யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் மையமாக வடமராட்சி துன்னாலை மாறி வருகின்றது என யாழ்மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
துன்னாலையில் உயிர்கொல்லிப் போதைப்பொருளான ஐஸ்போதையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இளைஞர்களின் கைகளுக்கு மிக இலகுவாகக் கிடைக்கும் போதைப் பொருளாக ஐஸ் மாற்றம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் பல தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு இது தொடர்பான அனைத்து விடயங்களும் தெரியும். எனினும் பொலிஸார் இந்த விடயத்தில் மௌனமாக இருக்கின்றனர் என்றும் கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் பொலிஸாரிடமும், மாவட்டச் செயலகத்திடமும், மருத்துவமனையிலும் வெவ்வேறு தரவுகள் பேணப்படுகின்றன. இந்தத் தரவுகளை வெவ்வேறு தளங்களில் அல்லாமல் ஒரே தளத்தில் பேணவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மாவட்டச்செயலர் அம்பல வாணர் சிவபாலசுந்தரன் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையான பலர் தாமாக விரும்பி மறுவாழ்வுக்கு வருகின்றனர் என்று தேசிய அபாயகர ஓளட தங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை யின் வடமாகாண இணைப்பாளர் சியாமினி தியாகுலன் தெரிவித்தார்.