ஈழத்தமிழர்களின் நீதி தேடும் பயணத்தின் முக்கியமான தடங்களை நோக்கியும் மிகக் கூர்மையான ஆவணத் தடையத் தொகுத்தவாறு தாயகக் கனவுடன் பயணித்துக் கொண்டிருப்பவர், ஈழப்படுகொலையின் சுவடுகள் – பாகம் 1 நூலின் ஆசிரியர் அண்ணன் நிஜத்தடன் நிலவன் அவர்கள். ஒரு எழுத்தாளராக, ஊடகவியலாளராக, அரசியல் விமர்சகராக, ஒரு உளவியல் நிபுணராக என பன்முகத் தன்மையோடு தமிழினத்தின், தமிழீழ தாயகத்தின் விடிவிற்காய் தன்னால் முடிந்தவரை பங்களிப்புச் செய்ய வேண்டுமென்ற துடிப்போடு செயற்பட்டு வருபவர், இன்று நம்மோடு இணைந்திருக்கிறார்.
சமகாலத்தில் எழுத்துலக மேதைகள் என்று அழைக்கப்படுவோர் எல்லாம் நமது தமிழினம் சந்தித்த அவலங்களையும், இந்தியா மற்றும் இந்தியாவைப் போன்ற வல்லாதிக்க நாடுகளும் நடாத்திய ஒரு மாபெரும் இனவழிப்பையும் கண்டுகொல்லாதவர்களாக, வாய் மூடிய மௌனிகளாக ஒதுங்கியிருக்கின்ற இந்த வேளையில் துணிந்து நின்று அறம் சார்ந்த வாய்மையோடு தனது நிலையை எடுத்துரைக்கின்ற சிலருள் அண்ணன் நிலவன் அவர்கள் முக்கியமானவர்.
இந்தியா ஒரு அகிம்சை நாடு, ஒடுக்கப்படும் நாடுகளின் விடுதலைக்கு உதவிக் கரம் நீட்டும் மகத்தான தொரு நாடு என்ற பிம்பத்தைச் சுமந்து கடந்த 75 ஆண்டுகளாக உலக அரங்கில் தன்னை உத்தம சீலனாகக் ஊடகங்கள் வாயிலாகவும், புத்தகங்கள் வாயிலாகவும் பறைசாற்றிக் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் அறிந்ததற்கும் அறிவிக்கப்படுவதற்கும், நமக்குத் தெரிந்ததற்கும் நம்மிடம் தெரிவிக்கப் படுவதற்கும், நமக்குத் தெரியாததற்கும் நம்மிடம் வலியுறுத்தப்படுவதற்கும், ‘மெய்’ உலகிற்கும் தோற்ற உலகிற்கும் இடையிலான பேதங்கள் முடிவிலா ஊகத்துக்கும் புத்தி பேதலிப்பின் விளிம்புக்கும் இட்டுச் செல்கிறது. கிண்டிக் கிளறி நோக்கும் பொது தான், இந்த நச்சுப் பானம் படு கேவலமான, நாசகார அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியவருகிறது.
இவ்வாறான இந்தியா, தமிழீழ விடுதலை விடயத்தில் உதவிக் கரம் நீட்டுகிறேன் என்ற பெயரில் உயிரைக் கொன்றதும், அமைதி காக்க வந்தோம் என்று கூறி அமைதி குலைத்ததும் வரலாறு. இப்படி இருக்கும் சூழலில் இந்தத் தெற்காசியப் பிராந்தியத்தின் மிகப்பெரிய வல்லாதிக்க நாடாக இருக்கும் இந்தியா தமிழீழ விடுதலைக்கு ஆதரவளிக்குமா என்ற கேள்விக்கும், இன்னும் பல அரசியல் கேள்விகளுக்கும் பதிலளிக்க நம்முடன் இணைதிருக்கிறார் அண்ணன் நிஜத்தடன் நிலவன் அவர்கள்.
சேயோன் :- ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் இராணுவத் தலையீடானது எத்தகைய மனித உரிமை மீறல்களை உள்ளடக்கியது? அவர்கள் செய்த படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்குமா?
நிலவன் :- ஈழம் என்பது பல்லாயிரமாண்டு கால சரித்திர உண்மை. அது 1940-களுக்கு பிறகு சிங்கள இனவாதிகளின் அடக்குமுறையால் வலுப்பெற்றது. தனித்தனி இராச்சியங்களாக இருந்துவந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் இலங்கையைவிட்டு 1948 இல் அகன்ற பின்னர், ஜனநாயகம் என்ற போர்வையில் ஆட்சியைத் தொடர்ந்து கைப்பற்றிவரும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகள் கட்டம் கட்டமாகத் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பை 1950 களில் இருந்து இன்றுவரை அரங்கேற்றி வருகின்றனர்.
ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறை என்பது அரசியல், கல்வி, பொருளாதாரம், இராணுவம் என்ற வடிவங்களில் காலங்காலமாய் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ராணுவ அடக்குமுறை நேரடியாகவே பாதிக்கிற என்பதை விடப் பலி எடுக்கிற அடக்குமுறை வடிவம் என்று சொன்னால் அது மிகையில்லை. தமது சொந்த நலன்களுக்காக பல்வேறு பிறசக்திகளும் தமிழின அழிப்பில் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளுக்கு உடந்தையாக இருந்துவந்துள்ளன. இதில் “அகிம்சை”, “ஜனநாயகம்” போன்ற வேடங்களைப் பூண்டிருக்கும் அயல்நாடான இந்தியாவின் பங்களிப்பு மிகையானது.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமுள்ள அரசியல் உறவுகள் பாரம்பரியமுள்ளவை அதே நேரத்தில் சிக்கல் நிறைந்தவை. இலங்கையில் இந்திய இராணுவம் இருதடவைகள் கால் பதித்துள்ளது. இருதடவைகளும் இந்திய இராணுவம் இலங்கை மண்ணில் இரத்தச் சுவடுகளையே விட்டுச் சென்றது. ஜேவிபி நடத்திய 1971ஆம் ஆண்டு ஏப்ரல் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வந்த இந்திய இராணுவத்தின் துணையுடன் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசு பத்தாயிரம் சிங்கள இளைஞர்களை வீதிகளிலும் களனி ஆற்றின் கரைகளிலும் கொன்றொழித்தார்கள்.
தமிழ் இன அழிப்பு வரலாற்றில் ஓர் அங்கமாக 1987 ஆம் ஆண்டு ஜூலை முதல் 1990 ஆம் ஆண்டு மார்ச் வரை “இந்திய அமைதிப்படை” / “Indian Peace Keeping Force” (IPKF) என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தால் ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள். இவற்றில் ஒருசில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பல சம்பவங்கள் வெளிவராமல் உள்ளன.
1987 ஆம் ஆண்டு அமைதிப்படை என்ற பெயரில் இலங்கை வந்த இந்திய ராணுவம் 10,000க்கு அதிகமாக அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றது600 க்கு அத்திமான தமிழ்ப் போராளிகளைக் கொன்றது, 800 க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். பல கோடி ரூபா பெறுமதியான தமிழர்களின் சொத்துகளைச் சேதமாக்கி தமிழ் இன அழிப்பினை மிகக் கச்சிதமாக நடாத்தினார்கள்.
இந்திய அரசால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் நினைவாகத் தமிழீழ விடுதலைப்புலிகளால் நினைவு தூபி தகரம் பிள்ளையார் கோவிலடியில் தொண்ணூறாம் ஆண்டளவில் நிறுவப்பட்டிருந்தது. இத்தூபி கடந்த 2002ம் ஆண்டில் செம்மையாக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் அந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது. படுகொலை கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவுத் தூபிகளும் தேச விடுதலைக்காக விதைகளாகிப் போன எம் மாவீரர்கள் விதைக்கப்பட இல்லங்களெல்லாம் அழிக்கப்பட்டு உள்ளது.
இந்திய இராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா.வில் மனித உரிமைக் குழுவில் கடும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஜெனிவாவில் நடந்த ஐ.நா.வின் மனித உரிமைக் குழுவில் பேசிய பல பிரதிநிதிகள் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டிக் கண்டித்தனர்.
சேயோன் :- தமிழர்களின் தமிழீழக் கோட்பாடு எப்போது முன்வைக்கப்பட்டது அதன் தொடர்ச்சி என்ன?
நிலவன் :- ஈழ நாட்டின் தேசிய இனமாகிய தமிழ் மக்கள் மீதும் நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பினை ஏற்படைத்திவரும் வரும் பௌத்த சிங்களப் பேரினவாத அரசு அதீதமான அழுத்தங்களைப் பல வடிவங்களில் பிரயோகித்திட அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் புரட்சி வெடித்தது. 1970 ஆம் ஆண்டு இருந்து, தமிழீழத் தனிநாட்டை அமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பல இயக்கங்கள் இருந்தன. பின்னர், பல இயக்கங்கள் அந்தக் கொள்கையில் இருந்த நழுவிக்கொள்ள, விடுதலைப் புலிகள் இயக்கம் தனித்து நின்று தலைமை தாங்கியது. 1976 வீட்டுக்கோட்டைத் தீர்மானம் , 1977 தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் விஞ்ஞாபனம் , திம்புக்கோட்பாடுகள் , தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைத் திட்ட வரைபு உள்ளது.
மக்கள் புரட்சி ஆய்தப் புரட்சியாகத் தமிழர்களுக்குரிய தன்னாட்சி , மரபுவழித் தாயகம் , தமிழ்த் தேசியம், இயக்க ஒழுக்கம் , சாதிபேதமற்ற சமூகம், சம பெண் உரிமைகள் , சமய சார்பின்மை, தனித்துவமான சமவுடமை உட்பட உரிமைகளையும், நீதிகளையும் பெற்றுக் கொள்வதது என எழுந்த புரட்சியாளர்களை இன்று வரையும் சர்வதேச சமூகம்கண்டு கொள்ளாமல் உள்ளது.1972 ஆம் ஆண்டு தனிநாடுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிய புதிய தமிழ் புலிகள் பின்னால் 1976 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள், எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய பரிமாணத்துடன் மரபுவழத் தமிழர் சேனையாகத் தமிழர் மரபுவழித் தாயகக் கோட்பாடு தமிழர்களின் சுதந்திர வாழ்விற்குத் தனித் தமிழீழம் ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உருவாகி தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில் தமிழர் மரபுவழித் தாயகக் கோட்பாட்டினை முன்னிறுத்தி வடக்கு-கிழக்கில் இணைந்த தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைத்திட உறுதியுடன் செயற்பட்டார்கள்.
1976 ஆம் ஆண்டு அரசியல் தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரகாரம்- தமிழ் மக்களின் தேசியத் தன்மையையும்,தாயகக் கோட்பாட்டினையும், தன்னாட்சி உரிமையையும் அங்கீகரித்து – ஏற்றுக்கொண்டு – 1977 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்பட்டு தமிழ் பேசும் மக்கள் ஊடாக அரசியல் தலைவர்கள் எடுத்த ஒரு தீர்மானம். தமிழீழம் தங்களது தேசியமாகத் தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்பட்டது
1985 ஆம் ஆண்டு – திம்புப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களும் தான் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை, இரத்தினச் சுருக்கமாகக் கூறும் திம்புக் கோட்பாடுகளாகும். இன்றுவரை,இலங்கைத் தமிழர் அரசியலில், தமிழ் மக்களின் அரசியல் மந்திரமாக ஒலித்துக்கொண்டிருக்கும் ‘தேசியம்’,’தாயகம்’,சுயநிர்யணம்’ என்பவற்றைத் தமிழர் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்துக்கும் உலகத்துக்கும் தெட்டத்தௌிவாகத் திம்புப் பிரகடனத்தின் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தமிழீழ மக்களின் சுதந்திர இயக்கம். தமிழரது சுயநிர்ணயப் போராட்டத்திற்கு உயிர் மூச்சாகவும் உந்து சக்தியாகவும். ஒரு தேச விடுதலை இயக்கம் என்ற ரீதியில், ஒரு அரசியல் சக்தியாகவும் அதேவேளை ஒரு வலுமிக்க போரியல் சக்தியாகவும் புலிகள் இயக்கம் விடுதலைப் போரை முன்னெடுத்தார்கள். ஒரு உறுதியான கட்டுப்பாடு மிக்க தலைமை, ஒரு தெளிவான நீதியான அரசியல் இலட்சியம், நீண்ட கால வளர்ச்சியில் முதிர்ச்சி பெற்ற போராட்ட வரலாற்று அனுபவம், பரந்துபட்ட பொதுசனத்தின் பலம் மிக்க ஆதரவு – இத்தனை பண்புகளையும் உடைய விடுதலை இயக்கம்.
தமிழர் தாயகத்தின் பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து அங்கு ஒரு நிழல் அரசாங்கத்தை நிர்வகித்துக் காட்டினார்கள் .1985, 1989, 1994, 2004,2006 ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போராடினார்கள். 2009 வைகாசி 17இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், ‘தேசியம்’, ‘தாயகம்’, ‘சுயநிர்யணம்’ எனச் சனநாயக அரசியல் ரீதியாக எமது தாயக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது. தமிழர்களது சமூக, பொருளாதார, பண்பாட்டுப் பணிகளை வெளிப்படைத் தன்மையோடு நேர்த்தியுடன் சனநாயக வழிமுறையில் முன்னெடுத்துச் சென்று தமிழ் இனத்தின் விடுதலை இலக்காகிய சுதந்திர தமிழீழ தேசத்தை அமைத்தல் எனத் தமிழ் மக்களிடையே தேசிய உணர்வை ஒன்றுபட்ட மக்களாக, ஒரே தேசமாக எழுச்சி கொள்ளச் செய்தது.
சேயோன் :- தமிழீழம் தொடர்பில் தமிழகத் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்று நினைக்கின்றீர்கள் ?
