சிங்கள இனவாத அரசாங்கம் அன்று முதல் இன்று வரை புத்த மதம் என்கின்ற பேரினவாத தத்துவத்தில் தமிழர்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட தமிழின ஆழிப்பை நடாத்திக்கொண்டு வருகிறது நிகழ் காலத்தின் தேவை கருதி மீள் வெளியீடாக புத்தர் சிலையும் தமிழீழ மண்பறிப்பும் என்ற கட்டுரையை தாரகம் இணையத்தில் இணைக்கின்றோம்
எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. -தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே .பிரபாகரன்
சிறிலங்கா அரசியல் சாசனம் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குகிறது. 1978ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இன்றைய அரசியல் சாசனத்தின் சரத்து 9 புத்தமதத்தை ஆதிக்க நிலையில் வைத்துள்ளது. பிற மதங்களுக்கு யாதொரு உரிமையும் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக “ஒற்றை மதச் சார்புள்ள நாடு என்று சிறிலங்கா வகைப்படுத்தப்படுகிறது. அதே சாசனத்தின் 10, 14(i)(e) சரத்துக்களுக்கு அமைவாகப் புத்த மதத்தின் முதன்மையைப் பேணும் பொறுப்பை அரசுமீது சரத்து 9 சுமத்துகிறது. சரத்து 10 கூறுவது யாதெனில் “ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கருத்துச் சுதந்திரம், மனச்சாட்சி மற்றும் மதச் சுதந்திரம் இருப்பதாகவும் தான் விரும்பிய மதத்தைக் கடைப்பிடிப்பதற்கும் தனது மத நம்பிக்கைக்கு அமைவாக தெரிவுசெய்வதற்கும் உரித்து உண்டு ” சரத்து 14(i) (e) தனியாகவோ பிறருடன் ஒன்றிணைந்தோ, பகிரங்கமாகவோ அல்லது பிரத்தியேகமாகவோ மத அனுஸ்டானங்களைச் செய்வதற் கும் மதபோதனை செய்வதற்குமான உரித்துக்களை வழங்குகின்றது. பெயரளவில் 10, 1414(i) (e) என்பன சரத்து 9 மீது கட்டுப் பாட்டை செலுத்துவது போன்ற தோற்றப்பாடு இருப்பினும் நடை முறை வித்தியாசமாகி இருக்கிறது.
சிறிலங்காவின் தேசிய மதம் புத்தமதம் என்பது எதுவிதத்திலும் மறுக்க முடியாத உண்மை. அண்மைக் காலத்தில் சிறிலங்கா அதியுயர் நீதிமன்றம் வழங்கிய இரு முக்கிய தீர்ப்புக்கள் “புத்த சாசனத்தின் மேலாதிக் கத்தையும் அதைப் பாதுகாக்கவேண்டிய அரசின் பொறுப்பையும்|| வலியுறுத்துவதோடு பிற மதத்தினரின் குறிப்பாக கிறிஸ்தவ மதத்தினரின் “மதப் பிரசாரம்” செய்யும் உரித்தையும் மறுக்கின்றன. மேற்கூறிய சரத் துக்கள் 10, 14(i)(e) ஆகியவற்றில் பிரசாரம் செய்யும் உரித்து ((PROPAGATE) வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாரம் செய்து மதமாற்றம் செய்யும் உரித்து கிறிஸ்தவ மதத்துடன் ஒன்றிணைந்ததாகவும் அதை மறுப்பது ஒரு பாரிய உரிமை மறுப்பு என்றும் வாதிடப்படுகிறது. சிறிலங்கா அதியுயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்னவென்றால் சரத்து 9 வழங்கும் உரித்திற்கு அமைவாக புத்தசாசனத்தைப் பாதுகாத்து ஆதரிப்பதோடு அரசு பிற மதங்களின் விரிவைத் தடுக்கும் விதத்தில் செயற்படவேண்டும் என்பதாகும். சிறுபான்மை இன, மத, மொழியினரின் உச்ச உரிமைப் பாதுகாவலனாக இந்தியாவின் உச்ச நீதிமன்றம் செயற்படும் இவ்வேளையில் சிறிலங்கா அதியுயர் நீதிமன்றம் பெரும்பான்மையினரின் உரித்தைப் பாதுகாப்பதில் தீவிரமாகச் செயற்படுகின்றது. 