப் போராட்டத்திலும், பண்பாட்டு வளக்காற்றில் மிகவும் உச்ச பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் என்பதை எவரும் மறுத்து விட முடியாது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வடக்கு – கிழக்கு தாயகத்தில் விடுதலைபுலிகள் காலத்தில் போதைப்பொருட்கள் அறவே இருந்ததில்லை. ஆனால் அதன் தாக்கம் 2009 மே 18ஆம் தித்திக்குப் பின்பே திட்டமிட்டு போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை ஆக்கிரமித்துள்ளது. விடுதலைப்புலிகளால் செய்ய முடிந்ததை இலங்கை அரசாங்கத்தால் செய்ய முடியாது போயுள்ளது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் ஒழுக்கம் மிகுந்த காலமாக வடக்கு கிழக்கு எங்கும் இருந்தது. இந்த உண்மையை மறுதலிக்க முடியாது.
தமிழீழ கடற்பரப்புக்கள் ஊடக எந்த போதைப்பொருட்களையும் இலங்கைத்தீவுக்கள் கொண்டு வருவதற்கு விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. விடுதலைப்புலிப் போராளிகள் தமிழ் மக்களுக்காக மட்டுல்ல, சிங்கள மற்றும் தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களுக்காவுந்தான் போராடினார்கள் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
அண்மைக்காலங்கள் கடற்படை அதிகாரிகளது கருத்துப்படி அண்மைக்காலங்களில் இந்தியாவில் இருந்து கடத்தப்படும் கஞ்ஞாப் பொதிகளின் அளவு அபரிதமாக அதிகரித்துள்ளது என்றும் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களை அதிகமாக கடல் மூலமே நாட்டுக்குள் உள்நுழைகின்றது. அநேகமாக சட்ட விரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது. மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாலும், இதற்கு உடந்தையாக வருமானத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சில பெரும்புள்ளிகள் இருப்பதினாலும் இதனை இல்லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறி வருகின்றது என்கின்றார்கள்.
தமிழர் வரலாற்றில் தமிழின விடுதலைப்போராட்டம் ஒரு சமூகக் கட்டமைப்பு கொண்டிருந்தது என வலியுறுத்திட பல்லாயிரக்காண உதாரணங்கள் உண்டு. ஆனால் 2009 பின்னர் சமூக கட்டமைப்புகள் திட்டமிட்டு குலைந்து போய்விட்டது. ஆயுதப்போராட்டம் புதிய விழுமியங்களையும் ஒரு புதிய சமூக ஒழுங்கையும் உருவாக்க முற்பட்டு அதை 30 ஆண்டுகாலம் நடைமுறையில் நிகழ்த்தியும் காட்டியது விடுதலைப்புலிகளின் நிழல் அரசு.
2009இல் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஒரு பின்னணியில், ஏற்கனவே இருந்த சமூகக் கட்டமைப்பும் குலைந்து இடையில் ஆயுதப் போராட்டம் கொண்டு வந்த புதிய ஒழுங்கும் குலைந்து இப்பொழுது ஏறக்குறைய எல்லாச் சமூகக் கட்டமைப்புகளும் குலைந்துபோன ஒரு நிலை காணப்படுகிறது. அரசியல் ரீதியாக தோற்கடிக்க விரும்பும் சக்திகள் போதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பதாகவும் போதைப்பொருள் வலைப்பின்னலை அவர்களே நிர்வகிப்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மை
கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக, வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் நுகர்வு குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது
போதைப்பொருள் பாவனை பிரச்சினை புதிய தமிழின அழிப்பின் வடிவத்தை கொண்டிருக்கிறது. இவ்வாறான ஒரு பின்னணியில் தமிழர் அழிப்பை கட்டுப்படுத்தி பண்பாடு விழுமியங்களை மீளுருவாக்க வேண்டிய ஒரு சமூகமாக தமிழ்ச்சமூகம் மாறியிருக்கிறது.
வடக்கில் கிழக்கில் காவல்துறையினரோ – கல்விகற்ற சமூகத்தினரோ – சமூக அமைப்புக்களோ எந்த நடவடிக்கைகளையும் ஆக்கப்பூர்வமான வகையில் மேற்கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அன்றாடம் செய்திகளில் நாம் காணும் வழமை போல் சில தினங்களுக்கு ஊடகங்களும் இதைப்பற்றி பேசிவிட்டு புதிய பிரச்சினைகளை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். மக்களும் அதன் பின்னால் ஓட ஆரம்பிப்பார்கள். இலகுவாக நாம் கடந்து செல்லும் செய்திகளில் உள்ள .
”யாழ்.கடற்பரப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது, மாணவனிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு, இளைஞர்களிடையே வாள்வெட்டு” என ஏதேனும் ஒரு செய்தி சரி காணப்படும். அந்தளவிற்கு நமது சமூகத்தில் போதைப்பொருள் பாவனை மலிந்து விட்டது.
அரசியல் விரும்பிகள், சமூகப் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், மருத்துவர்கள் செயற்பாட்டாளர்கள், மதப் பெரியோர்கள், கலைஞர்கள், ஊடகங்கள் என்று எல்லா தரப்புக்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டுச் செயற்பாடாக இனவிடுதலைக்கான முன்னெடுப்புக்களை முன்னெடுக்க முடியாத இந்தநிலையில் குற்றச்சாட்டை தமிழ் அரசியல்வாதிகள் ஏன் முன்வைத்து வருகிறார்கள் என்ற கேள்விக்கும் விடையாக அரச இயந்திரங்களுடன் இணைந்து அவர்கள் செய்துவரும் போதைப்பொருள் கடத்தலில் அவர்களின் தொடர்புகள் அம்பலமாகிறது .
இளம் வயதினரின் வேகங்களுக்கு ஈடுகொடுத்து, அவர்கள் மத்தியில் இலட்சியங்களை விதைத்து, அவர்களுடைய சாகச உணர்வுகளைச் சரியான திசையில் திருப்பி, தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை மீளுருவாக்கும் பொறுப்பு பாடசாலை சமூகம் உட்பட சமூகச் செயற்பாட்டாளர்கள், மதகுருகளுக்கும் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் இருக்கும் கூட்டுப் பொறுப்பை எத்தனை அரசியல் என்பது தனது இன மக்களுக்கு சேவை செய்யும் அலகு என்பதை மக்கள் அரசியல் தமிழ் தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்?
மக்கள் தெரிவின் பிரதிநிதிகள் என்று தம்மை அடையளப்படுத்தும் தமிழ் அரசியல் தலைமைகளின் செயற்பாட்டாளர்கள் போதைப்பொருள் கட்டுப்பாட்டின் பின்னனியில் தலைமை தாங்க வேண்டும். ஆனால் அவ்வாறான ஒரு தலைமைத்துவம் இல்லாத வெற்றிடத்தில்தான் போதைப்பொருள் பாவனை அவர்களை மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்த மாவட்டங்கள் பிரதேசங்கள் கிராமங்கள் என படந்து இன்று பாடசாலைகள் வரை வந்துவிட்டது. போதைபொருள் பாவனை மட்டுமல்ல, வாள் வெட்டுக் கலாச்சாரத்தின் பின்னால் உள்ள உளவியல் போரின் இனழிப்பு இவை.
ஜெனிவாவில் நடந்த இன அழிப்பிற்கு அரசாங்கத்தை பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் புலம்பெயர் கட்டமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது மக்கள்கூட்டமானது, தொடந்து இடம்பெற்று வரும் உளவியல் போர் சமூகச்சீரழிவுகள் பொறுத்து தனக்குள்ள கூட்டுப் பொறுப்பையும் உணராது கட்சி அரசியலின் பின் தமது பெயர் சுய நலனிற்கு செற்படுகின்ற அமைப்புக்கள் அதிகம் காணப்படுகிறது.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணப்படும் மக்களின் மனநிலை நெருக்கீடுகளுக்கு உள்ளான நிலையிலேயே உள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட தமிழ் அரசியல் தலைவர்களிடமே அல்லது புலம்பெயர் தேச விடுதலைசார் அமைப்புகள் அல்லது நிறுவனங்களிடம் எந்துவித ஆரோக்கியமான செயற்திட்டங்களும் இல்லை.
அபிவிருத்திய செய்யப்பட வேண்டியதொரு துறையாக உளவளத்துணை ஆலோசனை உள்ளது. உளவளத்துணையானது பரிசோதனை, கற்றல், பயிற்றுவித்தல் போன்ற மூன்று திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தாங்களே அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாகத் தம்மை மாற்றியமைக்கக் வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் கடந்த பதின்மூன்று வருடங்கள் அதை எடுக்கத் தவறியமையும் நடைபெற்றுவரும் தமிழ் இன அழிப்பிற்கு போதைப்பொருள் ஒரு காரணமாக அமைகின்றது.