நிலவன் :- தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது ஈழத்து உறவுகள் மீதான அக்கறையும், அவர்கள் படும் துயர் தொடர்பான கவலையும். தமிழகத்தில் ஆட்சியிலிருந்த முதலமைச்சர், அமரர் எம் ஜி ராமச்சந்திரனின் ஈழத்தமிழர் மீதான உண்மையான கரிசனையும், அதன்பால் மத்திய அரசின்மீது அன்று அவர் செலுத்திய அழுத்தமும் தமிழக தமிழீழ தமிழ் மக்களின் பலத்தை நிலைநாட்டியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெடிய வரலாற்றில், வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது. தமிழ்த் தேசியம் எழுச்சி கொண்டு, வளர்ச்சி பெற்று, சுயநிர்ணயத்திற்கான ஆயுதப் போராட்டமாக வடிவம் எடுத்த தமிழ் மக்களின் புரட்சிகரமான அரசியற் போராட்ட வரலாற்றைக், கொண்டே தாயக மண்ணின் விடுதலைக்காக வரலாறு காணாத ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்தது. அதேவேளை, எமது விடுதலை இயக்கம் சமாதான அரங்கிலும் பங்குகொண்டு, நீதியான, நியாயமான அரசியல் தீர்வு காண முயன்றது.
தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை, அதன் ஆழத்திலும் அகலத்திலும் ஒரு தேசம் ஓர் இயக்கம் ஒரே நோக்கம் – அது ஈழ விடுதலை, என்பது ஐயந்திரிபற நிறுவப்பட்ட கருத்து. ஆகவே, ‘ஒன்றிணைவோம்’ என்ற வேண்டுகோள் ஈழத் தமிழர்களுக்குத் தேவைப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரைத் தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அனைவரும், தமிழீழ ஆதரவுப் போராட்டங்களில் எந்தக் காலத்திலும் ஒன்றுபட்டுத்தான் நிற்கிறார்கள்.
உலக வல்லரசு கனவில் இருக்கும் இந்திய ஒன்றியம் அதன் முதல் படியாக வட்டார வல்லரசு என்னும் நிலையில் தனக்கு எந்தவிதமான இடையூறும் வந்து விடாதபடி பாதுகாக்க எண்ணுகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் அடங்கலாக, பல இந்தியர்கள் நினைப்பதுபோல் இந்தியா இலங்கையில் தலையீடு செய்வதற்குத் தமிழர்கள்மேல் இலங்கை புரிந்த கொடுமைகள் ஒருபோதுமே காரணமாக இருந்ததில்லை, ஈழத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்கும்படி இந்தியா ஒருபோதுமே உண்மையாக இலங்கையை அரசை அழுத்தியதில்லை. ஆனால், இலங்கையில் தனது நலன்களுக்காகவே தமிழரின் அவலங்களைக் காரணமாகக் காட்டி இந்தியா உள்நுழைந்தது என்பதே உண்மை. பல இந்தியர்கள் பார்க்கத்தவறும் விடயம்.
தமிழர்கள் மீது அப்படி ஒன்றும் பெரிய வன்முறையைச் சிங்கள காடையர்கள் நிகழ்த்திவிட முடியாது கூப்பிடு தொலைவில் 6 கோடி மானமுள்ள தமிழர்கள் இருக்கிறார்கள்”என்ற ஈழத் தந்தை செல்வா அவர்களின் கூற்றைப் பொய்யாக்கி 2009 இல் நிகழ்ந்த மாபெரும் தமிழ் இனப்படுகொலையை அழிப்பை வேடிக்கை பார்த்த கையாலாகாத தமிழர்களாய் வேடிக்கை பார்த்தார்கள். தமிழக அரசு, இந்திய அரசு, இலங்கை அரசுக்கு இப்படி உதவியது என்றால், அதைத் தட்டிக் கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், ஈழச் சிக்கலில் இந்திய அரசின் நிலைப்பாடு என் னவோ, அதேதான் தனது நிலைப் பாடும் என்றார் அன்றைய தமிழக அரசை ஆண்ட தி.மு.க. தலைவர் முத்துவேல் கருணாநிதி. அதேவேளை, தமிழக மக்கள் மத்தியில் தன் செல்வாக்கு சரிந்து விடக் கூடாது எனத், தனக்கு தானே வைத்துக் கொண்ட தமிழினத் தலைவர் பட்டத்திற்கு எந்த பங்கமும் நேர்ந்து விடக் கூடாது என்று, தமிழீழ மக்கள் பால் அக்கறையோடு இருப்பதாகவும், அவர்களது பாதுகாப்பிற்கும், நலன் களுக்கும் முயற்சி மேற்கொள்வ தாகவும் ஒருபுறம் பராக்கு காட்டிக் கொண்டே தில்லி அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணைபோபி பல கபட நாடகங்களையும் நிகழ்த்திக் காட்டினார்.
உலக நாடுகள் இணைந்து நடத்திய போரில் ஒரு மாநில முதல்வர் ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மைதான் ஆனால் குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான எழுச்சியை மிகுந்த வன்மத்துடன் திமுகவின் தடுத்தது ஏன்?.என்பது பற்றி தமிழக உறவுகள் சிந்திக்க மறந்தார்கள் என்ற வருத்தம் உள்ளது. இந்திய நலன்கள் என்கிற போர்வையில் ஈழத் தமிழர்களை இன அழிப்பு செய்து தமிழகத்தை நரவேட்டையாடும் இந்திய ஒன்றிய அரசு இன்று செய்ததெல்லாம், இலங்கை தன் கண்முன்னையே சீனாவிடம் அடைக்கலமாவதையும், தனது தென்கோடியில் சீனாவின் அரண்கள் அமைக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு இந்தியாவினால் எதுவுமே செய்யமுடியாமல் இருக்க முடிகிறது .
தமிழர்களை அழித்த இந்தியா தன்மீது எந்தவித அழுத்தத்தினையும் வழங்கமுடியாது என்பதை இலங்கை நன்கே அறிந்து வைத்திருக்கிறது. தனது இன அழிப்புக் குற்றங்கள் விசாரிக்கப்படுமிடத்து, இந்தியா இலங்கையில் நேரடியாகச் செய்த தமிழின இன அழிப்பும் மறைமுகமாக இன அழிப்புக்கு உதவிய விடயங்களும் விசாரிக்கப்படவேண்டும் என்று இலங்கை அச்சுறுத்தும் அது இந்தியாவிற்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் ஆகவே, இந்தியா இதுபற்றிப் பேசப்போவதில்லை. அப்படி இந்தியா அழுத்தினாலும் இலங்கை கேட்கப்போவதில்லை. என்பது வெளிப்படையாகத் தெரியும் உண்மை. தமிழர்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி. தற்போதைய எமது கடமை எது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.
சேயோன் :- இந்தியாவின் தலையீடு இலங்கை அரசும் இந்தியாவும் செய்து கொண்ட ஒப்பந்தமானது தமிழர்கள் மீதான பரிவு என்று நம்புகிறீர்களா?
நிலவன் :- ஈழத்தமிழர் விடுதலைப் போர், 30 ஆண்டுகள் அறவழியில் அதுவும் இந்தியாவின் காந்தி காட்டிய சத்தியாகிரக வழியிலேயே நடந்தது. மிகப் பெரிய சனநாயக பூமி என்று தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்தியாவும் கண்டு கொள்ளவில்லை. தமிழர் நலனைக் கருத்தில் கொண்டு காந்தீய வழிப் போராட்டத்தை அங்கீகரித்து, அப்போதே பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தித் தீர்வு காணும் முன்னெடுப்பை இந்தியா செய்திருக்க முடியும். ஆனால் இந்தியா செய்து கொள்ள விரும்பவில்லை அதற்குப் பல காரணங்கள் கொண்டிருந்தாலும் தமிழர்களுக்கு என்று தனிநாடு தமிழ்த் தேசியம் எனத் தனித்துவம் கிடைத்து தனதிருப்பிற்கு ஆபத்தாகிவிடும் என்ற அச்சத்தில் செய்யத் தவறிவிட்டது .
1972 ஆம் ஆண்டு அதன் பிறகும் ஆயுதம் ஏந்தி சிறு சிறு அளவில் போராட்டத்தைத் தொடங்கிய பின்னர்தான், 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி தொடக்கம், சுமார் ஒரு வாரக் காலமாக இலங்கையில் பல பகுதிகளில், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்கள் இலங்கை அரசு நடத்தியது இது 1956 ஆம் ஆண்டு முதல் தமிழின அழிப்பில் நடைபெற்றுவந்த இனப்படுகொலையின் ஆரம்பத்தினை வீச்சாகிய பின்தான் இந்தியா தலையிடத் தொடங்கியது. இந்தத் தலையீடும் இந்தியாவின் சுயநலன் அடிப்படையிலேயே அமைந்தது.
ஜனாதிபதி ஜெயவர்தன, அன்றைய காலத்தில் அமெரிக்க, பாகிஸ்தான் சார்பான கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தார். அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டிருந்த சோவியத் ஒன்றியத்துடன் அப்போது, இந்தியாவும் இணைந்து செயற்பட்டு வந்தது. இந்த நிலையில்,ஜெயவர்தனவின் கொள்கை, பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எண்ணிய இந்தியா, ஜெயவர்தனவுக்கு தகுந்த பாடக் கற்பித்ததினை ஏற்படுத்தக் காத்திருந்து .
இந்திய அரசாங்கம் 1985 ஆம் ஆண்டு, பூட்டான் தலைநகர் திம்புவில் ஏற்பாடு செய்த தீம்புப் பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இருந்தார். இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தின் மீது செலுத்திய நெருக்குவாரத்தின் காரணமாக, 1986 ஆம் ஆண்டு அரசாங்கம், அரசியல் கட்சி மாநாடு என்ற பெயரில் சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டி இலங்கை அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் என்ற எண்ணக்கருவைக் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டது.
“ஒப்பிரேசன் லிபரேசன்” எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது.
வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் ‘லிபரேசன் ஒப்பிரேசன்” இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியைச் சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத்தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீரர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்ப்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கரும்புலி கப்டன் மல்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இத் தாக்குதல் மூலம் கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமானது. வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாகச் செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.
கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல்த் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது சனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.
இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சனையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். 19-07-1987 ஆம் ஆண்டு அன்று கொழும்பில் நடந்த ஜாதிகசேவைய சங்கமயவின் 20 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜே.ஆர்.ஜயவர்த்தன. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள்ளேதான் தீர்வு என்று கூறியிருந்தார்.
1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் எனப் பரவலாக அழைக்கப்படாது. ஜே.ஆரை வழிக்குக் கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டார். உலக வல்லரசுகளிடையே பனிப்போர் மறைந்துள்ள நிலையில், இலங்கை – இந்திய ஒப்பந்தம் கொண்டிருந்தது
இலங்கை – இந்திய ஒப்பந்தமானது, பல தமிழ்த் தலைவர்கள் அன்று நினைத்ததைப் போல் இந்தியா, இலங்கைத் தமிழ் மக்கள் மீது கொண்ட பரிவின் காரணமாக, மேற்கொண்ட ஒரு நடவடிக்கையல்ல. அது, இந்தியா, தமது நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கையாகும். நாம் இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு பற்றி அறிந்து கொள்ள விடுதலைப் புலிகள் வெளியீட்டக கொண்டுவரப்பட்டுள்ள “இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு என்ற நூலைப் படிக்கவேண்டும் .
சேயோன் :- இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தமிழீழ தேசியத் தலைவர் நிராகரிக்கக் காரணம் என்ன என்று விளக்க முடியுமா?
நிலவன் :- இந்திய இலங்கை ஒப்பந்தம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். அந்த ஒப்பந்தம் பற்றி தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காகப் புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.ஆனால் தமிழீழத்தைக் கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் சம்மதிக்கப் போவதில்லை என்று தேசியத் தலைவர் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளார் .
இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு சர்வதேச உடன்பாடு என்ற அந்தஸ்தைக் கொண்டிருப்பதால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சர்வதேச கொள்கைகளையும் பூகோள தேசிய நலன்களையும் பிரதிபலிக்கும் அம்சங்கள் அனைத்தையும் நாம் ஆதரிக்கிறோம். அதே சமயம் இந்த ஒப்பந்தம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு அளிப்பதாகவோ அன்றி, அவர்களது நலன்களைப் பேணுவதாகவோ அமையவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். ஈழத்தமிழர் நலன்கள் பேணப்படும் வகையில் இந்திய அரசு நடவடிக்கைகளை எடுக்குமாயின் இந்த ஒப்பந்த அமுலுக்கு நாம் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம் எனவும் ஈழத்தமிழரின் துயரைத் துடைக்க வேண்டிய தார்மீகக் கடைப்பாடு இந்திய அரசுக்கு உண்டு. இராணுவப் பலாத்காரப் பாதையைக் கைவிட்டு, தர்மத்தின் பாதையில் சென்று இந்த தார்மீகக் கடைமையைப் பாரதம் பூர்த்தி செய்து வைக்கும் என நாம் கருதுகிறோம் என இந்தியா இலங்கை ஒப்பந்தம்: விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு என்ற நூல் மிக விரிவாகவும் தெளிவாகவும் தமிழ் மக்களின் மனங்களில் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார்கள். அதனையே தேசியத் தலைவர் அவர்களின் நிலைப்பாடு என எண்ணுகின்றேன்.
சேயோன் :- இந்திய–இலங்கை ஒப்பந்தத்தைத் திணிக்க இந்திய அரசு தமிழீழ தேசியத் தலைவரின் மீது ஏவிய அடக்குமுறை, 13ஆவது அரசியல் திருத்தம் பற்றி விவரிக்க முடியுமா?
நிலவன் :- இந்தியா ஒன்றிய அரசு நயவஞ்சகமாகத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை, பொய்யுரைத்துத் தில்லிக்கு அழைத்து வந்து,அசோகா ஓட்டலில் சிறை வைத்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை, காங்கிரஸ் அரசு திணித்தபோது, ‘இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம்; இந்தியாவை எதிர்க்கவிரும்பவில்லை’ என்று தேசியத் தலைவர் தெரிவித்த நிலையில், 1987 ஜூலை 29 இல்,கொழும்பில் ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
1978ம் ஆண்டு ஜே ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய அரசியல் யாப்பே இலங்கையில் இப்போதும் நடைமுறையில் அதிகாரப் பூர்வமாக இருக்கும் அரசியல்யாப்பாகும். அது பல திருத்தங்களைப் பின்னர் நிறைவேற்றியது. 1987ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய – இலங்கை சமாதான உடன்பாட்டைத் தொடர்ந்து 13வது தடவையாக அரசியல்யாப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதி இந்தியா அரசியல் ரீதியாக வழங்கிய இலங்கை-இந்திய ஒப்பந்தமும், அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட பதின்மூன்றாவது யாப்புத் திருத்தமும், 1987 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க சட்ட மூலத்தினால் உருவாக்கப்பட்ட அதன் மூலமே இலங்கையில் மாகாண சபைகள் என்னும் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதன் பிரகாரமே மாகாண சபைகளுக்கான அதிகாரப்பரவலாக்கல் என்னென்ன விடயங்களில் எந்தெந்த அளவில் இருக்கும் என்பவை போன்ற விடயங்களும் அரசியல் யாப்பு ரீதியில் சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டன.