1978ஆம் ஆண்டுச் சாதனத்தின் மிகவும் பிற்போக்கான சரத்துக்களில் சரத்து 9 முதலிடம் வகிக்கிறது. மேற்கூறிய சரத்து 9 வெளிப்படுத்தும் பௌத்த அடிப்படைவாதச் சிந்தனை மகா வம்ச காலத்தில் இருந்து தொடரும் நச்சுக் கருத்தாகும். சிங்கள – பௌத்தம் என்று வழங்கும் மதத் தீவிரவாதம் இத்தீவில் தோன்றுவதற்கும் இது காரணமாக அமைகி றது. இனப்பிரச்சினை பூதாகர வளர்ச்சி காண்பதற்கும் தீர்க்கப்பட முடியாத தூரம் அது சென்றுவிட்டதற்கும் புத்த துறவிகள் எல்லாவகைச் சமாதான முன்னெடுப்புக்களுக்கும் காட்டும் கடும் எதிர்ப்பு இந்நாட்டின் துன்ப நிகழ்ச்சியாகப் பார்க்கப்படுகின்றது. சுதந்திரத் திற்குப் பின்பு தோன்றிய வன்முறைகள் 1956இல் நிறைவேறிய தனிச் சிங்களச் சட்டத்துடன் ஆரம்பிக்கின்றன. தமிழுக்கு உரிய இடம் கொடுக்கும் நோக்கில் செய்யப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் புத்த பிக்குகளின் நேரடித் தலையீட்டினால் கைவிடப்பட்டது. இந்த ஒப்பந்தம் இவ்வாறு ஒருதலைப் பட்சமாக பிரதமர் பண்டார நாயக்காவால் கிழிக்கப்படாதிருந்தால் இன்றும் நாடு இரண்டுபடவேண்டிய அவசியம் இல்லை யென்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். தனிச் சிங்களச் சட்டமும் தமிழர்களுடன் செய்யப்படாதிருக்கும் அதிகாரப் பகிர்வும் நாட்டின் சீரழிவுக்குக் காரணமாக இருப்பதற்கு புத்த பிக்குகளே மூல காரணமாவர்.
1948 ற்கு பின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தினால் கிழக்கு மாகணத்தில் 7000 சதுர கிலோமீற்றரையும் வடக்கில் 600 சதுர கிலோமீற்றரையும் அரசு ஆக்கிரமித்துள்ளது .காலத்திற்கு காலம் அரசு நடத்தும் ‘எல்லை மீள் வரைவு (BOUNDARY DEMARCATION) சிங்களவர் குடியேறிய தமிழர் மண்ணை சிங்கள மாகாணங்களுடன் இணைக்கும் நோக்கை கொண்டது “மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உருவாக்குகின்றனர், ஆனால் தாம் விரும்பியவாறு அதைச் செய்ய அவர்களால் முடிவதில்லை, தங்களால் தெரிவுசெய்யப்பட்ட இலக்கில் அவர்களால் செய்ய முடிவதில்லை. கடந்த காலத்தில் இருந்து தொடரும் சூழலில் இருந்துதான் மனிதர்கள் தமது வரலாற்றை உருவாக்குகின்றார்கள் என்கிறார் கார்ல்மாக்ஸ் (EIGHTEENTH BRUMAIRE OF LOVIS BONAPARTE KARL MARX) மகாவம்சத்தின் கதாநாயகன் துட்டகெமுனு பல்லாயிரம் தமிழர்களைக் கொன்றொழித்தபின் தான் நடத்திய படுகொலைகள் பற்றிச் சிந்தித்து சோகத்தில் ஆழ்ந்தபோது அவனைத் தேற்றுவதற்கு வானில் பறந்தவாறு சில தேரர்கள் வந்தடைகின்றனர். உயிர்க்கொலையை வெறுத் தொதுக்கும் புத்த மதத்தைச் சேர்ந்த இவர்கள் பாவமன்னிப்பு வழங்குகின்றார்கள்.