சேயோன்:- தமிழீழ விடுதலைப்புலிகள் உலகிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் கொண்டிருந்த தொடர்பினாலும், அதன் வழி வந்த வருமானத்தினாலும் ஆயுதங்களை வாங்கி போர் நடத்தினார் என்ற குற்றச்சாட்டு பற்றி உங்கள் கருத்து?
நிலவன்:- முதலில் இது ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்துகின்ற கண்டனத்திற்குரிய கூற்றாகும். வரலாற்றை நாம் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பௌத்த சிங்கள பெரினவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் இளைஞர்களுக்கு எதிராக அவர் கொண்டிருக்கும் மனோ இயல்பை சுட்டிக் காட்டுகின்றது. தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகளாகவும், அவர்களது தேசிய விடுதலை இயக்கமாகவும் திகழ்வது விடுதலைப்புலிகள் அமைப்பாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலகமே வியந்து பார்க்குமளவுக்கு கொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் உயர்ந்த அமைப்பு.
மக்களின் பரிபூரண ஒத்துழைப்போடு தமிழர் பகுதிகளில் நடைபெற்று வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நேர்த்தியான, அர்ப்பணிப்பு மிக்க, சுயலாபமற்ற, கொள்கைப் பற்றுக் கொண்ட போராளிகளின் தியாகங்களும் நிறைந்த அமைப்பு .
விடுதலைப்புலிகள் யுத்த காலத்தில் படைபல ரீதியாக மட்டுமன்றி நிர்வாக ரீதியாகவும் சிறந்த கட்டமைப்புக்களை பேணியிருந்தனர். நிர்வாகத்தை மேற்கொள்ள அரசியல் துறை, காவல் துறை, நிர்வாக சேவை என்பவற்றுடன் தமிழீழ நீதிமன்றங்களிலும் தமிழீழக் காவல்துறை அலுவலகங்களிலும் குற்றங்களின் கோவைகள் குறைவாய் இருந்தமை கண்டு வியந்து தமிழீழத்தில் நிலவிய சட்டம் மற்றும் ஒழுக்கின் சீர்மையை பாராட்டினர்.
சமூகம் சார் பல பிரைச்சனைகளுக்கு நியாயமான தீர்வுகள் பல வழங்கப்பட்டமையால் இறுக்கமுடைய கட்டமைப்பாக அது பேணப்பட்டது. முப்பது ஆண்டுகளாக தமிழீழ இலட்சியம் மற்றும் கனவுடன் ஒழுக்கம் மற்றும் நேர்மையை பற்றிக் கொண்டமையின் விளைவாகவே உலகில் தலைசிறந்த தேசத்தை விடுதலைப்புலிகள் சாத்தியமாக்கினர்.
தமிழீழம் அன்று குற்றமற்ற தேசமாக மிளிர்ந்தது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தின் போது தமிழீழத்திற்கு வருகை தந்த சர்வதேச நீதிப் பிரமுகர்கள் தமிழீழ நீதிமன்றுக்கு விஜயம் செய்த வேளையில் தமிழீழத்தின் ஒழுக்கம் கண்டு வியந்தனர்.
போதைவஸ்து பாவனை, வன்புணர்வு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டன. இதனால் அவ்வாறான ஒரு குற்றத்தை செய்வதற்கு அஞ்சும் நிலை காணப்பட்டது. ஆனால் 2009 மே மாதத்திற்கு பின்னர் தமிழர் பண்பாட்டு வாழ்வியல் தமிழர் பகுதிகள் எங்கு நோக்கிச் செல்கின்றது என்ற சந்தேகம் எழுகின்றது
தமிழர்கள் வேறு, புலிகள் வேறு என்ற மனநிலை தமிழர்களிடத்தில் இருந்ததே இல்லை. விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாட முடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இன்றும் ஏக்கத்துடனே இருக்கின்றார்கள்
யுத்தத்தை முடித்த கடற்படை கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்ற போது அவர்களது கண்ணுக்கு தெரியாது கடல் வழியாக எவ்வாறு போதைப்பொருட்கள் இலங்கைக்கு வர முடியும் என்ற சந்தேகம் எழுகின்றது. விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முயலும் செற்பாடு இது.
சர்வதேச நாடுகளும் உட்பட இந்திய வல்லாதிக்க சிந்தனை கொண்டுள்ள உளவுத்துறையினர் புலிகள் பயங்கரவாதிகள், ஈவிரக்கமற்றவர்கள், எப்போதும் கொலைவெறியுடன் இருப்பவர்கள், அப்பாவி மக்களை கொல்லத் தயங்காதவர்கள் என்று சரமாரியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளோடு போதை மருந்து கடத்தினார்கள் என்று அவதூறுகளையும் அடுத்த தலைமுறையினரிடம் சினிமா மற்றும் கலை இலக்கியப்படைப்புகள் ஊடாக விதைத்து தமிழ்த்தேசிய இருப்பை சிதைத்துட எடுத்த பல முயற்சியால் தோல்வி கண்டார்கள் என்பதுதான் உண்மை.
இனவழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தரப்பின் கட்டளைத் தளாதிகளில் ஒருவரான மேஜர்.கமால் குணரத்தின, போர் முடிவுக்கு கொண்டுவரபடப்ட பின்னர், விடுதலைப்புலிகள் மற்றும் தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்தில் ஒழுக்கத்திற்குப் புறம்பான எந்த விடயங்களும் காணப்படவில்லை என கூறினார். இராணுவத் தளபதியான பீல்ட் மாசல் சரத்பொன்சேகா, தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சிறந்த தலைவர் எனக் கூறினார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒழுக்கத்தில் உலகின் தலைசிறந்த இயக்கம் என்பதை சிங்கள தேசம் ஏற்கத் துவங்கிவிட்டது என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம், விடுதலைப்புலிகள் சாத்தியப்படுத்திய குற்றமற்ற தேசம் உலகிற்கே முன்னூதாரணமானது என்றும் தெரிவித்துள்ளது.
உரிமைக்காக போராடிய ஒரு தேசிய இனம் இன்று அதன் தமிழ் சிறுவர்களையும், பெண்களையும் பாதுகாக்க போராட வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனாலும் விடுதலைப்புலிகளின் நினைவிடங்களை அழித்தால் தமிழர்கள் விடுதலைப்புலிகளை மறந்து விடுவார்கள் என வல்லாதிக்க அரசுகள் போட்ட கணக்கு இங்குதான் தப்பாகியது. புலிகளை மக்கள் மனங்களில் இருந்து அழித்துவிட முடியாது என்பற்கு அண்மைக்காலத்தில் விடுதலைப்புலிகளின் பொருளாதார சிந்தனைகளை பார்த்து வியந்த சிங்கள தேசமே ஒரு உதாரணம்.
தமிழ் இனத்தின் விடிவிற்காகவும், தமிழீழ தாயகத்தின் பூரண சுதந்திரத்திற்காகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நீண்ட, தொடர்ச்சியான, தீர்க்கமான போராட்டத்தை நடத்தி புரட்சிகர ஆயுதப் போராகவும், எழுச்சிமிகு வெகுசனப் போராட்டமாகவும் தேசிய விடுதலைப்போரை முன்னெடுத்தது. தமிழீழ மக்களைத் தேசிய ரீதியாக அணிதிரட்டி, தேசாபிமான உணர்வைத் தட்டி எழுப்பி, தமிழீழ தேசிய எழுச்சியின் சின்னமாகவும், தேச சுதந்திரப் போராட்ட சக்தியாகவும் உருப்பெற்றிருக்கிறது. போராட்ட சாதனையால் தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டம் இன்று உலகப் பிரசித்தி பெற்ற விடுதலைப்போராக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சேயோன்:- விடுதலைப்புலிகளின் காலத்தில் கடல்வழி போதைப்பொருள் தடுப்பு எவ்வாறு கையாளப்பட்டது? மற்றும் சிங்கள காலத்தில்?
நிலவன்:- விடுதலைப்புலிகளின் நிழல் அரச காலத்தில் கடற்புலிகளின் செயற்பாடு காணப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் இவ்வாறன போதைப்பொருள் பயன்பாடு அல்லது கடத்தல் இருக்கவில்லை அல்லது அவை கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.