1988 ஆம் அண்டு 13ஆவது அரசியல் திருத்தச் சாசனத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் அரசியல் சாசன ரீதியாக ஏற்பட்ட முதலாவது ஆட்சி அதிகாரங்களைப் பொறுத்த வரையிலான ஒரு திருத்தமாகும். அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பயனற்ற ஒரு திருத்தச் சட்டம். அது தமிழ் மக்களின் விருப்பமின்றி இந்தியாவால் வலிந்து தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது. அது இலங்கை அரசாங்கம் மீதும் வலிந்து திணிக்கப்பட்ட ஒரு சட்டமாகவே காணப்படுகின்றது. ஆகவே இந்தியாவின் வற்புறுத்தலின் பேரில் தான் அது கொண்டு வரப்பட்டது.
30 வருட காலம் நாம் எதற்காக யுத்தம் செய்தோம். விடுதலைப் புலிகள் அமைப்பு இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிராகரித்து இருந்தார்கள். காரணம் தமிழ் மக்களுக்கான தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எதுவே கிடையாது. இத் திருத்தச் சட்டத்தை இன நெருக்கடிக்கான ஒரு தீர்வாகத் தமிழர்கள் ஒருபோதுமே ஏற்றுக்கொண்ட தில்லை.
இணைந்த வடக்கு – கிழக்கைச் சட்ட ரீதியாகவே பிரித்துள்ளார்கள். அதனை ஜேவிபி செய்திருந்தது. இப்படிப் பல பல விடயங்கள் இருக்கின்றது. பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் யுத்தம் மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான காலம் என 40 வருடத்திற்கு மேல் ஆகியும் எதுவுமே நடைமுறைக்கு வரவில்லை. தமிழ் மக்களுக்கான எந்த விடயமும் இந்த 13வது திருத்தச் சட்டத்தால் கிடைக்கவில்லை. நடைமுறையில் இல்லாத ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு திருப்பி திருப்பி சிலர் கோருகின்றார்கள். தமிழ் மக்களை அழிக்கவேண்டும் என்றால் சர்வதேச சமூகமும் ஒத்துழைக்கவேண்டும். அது 2006 முதல் 2009 வரையில் மிக நேர்த்தியாக நடைபெற்றது . விடுதலைப் புலிகளை ஆயுத மௌனிப்புக்கு அதன் பின் இந்தியா தமிழ் இன அழிப்பில் வெற்றியைப் பெற்றதாகக் கூறிக் கொண்டு தன்னைத் தானே அழிக்கும் அச்சுறுத்தி அழிக்கும் செயலைக் கொண்டுள்ளது.
தமிழர் இனப் பிரச்சினைக்கான தீர்வாக 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் ஒரு தீர்வைத் தருவது போன்ற மாய வேலையை, இந்திய அரசு செய்து வருகிறது இந்தியா தனது அரசியல் நலனுக்காக, இராணுவ இயந்திரத்திற்காக, பொருளாதாரத்திற்காக, தனது கேந்திர முக்கியத்துவத்திற்காக 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கிறது. இந்தியாவிற்குப் பின்னால் வால் பிடிக்கும் தமிழ் தலைவர்களும் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். நடந்து கொண்டிருப்பது இந்தியாவின் கபட நாடகமே தனி நாடு கேட்ட நாங்கள் 13 வது திருத்தச் சட்டத்தைக் கோரி அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தியா தனது இராஜதந்திர வெற்று தமிழ் இனத்தின் இருப்பிற்கும் தமிழ்த் தேசியத்தினையும் தமிழர்களையும் பகடைக்காயகாக பயன்படுத்துன்கிறது.
உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவவும், காமன்வெல்த் நாடுகளில் சிங்கள அரசுமீதான குற்றங்களை மறைக்கவும், முன்னோட்ட ஏமாற்று வேலையாக, 13 ஆம் சட்டத்திருத்தத்தைப் பற்றி, ஒரு கருத்தாடலை, விவாதத்தை முன்வைக்கும் இந்திய ஒன்றிய மோசடி வேலையில்,இந்திய-இலங்கை அரசுகள் ஈடுபட்டு உள்ளன. வடக்கு கிழக்கிலுள்ள பொதுசன அமைப்புக்களையும், ஒற்றயாட்சியை நிராகரிக்கும் அரசியல் தரப்புக்களையும் இணைத்து – ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான 13ஆம் திருத்தத்தையும் முற்றாக நிராகரித்து – இனப்பிரச்சினைக்குத் தீர்வாக,வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையை யும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்த சமஷ்டி’ அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தியும் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்குரிய நீதியை வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தியும், அரசியல் கைதிகளினுடைய விடுதலையை வேண்டியும் இலங்கை இந்திய அரசுகளின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடி வருகின்றார்கள்.
சேயோன் :- இந்திய–இலங்கை ஒப்பந்தத்தைக் கைச்சாத்தின் மூலமாக இந்தியா எதிர்பார்த்த பூகோள அரசியல் இராஜ தந்திர இலக்கினை அடைந்துவிட்டதாக எண்ணுகிறீர்களா?
நிலவன் :- இந்திய அரசு, இலங்கை அரசுடன் இணைந்து தான் நடத்திய தமிழினப் படுகொலையை மறைக்க, ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய ஒரு தியாக இயக்கத்தைச் சட்டத்திற்கு எதிரான பயங்கரவாத இயக்கம் என்று கூறி தடை செய்து, தனது குற்ற முகத்தை மூடிக்கொள்ளும் முயற்சி ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தைப் பலவீனப்படுத்த இந்தியா, அடுத்த கட்டமாக இலங்கையைத் தனது பிடிக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் தனது திட்டத்துக்கு இந்த இடைவெளியை ஒரு கருவியாக இந்தியா பயன்படுத்த முயற்சிக்கிறது.
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுலைப்புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தபோது உதவிய நாடுகளான நோர்வே, ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளுக்கு விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கான ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் கொண்ட தனிநாட்டுக் கோரிக்கையினையே முன்வைத்தார்கள்.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்தபோது, சீனாவுக்குத்தான் இலங்கை ஆதரவு அளித்தது. வங்கதேச விடுதலைப்போரின் போது, கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள இந்தியப் படைகளைத் தாக்க வந்த பாகிஸ்தான் விமானங்கள் கொழும்பில் வந்திறங்கி எரிபொருள் போட்டுக் கொள்ள இலங்கை அனுமதி அளித்தது. இப்படி ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்ட இலங்கையுடன் இந்தியா தொடர்ந்து நட்பு பாராட்டுவதும், நட்பு வேண்டும் தமிழர்களைப் புறக்கணிப்பதும் பகைமை பாராட்டுவதும் ஏன்? இந்தியா இனப்பாகுபாடு காட்டி தமிழர்களை ஒதுக்குகிறது தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி வருகிறது
சீனாவில் இருந்து இலங்கை விலகிப் போவதற்கான எந்த வழியும் இல்லை. சீனாவினுடைய முற்று முழுதான ஆட்சி அதிகாரத்திற்குக் கீழ் இலங்கை வரும். சீனாவை விட்டு விலகச் சிங்கள மக்கள் தயாராக இல்லை. யார் தலைகீழாக நின்றாலும் இதனைத் தடுக்க முடியாது. இலங்கைக்கு எதிராகச் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட்டால் இந்தியாவின் சட்ட விரோத போர் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என அச்சித்தில் . இந்தியாவின் பூகோள நலனும், பாதுகாப்பும் உறுதியாக வேண்டுமெனில் இலங்கையில் தமிழர்க்கென்று ஒரு நாடு பிறந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதையும், தெற்காசியப் பகுதியில் மாபெரும் இராஜதந்திர தோல்வியைச் சந்தித்துள்ள இந்திய ஒன்றிய அரசு , தமிழீழ விடுதலையைத் தடுத்து நிறுத்திட முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சேயோன் :- தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் – விடுதலை வேள்வியில் அகிம்சை தேசம் இந்தியாவின் பங்கு என்ன?
நிலவன் :- உலக வரலாற்றில் அகிம்சைக்குப் பெயர் போன நாடாக விளங்கும் இந்திய தேசம் காந்தியடிகள் மூலமாக உலகிற்கு அறிமுகப்படுத்திய அறப்போராட்டத்தின் வாயிலாகவே வெட்கித் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டது என்றால் அது எமது ஈழதேசத்தின் மாபெரும் அறப் புரட்சியாளன் தியாகி திலீபனது தியாகத்தின் உச்சத்தையே சாரும்.
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் அகிம்சைப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்கக் கூவி, தன் வாழ்வைத் தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 36 ஆண்டுகள்.
- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
- புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
- இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புணர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
- வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
- இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள் பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ காவல் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
அகிம்சை நாடுதானே இந்தியா! அகிம்சை நாட்டிலேயே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு கர்நாடகம், பஞ்சாப், வங்காளம் என்று மொழிகளின் பெயரால் மாநிலங்கள் இருந்த போதும், தமிழ் நாட்டிற்குத் தமிழ் நாடு என்று பெயர் வைப்பதற்கே உண்ணாவிரதமிருந்து உயிர் விட்ட சங்கரலிங்கனார் கதையை வரலாற்றைக் கேட்ட பிறகும் அகிம்சை நாட்டிலேயே அகிம்சை வழி போராட்டங்களின் கதி இதுதான் என்றபோதும் அகிம்சை வழியில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு 1987ல் இலங்கை பேரினவாத இனவெறியாகட்டும் இந்தியாவாகட்டும் அகிம்சைக்கும் அகிம்சை போராட்டங்களுக்கும் எதிராகத்தான் நடந்திருக்கின்றன என்பதை தன் உடலால் உயிரால் நிறுபித்து காட்டியவர் தீயாகச் செம்மல் ‘திலீபன்’
இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தாய்க் குலம் எழுச்சி கொண்டு போராடப் புறப்பட்டபோது தென் தமிழீழத்தில் உள்ள மட்டக்களப்பில் அன்னை பூபதி அம்மா தன் வயிற்றினில் போர் தொடுத்துச் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். போரை நிறுத்து, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்து என்று இந்திய அரசுக்குக் கூறி உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால் காந்தீயம் பற்றிப் புகழ்ந்துரை க்கும் இந்திய தேசத்துப் பிரதமர் அன்னை பூபதியின் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை எள்ளிநகையாடினார் அன்னை பூபதி 19-04-1988 தியாகச் சாவு அடைந்தார்.
மேலும், தியாக தீபம் திலீபனின் , அன்னை பூபதி அம்மா அகியோரின் அகிம்சைப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இந்திய தேசம் அவர்களின் வீர வரலாற்றுச் சாவுக்குக் காரணமாக இருந்தமை,அது மட்டுமல்லாமல் ஊடகங்கள் மீது கட்டுப்பாடு போட்டு அந்த செய்திகள் வெளியாவதை இந்திய இராணுவத்தினர் தடுத்தவர்கள் அதை தொடர்ந்து இலங்கை இராணுதின் உச்சக்கட்ட ஊடக அடக்குமுறையை ஒருவகை அகிம்சைப் போராட்டத்தின் நியாயத்தை மக்களுக்குப் புலப்படுத்தாது இந்திய அமைதிப்படை ஆக்கிரமிப்பு படையாக மாறியது.
இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்ட வரலாற்று மிகக் கொந்தளிப்பானது தளபதி கிட்டுவை தமிழ்நாட்டில் சிறை வைத்தது. விடுதலைப் புலிகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி இப்படிப் பல விடயங்களில் ஒரு தலைப்பட்சமாக நடந்தது. இறுதியாகத் தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 தளபதிகளைப் பிடித்து இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் கொள்கையின்படி சயனைட் உட்கொண்டு வீரச்சாவு எய்தினர். இதனால், புலிகள் கோபம் கொண்டனர். இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து. இனத்தையும் நிலத்தையும் காக்கக் காவல் தெய்வங்களாக உருவெடுத்தார்கள்.
சேயோன் :- இந்திய இராணுவம் புலிகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை எப்போது தொடங்கியது? அவர்களால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொது மக்கள் எத்தனை?
நிலவன் :- விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி. ஆரம்பித்து ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்குப் பாரத தேசம் தேர்ந்தெடுத்து விடுதலைப் புலிகளை அழித்தொழிப்போம் என்ற நடவடிக்கைகளின் இறுதி திட்டங்களை இந்தியப் படைகளின் தென் பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங் நெறிப்படுத்தினார் பலாலி விமானப்படைத் தளத்தில், இந்தியப்படை உயரதிகாரிகள் மத்தியில் இந்தியப்படைகள் யாழ் நடவடிக்கைகளுக்கான பொறுப்புக்கள், இந்திய இராணுவத்தின் 54வது டிவிஷன் படையணிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
கள நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவத்தின் 18வது காலாட் படைப்பிரிவு. 41வது காலாட் படைப்பிரிவு. 72வது காலாட் படைப்பிரிவு. 91வது காலாட் படைப்பிரிவு.115வது காலாட் படைப்பிரிவு. 65வது கவச வாகனப் பிரிவு. 831வது இலகு மோட்டார் படைப்பிரிவு. 25வது படைப்பிரிவு, 10வது பரா கொமாண்டோ படைப்பிரிவுகள் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் மூலம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் சாவடைந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றது இந்திய இராணுவம்.
இவற்றிற்கு மேலதிகமாக, 13வது சீக்கிய கொமாண்டோ அணியினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். குவிக்கப்பட்டிருந்த இந்திய ஜவான்கள் முன்னிலையில் தமது தாக்குதல் திட்டத்தை விபரித்த திபீந்தர் சிங், இரண்டு நாட்களுக்குள் இந்தியப் படை தமது பிரதான நோக்கத்தை நிறைவு செய்துவிட வேண்டும் என்று தெரிவித்தார். அங்கு திரண்டிருந்த இந்தியப்படை காடையர்களும், புலிகளுடனான தமது யுத்தம் இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்துவிடும் என்று உறுதியாகவே நம்பினார்கள். ஜெய்ஹிந் என்று வெற்றிக் கோஷமிட்டார்கள். அவர்களின் கோஷம் வானை எட்டும்படியாக இருந்தாக வாழும் சாட்சிகள் கூறுகின்றார்கள்.