மகாவம்சம் கி.பி 6ஆம் நூற்றாண்டில் முற்றுப்பெற்ற மதநூல். 1956இல் எழுதப்பட்ட பௌத்தமத வரலாறு என்ற நூலின் ஆசிரியரான புத்த மதத்துறவி பிக்கு றாகுல மேற்கூறிய துட்ட கெமுனு தொடர்பான நிகழ்ச்சி பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? “இளம் காமினியின் கொடியின்கீழ் முழுச் சிங்கள இனமும் அணிதிரண்டது. சிங்களவர்கள் மத்தியில் தேசியம் அப்போது ஆரம்பித்தது. ஆரோக்கியமான இளம் இரத்தமுடைய புதிய இனம் புத்தமதத்தின் வழிநடத்தலில் உருவாகியது. மத அடிப்படையிலான அந்த அரசனின் தேசியம், கிட்டத்தட்ட ஒரு தீவிரவாதம் போன்று சிங்கள சமுதாயத்தைத் தட்டியெழுப்பியது. இந்தச் சூழலில் ஒரு புத்த மதத்தைச் சேராதவன் மனித குலத்தைச் சேர்ந்தவனாக கணிப் பிடப்பட முடியாது (A HISTORY OF BUDDHISM IN CEYLON . THE ANURADHAPURA PERIOD BY BHIKKU RAHULA M.D GUNASENA PUBLICATION . COLOMBO 1956) துட்டகெமுனு எல்லாளனுக்கு எதிராக நடத்திய போருடன் ஒப்பிட்டு வடமராட்சி ஒப்பிரேசன் லிபரேஷன் நடவடிக்கை பற்றிய நூலை சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த கப்டன் திலக் சேனநாயக்கா எழுதியுள்ளார். கிட்டத்தட்ட ஆயிரம் வரையிலான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுத் தெருக்களில் சடலமாக வீசப்பட்டனர். பெருந்தொகையான இளைஞர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு தெற்கிலுள்ள பூசாபோன்ற வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இத்தனை கொடுமைகளையும் கண்டு கொதித்தெழுந்த புலிகள் கரும்புலியாக மாறினர். ஒப்பரேசன் முன்னேறிப் பாய்ச்சல், இடிமுழக்கம், ரிவிரெச, ஜெயசிக்குறுய் போன்ற நடவடிக்கைகளிலும் இந்த அதிகாரி பங்குபற்றியவர்.
2004ஆம் ஆண்டு வெளிவந்த இவருடைய நூலில் “சென்ற காலத்தில் துட்டகெமுனு நடத்திய ஒப்பிரேசன் விஜித்தபுர போர் நடவடிக்கைக்குப் பின்பு மிகவும் விஞ்ஞானபூர்வமாக நடத்தப்பட்ட போர் நடவடிக்கையாக ஒப்பிரேசன் வடமராட்சி லிபிரேசனைக் குறிப்பிடலாம்” என்ற வியப்பான செய்தி காணப்படுகிறது. இந்த அதிகாரி கெமுனுவாட்ச் படையணியைச் சேர்ந்தவர். (VADAMARADCHI LIBERATION OPERATION AND NORTHERN BATTLES BY CAPTAIN THILAK SENANAYAKE. 2004) வன்முறைக்கும் வன்முறையைத் தூண்டும் கோட்பாடுகளுக்கும் காத்திரமான மாற்றீடாக புத்தமதக் கோட்பாடு கள் இடம்பெறுகின்றன என்கிறார் பங்கஜ் மிஸ்ரா. (AN END TO SUFFERING THE BUDDHA IN THE WORLD BY PANKAJ MISHRA, 2005) முற்று முழுதாகச் சாந்தி சமாதானம் என்பவற்றை முன்னெடுக்கும் புத்தமதக் கோட்பாடுகள் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றோர் சிந்தனை மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மிஸ்ரா சுட்டிக்காட்டுகிறார்.