ஆனால் அந்த காலப்பகுதியில் சர்வதேச கப்பல்கள் மற்றும் பண்ணாட்டு கப்பல்கள் அல்லது மீனவர்கள் வருவதை கடத்தல் தொழில்களில் ஈடுபடுவதை தமிழீழ கடற்பரப்பல் நிகழ்வதை விடுதலைப்புலிகள் விரும்பவில்லை. அதேவேளை அக்காலப் பகுதிகளில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக்கூட வெளிநாட்டு மீனவப்படகுகள் தமிழீழ கடற்பரப்பிற்கு வரவில்லை
2017 அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களின் தலைமையின் கீழ் போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமான கூட்டம் ஒன்று கொழும்பில் நடைபெற்ற போது தான் அதில் பங்கு பற்றியதாகவும், அதில் போதைவஸ்து தடுப்பு தொடர்பான அமைப்பின் பிரதானி பேசும் போது, 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் விற்பனை, பாவனை போன்ற எந்தவொரு பதிவுகளும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
இராணுவமயப்படுத்தப்பட்ட அணுகுமுறையை கையாள்கின்றது, ‘போதை பொருட்கள் மீதான யுத்தத்தில்’ இராணுவமானது விஷேடமான வகிப்பங்கினை கொண்டுள்ளது. ஆனால் தற்போது இராணுவமயமாக்கலின் சிங்களப் படையினர்கள் அதிகரிப்பு மற்றும் போதைவஸ்து தடுப்புப் பிரிவினர் அதிகமாக உள்ள போதும், ஏன் வடக்கு கிழக்கில் இவ்வளவு போதைப்பொருள் பாவனை அதிகமாகக் காணப்படுகின்றது
விடுதலைப்புலிகளின் கையூட்டல் அற்ற காவல்துறை குற்றங்களைக் கட்டுப்படுத்தியிருந்தது. இப்போது கடும்குற்றவாளிகள் கூட சுதந்திரமாக நடமாடக்கூடியதாக உள்ளது. தமிழர் பகுதிகளில் கொலைகளும், சமூகவிரோதச் செயற்பாடுகளும் அதிகிரித்துள்ளன.
அரசும் ஊடகங்களும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை குற்றவாளிகளாகவும், பொது மக்களுக்கு அச்சுறுத்தலானவர்கள் என்றும் அவர்களை சமூக விரோதிகளாகவும் சித்தரித்து அவர்களை சமுகத்தில் அவர்களை குற்றவாளிகளாக்கி ஒதுக்கும் நிலைப்பாடு காணப்படுகின்றது. அவர்களை தற்கொலை வரை கொண்டு செல்கின்றது. உளநல சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக அர்த்தமுள்ள அணுகுமுறை இவை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்
எமது இளைய தலைமுறையைத் தவறான பாதையில் வழிநடத்துவதன் மூலம் அவர்களிடம் தமிழரின் உரிமைப் போராட்டம் குறித்த விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்து தாயகம் தேசியம் உரிமைகள் சம்பந்தமாக சிந்தனையை இளைஞர்களிடத்தில் மழுங்கடிக்கும் மற்றும் இனவழிப்பின் நோக்கத்துடனேயே இங்கு போதைப்பொருள் பாவனை திட்டமிட்டு ஊக்கிவிக்கப்படுகிறது.
சேயோன்:- சமூக மாற்றத்திற்கு போதைப்பொருள் தடையாக உள்ளதா ?
நிலவன்:- வாழும் சூழல் மற்றும் சமூகத்திற்கு ஏற்ற வகையில் வாழப் பழகிக் கொள்ளும் நெடுங்கால செயன்முறையே சமூக மயமாக்கல் என்று கூறப்படுகிறது. ஒருவரின் சமூக மயமாக்கலில் குடும்பம், சம வயதுக் குழுக்கள், பாடசாலை, கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டுத் தளங்கள் என்பவற்றிற்கு மேலாக ஊடகமும் தாக்கம் செலுத்துக்கிறது.
ஒரு பிள்ளை ஒழுக்க விழுமியமுள்ள பண்பாட்டுக் கலாசாரத்துடன் வீட்டுச் சூழலில் வளர்க்கப்படுமாயின் அப்பிள்ளை பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் இதரக் கல்வி நிலையச் சூழலில் ஏற்படும் பண்பாட்டு மாற்றத்தினாலும் சமய வயதுக் குழுக்களின் அழுத்தங்களினாலும் வழிதவறிச் செல்வதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படும். பிள்ளையின் நடத்தை, மனவெழுச்சிச் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்களும் குடும்பத்தாரும் கவனத்திற்கொள்ளாது செயற்படுகின்ற போது, அப்பிள்ளை சம வயதுக் குழுக்களினால் திசைமாற்றப்படுதைத் தடுக்க முடியாது. இவ்வாறு திசைமாறுகின்ற பிள்ளைகளே பல்வேறு சமூகப் பிரச்சினைகளை உருவாக்குபவர்களாக மாறுகின்றனர். இவர்கள் இத்தகைய போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பாவனைக்கும் உள்ளாகிறார்கள்.
நாட்டில் தற்போது கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பொருளைப் போன்று சமூக வலைத்தளங்களும் இன்று முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலைமைகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கமும் பெற்றோரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
அத்தோடு தொழில் வாய்ப்பின்மை, இலக்குகளை அடைவதில் தோல்வி, மேலத்தேச நாகரீக மோகம் கலாசாரமாக உருவெடுத்தல், தனிமை, கடின உழைப்பு, மகிழ்ச்சி, திருப்தி, உல்லாசம், பிரச்சினைகளை மறத்தல், உடற்கலைப்பைப் போக்கல் போன்ற போதைப்பொருள் தொடர்பான தவறான நம்பிக்கை, திட்டமிட்ட விளம்பரங்கள், சின்னத்திரை, மற்றும் சினிமாக நடிகர்களின் செயற்பாடுகளை முன்மாதிரியாகக் கொள்ளல், கௌரவம் போன்ற காரணிகளும் ஒரு தனிமனிதன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
சேயோன்:- நீங்கள் சொல்வது போல் இளைய தலைமுறையினர் ஏன் இலக்கு வைக்கப் படுகின்றார்கள்?
நிலவன்:- இனவழிப்பு போரினால் சிதைவடைந்த வடக்கு கிழக்கு மக்கள் மீள் உருவாக்கத்தின் ஆணிவேராக இருக்க வேண்டிய இளம் சந்ததியினரும் பாடசாலை மாணவர்களும் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையில் சிக்கவைக்கப்பட்டு வருகின்றார்கள்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக குறிப்பாக, 2009 பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் தாயகப் பகுதிகளில் உள்ள நகரம் மற்றும் கிராமப்புறங்கள் இரண்டிலும் பாடசாலை மாணவர்களினால் போதைப்பொருள், மது மற்றும் புகையிலை உட்பட போதைப்பொருள் பயன்பாடு நீண்ட காலம் அடிமையாகுதலுக்கு வழிநடத்தக்கூடிய வகையில் அரசபடைகளினால் தமிழ் மாணவர்கள் இலக்குவைக்கப்பட்டார்கள்.
விடுதலைப்புலிகளின் மாதிரி நிழல் அரச காலத்தில் இல்லதா போதைப்பொருட்கள் ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் வடகிழக்கில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்துதல் என்பன பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்தே நடத்தப்படுகின்றன.
குறிப்பாக தமிழீழ நிலப்பரப்பில் இனவிடுதலைக்காக போராடிய போராளிகளின் பிள்ளைகள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்ற பெற்றோர்களின் பிள்ளைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்கள் என்போரை இலக்கு வைத்தே போதைப்பொருள் பழக்கப்படுத்தப்படுகிறது.
போதைப்பொருள் விற்பனை முகவர்கள் முன்னதாக போதைப்பொருளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை பழக்கப்படுத்தி அவர்கள் போதைக்கு அடிமையான பின்னர், அவர்களுக்கு போதைப்பொருளுக்கான பணத்திற்காக அவர்களையே போதைப்பொருள் வியாபாரிகளாக மாற்றுகின்றார்கள். வடக்கு கிழக்கில் பாடசாலைகளில் இருந்து இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போதையுடன் தொடர்புடைய குற்றங்களில் நாளாந்தம் அடையாளப்படுத்தப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை நாளைய பிரளயத்தை கட்டியம் கூறி நிற்கின்றது.
நாளைய தலைவர்களாக, துறைசார் நிபுணர்களாக, சமுதாயத்தை தேசத்தையும் நல்வழிப்படுத்தும் முன்னோடிகளாக மாறவுள்ள மாணவர்கள் போதையின் பிடிக்குள் சிக்குவது, தமிழர் தேசத்தை போதைவஸ்து சீரழிக்க வேண்டும் என்ற பௌத்த வல்லாதிக்கத்தின் சிந்தனையின் செயல் வடிவமே.
போதைப்பொருள், மது மற்றும் புகையிலை பயன்பாட்டுக்கு சிறுவர்கள் பலவீனமடைவதற்கான பிரதான காரணங்களாக, சக மாணவர்களின் அழுத்தம் அல்லது போதிய அறிவின்மை அல்லது தமது மோசமான சூழ்நிலைகள் பற்றிய வழிகாட்டல் என்பன உள்ளன. போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான சிறுவர்கள், பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளனர். போதைப்பொருள் பயன்பாட்டு நடத்தைகளுடன் சிறுவர்களை பாதிக்கும் மோசமான சமூக மற்றும் சுகாதார விடயங்களும் உள்ளன.