1987 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான மிகக்குறுகிய காலத்தில் இந்திய இராணுவம் மேற்கொண்ட படுகொலைகளும், மனிதவுரிமை மீறல்களும் எம்மால் மறக்கமுடியாதவை. எம்மில் குறைந்தது 15,000 அப்பாவிகளைக் கொன்றும், ஆயிரக்கணக்கானவர்களைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள். பெண்களின் பிறப்புறுப்பில் கைக்குண்டை வெடிக்கவைத்துச் சிதைத்ததும் எம்மால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவை. இதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
சேயோன் :- உலகத்தின் இரண்டாவது பெரிய இராணுவம். மற்ற நாட்டு இராணுவத்தினரை விடக் கண்ணியத்துக்குப் பெயர் போனவர்கள் இந்திய இராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்த அமைதிப்படையா… அழிவுப்படையா?
நிலவன் :- அமைதிப்படையா…. ? இந்திய இராணுவம் அமைதியானதா என்று கேட்டால், இந்தியாவின் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய கொடூரம் நிறைந்த அமைதிப்படை ஆக்கிரமிப்பு படையாக மாறியது, அது அமைதிப் படைக்குரிய நடுநிலைமையைப் பேணவில்லை. மாறாக இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு – தமிழ் மக்களுக்கு எதிராக நீட்டிய துப்பாக்கியை எடுத்து விட்டு தங்கள் துப்பாக்கியை வைத்தார்கள். இதுதான் உண்மை நிலைமை.
இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஊரடங்குச் சட்டங்களை அமுல்ப்படுத்தி நாட்கணக்கில் மக்களை வஞ்சித்தனர். யாழ்ப்பாணம் நோக்கிய படைநகர்வுக்காக ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினர். அவசரத்திற்காக எவரும் வெளியே போக முடியாது: மீறிச் செல்வதை இராணுவத்தினர் கண்டால் மரணம்தான் என்ற நிலையே நீடித்தது.
தமிழ் மக்கள் மீது வன்முறைகளையும் அழிவுகளையும் கட்டவிழ்த்து விட்டனர். இந்திய இராணுவம் நிலைகொண்ட காலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். யாழ். வைத்தியசாலை படுகொலை, வல்வெட்டித்துறை படுகொலை, வாதரவத்தைப் படுகொலை, கொக்குவில் – பிரம்படி படுகொலை என இவர்களின் படுகொலைப் பட்டியல் நீளமானது
படுகொலைகள் வடக்கில் நடந்த மிகப் பெரிய படுகொலைகள் மட்டுமே) பல ஆயிரம் பேர் சித்ரவதைகளைச் சந்தித்தனர். 21.11.1987 அன்று இந்திய இராணுவம் 48 மணி நேரப் போர் நிறுத்தத்தை அறிவித்தது. அந்த 48 மணி நேரத்தில் திருகோணமலையில் 7 அப்பாவித் தமிழர்களை இந்திய இராணுவம் படுகொலை செய்தது .
தமிழர்களின் பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குதல், தங்க நகைகளைச் சூறையாடுதல், ஆண்கள் மீது சித்ரவதைகளைக் கட்டவிழ்த்து விடுதல் எனச் சகிக்கமுடியாத பல காரியங்களில் இந்திய இராணுவம் இறங்கியது. போரில்லாத பகுதி’ என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலும் படுகொலைகள் செய்யலாம் . ‘போர் நிறுத்தம்’ செய்யப்பட்ட காலத்திலும் மக்களைப் படுகொலை செய்யலாம் , நிராயுத பாணிகளாக சரணடைபவர்களையும் சித்திரவதை செய்து படுகொலை செய்யலாம் , பாலியில் வன்கொடுமைகள் செய்யலாம் என்று இலங்கை இராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய இராணுவம் தான்.
இந்திய இராணுவம் சர்வதேச மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச சட்டவியலாளர்கள் குழு போன்ற அமைப்புகள் தமிழ் ஈழப் பகுதிக்குள் நுழைவதற்கு ‘இந்திய அமைதிப் படை’ அனுமதி மறுத்தது. இந்தியா காட்டிய வழியில் தான் நாங்கம் ஈழப் போரில் இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் தகவல் பரிமாற்ற ஊள்ளூர் சர்வதேச ஊடகங்களுக்கும் அனுமதியை மறுத்து நடத்திய இன அழிப்பு போரில் 146, 679 பேருக்கு என்ன நடந்த என்று தெரியாமல் போயுள்ளது. நான் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் இந்திய இராணுவம் செய்த கொடுமைகளை கசப்பினை, வெறுப்பினை வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. நான் என் வாழ்நாளில் மீட்டிப்பார்க்க விரும்பாத நாட்கள் அவை. என் போன்ற பலரது வாழ்வை மீட்டினாலும், விட்டாலும் அதன் வலி மட்டும் இன்றும் என் மனதில் ரணத்தினை உருவாக்கி இருக்கிறது.
சேயோன் :- இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மீது தமிழீழ மக்கள் நம்பிக்கை இழக்கக் காரணம் என்ன?
நிலவன் :- இந்திய-இலங்கை உடன்படிக்கை கையெழுத்தாகி தமிழீழ மக்களிடம் இந்த உடன்படிக்கை குறித்து நம்பிக்கை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எம்மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் இந்திய அதிகாரிகளின் போக்கு அமைந்தது. நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்த எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.
1-அவசரகால சட்டம் நீக்கப்படவில்லை
2-தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை
3-அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் தடுக்கப்படவில்லை.
4-சிங்கள ஊர்காவல்படையியிடமிருந்து ஆயுதங்கள் மீளப்பெறவில்லை.
5-சொந்த இடங்களில் தமிழர்கள் குடியேற்றப்பட இராணுவம் அனுமதிக்காது விரட்டியது.
6-இடைக்கால அரசு அமைவதற்குமுன் தமிழர் பகுதிகளில் சிங்களக் காவல் நிலையங்களைத் திறக்க முயற்சிகள் நடைபெற்றது.
7-சமூகவிரோத இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு இந்திய அதிகாரிகள் ஊக்கமளித்தனர்.
8-தமிழர் பகுதிகளில் உள்ள சிங்கள இராணுவப்படை முகாம்கள் அகற்றப்படவில்லை.
9-இந்திய வானொலியும், தொலைக்காட்சியும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களைத் தொடர்ந்து மேற்கொண்டது. இவற்றின் விளைவாக இயக்கத்திற்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்க ஜெயவர்த்தனா மறுத்தபொழுது அதிலும் இந்திய அதிகாரிகள் தலையிடவில்லை.மாறாக விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதிலும், சமூக விரோத இயக்கங்களை வளர்த்துவிடுவதிலும் இந்திய அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தினார்கள்.
இந்திய-இலங்கை உடன்படிக்கை கையெழுத்தாகி அதனைத்தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கையில் அடியெடுத்து வைத்தபொழுது எம்மக்கள் ஆராத்தியெடுத்து, திலகமிட்டு, மாலைசூட்டி, ஆரவாரத்துடனும், அளவில்லாத மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்றார்கள்.சிங்களப் பேரினவாதத்தின் பிடியிலிருந்து தங்களைக் காக்கவந்திருக்கும் இரட்சகர்களாக இந்திய அமைதிப்படையை எம்மக்கள் கருதினார்கள்.
இந்தியாமீதும், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீதும் எம்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும்,மரியாதையும் இமயம்போல் உயர்ந்து நின்றது. ஆனால் ஒன்றரைமாத காலமாவதற்குள் அந்த நம்பிக்கையும், மரியாதையும் அதளபாதாளத்திற்குச் சரிந்துவிட்டது. எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலத்திலேயே ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கை உடைந்து நொருங்கத் தொடங்கிவிட்டது.
சேயோன் :- தமிழீழம் அமைவதை இந்தியா விரும்பவில்லை என நினைக்கின்றீர்களா?
நிலவன் :- கடந்த 16.7.1988 செவ்வாயன்று கொழும்பில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஓராண்டுக்காலம் என்ற தலைப்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் கழகத்தின் சார்பில் கருத்தரங்கம் ஒன்றில் இந்திய உயர் ஆணையர் தீட்சித் பேசும்பொழுது, “இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நீக்கி விட்டுத், தமிழீழப் போராளிகளிடம் இலங்கை நேரடியாகத் தொடர்பு வைத்துக் கொண்டால் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. இப்படியொரு நிலைமை உருவாகிவிடக் கூடாதென்பதே இந்தியாவின் நோக்கம். அதில் இந்தியா எச்சரிக்கையாக இருக்கிறது என்று, இந்தியாவின் கரவான உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்.
தமிழ் ஈழ விடுதலையை அழிப்பதற்கு அதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு.ஆயிரம் ஆயிரம் ஆண்டு கால ஆரிய இனப் பகை அதில் முதன்மையானது மற்றும் தமிழீழம் அமைந்தால் காஷ்மீர், மணிப்பூர், அசாம், காலிஸ்தான் பிரிவினை கோரிக்கைகள் வலுப்பெறும் என்ற பழைய கற்பனையான கூற்று ஒன்றும் இருக்கிறது. அத்தோடுகூட தமிழீழம் உருவானால் தமிழ்நாடும் பிரிந்து அதனுடன் இணைய வாய்ப்பு உள்ளது என்ற தமிழ் மக்கள் கூட்டாக இணைந்தாள் தமிழருக்கு என்று ஒரு தனிநாடு தமிழர் இராணுவம் எனத் தன்னகத்தே கொண்டிருக்கும் என்ற அச்சம் இன்றுவரை இந்தியாவிற்கு உள்ளதை குறிகாட்டுகிறது. காந்தியின் அகிம்சை தேசம் தேசிய இனமாகிய ஈழத்தமிழர்களுக்குச் செய்த கொடுமைகள் போல வேறு எந்த சக்தியாலும் செய்துவிடமுடியாதென்பது மட்டும் உண்மை .
ஆயினும் கூட தொன்மை காலம் தொட்டு தமிழினத்தின் மீதான பகைமை உணர்வுடனேயே செயல்படுகிறது ஆரியத் தலைமையின் பிடியில் கட்டுண்டு கிடக்கும் இந்திய ஒன்றிய அரசு இந்திய உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் தமிழீழம் அமைவது இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்தானது என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனி ஈழக் கோரிக்கையை (அஃதாவது தனி ஈழம் அமைவதை) இந்தியா ஒருபோதும் ஆதரித்ததில்லை. தனி ஈழக் கோரிக்கையை ஏற்பதென்பது இந்தியா இதுவரை எந்தக் கொள்கைகளுக்காக வழக்காடியதோ, (அஃதாவது இந்தியா ஆரிய இனத்தவர்களாலேயே நிலையாக ஆளப்பெற வேண்டும் என்பதுதான் அவர்கள் கொள்கை என்பதைத் தமிழர்கள் இப்பொழுதேனும் விளங்கிக் கொள்க) அவை அனைத்தையும் தவிர்ப்பதாகும்
தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையை. விடுதலைப் புலிகள் பலமாக இருந்தபோது கூட, ஒரு கட்டத்தில் தமிழீழக் கோரிக்கை என்பது புலிகளின் விருப்பமாகவே சர்வதேசத்தினால் பார்க்கப்பட்டதேயன்றி, தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையாக அது பார்க்கப்படவில்லை. உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும், இலங்கை பிளவுபடுவதற்கோ, அல்லது தமிழீழத் தனிநாடு உருவாவதற்கோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
சேயோன் :- இலங்கையில் உள்ள தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையில் நியாயம் இருப்பதை, உணர்ந்தாலும் கூட, அதை உலகம் ஏற்குமா ?
நிலவன் :- தமிழருக்கென தனிநாடு ஒன்றை உருவாக்கும் போராட்டம் வெற்றி பெறுவதற்காக அடுத்த போராட்டத்தின் இன அழிப்பின் உச்சம் 2009 இல் தமிழீழத்தை அமைப்பதற்கான நடைமுறைச் சாத்தியமான சூழல் ஒன்றைத் தனிநாட்டுக் கோரிக்கையை வெளிப்படையாக வலியுறுத்தும் மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பும் எங்கள் கரங்களில் தரப்பட்டுள்ளது இதுமட்டுமன்றி தமிழீழம் உருவாவதை அண்டை நாடான இந்தியாவே, தனது இறைமைக்கு ஏற்படும் ஆபத்தாகப் பார்க்கும் போது, ஏனைய நாடுகள் அதனை எப்படி அங்கீகரிக்கும் உலக நாடுகளின் நிலைப்பாடுகள், தமிழீழம் கோரும் போராட்டத்துக்குச் சாதகமானதாக இன அழிப்பு இனப்படுகொலை சர்வதேச அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ள இன்றைய சூழலில் கூட இந்தியா அரச இலங்கை அரசைக் காப்பதில் அதிகம் முயற்சி செய்து வருகின்றது என்பதே உண்மை.
தமிழ்நாட்டுத் திராவிடக்கட்சிகளின் இருப்பும் தமிழர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட திமுக , அதிமுக கட்சிகள் தமிழகத்தையும் ஆரிய பாஜக/காங்கிரஸ் கட்சிகள் மத்திய ஒன்றியத்தில் ஆளும் வரை விடுதலைப்புலிகளின் மீதான தடையை எந்த காலத்திலும் நீக்கமாட்டார்கள்! வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் கொண்டு வராதவரை சிங்கள அரசிற்குக் காவடி தூக்கித்திரிவார்கள்! எனவே உலக நாடுகள் அனைத்துமே தமிழீழம் அமைவதை விரும்பினாலும் இறுதி வரையிலும் இந்தியா அதை ஏற்காது.
சேயோன் :- விடுலைப் புலிகளை அழிப்பதில் இந்தியாவின் பங்கு என்ன?
நிலவன் :- சிங்கள-பௌத்த வெறியர்களும், தமிழின விரோத ஹிந்திய வெறியர்களும், ஏனைய சந்தர்ப்பவாத சக்திகளும் இணைந்து ஈழமண்ணில் நடத்திய, தொடர்ந்து நடத்திவரும் தமிழின அழிப்பு / தமிழின ஒடுக்குமுறைகள் பல இலட்சம் தமிழ் மக்களின் படுகொலைக்கும், தொடரும் தமிழின அழிப்புக்கும் காரணமாக அமைந்திருப்பது வரலாறு!