இந்திய வரலாற்றின் மிகப்பெரிய இந்தியன் என்றும் கௌதம புத்தரை, ஜவகர்லால் நேரு வர்ணிக்கிறார். இத்தனை சிறப்பு மிக்க பரமஞானி சிறிலங்காவில் படும்பாட்டை நினைக்கும்போது துயரமாக இருக்கிறது. உயிர்க் கொலை செய்வோருக்கு மன்னிப்பு வழங்கும் தூண்டு கருவியாகவும், வன்முறையைத்தூண்டுபவர்களும், இனங்களுக்கிடையிலான அமைதிக்குத் தடைக்கல்லாகவும் இத்தீவின் புத்தபிக்குகள் ஆரம்ப காலந்தொட்டு இடம் பெறுகின்றனர். புத்தரின் போதனைகள் மிகவும் சுருக்கமானவை. ஆசைகள் துன்பத்திற்குக்காரணமாகின்றன. ஆசைகளைத் துறந்தவன் விடுதலை பெறுகிறான். நன்கு வேயப்படாதவீட்டுக் கூரையிலுள்ள துவாரத்தினூடாக மழைநீர் உள்நுளைவதுபோல் ஐம்புலனை அடக்காதவரிடம் தீயசெயல்கள் குடிகொள்கின்றன.
கோபம், பேராசை, தீய நடத்தைஎன்பவற்றைத் துறந்தவனே துறவி. கொல் லாமை அவனுடைய மிகப்பெரிய நற்செயல்.கி.பி 563இல் பிறந்து தனது 80வது வயதில் இறந்த கௌதமர் காலத்தால் அழியாத மதபோதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் விட்டுச்சென்றார். பிக்குகள் என்போர் தமக்கென வாழாதவர்கள். உலகின் ஐந்து மிகப்பெரிய மதங்களில் ஒன்றாக பௌத்தமதம் கணிப்பிடப்படுகிறது. சிங்கள – பௌத்தம் என்று ஒன்றுமே கிடையாது. ஆனால் அப்படி இருப்பதாக சிறிலங்கா மதவாதிகள் கூறு கின்றனர். 2200 வருடங்களுக்கு முன் சிறி லங்காவுக்கு இந்தியாவிலிருந்து பௌத்தமதம் கொண்டுவரப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. புத்த சங்கத்தின் பாரிய வீழ்ச்சி பற்றி சிங்கள பேரினவாதத்தின் குரலாக ஒலிக்கும் திவயின சிங்களப் பத்திரிகை தனது 26 பிப்பிரவரி, 1998ஆம் திகதி இதழில் விரிவாகக் குறிப்பிடுகின்றது.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியபின் பெண்களைக் கொலைசெய்யும் பிக்குகள் தொடக்கம், வழிப் பறியில் ஈடுபடுவோர் உள்ளடங்கலாக புத்த சின்னங்களைத் திருட்டுத்தனமாக விற்பனை செய்யும் புத்தபிக்குகள் வரையிலானோர் வரலாற்றை விலாவாரியாக எல்லாவல மெதானந்த என்பவர் எழுதியுள்ளார். இதுபற்றிக் குறிப்பிடும் ஜனவரி 22, 1999ஆம் நாள் ஐலண்ட் பத்திரிகை ஷஷபிக்கு தர்மத்திற்கு உட்படாத ஆயிரக்கணக்கான இதுபோன்ற சம்பவங்கள் பத்திரிகை வாயிலாக வெளி வருகின்றன என்று தெரிவித்துள்ளது. அரசியல் ஈடுபாடு புத்த சங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாய் அடையாளம் காணப்படுகிறது. பெரும் எண்ணிக்கையில் தமிழர்களைக் கொலைசெய்த துட்டகெமு னுவை “மதத்திற்காகக் கொலைசெய்வது பாவமில்லை என்று தேற்றிய புத்தபிக்குகள் புத்த மதத்தைச் சிதைத்த முதற் குற்றவாளி களாகக் காணப்படுகின்றனர்.
பரிநிவாரணம் அடையமுன்பு “தனது தத்துவ போதனைகள் 500 வருடங்கள் மாத்திரம் நிலைக்கும் ” என்று புத்தர் கூறியதாக ஒரு பாரம்பரியச் செய்தி உண்டு. தேசிய சங்கக் கவுன்சில் (NATIONAL SANGHA COUNCIL) என்ற அமைப்பை உருவாக்கிய மதுலுவாவேசோபிததேரர் சிங்கள – பௌத்த மேலாதிக் கத்தை முன்னெடுப்பதோடு, இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இத்தீவில் இடமில்லை என்ற கருத்தை முன்வைத்தார். தனது உயிரை எடுப்பது புத்ததர்மம் ஆகாது என்று தெரிந்தும் ஜாதிகஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் ஒமல்லே சோபித தேரர் அண்மையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துள்ளார். நான்கு புத்தமத பீடங்களின் தலைவர்கள் இவருடைய உயிரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள்தான் இன்றும் வேதனையானது.