நாட்டில் இன்று பாடசாலை கட்டமைப்புக்குள்ளும் போதைப்பொருள் ஊடுருவியுள்ளமை அச்சுறுத்தலான விடயமாகும் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக போதைப்பொருள் வியாபாரிகளால் பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். அதாவது போதைப்பொருள் வலையமைப்பானது இன்று வடக்கு கிழக்கில் உள்ள பல பாடசாலை கட்டமைப்புக்களுக்குள் ஊடுருவிக் காணப்படுகிறது.
பாடசாலை வளாகத்திலும் மாணவர்கள் மத்தியிலும் தற்பொழுது பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. பாடசாலை ஆசிரியர்களும் – பெற்றோர்களும் – சமூக தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வுடன் பொதுநல சிந்தனையுடன் செயற்பட்டு போதைப்பொருள் பாவனை அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும். நாம் சுதாகரிக்காது நமது வீட்டில் இந்த பிரச்சினை இல்லையே என கடந்து செல்லும் அதே சுயநல மனோநிலையில் இருப்போமாயின் நமது வருங்கால தலைமுறையினர் நமது கண்முன்னே போதைப்பொருள் கலாச்சாரத்தால் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது.
சேயோன்:- போதைப்பொருள் வகைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் என்ன?
நிலவன்:- முன்னைய காலத்தில் ஒரு சில வகையிலான போதைப்பொருட்களே பாவனையில் இருந்தாலும் தற்போது புதுப்புது போதைப்பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இவற்றுள் சிறு பிள்ளைகள் உண்ணக்கூடிய உணவு வகைகள் முதல் பல இலட்சக்கணக்கான பெறுமதி வாய்ந்த இரசாயனங்கள் வரைக்கும் உள்ளன.
மன அழுத்தத்தினை ஏற்படுத்தக்கூடியவை, தூண்டிகளாக செயற்படக்கூடியவை, கஞ்சா சார்ந்த உற்பத்திப்பொருட்கள், மாயத் தோற்றத்தினை உண்டு பண்ணக்கூடியவை, அபின் சார்ந்த உற்பத்திகள், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் என ஆறு வகைக்குள் போதைப்பொருட்களை உள்ளடக்க முடியும்.
ஐ.நா.விலுள்ள உறுப்பினர் நாடுகள் அனைத்தும் இணைந்து சட்டத்துக்கு விரோதமான போதைப்பொருள் என்று பட்டியலிட்டு கையெழுத்திடும் மருந்துகள் அனைத்தும் சட்டவிரோதமானவை. இதில் தனிப்பட்ட நாடுகளின் விருப்பு வெறுப்புகள் கணக்கில் கொள்ளப்படாது. ஒருமித்த கருத்துகளே ஏற்றுக்கொள்ளப்படும். சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான எந்தவொரு பொருளையும் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தும்போது துஷ்பிரயோகம் செய்யலாம். இந்த மருந்துகளில் சில அடங்கும்.
ஆனால் அவை மட்டும் அல்ல:
- கோகோயின்: இந்த தூண்டுதல் மருந்து, கோக் என்றும் அழைக்கப்படுகிறது, இது சந்தையில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாகும். கோகோயின் சில மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டிருக்கும்போது (இது சில நேரங்களில் நாசி அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது), இது பெரும்பாலும் மூக்கு வழியாக முனகுவதன் மூலமோ, புகைபிடிப்பதன் மூலமோ அல்லது நரம்புகளுக்குள் செலுத்துவதன் மூலமோ பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தப்படுகிறது. விளைவுகள் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் மற்றும் கிட்டத்தட்ட உடனடியாக இருக்கும். விளைவுகளில் யதார்த்தத்துடன் தொடர்பை இழப்பது மற்றும் மிகுந்த மகிழ்ச்சியையும் உணர்கிறது. கோகோயின் மிகவும் அடிமையாகும். மேலும் தெருக்களில் இருந்து வாங்கும்போது, குயினின் அல்லது உள்ளூர் மயக்க மருந்து போன்ற பிற விஷயங்களுடன் மருந்து கலக்கப்படுவதால் இது இன்னும் தீங்கு விளைவிக்கும். நீண்டகால துஷ்பிரயோகம் மூலம், கோகோயின் மாயத்தோற்றம், சித்தப்பிரமை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.
- விரிசல்: கோகோயின் மேலும் பதப்படுத்தப்படும்போது, அது புகைபிடிக்கக்கூடிய கிராக் என்ற மருந்தாக மாறும். இது சந்தையில் மலிவான மருந்துகளில் ஒன்றாகும் என்பதால், வாங்குவதற்கும் துஷ்பிரயோகம் செய்வதற்கும் இது மிகவும் எளிதாக கிடைக்கிறது. கிராக் மிகவும் போதை மற்றும் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
- ஆல்கஹால்: ஆல்கஹால் என்பது நொதித்தல் செயல்முறையின் மூலம் பழங்கள் மற்றும் தானியங்களுடன் தயாரிக்கப்படும் எரியக்கூடிய திரவமாகும். இறுதி முடிவு ஒரு பானத்தின் வடிவத்தில் ஒரு மருந்து ஆகும், இது பதட்டத்தை குறைக்க உதவுகிறது. தனிநபரை மிகவும் நிதானமாக உணர வைக்கிறது. மேலும் தீர்ப்பைக் குறைக்கிறது. அதிகப்படியான மற்றும் துஷ்பிரயோகம் செய்யும்போது, அது தனிநபரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் குடிப்பழக்கத்திற்கு வழிவகுக்கும். ஆல்கஹால் துஷ்பிரயோகம் செய்பவர்களில் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது. மேலும் அவர்கள் வன்முறை மற்றும் தவறான நடத்தைக்கு ஆளாகிறார்கள். உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மது அருந்துதல்.
- ஹெராயின்: ஸ்மாக் என்றும் அழைக்கப்படுகிறது. ஹெராயின் ஓபியாய்டு மருந்துகள் அல்லது ஓபியேட்டுகளிலிருந்து வரும் மருந்துகள் என்ற பிரிவின் கீழ் வருகிறது. இது சந்தையில் மிகவும் தீங்கு விளைவிக்கும் மருந்துகளில் ஒன்றாகும் மற்றும் இது நரம்புகளில் செலுத்தப்படுகிறது. அழுக்கு, அசுத்தமான ஊசிகளைப் பகிர்வதால் ஹெராயின் மாயத்தோற்றம், வலிப்புத்தாக்கங்கள் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் அல்லது டெட்டனஸ் போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். காலப்போக்கில், உடல் ஹெராயின் காட்சிகளுடன் பழகும்போது விளைவுகளை உணர அதிக அளவு மருந்து செலுத்தப்பட வேண்டும். இது அதிகப்படியான அளவு அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும். துரதிர்ஷ்டவசமாக ஹெராயின் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.1 மில்லியன் அமெரிக்கர்கள் ஓபியாய்டுகளை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஜுன் மாதம் 54 பேர் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஜுலையில் 53 பேர், ஆகஸ்ட் மாதம் 93 பேர், செப்டம்பர் 112 பேர் என சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 350ற்கும் அதிகமானவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளார்கள் .
- எல்.எஸ்.டி: எல்.எஸ்.டி என அழைக்கப்படும் லைசெர்ஜிக் ஆசிட் டைதிலாமைடு, உளவியல், உடல் மற்றும் உணர்ச்சி விளைவுகளைக் கொண்ட ஒரு மருந்து. அவற்றில் மாயத்தோற்றம், யதார்த்தத்துடனான தொடர்பை இழத்தல், உங்கள் உடலுக்கும் மனதுக்கும் இடையில் துண்டிக்கப்படும் உணர்வு, குமட்டல் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை அடங்கும். உணர்ச்சி அனுபவம் (பொருட்களை ‘சுவாசித்தல்’ அல்லது ‘சிற்றலை’ பார்ப்பது) ஆறு முதல் பதினான்கு மணி நேரம் வரை நீடிக்கும். எல்.எஸ்.டி உடல் ரீதியாக ஒரு போதை மருந்து அல்ல என்றாலும், இது ஒரு சக்தி வாய்ந்த மருந்து மற்றும் பீதி தாக்குதல்களுக்கு வழிவகுக்கும், அதாவது ஒரு ‘மோசமான’ பயணம், வன்முறை மனநோய், நரம்பியல் சேதம் மற்றும் உடல் ரீதியான தீங்கு. மருந்து வாய்வழியாக அல்லது ஊசி போடலாம்.
