வெந்து தணிந்தது காடு சம்பந்தமாக நிதர்சனம் வெளியிட்ட அறிக்கையை மீளப்பெறுதல் தொடர்பாக வந்த அறிக்கையானது போலி.
அவ்வறிக்கையிலேயே, முன்னுக்குப் பின் முரணான பல விடயங்கள் சாதாரண மக்களாலேயே அடையாளம் காணக்கூடிய வகையில் உள்ளன.
குறிப்பாக, இத்திரைப்படம் தொடர்பான அரசியல்துறையின் உத்தியோகபூர்வ அறிக்கையானது 08.07.2023 அன்று திகதியிட்டு வெளியிடப்பட்டது. நிதர்சனம் நிறுவனத்தின் அறிக்கை 07.07.2023 அன்று திகதியிட்டு வெளியிடப்பட்டது. அவ்வாறிருக்கையில், நிதர்சனத்தின் அறிக்கை எவ்வாறு அரசியல்துறையினரின் அறிக்கையை அடியொற்றி, அவ்வறிக்கை வருமுன்னரே வெளியிடப்படும்? இந்த அடிப்படைப் புரிதல் கூட இல்லாது ஊடகங்கள் செயல்படுவது கவலைக்குரியதாகும்.
நாம் நிதர்சன நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்டதில் இது அவர்களுடைய உத்தியோக பூர்வ அறிக்கை இல்லை எனவும், அரசியல்துறையின் பற்றுறுதியான முன்னெடுப்புகள் கண்டு நிதர்சனத்தின் பெயரில் அறிக்கை வெளியிட்டு அரசியல்துறையினர் மீதும், நிதர்சனத்தின் மீதும் சேறு பூசும் நடவடிக்கையில் நாசகார சக்திகள் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறு விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகள் ஊடாக வெளிவரும் அறிக்கைகள் விசமிகளால் சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்படுவது இது முதல் தடவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு அதனை மீளப்பெறும் கலாச்சாரம் புலிப் பாண்பாட்டிலேயே கிடையாது. இது அறியாமல், ஊடங்கள் என்று சுய தம்பட்டம் அடிக்கும் சிலர், இவ்வாறான ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் நிகழ்ச்சி நிரலில் செயல்படும் விஷக்கிருமிகளின் போலி அறிக்கைகளை காவிக்கொண்டு திரிவது முட்டாள்தனமானது..
தற்போது, நம் மக்களை மீது தொடுக்கப் பட்டிருக்கும் புலனாய்வும் போரை முறியடித்து, மக்களை தூய்மையான விடுதலைப் பாதையில் நடாத்திச் செல்லும் பொறுப்பு, ஊடகங்களின் கைகளிலேயே உள்ளது.
தம்மை தமிழ்த் தேசிய ஊடகங்களாக காட்டிக்கொண்டு, இப்பொறுப்பிலிருந்து விலகி, ஸ்ரீ லங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் ஊடங்களினதும், ஊடகவியலாளர்களினதும் முகத்திரை நம் மக்களால் கிழித்தெறியப்படும்.
நன்றி. வணக்கம்.