சிங்கள மக்களின் வரலாற்று நூலான மகாவம்சத்தை மொழிபெயர்த்த வில்ஹெம் கெய்கா (WILHEM GEIGER) பின்வருமாறு மகாவம்சம் பற்றிக் கூறுகிறார். “அதில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதைவிட என்ன சொல்லப்படாமல் மறைக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஆராய்வதே மிகவும் சிரமமான பணி.”கெய்கர்,எஸ்.தெரனியகல போன்றோரின் ஆய்வுகளின்படி கி.பி 500இல் வந்ததாகக் கூறப்படும் விஜயன் இலங்கையின் முதல் மனிதன் அல்ல. மகாவம்சம் மறைக்க முயலும் தென்னிந்திய மேகவிதிக் கலாசாரம் இலங்கை யில் நன்கு பரவியிருந்தது என்பதை இரு ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பலவிதமான புதைபடிவச் சான்றுகள்இதை வெளிப்படுத்துகின்றன. பலாங்கொடை மனிதன் பற்றிய ஆய்வுகளும் பொம்பரிப்பு பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகளும் தென்னிந்தியத் தொடர்பைக் காட்டுகின்றன. பௌத்தமதம் தழுவிய தமிழர்கள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பெருமளவில் வாழ்ந்திருக்கிறார்கள். இம்மதத்தின்வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றியிருக்கிறார்கள் என்ற உண்மையை மகாவம்சம் கூறாமல் விட்டிருக்கின்றது.
தென்னிந்திய வரலாறுகளின்படி அசோகச்சக்கரவர்த்தி காலத்தில்பௌத்தமதம் தென்னிந்தியாவில் பெருமளவில் பரவத்தொடங்கியது. அதன்பின் கி.மு 250இல் புத்த துறவிகள் குழுவொன்று மகிந்த தலைமையில் இலங்கை சென்றது. காவிரிப் பட்டினத்தில் இருந்து கடல் மார்க்கமாக இவர்கள் இலங்கை சென்றனர். காவிரிப் பட்டினத் தில் தங்கியிருந்தபோது ஏழு புத்தவிகாரைகளை மகிந்த அங்கு கட்டுவித்தான். கி.பி 2இல் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணி மேகலை ஆகியவற்றில் இதுபற்றிய குறிப்புக் கள் காணப்படுகின்றன. தேவநம்பியதீசனின்மாமனாகிய அரித்தகர் தென்னிந்தியாவில் மகிந்த முன்னெடுத்த மதப் பணிகளுக்கு உதவினார். இவர் பெயரால் அரிதாபட்டி என்ற கிராமம் மதுரை மாவட்டத்தில் இன்னும் இருக்கிறது. இக்கிராமம் முன்னர் புத்தமதம் வளர்த்த மையமாக இருந்தது. கி.பி 12வரை தென்னிந்தியாவில் பௌத்தமதம் நிலை கொண்டிருந்தது. இரண்டாம் பராக்கிரமபாகு காலத்தில் கி.பி 1236 – 1268 தர்மகீர்த்தி என்ற பாண்டியநாட்டு தமிழ்ப் புத்ததுறவி இலங்கை வந்து அனைத்துலக பௌத்த மாநாடொன்றை நடத்தினார். மகாவம்சத்தின் தொடர்ச்சியான சூலவம்சம் என்ற நூலையும் தத்தவம்சம் எனும் இன்னுமோர் நூலையும் இவர் எழுதினார். பாளிமொழியில் இருந்த திரிபீடகத்திற்கு தமிழர்களாகிய புத்தகோச தர்மபாலாவும், புத்த தத்தவும் உரைக்குறிப்புக்கள் எழுதினர்.