- மரிஜுவானா: பானை அல்லது களை என அழைக்கப்படும். இது அமெரிக்காவில் மிகவும் பொதுவான மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் மருந்து. மருந்து அதன் பரவசமான விளைவுகளுக்காக எடுக்கப்படுகிறது மற்றும் உணர்வை மாற்றுகிறது. மரிஜுவானாவை புகைபிடிக்கலாம் அல்லது உணவில் சமைக்கலாம். விளைவுகளை உணருவதற்கான விரைவான வழி புகைபிடித்தல். ஒரு பயணத்தின் விளைவுகள் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும். மரிஜுவானா பொழுதுபோக்கு, ஆன்மீகம் மற்றும் மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் உளவியல் ரீதியாக அடிமையாக்கும். இது இப்போது கனடாவிலும் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் சட்டப்பூர்வமானது. இருப்பினும் மரிஜுவானாவின் நீண்டகால பயன்பாடு தீங்கு விளைவிக்கும் மற்றும் நினைவக பிரச்சினைகள் மற்றும் உந்துதல் இழப்புக்கு வழிவகுக்கும்.
- பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்: இந்த வகை மருந்துகளில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு மருத்துவர் பரிந்துரைக்கும் எந்தவொரு கட்டுப்படுத்தப்பட்ட பொருளும் அடங்கும். தூண்டுதல்கள், வலி நிவாரணிகள், பதட்ட எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகள் ஆகியவை இதில் அடங்கும், அவை தெருவில் மருந்து அல்லாத நோக்கங்களுக்காக விற்கப்படுகின்றன. மருந்துகளை வாய்வழியாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது குறட்டை அல்லது ஊசி போட தூள் வடிவில் தரலாம். சில விளைவுகளில் பரவச உணர்வு, பதற்றம் மற்றும் பதட்டம் குறைதல் மற்றும் மேம்பட்ட செறிவு மற்றும் கவனம் (பொதுவாக கல்வியாளர்கள் மீது) ஆகியவை அடங்கும். அவற்றில் போதைப் பண்புகள் இருப்பதால், இந்த மருந்துகளை ஒரு மருத்துவர் கண்காணிக்க வேண்டும். துஷ்பிரயோகம் செய்யும்போது, அவை போதை மற்றும் மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக மற்ற மருந்துகள் அல்லது ஆல்கஹால் கலந்தால்.
- செயற்கை கேதினோன்கள்: இல்லையெனில் ‘குளியல் உப்புகள்’ என்று அழைக்கப்படும் இது ஒரு காட் ஆலை(ஒரு வகை புதர்)யில் இருந்து ஒரு தூண்டுதலால் தயாரிக்கப்பட்ட ஒரு செயற்கை மருந்து. இது பல இடங்களில் (ஆன்லைன் உட்பட) எளிதாக வாங்க முடியும். செயற்கை மருந்து உற்பத்தி அதிகரித்து வருவதாக 2012 வேர்ட் மருந்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியல் உப்புகளை புகைபிடிக்கலாம், ஊசி போடலாம், மாத்திரை வடிவில் விழுங்கலாம், அல்லது குறட்டை விடலாம். அவை கோகோயின் அல்லது எம்.டி.எம்.ஏ போன்ற மருந்துகளுக்கு மலிவான மாற்றாகும். ஏனெனில் அவை ஆற்றலின் ஊக்கங்கள், உயர் பாலியல் இயக்கி, பிரமைகள், அதிக நம்பிக்கை போன்ற ஒத்த விளைவை உருவாக்குகின்றன. எதிர்மறையான விளைவுகளில் சித்தப்பிரமை, பீதி தாக்குதல்கள் மற்றும் மரணம் கூட அடங்கும். குளியல் உப்புகள் போதைக்கு வழிவகுக்கும், மற்றும் திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் மிகவும் கடுமையானவை.
- புகையிலை: ஆல்கஹால் போலவே, சிகரெட்டும் சமூகத்தின் மிகவும் பொதுவான பகுதியாகும். அவை இரண்டும் சட்டபூர்வமானவை என்பதால், பலர் அவற்றை மருந்துகளாக கருதுவதில்லை. இருப்பினும் சிகரெட்டுகளில் நிகோடின் உள்ளது. இது சிகரெட்டை போதை மற்றும் தீங்கு விளைவிக்கும் மருந்து. மூளையில் நிகோடினின் விளைவுகள் கோகோயின் மற்றும் ஹெராயின் போன்ற பிற மருந்துகளுடன் மிகவும் ஒத்தவை. புகைபிடித்தல் உடலில் மஞ்சள், கறை படிந்த பற்கள், கெட்ட மூச்சு, முடி நரைத்தல், சுருக்கங்கள் போன்ற உடல் விளைவுகளை ஏற்படுத்துகிறது. உள்நாட்டில், நீண்ட காலமாக புகைபிடிப்பது புற்றுநோய், இதய நோய் அதிக ஆபத்து, பக்கவாதம், ஆண்மைக் குறைவு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400,000 பேர் புகைப்பிடிப்பதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளால் இறக்கின்றனர்.
- மெத்திலினெடோக்ஸிமெதாம்பேட்டமைன் (எம்.டி.எம்.ஏ): பொதுவாக எக்ஸ்டஸி என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக ரேவ்ஸ் மற்றும் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, இந்த மருந்துக்கு அறியப்பட்ட மருத்துவ பயன்கள் எதுவும் இல்லை (ஆராய்ச்சி தொடர்கிறது என்றாலும்) மற்றும் இது முக்கியமாக பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பரவசத்தின் சில குறுகிய கால விளைவுகள், பரவசம் மற்றும் சமாதான உணர்வுகள், மற்றவர்களிடம் பச்சாத்தாபம் உணர்வுகள், மாயத்தோற்றம், தன்னம்பிக்கை அதிகரித்தல், பதட்டம் குறைதல் போன்றவை. சித்தப்பிரமை நடத்தை, மற்றும் தூக்கம் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்.
- ஆம்பெட்டமைன்கள்: மத்திய நரம்பு மண்டலத்திற்கு உதவ தூண்டுதல்களாக செயல்படும் மருந்துகளின் வகை. மருந்து அட்ரினலின் (ஒரு இயற்கை தூண்டுதல்) உடலின் வழியாக அனுப்புகிறது. இதனால் தனிநபர் அதிக எச்சரிக்கையுடனும், நம்பிக்கையுடனும், ஆற்றலுடனும் உணர முடியும். இவை ஆம்பெடமைன்களின் நேர்மறையான விளைவுகள். இருப்பினும் ஆம்பெடமைன்கள் எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தும் மற்றும் நபர் பதட்டமாகவும் விரோதமாகவும் உணரக்கூடும். எதிர்வினை நபருக்கு நபர் மாறுபடும். வெவ்வேறு வகையான ஆம்பெடமைன்கள் பொதுவாக அவற்றின் தெருப் பெயர்களான படிக, கிராங்க், வேகம், மேல் அல்லது பென்னிகளால் குறிப்பிடப்படுகின்றன. ஆம்பெடமைன்கள் புகைபிடிக்கப்படலாம் அல்லது செலுத்தப்படலாம். இது உடனடி பரவசமான எதிர்வினைக்கு காரணமாகிறது. ஏனெனில் மருந்து மூளையை மிக விரைவாகத் தாக்கும்.
ADD, உடல் பருமன் மற்றும் தூக்கக் கோளாறுகள் போன்ற பல குறைபாடுகள் ஆம்பெடமைன்களைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்படுகின்றன. இதன் விளைவாக அவை எளிதில் கிடைக்கின்றன. மெத்தாம்பேட்டமைன் என்பது ஒரு வகை ஆம்பெடமைன் ஆகும். இது சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டு எந்த மருத்துவ நோக்கமும் இல்லாமல் விநியோகிக்கப்படுகிறது. ஆம்பெடமைன்களை துஷ்பிரயோகம் செய்வது உயர் இரத்த அழுத்தம், மனநிலை மாற்றங்கள் மற்றும் நாசி குழி மற்றும் பற்களின் சிதைவு போன்ற உடல் மற்றும் உளவியல் பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். அதிகப்படியான அளவு ஏற்படும் அபாயமும் உள்ளது
சேயோன்:- எந்த வகையான போதைப்பொருட்கள் கிடைக்கின்றன?
நிலவன்:- ஹெரோயின், ஹொக்கையின், மர்ஜுவான, ஹஸிஸ், ஐஸ்பேக், கேரளா கஞ்சா, அபின், சாராயம், கசிப்பு, பியர், சிகரட், சுருட்டு, பீடி போன்ற முழு அளவிலும், குறைந்த அளவிலும் போதையை ஏற்படுத்தும் அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இப்பொருட்கள் இலங்கையில் அதிகளவில் பயன்படுத்தப்பாடுகின்றன. போதைப்பொருள் விற்பனையானது குறுக்கான வழியில் செல்வம் தேடும் ஒரு மூலோபாயமாகக் காணப்படுகின்றது. தனக்காக வாழ்வதிலும் பார்க்க பிறருக்காக வாழும் பேராசையின் நிமித்தம் பலர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம் போதைப்பொருள் பயன்பாட்டுக்கான பழக்கம் வெறுமனே எற்படுவதில்லை. ஒருவரின் சமூகமயமாக்கல் முகவர்களின் தவறான பழக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் சமூகக்கற்றலினூடாக தோன்றுகிறது.
