தேசத் துரோக வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் புழல் சிறையில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இதன் மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
ராணி சீதை மகாலில் கடந்த 2009ல் நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இவ்விழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோமீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3ம் தேதி வைகோவுக்கு சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
ஏப்ரல் மாதம் 17ம் தேதி, 15 நாள்கள் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் வைகோ. அப்போது நீதிபதியிடம், தான் பிணையில் செல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்ததால் காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் வைகோ.
இதனால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வைகோவின் காவலை வரும் ஜூன் 2ம் தேதி வரை நீட்டிப்பு செய்தது.
இந்த நிலையில் தற்போது வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.