இலங்கையில் நடந்த தமிழின அழிப்பில் இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்குபெற்றிருந்த போதிலும் மிகத் தொடர்ச்சியான பங்களிப்பை ஆனால் மிகவும் குழப்ப கரமான நிலைப்பாடுகளோடு அணுகிய நாடு இந்தியா என நோர்வே நாட்டின் பேர்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் விஜயசங்கர் அசோகன், ஐ.நா மனித உரிமை ஆணையம் நியமித்திருக்கும் இலங்கை மீதான விசாரணைக் குழுவிற்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார் அதில் குறிப்பிட்ட சில விடயங்களைச் சுட்டிக்காட்டலாம் என நினைக்கின்றேன்.
1980களில் பிராந்திய தலைமைத்துவத்திற்கு வரத்துடித்த இந்திய அரசு இலங்கையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த அங்கு நிலவி வந்த இன மோதலை பயன்படுத்திக்கொண்டது. முதலில், இலங்கையின் நிலைத்தன்மையைச் சீர்குலைத்து தனது மேலாண்மையை நிலைநிறுத்தவே முதலில் திட்டமிடப்பட்டது. முதலில் தமிழர் ஆயுதக்குழுக்கள் அனைத்திற்கும் ஆயுதப் பயிற்சியும் ஆயுத உதவியும் வழங்கியது.
இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்பான சூழலில் ராஜீவ் காந்தியின் அனுபவமற்றத் தன்மை, இந்தியாவைப் பிழையான முடிவெடுக்க வைத்தது. இன மோதல்கள் தொடர்பான எவ்வித அனுபவமும் இல்லாத இந்தியா செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் பிழையாகவே முடிய, தமிழரின் அரசியல் போராட்டத்தை அப்பிராந்தியந்தியத்தில் தவறான கண்ணோட்டத்திற்கு அழைத்துச் சென்றது இந்தியா.
1991 ஆம் ஆண்டு பிறகு, இலங்கைக்குப் பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை இந்தியா தொடர்ச்சியாக அளிக்கத் தொடங்கியது. மூன்றாம் ஈழப் போரின் போது, விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான பல யுத்தங்களை வென்ற போது, இலங்கை அரசுடன் இராணுவ வர்த்தகத்திலும், நிதியுதவி அளிப்பதிலும் இந்திய அரசாங்கமே முன்னிலையில் இருந்தது.
1991 ஆம் ஆண்டு ராஜீவ் படுகொலைக்குப் பிறகு இலங்கை தொடர்பில் ஆர்வமில்லாதது போலக் காட்டிக்கொண்டாலும், இலங்கையுடனான வர்த்தக, ராஜதந்திர உறவுகளைப் பேணிக்காத்தது. 2000 ஆண்டில் INS Sarayu என்ற நவீன போர்க்கப்பலை வழங்கிய இந்தியா விமான தளத்தில் டிப்னிஸையும் இலங்கைக்கு அனுப்பி வைத்து, அங்கு அன்றைய நாளில் இருந்த அசாதாரண சூழலைக் கண்காணித்து வரச்செய்தது.
2006 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை புலிகளின் கடல் போக்குவரத்து முற்றிலும் தடுக்கப்படுவதோடு புலிகளின் ஆயுதம் தாங்கிய கப்பல்கள் அழிக்கப்படுகிறது. இதற்கான உதவியை இந்தியாதான் புரிந்தது என ரணில் விக்ரமசிங்கே 2009 டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கூறியிருந்தார்” அவ்வறிக்கையில் விஜய் அசோகன் மேலும், “இலங்கையின் கப்பல் படைத் தளபதி வசந்த கரணகோடா இந்தியா எவ்வாறெல்லாம் தங்களது கப்பல் படையை மேம்படுத்தவும் கடற்படை செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உதவி புரிந்தது என பல்வேறு இடங்களில் கூறியவற்றையும் தொகுத்து இந்தியாவின் திட்டமிடலை அம்பலப்படுத்தியிருந்தார்.”
இந்திய இராணுவ அதிகாரிகளை நேரடியாகக் களத்துக்கு அனுப்பி சிங்கள இராணுவத்துக்குப் பயிற்சி அளித்தது. இராணுவ தளங்களைச் செப்பனிட்டு தந்தது. புலிகளின் விமானங் களை எதிர்கொள்ள ராடார்கள் தந்து உதவியது. புலிகள் அமைப்பின் வெளியுலகத் தொடர்பிற்கு நிலவிய ஒரே வழித்தடத்தை, வங்க, இந்துமாக கடற் பகுதியைத் தன் கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் வைத்து, புலிகள் அமைப்பை முடக்கிப் போடச் சிங்கள அரசுக்கு துணைபோனது.
இந்தியாவின் நலன்களை இலங்கை பாதுகாக்கவும், பாக்கிஸ்தான் மற்றும் சீனா இலங்கையில் நிலை பெறுவதைத் தடுக்கவும், விடுதலைப் புலிகளை அழிப்பதும், பிரபாகரனைக் கொல்வதும் மட்டும் தான் ஒரே வழி என்ற நிலைப்பாட்டை எடுத்த சோனியா காந்தியின் அதை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொள்ளவும் செய்தார். அமைதி காலத்தின் போது ஈழச் சிக்கலுக்கு இராணுவத் தலையீட்டின் மூலமே முடிவு காண வேண்டும் என்று சோனியா காந்தி விடாப் பிடியாக இருந்தார். இராணுவ உத்திகள், பொதுமக்களைக் கட்டுப்படுத்துதல், ஊடகங்களை ஒடுக்குதல் ஆகியவற்றுடன் முற்று முழுதான போரிற்கான அறிவுரைகளை அமைதி காலத்திலும் கூட சோனியா காந்தி இலங்கை அரசாங்கத்திற்கு அளித்து வந்தார். கருணா மற்றும் கே.பி ஆகியோர் உட்பட விடுதலைப் புலிகள் தலைமையில் பிளவு ஏற்படச் சோனியா காந்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
“The Statesman” இதழின் பத்திரிக்கையாளர், சாம் ராஜப்பாவின் கூற்றுப் படி: இலங்கையில் நடைபெறும் இன விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ நடவடிக்கை மூலம் முடிவு கட்டுவதற்கு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்குப் பச்சைக் கொடி காட்டியது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானையும் கொல்வதற்குத் தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் அளிக்கத் தயார் என்று சோனியா காந்தி கூறியதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்தன.
இந்திய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் உட்படப் பிரதமர் அலுவலகத்தில் இருந்த பல்வேறு அதிகாரிகள் தேசிய நலனை விடச் சோனியா காந்தியின் நலனிற்கு முக்கியத்துவம் கொடுத்து, இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு உதவி செய்தனர். உலகமே இலங்கையில் நடந்தவற்றைக் கண்டு கொந்தளித்துக் கொண்டு இருந்த போது, இந்திய அரசாங்கம் மட்டும் அமைதியாக இருந்தது. இராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் இனப்படுகொலை குற்றங்களுக்காக நிறுத்தப்படும் பட்சத்தில், இந்திய அரசாங்கம் மட்டும் தப்பித்து விட முடியாது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவிற்குத் துணை நின்றார். அவரின் அமைதியும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவும் கேடு விளைவித்தது. பிரபாகரன் கோரிய உதவிகளைப் புறம் தள்ளிவிட்டு, தமிழ்நாட்டில் இருந்த விடுதலைப் புலிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, காங்கிரஸ் கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள மறுத்தார்.
Tamil Nadu Coastal Security Group உதவியுடன், இந்திய உளவுத் துறை அமைப்பான RAW 2007 இல், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும், விடுதலைப் புலிகள் தலைவர்கள் தமிழ்நாட்டிற்குத் தப்பி வருவதைத் தடுக்கவும், ஆயுதங்கள் பெறுவதற்குத் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் வைத்திருந்த தொடர்புகளையும் முடக்கியது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும், இனப்படுகொலை குற்றத்திற்குக் காரணமானவர்களை விசாரிக்க ஐ.நா’வில் தீர்மானம் கொண்டு வரவும் வற்புறுத்தி, தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் 2011 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசு செயல்படுத்த போதிய அழுத்தங்களைக் கருணாநிதி மத்திய அரசிற்கு அளிக்கவில்லை. ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதில் இந்திய அரசாங்கம் முக்கிய பங்காற்றியது. அதையும் கருணாநிதி கண்டிக்கவில்லை. தங்கள் வற்புறுத்தலின் பெயரிலேயே தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது என்று மன்மோகன் சிங் கடிதம் வாயிலாகக் கூறிய பிறகும் கூட கருணாநிதி அமைதி காத்தார்.
அமெரிக்கா உட்படச் சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தீவிரவாத அமைப்புப் பட்டியலில் வைப்பது, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பது, கனடாவின் வலதுசாரி கட்சிகளில் உள்ள இந்தியர்களைக் கொண்டு விடுதலைப் புலித் தலைவர்களைத் தடை செய்யும் தீர்மானத்தைக் கொண்டு வருவது போன்ற அரசியல் ரீதியான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் செய்தது.
இராணுவ ரீதியில், இலங்கை அரசாங்கத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாகவும், போர் விமானங்கள், தாக்குதலுக்குத் தேவையான ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை இந்தியா அளித்தது. அமைதி காலத்தில் மட்டும் இந்திய அரசாங்கம்: JY11 3D ரேடார் கருவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு 5 மில்லியன் டாலருக்கு விற்றது; இரண்டு Indra IN-PC-2D ராடார் கருவிகள், இலவசமாக அளித்தது; 13 MG போர் விமானங்கள், நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் அணியும் உடுப்புகள், மற்றும் தாக்குதலுக்குத் தேவையான ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வழங்கியது.
இந்தியாவின் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்திக் கொள்ள இலங்கை இராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் மூலமும், தானியங்கி விமானங்கள் (Drone) மூலமும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் கண்காணித்தது. கடல் புலிகளின் கலன்கள் மீது, ஆயுதம் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது இந்திய விமானப் படை தொடர் தாக்குதல்களை நடத்தியது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை இறக்குமதி செய்வதை, விடுதலைப் புலிகள் தலைவர்கள் தப்பிச் செல்வதையும் தடுக்க இந்தியக் கப்பற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்தியக் கப்பல் படை, விடுதலைப் புலிகளின் கிடங்குகளாகப் பயன்படுத்திய பத்து கலன்களை (floating warehouses) அழித்தது. இதனால் கடற் புலிகள் அமைப்பு மிகவும் பலவீனம் அடைந்தது. கடற்பகுதிகளைக் கண்காணித்து, சேகரித்த தகவல்களை இலங்கையின் கடற்படைக்கு அளித்தது, கடற் புலிகளின் கலன்கள் மீது விமானப் படைத் தாக்குதல்களையும் நடத்தியது. இந்தியாவில் இராணுவ பயிற்சி பெறும் முதன்மை நாடாக இலங்கை இருந்தது. 2008 இல், இலங்கை இராணுவத்திற்கு வருடாந்திர பயிற்சிகளை அளிக்கவும் இந்தியா ஏற்பாடுகள் செய்தது. இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர், வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் இராஜபக்சேவின் சகோதரர்கள் மற்றும் அவர்களின் செயலாளர்கள் அதிகாரப்பூர்வமாக அல்லாமல், தனிப்பட்ட முறையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான முறைமைகள் ஏற்படுத்தப்பட்டன. 2007-2009 கால கட்டத்தில் இவர்கள் பல முறை சந்தித்துக் கொண்டனர்.
இலங்கையின் கடற்படை தளபதியான வசந்தா கரணகோடா “விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல்கள் இந்தியக் கப்பற்படை அளித்த தகவல்களைக் கொண்டு ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டன. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளுக்கு எல்லா வகையான பொருட்களும் கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட்டது. இதனால் எங்களால் வேகமாக முன்னேற முடிந்தது. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் புலிகள் கட்டியமைத்திருந்த தேசத்தை எங்களால் அழிக்க முடிந்தது.” என்று கூறியுள்ளார்.
இலங்கை அரசு மீதான சர்வதேச குற்றங்களை விசாரிக்க ஐநா மனித உரிமைகள் ஆணையம் எடுக்கும் முயற்சிகளை இந்திய அரசாங்கம் இன்றளவும் விடாப்பிடியாகத் தடுத்து வருகிறது. இந்தியாவின் NDTV தொலைக்காட்சியின் ராணுவ ஆய்வாளர் நிதின் கோகலேவின் “Sri Lanka – From War to Peace” புத்தகத்தில் உள்ளவைகளையும் சாட்சியாகப் பயன்படுத்தி இந்தியா 2002 முதல் 2009 வரை செய்த அனைத்து உதவிகளையும் மேற்கோள்களுடன் எழுதியிருந்தார்.
2018 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க இந்தியா வந்த முன்னாள் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே “நான் இலங்கையின் பிரதமராக இருந்த போது, விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் பலமாக இருந்தது. எங்களின் பொருளாதாரமும் நலிந்திருந்தது. திரு.வாஜ்பாயி அவர்கள் தான் எங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவினார். எங்களுக்குத் தேவையான இராணுவ பயிற்சிகளையும் அளித்தார். இந்த உதவிகளாலேயே கடல் புலிகளை எங்களால் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது” என்று கூறினார்.
தமிழர்களுக்கெதிரான போரில் இந்தியாவின் தரப்பில் மிக மும்முரமாகச் செயற்பட்ட அன்றைய வெளியுறவுச் செயலாளரும், சோனியாவினதும் மன்மோகன் சிங்கினதும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் செயலாற்றிய சிவ்ஷங்கர் மேனன் இப்போர்பற்றி தனது அனுபவங்களை அண்மையில் (2018) ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தார். அப்புத்தகத்தில் அவர் சொல்லியிருக்கும் விபரங்களின்படி புலிகளை அழிப்பதே தமது தலையாய கடமையாக இருந்ததாகச் சொல்லியிருக்கிறார்.