சோழநாட்டைச் சேர்ந்த சங்கமித்திரா என்ற பெண் புத்ததுறவி கி.பி 4இல் இலங்கை சென்று அந்த நாட்டு அரசனை மகாயான பௌத்தத்திற்கு மதமாற்றம் செய்தார். இதன் காரணமாக மகாவிகாரை அழிக்கப்பட்டு மகாயன பௌத்தத்தின் பீடமாக அபயகிரி விகாரை தரம் உயர்த்தப்பட்டது. மகாவிகாரை – அபயகிரி பீடங்களுக்கு இடையில் முரண் பாடுகள் தோன்றியதோடு சிங்கள தமிழ்சச்சரவாகவும் மாறியது. என்றாலும் கி.பி 5ஆம் நூற்றாண்டு வரையான சோழநாட்டு புத்த தத்தா அனுராதபுரத்தின் மகாவிகாரைக்பெளத்த சிங்களப் பேரினவாதம் முன்னெடுக்கும் தர்ம தீபம் என்ற நச்சுக் கருத்து நாடு இரண்டுப்படுவதை ஊக்குவிக்கும் எனபது அரசியல் ஆய்வாளர்களின் முடிவு.புத்தரால் பெளத்தமதக் காவலாரக நியமிக்கப்பட்டவர்கள் சிங்கள இனத்தவர்களே .இலங்கை முழுவதும் புத்தர் அருளால் சிங்களவர்களுக்கு தரப்பட்ட புனித பூமி என்பன தர்ம தீபக் கோட்பாட்டின் முக்கிய அம்சங்களாகும் சிங்கள இனவாதத்தின் மூலப்பொருள் தர்ம தீபக் கோட்பாடு (THE DHRAMA DEEPA CONCEPT) குப் பொறுப்பாக இருந்தார்.
பின்வரும் தமிழ் நூல்களில் தமிழ்பௌத்தம் பற்றிய விரிவான தகவல்களைப் படிக்கலாம். மணிமேகலை, குண்டலகேசி, திருப்படிகம், வளையாபதி, வீரசோழியம், பிம்பிசாரகதை சிங்கள பௌத்தத்திலும் பார்க்கத் தமிழ்பௌத்தம் தொன்மை வாய்ந்தது. இதை மகாவம்சம் இருட்டடிப்புச் செய்துள்ளது. இலங்கையில் பௌத்தமதத் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வை மேற்கொள்வோர் சிங்கள மக்கள் பௌத்தர்களாக முன்பே இங்குள்ள தமிழர்கள் அதைத் தழுவி விட்டார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இதைக் கடும் பிரயத்தனம் எடுத்து மறைப் பதிலும் வடகிழக்கில் பரவலாகக் கிடைக்கும் பௌத்த சின்னங்களைத் தம்முடையவை என்று கூறும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் போக்கு இப்போது தீவிரமடைந்துள்ளது.
இலங்கையின் முதலாவது உள்ளூர் புதைபடிவ ஆய்வுத் திணைக்கள முதல்வரான பேராசிரியர் செனரத் பறனவிதான கந்த ரோடை புத்தமத அழிபாடுகளைப் பார்த்தபின் “இவை தமிழ்ப் பௌத்தர்களுக்கு உரியவை என்று கூறினார். இந்த நிலைப்பாடு மாற்றப் பட்டு கந்தரோடை எச்சங்கள் தம்முடையவை என்று சிங்களவர்கள் கூறுகின்றனர். இதற்குச் சில தமிழர்களும் ஒத்தூதி வருகின்றனர். இந்துக்களின் வழிபாட்டு இடங் களை அழித்தல், அதே இடத்தில் புத்தர் சிலை போன்றவற்றை அமைத்தல் ஒரு நெடுங்காலத் தந்திரோபாயமாகக் கடைப் பிடிக்கப்படுகிறது. டிசெம்பர் 22, 1984ஆம் நாள் உடனடியாக வெளியேறும்படி மணலாறு மக்களுக்குச் சிங்கள இராணுவம் ஒலிபெருக்கி மூலம் கட்டளை இட்டது. 42கிராமங்களைச் சேர்ந்த 4000 தமிழ்க் குடும்பங்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர்.