சேயோன்:- போதைப்பொருட்கள் சமூகத்தில் எற்படுத்தும் விளைவுகள் எவை?
நிலவன்:- நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் ஒருபுறமும் மறுபுறத்தில் சமூக நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதில் இந்த போதைப்பொருள் விவகாரமானது சர்ச்சைக்குரிய விடயமாக உருவெடுத்துள்ளது. பிள்ளைகள் மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் போதைக்கு அடிமையாகும்போது குடும்பத்திலும் சமூகத்திலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன.
போதைப்பொருள் வர்த்தகமும், பாவைனயும், கடத்தல்களும், கடத்தக்காரர்களின் கைதுகளும் தினசரி நிகழ்வாக நடந்தேறுகின்றமை எமது மக்களும் எதிர்நோக்குகின்ற பாரிய சமூகப் பிரச்சினையாக மாறியிருப்பது மாத்திரமின்றி சமகால சமூகப் பிரச்சினையில் முதலிடத்தையும் பெற்றிருப்பதாகவே காண முடிகிறது. கடத்தல்கள், கொலை, கொள்ளை, தற்கொலை, சிறுவர் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் வெறிக்கொலைகள், வாள்வெட்டு வன்முறை, வாகன விபத்துக்கள், கணினிக் குற்றங்கள், பாதாள உலகக் கோஷ்டியினருக்கிடையிலான மோதல்கள், உட்பட குடும்பத்திற்குள் ஒற்றுமை குலைந்து விடுகின்றது. அவநம்பிக்கை ஏற்படுகின்றது. முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றது
வடக்கில் போதைப்பொருள் பாவித்த சகோதரன் தன்னுடைய சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியால் சகோதரி உயிரை மாய்த்துக் கொண்ட கொடூரம் நமது சமூகத்தில்தான் அரங்கேறியுள்ளது. காதலியை போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை, சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை, இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறை கலாச்சாரத்தையும் தூண்டிவருகிறது.
சேயோன்:- நீங்கள் சந்தித்து வரும் துணைநாடிகள் தொடர்பில் சம்பவங்களை கூற முடியுமா ?
நிலவன்:- நான் தாயகத்தில் 10 வருடங்கள் எனது தொழில் நிலையில் இல்லை என்றாலும் நான் நீண்டகாலம் பணி செய்த பிரதேசங்களில் உள்ள மக்களுடன் தொடந்து தொடர்புகளை பேணி வருகின்றேன். என்னிட பணிக்காலத்தில் என்னுடன் பல உள பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளை பெற்றவர்கள் இப்பிரதேசங்களில் ஆரோக்கியமான வாழ்கையினை வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் பருந்திரைகளின் ஊடக சிலர் கைபேசி ஊடக ஆற்றுப்படுத்தல் தேவையினை நாடி தொடர் சந்திப்புக்களில் உள்ளார்கள். தொழில் முறையில் அவற்றை சொல்ல முடியாத நிலை இருந்தாலும் அவர்களின் அடையாளப்படுத்தல்கள் இல்லாமல் ஒரு சில சம்பங்களை குறிப்பிடம் என நினைக்கின்றேன் .
வயது 24; போதைப்பொருள் பாவனை வீட்டிற்கு தெரியவந்து பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் வீட்டை விட்டு வெளியேறிவந்து பாலியல் தொழில் ஈடுபட்டுள்ளதாக பெண் ஒருவர் கூறியிருந்தார் .
போதைப்பொருள் பாவனையில் உள்ள 25 வயதுடைய பெண் ஒருவர் குறுகையில் தன்னை பாலியல் தொழில் செய்ய சொல்லி ஒரு கும்பல் அழுத்தம் தருவதாக கூறினார் .
வயது 18; தேசிய பாடசாலை ஒன்றில் உயர்தரம் விஞ்ஞான பிரிவில் 2023ஆம் ஆண்டிற்கான பரீட்சைப் பிரிவில் கற்றுவரும் மாணவன் ஒருவன் கூறுகையில் தன்னால் போதைப்பொருள் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை, அதற்கு அடிமையாகி விட்டதாக கூறினான்.
வயது 23; எனக்கு நண்பர்களுடன் மகிழ்சியாக இருப்பதற்கும் ஆடம்பரச் செலவுகளுக்கு ஏற்பட்ட பணத்தேவையினை நிறைவு செய்ய எனக்கு தெரிந்த ஒருவர் மூலம் கிடைத்த தொடர்பில் போதப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தேன். ஆனால் அதை விட்டு வெளியே வரமுடிய நிலை இப்போது. மேலும் தங்கள் ரகசியம் அனைத்தையும் தெரிந்து கொண்டதால் தங்களை வெளியில் சென்று காட்டிக்கொடுத்து விடுவேன் என்கிற அச்சத்தில் என்னைத் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள் என்றார் .
வயது 25; தனியர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றேன். எனது நண்பர்கள் சிலர் போதைப்பொருள் பாவித்து வருகின்றார்கள். அவர்கள் கூட்டாக ஒரு வீட்டில் நாளுக்கு ஒரு பெண் என்று கூட்டு பாலியல் நடத்தையில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். ஒருநாள் நானும் அவர்களுடன் இணைந்து ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததை படம் வீடியோ எடுத்து என்னை தொடந்து பேதைப்பொருள் பாவிக்குமாறு வற்புறுத்துகின்றார்கள். இல்லை என்றால் இனிமேல் பணியாற்ற முடியாதவாறு செய்து விடுவோம் எனவும் இணையத்தில் வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவிடுவதாகவும் மிரட்டுகிறார்கள். எனவே தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை, தன்னை மிரட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நான் தற்கொலை செய்ய வேண்டும் என்றார் .
17 வயது பாடசாலை மாணவன் வயது மூத்த நண்பர்களுடன் தனக்கு ஏற்பட்ட நட்பு ஒருநாள் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் என குளத்திற்கு அழைத்தார்கள். குளத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பதியில் வைத்து மதுபானம் மற்றும் சாப்பிடுகள் சாப்பிட்டேம். பின்னர் போதை ஊசி செலுத்தியதும் எனக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர் எனக்கு உடம்பில் ஏற்பட்ட வலிகளிம் அடயாலங்களும் அவர்கள் எனக்கு செய்தது கூட்டு பாலியல் வன்கொடுமை என கூறினான்.
14 முதல் 25 வயது வரையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குப் பகுதியில் பல நூற்றுக்கணக்கானோர் இவ்வாறு போதைப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ள பலருடன் பேசும்போது குறிப்பாக ஹெரோயின் போதைப்பொருள் பயன்பாடு அங்கு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்த பாவனையில் இருக்கும் பலர் போதைக்கு அடிமையான நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு அவர்கட்டும் அதேவேளை, மீளவும் சிறுகச்சிறுக போதைப்பொருட்களை பாவிக்கத் தொடங்கும் நிலையும் காணப்படுகிறது.
இவை போன்று பல சம்பவங்களை கூறமுடியும். தொடர்ந்து தீவிரமடையும் இந்த போதைப்பொருள் பாவனையின் விளைவு வடக்கிலுள்ள குடும்ப உறவுகளையும் சீரழிக்க தொடங்கியுள்ளது. மாற்றத்தை நோக்கி இளையோர் சமூகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடியால் இளையோர் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள், பெண்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களும் அதன் தாக்கங்களும், மாணவர்களின் இடைவிலகல், விவாகரத்தின் போக்குகளும் அதன் தாக்கங்களும் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சமூகம் எதிர்கொள்கிறது .
சேயோன்:- போதைக்கு அடிமையானவரை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் போதைப் பழக்கத்தின் அறிகுறிகள்?
நிலவன்:- உடல் உள சமூக அறிகுறிகள் இவர்கள் மத்தில் வளமைக்கு மாறாக அல்லது அசாதாரணமாக காணப்படும் அவற்றில் சிலவற்றை ஒன்று மேற்பட்ப அறிகுறிகளை வைத்து இனங்கண்டு கொள்ள முடியும். போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடக்கூடிய ஒருவர் உடல் நடுக்கம், காய்ச்சல், மூட்டு வலி, தசைப்பிறழ்வு, வாந்தி, வயிற்றோட்டம் போன்ற பல்வேறு அசெளகரியங்களை அனுபவிப்பார்.