இலங்கையின் அதிபரான கோத்தபய இராஜபக்சே, “காங்கிரஸ் அரசாங்கத்துடனும், அதன் அதிகாரிகளுடனும் எங்களுக்கு நல்ல உறவு இருந்தது. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் எங்களுக்கு அவர்களின் முழு ஆதரவு இருந்தது” என்று கூறியுள்ளார். 2009 இல் போர் முடிந்த பிறகு கோத்தபாய ராஜபக்ச Indian Defence Review சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வி மற்றும் லலித் வீரதுங்கே டெய்லி மிர்ரருக்கு வழங்கிய செவ்வியையும் சாட்சிக்கு உட்படுத்திய விஜய் அசோகன் இந்தியாவின் பங்களிப்பை விரிவாக ஐநா மனித உரிமை அமைப்பிற்கு அனுப்பிய அறிக்கையில் எழுதியிருந்தார்.
மேலும் தனது இறுதியாக இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக “1. இந்தியா இனவழிப்பு நடக்க ஏதுவான சர்வதேச சூழலை உருவாக்கியதோடு இராணுவ மற்றும் ராஜதந்திர உதவிகளை இலங்கைக்கு முழுமையாக வழங்கியது. சமாதான பேச்சுவார்த்தையின் பொழுது சம பலத்தில் இருந்த புலிகளின் தரப்பைப் பலமிழக்கச் செய்ய இந்தியா பெரிதும் வேலை செய்தது.
சர்வதேச சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் படி இனவழிப்பை தடுக்கும் வல்லமையும் சூழலும் இந்தியாவிற்கு ஆனால் அதனைத் தடுக்காமல் விட்டதும் இந்தியா இனவழிப்பில் பங்கு தாராக இருந்தது எனக் கொள்ளலாம். போரின் பொழுது எழுந்த சர்வதேச அழுத்தங்களைக் குறைத்து இலங்கைக்கு எவ்வித அழுத்தமும் வராமல் பார்த்துக்கொண்டு இலங்கையை அரவணைத்துச் சென்றது இந்தியா” என அவ்வறிக்கையின் இறுதி வடிவமாக விஜய் அசோகன் எழுதிந்த விடயங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் .
சேயோன் :- வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் தொடர்பில் இந்தியாவின் பங்கு என்ன ?
நிலவன் :- வெள்ளைக் கொடிகளை இரத்தச் சிவப்பாக்கிய பல படுகொலைகளை இந்திய இராணுவம் செய்தது. உதாரணமாக 9.11.1987ஆம் ஆண்டு அன்று சண்டிலிப்பாய் எனுமிடத்தில் இந்திய இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் காயமடைந்த நான்கு பொது மக்களை வாகனத்தில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். வாகனத்தில் வெள்ளைக் கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்திய இராணுவம் நவாலி என்ற இடத்தில் காரை நோக்கிச் சுட்டது. வாகனத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்தனர் என – 1987 ஆம் ஆண்டு நவம்பரில் தலைவர் எழுதிய கடிதத்தில் இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழினப் படுகொலையினை திட்டமிட்டதுமுதல், அதனைத் தடையின்றி நடாத்தி , இறுதியில் தான் விரும்பிய நாளில் முடித்துவைத்ததே இந்தியாதான். தமிழர்க்கெதிரான இனக்கொலையினை இந்தியா சார்பாக முன்னின்று நடத்தியவர்களில் மிக முக்கியமானவரான சிவ்ஷங்கர் மேனன் எழுதிய “தெரிவுகள் ” எனும் புத்தகத்தில் இப்போர் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
போராளிகளின் சரணடைவு. சண்டை நடந்து கொண்டிருக்கும்போதே உதிரிகளாக ஒரு தொகுதிப் போராளிகள் படையினரிடம் சரணடைந்தார்கள். இவர்கள் கடல் மார்க்கமாகவும் தரை வழியாகவும், இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு படையினரிடம் சரணடைந்தார்கள் . குறிப்பாக, தங்கள் குடும்பத்தினருடன் இணைந்த நிலையில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தார்கள். 2009 ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரிடம் சரணடையும் விடயம் சர்வதேச ஏற்பாட்டில் இடம்பெற்றது குறிப்பாக இதில் இந்தியாவும் இதில் பங்கெடுத்திருந்து முள்ளி வாய்க்காலில் வைத்து தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், அவரது மகள் கனிமொழியும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளிற்குப் பின்னரே வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி சரணடையும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சர்வதேச சட்ட நியமங்களின் படியே நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதிகளை தொடந்து மே 15ம் 16ம்17 ம்18 19ம் திகதிகளில் 2009 இல் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் பல்லாயிரக் கணக்கனோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பிரமுகர்கள் மற்றும் ஐநாவின் அன்றைய மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் அறிந்திருந்தார்கள் 2009 மே மாதம் இறுதி யுத்தத்தின்போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ் நிலையைத் தாம் தோற்றுவித்ததாகவும், ஏற்பாட்டாளராக இருந்த இந்திய, நோர்வே மற்றும் ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் தெரிவித்ததை அடுத்தே அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் சரணடைந்தார். ஆனால் அவரையும் புலித்தேவனையும், கட்டிவைத்து இராணுவத்தினர் நினைத்துப்பார்க்க முடியாத அளவு சித்திரவதைகளின் பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்
இராணுவத்திடம் சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றது விசாரணையின் போது, எழிலனின் மனைவி அனந்தி அவர்கள் சாட்சியமளிக்கையில் 2009 ஆண்டு மே மாதம் யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் சரணடைவானது இந்தியா மற்றும் சர்வதேசத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், தனது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு முன்னர், அன்றைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் சரணவடைவது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதை அவர் அருகில் இருந்து தான் கேட்டதாகவும் அனந்தி தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடயத்தில் தங்களுக்குள்ள தொடர்பு குறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், அவரது மகள் கனிமொழியும் உலகிற்கு உண்மையைத் தெரியப்படுத்தவேண்டும்.
2009 ஆண்டு மே மாதம் யுத்தத்தின் இறுதி நாட்கள் பேச்சுக்கள் புலிகள், இந்திய அரசு இரண்டு தரப்புக்கும் இடையே தொடர்புகள் இருந்து வந்துள்ளது . புலிகளுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் பல வழிகளில் நடந்தது. அதில், தமிழகம் மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகளின் நெருங்கிய நண்பர்களாகத் தமிழகத்தில் இருந்த பல அரசியல் தலைவர்களும் ஈடுபட்டதோடு சில கடிதப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டனர். அவர்களில் பலர் இன்று பலர் மவுனமாக உள்ளனர் . இன்னும் சிலர் தமது தன்நலன் சார் அரசியலுக்காகவும் அரசின் சலுகைகளுக்காகவும் அரசுடன் இணைந்து செயற்படுகின்றார்கள் இன்னும் சிலர் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு என்ற தோரணையில் தமது அரசியல் நலனுக்கு இரட்டை முகவர்களாகவும் செயற்படுகின்றார்கள் அவர்கள் மவுனம் கலைத்தால் பல விஷயங்கள் வெளியுலகிற்கு சாட்சியங்களாக வெளிவரும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேசம் இதிலிருந்து ஒதுங்கப் பார்க்கும் இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கும் அன்று தமிழக ஆட்சி பீடத்தில் இருந்த திமுக (திராவிட முன்னேற்றக்கழகம்)விற்கும் இதில் அதிக பங்கு உள்ளது. வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது சிங்கள இராணுவம் சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக சித்திரவதைகள் செய்து சுட்டுக் கொன்றதும் “வெள்ளைக் கொடியுடன் வந்தாலும் கவலைப்படாதே சுட்டுத் தள்ளலாம்” என்று இலங்கை இராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய அமைதிப் படைதான் என்ற வரலாற்று உண்மையினை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
சேயோன் :- 2009 இன அழிப்புப் போரிற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இந்தியா அவர்கள் மீதான தடையை நீடித்திருப்பது ஏன்?
நிலவன் :- தமிழர்களுக்கான ‘தமிழீழம் ‘ எனும் தனி நாடு அமைப்பதற்கான கோரிக்கையுடன் செயல்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கடத்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்குப் பின்னரும் தமிழர்கள் கூட, தனி ஈழத்தை அமைப்பதற்கான முயற்சிகளை உள்ளூரிலும், சர்வதேச அளவிலும் உலகத் தமிழர்களின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஈழத்தமிழரையும், தமிழகத் தமிழரையும் ஒரே நேரத்தில் வஞ்சிக்கும் நோக்குடனேயே இத்தடையை இந்திய ஒன்றிய அரசு நீடித்திருக்கிறது. இந்தநிலையில் இந்தியா முழுவதும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தமிழீழ மண்ணிக்கும் தமிழீழ மக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் ஆதரவாகத் தமிழக மக்கள் புரட்சியுடன் எழுச்சி கொள்வார்கள் தியாக தீபம் தாமதம் கேணல் திலீபன் அண்ணா கூறியதுபோல் மக்கள் புரட்சி வேட்டிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ன வரத்துக்குத் தமிழக மக்கள் செயல்வடிவம் கொடுத்துவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளது.
1989ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு இனவழிப்பு போரில் இந்தியா நேரடியாகவும் மறைமுகமாகவும் புலிகளையும் மக்களையும் அழிக்கப்பட்டதற்கு இந்தியாவே முழுக்காரணம் என்ற உண்மையினை தமிழர்கள் அன்றிருந்த இந்திய அரசியல் கட்சிகள் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தமிழர்களிடையே இக்கருத்தினை ஆழமாக்கப் பரப்பி அரசியல் கட்சிகளின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டும் மற்றும் சர்வதேச அரங்கில் இனப்படுகொலை அரசு எனக் குற்றங்கள் நிறுக்கப்படும் என்ற பயம் உள்ளது.
புலம்பெயர் ஈழத்தமிழரின் கருத்துக்களால் உந்தப்பட்ட தமிழகத் தமிழர்களும் தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும் இந்திய ஒன்றியத்திற்கான நிலைப்பாட்டை எடுத்தால் தமிழகத்தில் ஆதிகாலம் தொட்டு இருக்கும் தமிழ் தேசியத்தின் இருப்பு பாதுகாக்கப்படும் தமிழர்களின் வளங்கள் சுரண்ட முடியாது , தன்நிறைவு பொருளாதார அவிபிருத்தியில் தனித்துவம் அடைவார்கள் தமிழர்களே தமிழ் நாட்டை அழவேண்டும் என்ற தனிநாட்டுக் கோரிக்கை வலுப்பெற்று விடம் என்ற உண்மையினை உணர்ந்திருப்பதே ஆகும்.
தமிழீழம் விடுதலை அடைந்தால், தமிழ்நாடும் விடுதலைக் கோரும். இது இந்தியாவின் புவிசார் அரசியல் நிலையையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும். தமிழர்களுக்கென ஒரு தேசம் அமைந்து அதற்கு ஐக்கிய நாடுகளின் அங்கீகாரம் கிடைத்துவிட்டால். நாளை இந்தியா தமிழ் நாட்டில் ஏதேனும் தமிழ் மக்களைப் பாதிக்கும் விடயங்களைச் செய்தால் அதைத் தமிழ் ஈழம் சர்வதேச பிரச்சினையாக ஐ நா வரை எடுத்துச்செல்லும்.
தமிழீழம், பிற அங்கீகரிக்கப் படாத நாடுகளைக் காட்டிலும், இராணுவம் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேறி இருந்தது. அமைதி காலகட்டத்தில் (2001-2006ஆம் ஆண்டு) தமிழீழம் அடைந்திருந்த வளர்ச்சி இந்திய வல்லா திக்க அரசிற்கு எரிச்சலைக் கொடுத்தது. இது தமிழர்களின் தேசிய மரபியல் தனித்துவத்தை மீள வலியுறுத்தியது. குறிப்பாக , 2009ஆம் ஆண்டு இனவழிப்பு போரில் தனது பங்கினை இந்தியா இதுவரைக்கும் மறுக்கவில்லை என்பது. ஆக, காங்கிரஸ் கொலைகாரர்கள் தமிழர்களிடையே வரும்போது தமது உயிருக்குப் பங்கம் ஏற்படலாம் என்று உண்மையாகவே பயப்படுகிறார்கள். ஹிந்தி வெற்பிடித்த வட இந்திய அரசியலுக்குத் தமிழர்கள் எப்போதுமே சிம்ம சொப்பனமாகத் திகழ்வதும், ஈழத் தமிழர் அழிவில் இந்தியாவின் பங்கினை செந்தமிழன் சீமான் உட்படப் பலர் வெளிப்படையாகவே பேசிவருகின்றார்கள்.
சேயோன் :- தமிழகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் போராளிகளாக அல்லாது மாவீரர்களாக உள்ளார்களா?
நிலவன் :- 1970 ஆம் ஆண்டு இருந்து 1982ஆம் ஆண்டு வரை புலிகள் இயக்கம் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழகம் அவர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும், தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்து தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்தி உலக வரலாற்றில் எங்குமே இல்லாதவாறு எத்தனையோ தியாகச் சீலர்களை எங்கள் தாயக தேசம் கொண்டிருந்தது தமிழர்களின் தாய் நிலமான தமிழீழத்தில், தாய்மண் விடுதலைக்காகத் தாயகத் தமிழகத்தின் மக்கள் திரள் விடுதலைப் போராட்டத்தின் இராணுவ முப்படைகளிலும், கரும்புலிகள் அணி உட்படப் பலதுறைகளிலும் செயற்பட்டார்கள். தமிழர்களின் உரிமைக்காக உயிர்விட்டிருக்கும் அதேவேளையில் களத்தில் ஆயுதம் தாங்கிப் போராடியும், ஈழத்தமிழருக்கு ஆதரவாக 20 க்கும் மேற்பட்டவர்கள் தீக்குளிப்புகள் தமிழக இளையோர் யுவதிகள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள்.
2008ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் மாவீரர் எழுச்சி நாள் தமிழீழத்தில் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் எழுச்சி நாளாகும். எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை -27. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை அந்த வருடத்தின் அக்டோபர் 31ம் திகதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை அறிவித்திருந்தது.
2008ஆம் ஆண்டு மாவீரர் எழுச்சி நாள் வரையில் 22390 மாவீரர்கள் எனப் பதிவுகள் சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்கால இடப்பெயர்வு காரணமாகத் தற்காலிக நினைவுத் தடங்களாக மேலும் துயிலும் இல்லங்கள் 2009ஆம் ஆண்டு பங்குனி மாதம் இறுதி வாரம் வரை 6 தற்காலிக மாவீரர் நினைவுத்தடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையப்பெற்றது. அதற்கு பிட்பட்ட காலப் பகுதியில் போராளிகள் வீரச்சாவடைகின்ற இடங்களில் மாவீரர்கள் வித்துடல்கள் விதைக்கப்பட்டது. வீரச்சாவடையும் மாவீரர்களின் எண்ணிக்கை பல ஆயிரக்கணக்கில் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ளலாம்.