1987இன் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இப்பகுதிக்குக் கட்டளை அதிகாரியாக வந்த கேணல் டாட்டா தமது பழைய கிராமங்களைச் சென்று பார்வையிட அவர்களுக்கு அனுமதி அளித் தார். கொக்குளாய் அம்மன் ஆலயம் உடைக் கப்பட்டிருந்தது, அதே இடத்தில் புத்தர் கோயில் கட்டப்பட்டிருந்தது. திருக்கேதீஸ் வரத்தை பறங்கியர் இடித்துத் தள்ளியபோது அடியார்கள் “ஆதிகோணநாயகர் ” என்ற கோயிலைத் தம்பலகாமத்தில் கட்டினார்கள். சிங்களக் குடியேற்றம் தம்பலகாமத்தில் ஆரம்பிக்கப்பட்டபோது இக்கோயில் கவனிப்பாரின்றிச் சிதலமடைய விடப்பட்டுள்ளது. கந்தளாயில் புத்தகோயில்கள் எழுந்துள்ளன. அண்மைக் காலமாகத் தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை நாட்டும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் -முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாகவுள்ள பொத்துவில் பிராந்தியத்தில் ஏழுக்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.திருகோணமலை, மன்னார், ஓமந்தை போன்ற இடங்களிலும் புத்தர் சிலைகள் நாட்டப்பட்டுள்ளன. மன்னாரில் 16 ஏக்கர் நிலத்தை புத்தர்கோயில் அமைப்பதற்காகச் சிங்களப்படையினர் முட்கம்பி வேலிபோட்டு அடைத்துள்ளனர். பழமைவாய்ந்த ஓமந்தைப் பிள்ளையார் கோயில் வீதியில் புத்தர்சிலை அமைக்கப்பட்டு இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஓமந்தைப் பிள்ளையார் கோயில் மூடப்பட்டுள்ளது. பூசைகள் நடை பெறுவதில்லை. திருகோணமலை நகர சபைக்குச் சொந்தமான மணிக்கூட்டுச் சந்தி முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் புத்தர்சிலை நாட்டப்பட்டுள்ளது. அதன் பாதுகாப்பிற்காகப் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். புத்தமதக் கோட்பாடுகள் பௌத்த – சிங்களப் பேரினவாதிகளால் சிதைக்கப்படுகின்றன. அதேபோல் புத்தர் சிலைக்கும் களங்கம் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். புத்தமதம் ஆரம்பித்த எழுநூறு ஆண்டுகளுக்குப் பின்புதான் இந்தியாவில் புத்தர் சிலைகள் தோன்றின. கி.மு 6ஆம் நூற்றாண்டில் புத்தமதம் தோன்றியது. புத்தர் சிலைகள் கி.பி 2ஆம், 3ஆம் நூற்றாண்டுகளில்தான் உருவாக்கப்பட்டன. இந்த இடைவெளிக்காலத்தில் புத்தமதச் சின்னங்களான ஞானவிருட்சம் (அரசமரம்), தர்மச்சக்கரம் என்பன வழிபடப்பட்டன. மூவகை கலைப்பாரம் பரியங்களின் கூட்டாகப் புத்தர் சிலைகள் இடம்பெறுகின்றன. இன்றைய பாகிஸ்தானின் வட-மேற்குப் பகுதியில் அவை முதன் முதலாகத் தோன்றின. அப்போது கிரேக்க, ரோம கலைப் பாரம்பரியங்கள் வட இந்தியக் கலைவடிவங்கள் மீது ஆதிக்கம் செலுத்தின.