உடலியல் அறிகுறிகள் (நடுக்கம், தலைவலி, களைப்பாக உணர்தல், உணவு உண்ண மனமின்மை, வலிகள், நோக்கள், அழுகை, கவலை, மன அழுத்தம், கடும் கவலை, பதகளிப்பு, பயம், எப்பொழுதும் ஆபத்தை எதிர்பார்த்துத் தயாராயிருத்தல், பதற்றம், மிகப் பாரதூரமான விடயம் ஒன்று நடக்கப் போகின்றது என்ற பயம், அதிகமான அல்லது மிக குறைவான தூக்கம், பயங்கரக் கனவுகள், இலகுவில் கோபப்படும் தன்மை காணப்படும்
அதேவேளை சினம், குழப்பமான பேச்சு, குற்ற உணர்வு, வெட்கம், குழம்பியிருத்தல், உணர்வுகள் மரத்த நிலை, கனவுலகம், ஒதுங்கியிருத்தல் அல்லது அசையாது விறைத்திருத்தல், மற்றவர்களுக்குப் பதிலளிக்காதிருத்தல், பேச்சேதும் இன்றி இருத்தல், அறிவு குழம்பிய நிலை (தமது பெயரை, சொந்த இடத்தை, என்ன நடந்தது என்பதனை மறத்தல்), பதட்டம், பிரமை பிடித்த மாதிரி இருப்பது, தமது குடும்பத்தையும் பராமரிக்க முடியாத நிலையிலிருத்தல் (உதாரணமாக உணவு, பானம் இன்றி இருத்தல், சிறிய முடிவுகளைக்கூட எடுக்க முடியாத நிலை).
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துதல், போதை மருந்து கிடைக்காத போது தீவிரமாக அறிகுறிகளைக் காணலாம். சண்டை போடுவது போன்ற நடத்தை மற்றும் பண சிக்கல்கள், பொழுதுபோக்கு, விருப்பமானவை மற்றும் நடத்தையில் மாற்றங்களை காணலாம். சுய பராமரிப்பில் இடர், அடிக்கடி மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவந்திருத்தல் மற்றும் உடலில் ஊசி குத்திய தடம், தனக்கு ஏற்படும் உணர்வுகளை கையாள முடியாமை, சுய கட்டுப்பாடுகளை இழத்தல், பாலியல் தொடர்பான மாறுபட்ட நடத்தை, உறவு முறைகளில் திடீர் மாற்றங்களை சில சமயம் காணலாம். உடல் எடை குறைவது அல்லது அதிகரிப்பது போன்ற திடீர் எடை மாற்றங்கள் என்பனவற்றையும் குறிப்பிட முடியும்.
சேயோன்:- போதைக்கு அடிமையான ‘மாணவர்களை’ அடையாளம் காணும் வழி வகைகள் எவை?
நிலவன்:- குறிப்பாக பாடாசாலையில் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படும். பிள்ளைகள் பழகக்கூடிய புதிய, பழைய நண்பர்களை அடையாளம் காண வேண்டும். ஆரம்பத்தில் பிள்ளை பழகிய நண்பர்கள் யார்? புதிதாக பழகிய நண்பர்கள் யார்? அவர்களுடன் மேற்கொள்ளும் நட்பு எத்தகையது? ஏற்பட்டு வரும் மாற்றம் எத்தகையது? பாடசாலைக்கு போய்விடும் நேரம் மேலதிக வகுப்புக்கு போய் வரும் நேரம், இதில் ஏற்படும் மாற்றங்கள், பொழுது போக்குகளில் ஈடுபட்டவர்கள் ஒதுங்கிக் கொள்வது, நல்ல பழக்க வழங்கங்களை குறைத்துக் கொள்வது, விருப்பமான ஆகுமான நல்ல விடயங்களில் ஆர்வம் குறைந்து வருவது, விளையாட்டில் நாட்டமில்லாமல் இருப்பது, அணியும் ஆடைகளில் கவனமில்லாமல், சுத்தம் பேணாமல் இருப்பது, வாயில் துர்வாடை வீசுவது போன்ற விடயங்களை காணப்படுமாயின் பெற்றோர் உடனே கவனம் செலுத்த வேண்டும்.
வீட்டில் சின்னச்சின்ன பொருட்கள் காணாமல் போவது அல்லது பணம் காணாமல் போவது, படிப்பில் ஆர்வம் குறைவது, அடிக்கடி மறதி ஏற்படுவது, பதற்றமாகவும் ஆக்ரோக்ஷமாகவும் நடந்து கொள்வதும் காணப்படுமானால் பெற்றோர் கண்டிப்பாக பிள்ளைகள் விடயத்தில் மிக அவதானம் செலுத்த வேண்டும். பிள்ளையின் மீது அதிக அன்பு காட்டி ஏமாந்து போகாமலும் அதிக கோபத்தையும் வெறுப்பையும் காட்டி ஒதுக்கி விடாமலும் நடுநிலைமையுடன் நடந்து, பிள்ளையின் வாழ்வை சீர் செய்ய முனைய வேண்டும். எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. அதனை சரியாக தேடிக்கொள்ளவே வழிகாண வேண்டும்.
சேயோன்:- போதைப்பொருள் பிரச்சினை இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
நிலவன்:- இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்து, உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் யாரேனும் போதைப்பொருள் பிரச்சினையில் சிக்கியிருப்பதாக சந்தேகித்தால், உங்கள் பொது மருத்துவரிடமிருந்து உடனடி உதவியைப் பெறுங்கள் அல்லது நீங்கள் நம்பக்கூடிய ஒருவரை அணுகவும்
மேலும், பாதிக்கப்பட்ட நபரை ஒரு போதை நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அவர் போதைப் பழக்கத்தின் வரலாறு, பயன்படுத்தும் அளவு அல்லது குடும்பத்தில் யாரேனும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்பட்டதா போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பார்.
போதைப்பொருள் பயன்படுத்தியதால் அவர்களின் உடலும் மனமும் பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ மற்றும் உளவியல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிகிச்சையில் போதைப்பொருள், மறுவாழ்வு, சிகிச்சை, சிகிச்சைக்கு பிந்திய பராமரிப்பு ஆகியவைகள் அடங்கும். இந்த நீண்ட செயல்முறை சில நேரங்களில் வருத்தம் தருவதாகவோ அல்லது விரிவானதாகவோ இருக்கக்கூடும்.
சேயோன்:- போதைப்பொருள் பாவனையாளர் அல்லது பாவனையாளரின் நண்பர்கள் யாரை நாடுவதன் ஊடக பாதிக்கப்பட்டவரை மீட்டெடுக்க முடியும்?
நிலவன்:- உளவளத்துணையாளர், உளநலப்பிரிவு – வைத்தியசாலை, பிரதேச செயலகம் (DS), கச்சேரி, சமுக சேவைகள் திணைக்களம் (ONUR), உளசமுக பணியாளர்கள் (psw), பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் (WDO) , மருத்துவச்சி (PHM), மதத்தலைவர்கள், கிராம சேவகர் (GS), சமுர்த்தி உத்தியோகத்தர்கள் (SDO), சமுக சேவைகள் உத்தியோகத்தர் (SSO), பாடசாலை சூழலில் – உளவளத்துணை ஆசிரியர், அதிபர், வகுப்பாசிரியர், நம்பிகைக்குரிய ஆசிரியர், பாட ஆசிரியர், ஆன்மீகவாதிகள், உளநல வைத்தியர்கள், பிரதேச வைத்தியர்கள், நாட்டு வைத்தியர்கள், அண்மையில் இலகுவாக அணுகக்கூடிய உறவினர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்கள்., நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் (ONUR), உளசமுகபணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGO).
போதைப்பொருள் மீள் புனர்வாழ்வு மையங்கள் ஆகியோரிடம் நாடி இதற்கான பரிந்துரைகளை மேற்கோட்டு மருந்துவப் புனர்வாய்வு மற்றும் சமூகப் புனர்வாய்வு என்பனவற்றை பெறுக்கொள்ள முடியும்
சேயோன்:- போதைப்பொருள் பாவனையில் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு என்ன?
நிலவன்:- போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், சமூகமயப்படுத்தல் மற்றும் தொழில் ரீதியான ஆற்றல்களை மேம்படுத்துதல் என்பவை இப்போது அவசியமாகிறது. ஹெரொயின், கஞ்சா, கேரள கஞ்சா, மதுபானம் மற்றும் போதை குழுசைகளை பயன்படுத்துதல் என்பவற்றின் காரணமாக வாழ்க்கையை இருளாக்கிக் கொண்ட போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு மனநிலை சிகிச்சை, உளவளத்துணை ஆலோசனை மற்றும் மருத்துவவியல் அணுகுமுறை என்பவற்றின் ஊடாக புனர்வாழ்வளிக்கபட வேண்டும்
யாராவது போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகி இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவமனை, போதைப்பொருட்கள் அடிமைத்தனத்தை போக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிப்பது முக்கியமானதும் அவசியமானதுமான விடயமாகும். போதைப்பொருள், மதுபானம் மற்றும் சமூக வன்முறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு சீர்திருத்தம், கல்வி, விளையாட்டு மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான விசேட வேலைத்திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.
நாம் இன்றைய நிலையில் விரைந்து செயற்பட வேண்டிய தருணம். போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பரந்துபட்ட கட்டமைப்பை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது அனைவரினதும் கடமையாகும். அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினரும் முன்வர வேண்டும்.