இந்த விடுதலை போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்புக்கள் மறக்கமுடியாதவை. தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும் விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காகவும் எத்தனையோ தமிழக உறவுகள் தங்கள் அற்புதமான உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள் இந்த வரிசையில்… இறுதிவரையிலான போரில் எத்தனை தமிழக மாவீர்கள் விதையானார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை எனினும் ஒரு கரும்புலி.மற்றும் இரு பெண் மாவீர்கள் உற்பட 14 தமிழகத்தைச் புறப்பிடமாகக் கொண்ட மாவீர்களின் விபரங்கள் தொகுத்துள்ளேன்.
சேயோன் :- நீங்கள் குறப்பிட்டுள்ள14 மாவீர்ர்களுன் விபரங்களை குறிப்பிட முடியுமா ?
நிலவன் :- பிரிவு: கரும்புலி நிலை: லெப்டினன்ட்இயக்கப் பெயர்:செங்கண்ணன் இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்ஊர்: சாத்தூர், சிவகாசி (தமிழகம்)வீரப்பிறப்பு: 25.01.1975 வீரச்சாவு: 11.11.1993 நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நிலை: மேஜர் இயக்கப் பெயர்: உமா இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 27.05.1972 வீரச்சாவு: 11.12.1999 நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: மணியரசி இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி ஊர்: தமிழகம். வீரப்பிறப்பு: 02.02.1977 வீரச்சாவு: 19.04.1996 நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்றமேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: பத்மநாபன் இயற்பெயர்: பி.பத்மநாபன் ஊர்: திருச்சி, தமிழகம். வீரப்பிறப்பு: 27.07.1963 வீரச்சாவு: 16.03.1988 நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு
நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: சுனில் இயற்பெயர்: கதிரவன் ஊர்: தமிழகம். வீரச்சாவு: 11.04.1988 நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்) இயற்பெயர்: முத்தையா இராமசாமிஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 23.07.1962 வீரச்சாவு: 11.12.1991 நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில்சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவுதுயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: உதயசந்திரன் இயற்பெயர்: சேதுபாணடித்தேவர்ராமமணி சேகரன்மகாதேவர் ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 05.05.1969 வீரச்சாவு: 09.06.1992 நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு
பிரிவு: கடற்புலி நிலை: கப்டன் இயக்கப் பெயர்: ஈழவேந்தன் இயற்பெயர்: துரைராசன் குமரேசன் ஊர்: தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 25.05.1969 வீரச்சாவு: 20.11.1992 நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: சச்சு இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த் ஊர்: பியர், இந்தியா. வீரப்பிறப்பு: 04.09.1975 வீரச்சாவு: 20.12.1992 நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம்படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: கப்டன் இயக்கப் பெயர்: குணதேவன் (லக்ஸ்மணன்) இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 01.01.1966 வீரச்சாவு: 13.05.1996 நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்தகாவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
நிலை: கப்டன் இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு) இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 31.05.1975 வீரச்சாவு: 19.05.1996நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதானதாக்குதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: கப்டன் இயக்கப் பெயர்: குற்றாளன் இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 08.08.1969 வீரச்சாவு: 16.07.1996 நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட்உட்கொண்டு வீரச்சாவு
நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: சுதா இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன் ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு வீரப்பிறப்பு: 28.10.1980 வீரச்சாவு: 05.07.1999 நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: மேஜர் இயக்கப் பெயர்: குருசங்கர் இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 18.04.1973 வீரச்சாவு: 25.07.1996 நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின் போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது
தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களில் குறிப்பாக 2009ஆம் ஆண்டு 1,46,679. பொது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தமிழர்களாய் நாம் ஒன்றினைந்து தொடர வேண்டும்.
சேயோன் :- தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தாயகத் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் மற்றும் உயிர்த் தியாகங்களைப் பற்றிக் கூற முடியுமா?
நிலவன் :- 75ஆண்டுகளுக்ககு மேலாக நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பத்தில் சாத்வீகமாகப் போராடினார்கள். சிங்கள இராணுவத்தினரின் கொடூரத்தால் தமிழ் இளைஞர்கள் துப்பாக்கி தூக்கினார்கள். இருதரப்பும் துப்பாக்கிகள் வழியாகப் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள முயன்றன. வல்லாதிக்க அரசுகளின் கூட்டுச் சதியினால் பேரிழப்புகளுக்கும், கடும் பின்னடைவுகளுக்கும் ஆளாகியுள்ளது.
தமிழீழ மக்களைக் காக்கும் தமிழ் இராணுவமாக நட்படை படையாக விளங்கிய புலிகளின் அகிம்சை , ஆயுதப்போராட்டமும் மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். என வரலாற்றின் சுவடுகளைக் காட்டிய போதும் 2009 மே முள்ளிவாய்க்காளில் ஆயுதங்கள் மௌனம் கண்டது இதன்போதும் தமிழீழ மக்கள் வல்லரசான இந்தியாவின் உதவியை எதிர்பார்த்தார்கள்.
1983 ஆம் ஆண்டு தொடங்கி தமிழீழ மக்களுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் அமைப்புகள் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், மறியல்கள், சிறை வாசங்கள் என அவர்களின் உண்ணத் தியாகங்கள் நீண்ட பட்டியல். தமிழீழத்தில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் தியாகங்கள் நடந்துள்ளன. 1995 ஆம் ஆண்டு அப்துல் ரவூப் என்ற இளைஞன் சிங்கள விளையாட்டு அணி தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று தீக்குளித்து உயிரீகம் செய்தார்.
2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் போர் நிறுத்தம் வர வேண்டுமெனத் தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி வைத்த மாபெரும் எழுச்சியின்போது, பள்ளப்பட்டி இரவி, சீர்காழி இரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம், விருதுநகர் கோகுலகிருஷ்ணன், வாணியம்பாடி சீனிவாசன், சதாசிவம் சிறீதர், நாகலிங்கம் ஆனந்த், அரியலூர் இராசசேகர், புதுக்கோட்டை பாலசுந்தரம், சிவகாசி மாரிமுத்து, கரூர் சிவானந்தன், திருப்பூர் சுப்பிரமணி ஆகிய 18 தமிழர்கள் தீக்குளித்து உயிரீகம் செய்தனர். சுவிட்சர்லாந்தில் முருகதாசும், மலேசியாவில் இராஜாவும் உயிரீகம் செய்தனர்.
2009 ஆம் ஆண்டு இன அழிப்பின் உச்சம் தாங்க முடியாது அக்கினிப் போராட்டமாகத் தீக்குளித்து தம்மைத் தமிழீழ மக்களுக்காக தற்கொடை செய்துகொண்டவர்களின் தியாகங்களும் முள்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப் பட்டுக் கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களைக் காப்பாற்றத் தமிழக மக்கள் எடுத்த முயற்சிகளெதுவும் ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. அவர்களது துயர் துடைக்கும் நோக்கில் எந்த விளைவையும் ஏற்படுத்த அன்றைய ஆட்சி பீட காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு விரும்பவில்லை இதைப் பலவிடயங்களிலும் ஆலோசகர்களாக இருந்த பிரணாப் முகர்ஜி, சிவ்சங்கர் மேனன், நாராயணன் போன்றோர் மிகத் தெளிவாகக் கூறியிருப்பதுதான் கசப்பான உண்மை .
சேயோன் :- தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் தலையீட்டைத் தேசியத் தலைவர் எவ்வாறு அணுகினார், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பிறகு, இந்தியப் பெருங்கடலின் மீதான இந்தியாவின் ஆதிக்கம் குறைந்ததாகத் தெரிகிறதே? இதைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?
நிலவன் :- ஈழத்தமிழருக்கு இந்தியாவுடன் பல்லாயிரமாண்டுகால உறவு உள்ளது. தேசியத்தலைவர் பிராந்திய வல்லரசான இந்தியாவை எப்போதுமே நட்பு நாடாகவே பார்த்து வந்துள்ளார் (சற்று எச்சரிக்கை உணர்வு இருந்தாலும்) தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையில் இந்தியா நேரடியாகத் தலையிட்டது. தமிழீழ மக்களின் பிரச்சனை குறித்து அன்றைய இந்திய – இலங்கை அரசுகள் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. இந்த ஒப்பந்தம் இலங்கை பாராளுமன்றத்திலும், இலங்கை யாப்பிலும் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கைகளை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நிலையெடுக்கவும் லிடுதலைப் புலிகள் விரும்பவில்லை.
இலங்கைக்கு ஆதரவாக ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களை இந்தியா கடந்த காலங்களில் செய்துள்ளது என்றாலும் கூட, இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எத்தகைய சதித்திட்டத்திற்கும் தமிழர்கள் துணை போக மாட்டார்கள். என்ற இந்தியாவின் தெற்கு எல்லையில் தமிழீழம் தான் இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்பான அரணாக விளங்கும் என்பதை இந்திய அதிகார மையங்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.(தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது எனினும் இந்த முயற்சியை ஏன் கைவிட வேண்டும்)அதற்கு ஈழத்தின் வரலாற்றுடன் இந்தியாவின் நீண்ட நெடிய வரலாற்றை ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய –சீனப்போரின்போது சீனாவின் பக்கமும், இந்திய – பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானின் பக்கம் இலங்கை நின்றது என்பது வரலாற்றுப் படிப்பினை. இந்திய நாட்டின் நலன்களையும், பூகோள அரசியலையும் கணக்கிடாது கண்மூடித்தனமாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழ தமிழ் மக்களை இன அழிப்பு செய்வதில் இலங்கையை அரசிற்கு தனது இராணுவ தொழில்நூட்பா ஆயிதாம் உளவு என இந்திய நாட்டின் ஆட்சியாளர்களின் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றைய சூழலில் இலங்கையின் வடக்குப் பகுதியில் சீனா முன்னெடுத்து வரும் நடவடிக்கையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதனைக் கருத்தில் கொண்டு இந்தியா பாதுகாப்பு உத்திகளிலும், வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றங்களைச் செய்யவேண்டிய தோவை ஏற்பட்டுள்ளது. செயல் திட்டங்களைச் செயல்படுத்தும் போர்வையில் தமிழ்நாட்டைச் சீனா கண்காணிக்கும் ஆபத்து உள்ளதாகவும் இந்தியா இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல், இந்தியாவை ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. எனவே, இந்தியாவுக்கு விரோதமான ஏதாவதொரு மூன்றாவது நாட்டுடன் நெருக்கம் காட்டுவதன் மூலம் இந்தியாவை எதிர்க்க எப்போதும் முயற்சித்து வருகிறது. அதனால்தான், இந்தியாவிடம் இருந்து உதவிகளைத் தொடர்ந்து பெற்று வரும் நிலையிலும், சீனா, பாகிஸ்தான் என இந்தியாவுக்கு விரோதமான அண்டை நாடுகளுடன் நெருக்கம் காட்டி வருகிறது.
உலகின் 2வது மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியா, தேற்காசியவின் வல்லரசாக வளர்ச்சி காணும் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகளின் பார்வையில் இந்தியா மிகப் பெரிய பொருளாதார சந்தையாகக் கருதப்படுகிறது. சீனா, இந்தியாவுக்குத் தொடர்ந்து பல அச்சுறுத்தல்களைக் கொடுத்து வருகிறது. இதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த சீனா, 2009 விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்புக்குப் பின்னர் தமிழர் கடலிலும் தரையிலும் கடந்த 2010-14ம் ஆண்டுகளில் இலங்கையில் தனது கால் தடத்தை வலுவாகப் பதித்தது என்றே சொல்லலாம்.
தலைநகர் கொழும்பில், சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலமாக உருவாகும் துறைமுக நகரத்தை, சீனாவுக்குக் குத்தகைக்கு விட்டிருப்பது பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அரசியல் வல்லுநர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை, சீனா இடையே 2015ம் ஆண்டில், 99 ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் அம்பந்தொட்ட துறைமுகத்தைக் கட்ட 178 ஹெக்டர் நிலப்பரப்பளவை சீனாவுக்கு தாரை வார்த்த இலங்கை, அதனை நிர்வகிக்கச் சீன ஹார்பர் இன்ஜீனியரிங் கம்பெனி போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் உடன் 99 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, 3வது நபருக்கு மேலும் 99 ஆண்டுகள் இந்த நிலத்தைக் குத்தகைக்கு விடலாம்.இந்த இரண்டு முக்கிய திட்டங்கள் மற்றும் பல சிறிய திட்டங்களின் மூலம் இலங்கை மீதான தனது பிடியைச் சீனா இறுக்கி உள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹாங் (Qi Zhenhong) சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போருக்கு அனைத்து வகைகளிலும் உதவியது சீன அரசும் தான். அப்படிப்பட்ட சீன அரசு இப்போது திடீரென தமிழர்கள் மீது பாசம் காட்டுவதன் பின்னணியில் பரிய திட்டம் உள்ளது என்பதை குறிகாட்டுகிறது. சீனாவையும், சிங்களத்தையும் எதிரியாகப் பார்க்கும் தமிழர்கள் மத்தியில் தனக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொண்டு, இலங்கையின் வடக்குப் பகுதியிலும் கால் பதிக்க வேண்டும் அதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பது தான் சீனாவின் நோக்கமாகும்.
விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டி தனது நீண்ட நெடிய கடலோர எல்லையைச் சிங்கள அரசின் துணையுடன் பாதுகாக்க முடியும் என்று நினைத்த இந்தியா தற்போது அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட இந்திய ஒன்றியத்தைச் சுற்றி வளைக்கும் சீனாவின் “முத்துமாலை”(SPRING OF PEARLS) திட்டத்தில் இலங்கை முக்கிய அங்கம் வகிப்பது கண்டு தனது வெளியுறவுக் கொள்கைகளின் தோல்வியால் தலைகுனிந்து தான் இருக்கிறது. ஆனால் இந்திய அரசின் கண்ணை மறைப்பது தொன்மையான தமிழினத்தின் மீதான இனப் பகை மட்டுமே.