கிரேக்க கடவுளர்களின் பாணியில் புத்தரின் தலைப்பகுதி செதுக்கப்பட்டது. சிலையின் ஆடைகள் ரோமர்களின் ஆடை அணியும் பாணியில் போர்த்தப்பட்டன. வட – மேற்கு இந்தியாவில் இடம்பெற்ற கலைப் பாரம் பரியத்தை கிரேக்கோ – கந்தாரா (GRAECO – GANDHARA) பாரம்பரியம் என்பார்கள். இந்தப் பாரம்பரியத்தில் புத்தர் சிலைகள் வடிவமைக்கப்பட்டன. புத்தர்சிலை உருவாக்கத்தில் சில மாறாத அம்சங்கள் இந்தியாவில் தோன்றின. முகம் முட்டை வடிவத்திலும், கண்கள் தாமரை மலரைப் போன்றும் இருக்கவேண்டும் என்றும் வயிறுவரையான நெஞ்சுப்பகுதி ஓடுங்கியும் தோள் விரிந்தும், கைகள் நீண்டும் இருப்பதை வலியுறுத்தும் சிற்ப விதிமுறைகள் பிறந்தன. முழு உடலும் ஒழுங்காக வழுவழுப்பாக இருக்கவேண்டும் என்று சிலை களைப் பார்ப்போர் மனதில் சாந்தி ஏற்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. உலகின் தலைசிறந்த கலைவடிவங்களில் ஒன்றாகவும், பாரம்பரிய வழிபாட்டுச் சின்ன மாகவும் இடம்பெறும் புத்தர்சிலை, இராணுவ மேலாதிக்கக் குறியீடாகவும், தமிழருடைய மண்பறிப்பதற்கு உதவும் கருவியாகவும் சிங்கள பேரினவாதத்தால் மாற்றப்பட்டுள்ளது.சிறிய புத்தர் சிலையையும் அதன் பக்கத்தில்அரச மரக்கன்றையும் தமிழர் மண்ணில் முதற்கண் நாட்டுவார்கள்.
படிப்படியாக இராணுவப் பாதுகாப்பு, பிக்குகள் பிரசன்னம் என்பனவோடு சிங்களக் குடியேற்றக் கிராமமாக அது மாற்றப்படுவதோடு அதற்குச்சிங்களப் பெயரும் சூட்டப்படும்.இலங்கைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 65,525 சதுர கிலோமீற்றர். 1948க்குப்பின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்கு மாகாணத்தில் 7000சதுர கிலோமீற்றரையும் வடக்கில் 600சதுர கிலோமீற்றரையும் அரசு ஆக்கிரமித்துள்ளது. காலத்திற் குக் காலம் அரசு நடத்தும் “எல்லை மீள் வரைவு” (BOUNDARY DEMARCATION) சிங்களவர் குடியேறிய தமிழர் மண்ணை சிங்கள மாகாணங்களுடன் இணைக்கும் நோக்கைக் கொண்டது. முஸ்லிம்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை திகவாவியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான937 ஏக்கர் நிலத்தில் ஜெயவர்த்தனா அரசு சிங்களவர்களைக் குடியேற்றியது. திகவாவி யில் புத்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குடியேற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. சிங்களக் குடியேற்றம் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் செறிந்து காணப்படுகின்றன. 1921இல் திருமலைச் சிங்களவர்களின் விகிதம் 4.5மூ % இருந்தது. 1981இல் 33.6% ஆக உயர்ந்ததோடு இன்னும் உயர்ந்துகொண்டு போகிறது.
பௌத்த சிங்களப் பேரினவாதம் முன்னெடுக்கும் “தர்மதீபம்” என்ற நச்சுக் கருத்து நாடு இரண்டுபடுவதை ஊக்குவிக்கும் என்பது அரசியல் ஆய்வாளர் முடிவு. புத்தரால் பௌத்தமதக் காவலராக நியமிக்கப்பட்டவர்கள் சிங்கள இனத்தவர்களே. இலங்கை முழு வதும் புத்தர் அருளால் சிங்களவர்களுக்கு தரப்பட்ட புனிதபூமி என்பன தர்மதீபக் கோட்பாட்டின் முக்கிய அம்சங்களாகும். சிங்கள இனவாதத்தின் மூலப்பொருள் தர்மதீபக் கோட்பாடு (THE DHRAMA DEEPA CONCEPT) என்ற காரணத்தால் தமிழர்களுடைய இன, மொழி உள்ளிட்ட உரிமைகளையும் தாயகக் கோட்பாட்டையும் அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இனம், மொழி, மதம், மண் ஆகிய நான்கின் மொத்த வடிவமாகப் புத்தர் சிலை விவகாரம் உருவெடுத்துள்ளது. மூடனும் முதலையும் கொண்டது விடாஎன்பார்கள். இந்த நாட்டின் இன்றைய வரலாற்றை விளக்க இது போதுமானது.
-விடுதலை புலிகள் இதழ்