சேயோன்:- போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த என்ன செய்யாலாம்?
நிலவன்:- சுகாதார மற்றும் குடும்ப நல துறையினர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் சார் துறையினர், வெளியுறவுக் கொள்கை மற்றும் சிறுவர் பெண்கள் சார் துறையினர், கல்வி, சட்டம் நீதி, பாதுகாப்புப்படை என அரச அமைச்சுக்கள் வெளியுறவுக்கொள்கை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு உட்பட அரசும் அரசாங்க கட்டமைப்புக்களும் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்கும் கொள்கைகள் மற்றும் போதை மறுவாழ்வு திட்டம் என செயல்திட்டங்கை விரைந்து செயற்படுதல் வேண்டும்.
மக்கள் ஆணையைப் பெற்றுள்ள அரசும் அரசாங்கத்தினதும் சமூகத்தின் மத்தியில் பொறுப்புள்ளவர்களாக நடக்க தவறியமையே இதற்கு முதற்காரணம். போதைபொருள் அற்ற நாடாக மாற்ற வேண்டுமானால் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தடையாக இருக்கின்ற விடயங்களை கண்டறிந்து செயற்பட வேண்டும் .
புகையிலையை அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் யாழ் மாவட்டத்தில் புகையிலை உற்பத்தியைக் குறைத்தல் அல்லது உற்பத்தியியைக் கைவிட முன்வர வேண்டும்
தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழும் இம்மாவட்டங்களில் மதுபான சாலைகள் அதிகரித்துள்ளமை அல்லது மதுபானத்தின் பாவனை அதிகரித்துள்ளது. குறிப்பாக இப்பிரதேசங்களில் இம்மதுபான சாலைகள் பாடசாலைகளின் அருகாமைத் தூரத்திலும் வழிபாட்டுத்தளங்களின் அருகாமையிலும் நிறுவப்பட்டுள்ளது. இதன் நோக்கத்தை கண்டறிந்து கட்டுப்பாட்டில் கொண்டு வருதல் வேண்டும்.
போதைப்பொருள் கடத்தலை முழுமையாக இல்லாது ஒளிக்க வேண்டும் . வியாபார மாபியாக்களின் கரங்களில் சிக்குண்டவர்களை மீட்டு அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை வழங்க வேண்டும்
போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகக்ளையும், பாரதூரமான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வுகளையும் அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும்.
பாடசாலை மாணவர்கள் இளைஞர்கள் என்பவருக்கு மத்தியில் போதைப்பொருளை தவிர்ப்பது தொடரபான செயற்திட்டங்கள், கருத்துக்கள் என்பவற்றை நிகழ்த்துவதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பிரதேசத்தில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொளள் வேண்டும்.
போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்களை சீர்திருத்துவதற்கான வசதிகளையும், வழிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மருத்துவர்களினதும், உளவளத்துணையாளரக்ளினதும் ஆலோசனைப்படி செயலாற்றவும் புனர்வாழ்வு அளிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தவும் வேண்டும்.
போதைப்பொருளின் தீமைகள், பாலியல் சீண்டல் குறித்த விபரங்கள் மாணவர்களுக்கு கண்டிப்பாக தெரிய வேண்டும். பெற்றோர் சம்பாதிக்கும் பணத்தை போதைப்பொருட்களுக்கு செலவு செய்யாமல் சேமிக்க வேண்டும். பாலியல் எண்ணத்துடன் ஒரு குழந்தையிடம் பேசுவது, ஆபாசமான படங்களை காட்டுது, படம் எடுப்பது, வன்கொடுமை என பாலின வேடறுபாடுகளின்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .
பாடசாலைகளில் மாணவர்களின் நலன் கருதியும் எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பெற்றோர் பழைய மாணவர் சங்கத்தினர், கல்வி சாரா சமூகத்தினர் உட்பட சகல தரப்புகளுக்கு உரிய வகையில் ஒத்துழைப்புடன் இதை இல்லாதொழிக்க வேண்டும்
போதைப்பவனையின் பாதிப்புக்கள் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மேடை, வீதி நாடகங்களை நடத்துதல், சுவரொட்டிகளை ஒட்டுதல், போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்கை விபரித்து துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் வேண்டும் .
நாம் ஒவ்வொருவரும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபைக்கு ஒத்துழைப்பு நல்குதல் அவசியம். ஆனால் அக்கட்டுப்பாட்டுச் சபை ரகசியம் பேணும் நிலையுடன் செயற்பட வேண்டும். போதைபொருட்கள் பாவிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், நாட்டுக்குள் கடத்தி வருபவர்கள் யாராக இருந்தாலும் எமக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபைக்கு தெரிவிப்பது நாம் எமது நாட்டுக்கும் எமது சமுதாயத்துக்கும் செய்யும் பேருதவியாகும்.
சேயோன்:- போதைப்பொருள் கடத்தலுக்கு கட்டாய மரணதண்டனை விதிப்பது சரியான கொள்கையா?
நிலவன்:- இலங்கை, போதைப்பொருள் கடத்தலின் மையமாக உள்ளது. போதைப்பொருள் பயன்பாடும் அங்கு அதிகரித்து வருகிறது. சட்டம் முறையாகச் செயற்படுத்தப்படாமையும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களின் பணியில் காணப்படும் வழுக்கலுமே போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதையும் பயன்படுத்தப்படுவதையும் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க முடியாமல் உள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுவதை விமர்சிப்பவர்கள் அது பல உயிர்களைக் காப்பாற்றுகிறது, போதைப்பொருள் கடத்தலுக்காக ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது எனில்; அதே சமயத்தில் போதைப்பொருளைப் பயன்படுத்துவதனால் மில்லியன் கணக்கானவர்கள் இறக்கின்றனர் எனப் புள்ளி விபரங்கள் குறிகாட்டுகின்றன.
2021ஆம் ஆண்டின் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் ஒரு ஆண்டில் 500,000 மரனணங்களுக்கு போதைப்பொருள் தொடர்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலைத் தடைச் சட்டத்தின் கீழ் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுக்கப்பட்டுள்ள இப்பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சட்டம் சரியாக அமுல்படுத்தப்படாமல் இருப்பது இந்நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
‘ஐஸ்’ என்றழைக்கப்படும் ‘கிரிஸ்டன் மெதாம்படெமின்’ என்ற ஆபத்தான போதைப்பொருள், 2 கிராம் அளவுக்கு வைத்திருந்தாலே மரண தண்டனை விதிக்கும் வகையில், நச்சுப் பொருள், அபின், அபாயகர மசோதா திருத்தச் சட்டம், கடந்த அக்…2022-நவம்பர்-19ஆம் தேதி அந்நாட்டின் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான மசோதாவில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார். இந்த சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து, மரண தண்டனை விதிக்கும் சட்டம் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தை மிகத்தீவிரமாக செயல்படுத்தும்படி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஏன் இந்த 2 கிராம் வைத்திருக்க முடியும் என்பது சில அரசு அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர். பொலிஸ் திணைக்களத்தின் இலஞ்சம், ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும். அதன்பின்னர் மரண தண்டனை அமுலாக்கம் தொடர்பாக சிந்திக்க வேண்டும். இருக்கிற சட்டத்தை அமுல்படுத்துவதை விடுத்து அரச இயந்திரக் கட்டமைப்புக்களுடன் போதைப்பொருள் மாபியக்களுக்கு இருக்கும் தொடர்புகளுக்கு என்ன தண்டனை?, அரசின் இயலாமையினையும் அரசிற்கும் இதற்கும் இருக்கின்ற மாபியாக்களின் தொடர்பை மறைப்பதே இத்தகைய தண்டனை என நான் பார்க்கின்றேன். நான் எப்போதும் நடைமுறைக்கு பொருத்தம் இல்லாத ஒன்றைப் பற்றி அதிகம் பேசுகின்றோம்.
சேயோன்:- போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை அல்லது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா ?
நிலவன்:- சர்வதேச நாடுகளின் நிர்பந்தங்களை மீறி, போதைப்பொருள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 வெளிநாட்டினருக்கு இந்தோனேசியா தண்டனையை நிறைவேற்றியது. போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 வெளிநாட்டினருக்கு 2015ஆம் ஆண்டு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி ஜேன் வெலோஸா என்ற பெண்ணுக்கு 11 மணிநேர அவகாசம் அளித்து தண்டனை நிறுத்தப்பட்டது. இதையடுத்து 2 ஆஸ்திரேலியர்கள், பிரேசிலைச் சேர்ந்த ஒருவர், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 4 பேர் என 7 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களுடன் உள்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். இதற்கு அன்றைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தலைமையில் சர்வதேச சமூகம், இவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்தோனேசியா இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டது. பல நாடுகள் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
சேயோன்:- நேரத்தை ஒதுக்கி பதில்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி நிலவன் அண்ணா.
நிலவன்:- நன்றி சேயோன்.