சீன நிறுவனங்களிடம் அளிக்கப்பட்ட 3 மின் உற்பத்தி திட்டங்களை தற்போது இந்தியாவுக்கு அளித்துள்ளது. ஆனால், இதை நினைத்து இந்தியா மகிழ்ச்சி அடைய முடியாது. ஏனென்றால், இதற்கு முன்பு, இந்தியா, இலங்கை, ஜப்பான் இடையே செய்து கொள்ளப்பட்டிருந்த கிழக்கு மின் முனையம் அமைக்கும் ஒப்பந்தம் தற்போது சீனா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யுவான் வாங் – 5’ எனும் சீன நாட்டின் உளவுத்துறை கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தங்கள் நாட்டுக்கு அக்கப்பல் வரப்போவதில்லை என மறுத்தறிவித்த இலங்கை அரசின் ஆட்சியாளர்கள், தற்போது அம்பந்தோட்டை துறைமுகத்தில் அக்கப்பல் நிலைகொள்வதற்கு அனுமதி வழங்கியது அக்கப்பல் 750 கிலோமீட்டர் வரையிலுள்ள பகுதிகளைக் கண்காணிக்கும் உளவுத்துறை கப்பல் மூலம் இந்தியாவின் தெற்குப்பகுதிகளைக் கண்காணிப்பது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்டுள்ள பெரும் சவாலாகும்.
சீனாவின் ஊடுருவலுக்கும், ஆக்கிரமிப்புக்கும் வழிகோலும் இலங்கை அரசின் செயல்பாடு இந்தியா தமிழீழ நாட்டுக்குச்செய்த பச்சைத்துரோகமாகம் போன்றதே ஆகும் . இந்திய நாட்டின் பிராந்திய நலன்களுக்கு ஒருபோதும் ஏற்புடையதல்ல என்பதை இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகள் எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இதைக் கருத்தில் கொண்டு இந்தியா பாதுகாப்பு உத்திகளிலும், வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். கச்சத்தீவை மீட்டு இந்தியாவுக்கான கண்காணிப்பு மையமாக மாற்றிக் கொள்வதுடன், இலங்கைத் தமிழர்களை ஆதரித்து அவர்களை வடக்கு இலங்கையில் அதிகாரம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும்”
இலங்கை இந்தியப் பெருங்கடலில் அது தமிழர் கடல் தமிழ்ப் பகுதிகளின் ஆதரவைப் பெறுவதில் இந்திய அரசு தோல்வியடைந்துவிட்டது இந்தியா இலங்கையோடு எவ்வளவுதான் நெருக்கமாக நட்புறவு பேணினாலும், பொருளாதார உதவிகளை வாரி வழங்கி, நிதியை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் இலங்கையின் சீன ஆதரவு நிலைப்பாடு ஒருநாளும் மாறப்போவதில்லை . ஐ.நாவில் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் தவறி வருகிறது இந்திய ஒன்றிய அரசு தமிழர் விரோத, வெளியுறவுக் கொள்கைகளால் இந்தியா இந்த நிலைமையில் வந்து நிற்கிறது. இலங்கையில் இந்தியா தன் இருப்பைத் தக்கவைக்கத் தமிழர்களின் ஆதரவு தேவை என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். தமிழர் கடல் மகா சமுத்திரம் அமைதி மண்டலமாகவும் இந்தியாவின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். ஆனால் அங்கே இன்றைக்கு உள்ள சூழல் என்னவென்றால் சீனா இலங்கையை தன் கையில் வைத்துக்கொண்டு ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு வணிகம் செய்ய இந்து மகா சமுத்திரத்தை ஆக்கிரமித்துள்ளது.
உலகெங்கும் வாழும் 15 கோடிக்கும் அதிகமான தமிழர்களின் பெருந்தாயுமாக விளங்கும் தமிழ்நாட்டை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியத் தமிழர்களின் தேசம் தேசியம் என வரலாற்றையும் உணர்வுகளையும் துளியும் மதித்திடாது தமிழ் இன அழிப்புச் செய்த செய்துகொண்டிருக்கும் சிங்களர்களோடு உறவு கொண்டாடி, நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ் இனப்படுகொலையை நடத்தி முடித்து, மூடி மறைத்த துரோகத்தின் விளைச்சல். ஒருவேளை இந்நேரம் இந்தியாவின் தலையீட்டில் தமிழீழம் உருவாகியிருந்தால் இப்போதைய சூழ்நிலை வேறு எப்படி மாறியிருக்கும் என்பதை அவர்கள் சிந்திக்காமல் இருக்க மாட்டார்கள். ஆனபோதிலும் இந்தியாவுக்கு இணையாக அந்த மேற்சொன்ன ஏதாவது மாற்றுச் சக்தியோடு நாம் ஈழத்திற்கான முன்னெடுப்பைச் செய்தால் அதில் நமக்கு வெற்றியும் கிடைத்தால் அனைத்து நாடுகளும் ஈழத்தை ஆதரிக்கும் போது இந்தியா தனித்து விடப்பட்டது போன்ற ஒரு நிலை ஏற்படும்.வேறு வழியின்றி அவர்கள் ஆதரிக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.
சேயோன் :- தமிழீழம் கிடைத்திட நாம் என்ன செய்ய வேண்டும் ?
நிலவன் :- தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் திறந்துள்ள அரசியற் செயற்பாட்டு வெளியுள் பிரவேசித்துள்ள தமிழினத்தின் உரிமைப்போராட்டமானது, இலங்கை மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்துலகப்பரப்பில் காத்திரமாகத் தடம் பதித்துள்ளது.
இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளைப் பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பனவற்றுள் தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய தனிநாட்டுக் கோரிக்கையை உலகத் எங்கெல்லாம் வாழுகின்ற தமிழர்கள் ஒன்றிணைந்து வலியுறுத்தும் போது தான், அதனைச் சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளும். முன்னரைப் போன்று, இந்தக் கோரிக்கையும், அதற்கான எந்தவொரு வழியிலான போராட்டமும் இலங்கையில் வலுப்பெறாத சூழலில், சர்வதேசம் இதுபற்றிக் கண்டுகொள்ளவே மாட்டாது. ஆனால் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை தமிழ்நாடு, உட்படத் தமிழர்கள் வாழுகின்ற நாடுகள் எல்லாம் மக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் புவிசார் அரசியல் புறச்சூழல், தமிழீழத் தனிநாட்டை அமைக்கச் சாதகமாக உரிமையோடு நாம் மக்கள் சக்திப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இந்தியாவை நம்பியும் அமெரிக்காவை நம்பியுமே இறுதிக்காலப் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைய உலக அரசியல் சூழலில் உலகில் புதிய நாடுகளின் பிறப்பை எந்தவொரு நாடும் விரும்பாத சூழலே உள்ளது. இதற்குத் தமிழீழம் ஒருபோதும் விதிவிலக்காகி விடமுடியாது. ஆனால் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் தமிழின அழிப்புக்குப் பரிகார நீதியை நிலைநிறுத்தி தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை எமது தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது அடுத்த கட்ட நகர்வை மேற் கொள்ள வேண்டியதானது காலத்தின் கட்டாயமாக அமையக் கூடும்.
உலகம் எல்லாம் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வாழுகின்றோம். இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற பல கோடிக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் சாதிக்க ஒன்றிணைவே தமிழ் மக்களின் சுபீட்சதின் திறவுகோலாக அமைய முடியும் . மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் சுமந்த விடுதலைத் தாகத்தினை அவர் முன்னுரைத்த புரட்சி என்பது ஒரு இலட்சியத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பினை தவறாது செய்வது என்பதேயாகும். “எமக்கு விடுதலை வேண்டும், அதை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை” என்ற புரட்சிகரமான எண்ணத்தினை நாம் ஒவ்வொருவரும் நம் மனதில் விதைத்துக்கொள்ள வேண்டும். அதுவே மக்கள் புரட்சிக்கான அடிப்படை அடித்தளம்.
இந்தியாவையும் இந்தியா போன்ற வல்லரசுகளையும் உலக அரசியல் போக்குகளையும் கூர்மையாய் அவதானித்து, அவர்களை எப்படிக் கையாளுவது என்ற இராசதந்திரத்துடன் நகர வேண்டும் அல்லது நகர்த்த வேண்டும் . ஈழத் தமிழர் ,புலம்பெயர் தமிழர், தமிழகத் தமிழர் ஆகிய மூன்று தளங்களில் ஒருங்கிணைந்த செயல்பட வேண்டும். ரோ-உளவு அமைப்பில் , உளவுத்துறை நிறுவனங்களின் அல்லது அரச உளவியந்திரங்களின் செயற்பாடுகளை துல்லியமாக்கப் புரிந்து கொள்ள வேண்டும் இந்தியச் சரணாகதி அரசியலைத் தவிர்த்து ஒவ்வொரு தளத்திற்கும் தனித் தனிக் கடமைகள் உண்டு. எனச் செயற்பட வேண்டியது வரலாற்றுக் கடமை, மாவீரர் கண்ட கனவை நனவாக்கச் சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்கும் புனிதப் போரில் இறுதிவரை உறுதியுடன். தாயக மண்ணையும் மக்களையும் காக்கும் புனிதப் போரில் சத்திய இலட்சியத் தீயில் தம்மையே விதையாக்கி சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களையும் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் மனதில் நிறுத்தி தமிழீழ அழிப்பிற்கு நீதி கேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி உலகத் தமிழர்களாய் ஒன்றிணைய வேண்டும்
சேயோன் :- இந்தியாவுக்கு எதிராகப் பரப்புரை செய்வதால் மீண்டும் தெற்காசியப் பிராந்தியத்தின் ஒரு வல்லாதிக்கத்தின் எதிர்ப்புக்கு வழிகோலிடுவது போல் இருக்கிறதே? இந்தியாவைப் பகைத்துக் கொள்வதால் தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கைக்குச் சர்வதேச அளவில் பின்னடைவு ஏற்படாதா?
நிலவன் :- தமிழீழ விடுதலை என்பது 75 ஆண்டு காலமாக நடந்துவரும் அரசியல் விடுதலைப் போராட்டம். தங்களுடைய இனத்தைத் திட்டமிட்டு அழித்துவரும் சிங்கள பௌத்த இனவாத அரசின் பிடியிலிருந்து விடுபட்டு தனிநாடு காண்பது மட்டுமே, ஈழத் தமிழினத்தை அழிவின் பிடியிலிருந்து காத்துக்கொள்வதற்கான ஒரே வழி என்பதில் உறுதியுடன் இருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதப்போர் மௌனம் கான இந்திய ஒன்றிய அரசும் தமிழக அரசும் அரசுகளின் தலைவர்களும், அதிகாரிகளும்தான் காரணம் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க, இலங்கை அரசுடன் கைகோர்த்து ஒரு லட்சத்து நாட்பத்தி ஆறாயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை அழித்தொழிக்க இந்திய மத்திய ஒன்றிய அரசு உதவியதா இல்லையா? தமிழ் இனத்தை அழித்தொழித்த அரசுக்கு எதிராகப் பரப்புரை செய்வதில் என்ன தவறு?
இலங்கை சிங்கள பௌத்த இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு எல்லா வகையிலும் உதவி, தமிழனைக் கொன்று குவித்த குருதிக் கறைபடிந்த இந்திய ஒன்றிய அரசு விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய அரசாங்கமும் இருந்ததால், பொதுமக்கள் உயிரிழப்புகளைக் கண்டு கொள்ளவில்லை.2009 போரின் இறுதி ஐந்து மாதக் காலப்பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லையெனச் சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் அடிக்கடி வாக்குறுதிகளை அளித்த போதிலும் பெருமளவிலான பொதுமக்கள் அரச படைகளின் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழீழம் எனும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கோரிக்கை இந்தியாவின் ஒற்றுமைக்கு இறையாண்மைக்கும் அச்சறுத்தல் என்றும் அது இந்தியாவைப் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்று காங்கிரஸ் மற்றும் திராவிடக் கைக்கூலிகளினதும் இந்திய உளவு முகவர்களினதும் பிரச்சாரத்தை நம்புகிறது.
தமிழீழம் அமைந்தால் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக நிற்போம் என்றும், இந்த பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எதிரான சக்திகளைக் காலூன்ற விட மாட்டோம் என்றும் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் ஒவ்வொரு மாவீரர் நாள் உரையிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். அவர் கூறியதோடு மட்டுமல்ல, புலிகளின் மதியுரைஞர் அண்டன் பாலசிங்கம், இந்திய அதிகாரிகளோடு இது பற்றிப் பேசினார். ஆனால், புலிகளின் இந்தக் குரலை இந்தியா ஏற்கவில்லை! என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே வேலை புதுதில்லியில் இலங்கைத் தூதராக இருந்த பிரசாத் கரியவாசம், “இலங்கையில் தமிழர்கள் தவிர்த்து – இந்தியாவில் தமிழர்கள் தவிர்த்து நாமெல்லாம் ஒரே இனம்” என்று வெளிப்படையாகப் பேசினார். அந்தப் பேச்சுக்கு இந்தியா ஒன்றியம் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை! காங்கிரசு – பா.ஜ.க. கட்சிகள் மறுப்புத் தெரிவிக்கவில்லை! எனவே, இவர்கள் எல்லோரும் ஆரிய இனவாதத்தோடு உடன்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்!
உலகெங்கும் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழினம் உலகின் பெருமை மிக்க இனமாக உலகறியச் செய்த தமிழர் , தமிழீழ விடுதலைப் போர் முடிந்துவிட்டது, புலிகள் வீழ்ந்து விட்டார்கள் எனச் சிங்கள -இந்தியத் தமிழ் இன அழிப்பு கூட்டுப் படை மேற்கொள்ளும் பொய்ப் பரப்புரைகளை அதிகரித்து வரும் இந் நேரத்தில் தமிழகத்தில், தமிழ்த் தேசிய விடுதலை உணர்வு வலுப்பெற வேண்டும். களத்திற்கு வலுவ்வூட்ட வேண்டும். பன்னாட்டு அரசியல் சூழலில் மாற்றங்கள் வரும்போது, பல புதிய நாடுகள் பிறக்கத்தான் போகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வலுவான அமைப்பும், ஆற்றல்மிக்க அரசியல் உத்தியும்தான் இன்றைக்குத் தேவை, உருவாக்குவதும் நம் தேசியக் கடமை. இதை யாராலும் தடுக்க முடியாது.
“நாம் மீண்டும் எழுவோம்!
தமிழீழம் பிறக்கும்!
எம் மாவீரர்களின் கனவு பலிக்கும்”