அன்பார்ந்த மக்களே.!
உண்மைக்குப் புறம்பான தகவல் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருப்போம்!
தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மகள் துவாரகா பெயரை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு வீடியோ ஒன்று உலகம் முழுவதும் பரப்பட்டு வருகிறது. இது இந்திய “றோ” நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட செயல்திட்டம் ஆகும். இச் செயல்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதை இந்திய வெளியகப் புலனாய்வு அமைப்பான “றோ” நிறுவனத்தின் உறுப்பினர்களாக புலம்பெயர் தேசத்தில் செயற்பட்டு வருகின்றார்கள். இதில் பலரின் ஒருங்கிணைப்பில், போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பு ஒன்றை இந்தியா உருவாக்க முயற்சித்து வருகிறது. இதன் ஊடாக நிதி திரட்டும் மோசடியிலும் ஈடுபட்டடுள்ளார்கள். இந்திய சிங்கள அரசுகள் கட்டவிழ்த்து விடும் பொய்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கிறது..
இந்திய புலனாய்வுச் சமூகத்தை மேற்கோள் காட்டுவதற்கு காரணங்கள் பல உண்டு. தமிழ் இன அழிப்பு யுத்தத்தின் உளவியல் போரை பின்னிருந்து நடத்துவது இந்தியா. இந்திய உளவுத்துறையினர் அன்றும் இன்றும் தாய்நிலத்திலும். புலத்திலும், தமிழகத்திலும் உள்ளார்கள். ஈழத்திற்கான விடுதலைப் போராட்டம் என்பதன் ஆரம்பமே ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தியவர்களின்” துப்பாக்கிகள், முதன் முதலில் எதிரியானவர்களை நோக்கி நீளாமல் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்களை நோக்கியே நீண்டது. ஏனெனில் எதிரியை விட துரோகிகளே ஆபத்தானவன் என்பது பொதுவாகவே உலகமெங்கும் ஆயுதப்போராட்டங்களை நடத்திய விடுதலை இயக்கங்களின் தாரக மந்திரமாகவே இருந்தது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் கிளை கட்டமைப்பில் இருந்து பணமோசாடிகளாலும், நிர்வாக சீர்கேடுகள் காரணமாகவும் விலக்கப்பட்ட, அல்லது தாமாக விலகிய சிலரைப் பயன்படுத்தி போலியான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றை இந்திய வெளியகப் புலனாய்வு நிறுவனமான “றோ” உருவாக்கி உள்ளது. தேசியத் தலைவரின் மகள் துவாரகா போராட்டத்தை முன்னெடுக்க தலைமை தாங்கப் போவதாகவும் தீவிரமான பரப்புரைகளை முன்னெடுத்திருந்தார்கள்
2023 நவம்பர் 27 அன்று தங்கை துவாரகா பெயரில் காணொளி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். தமிழீழத்திற்காக அரசியல் வழியில் தொடர்ந்து போராடுவோம் என துவாரகா பெயரில் பேசும் பெண்மணி இத்தியாவின் நலனை வைத்து போலித் தமிழ் தேசிய வாதிகள் எழுதிக்கொடுத்த அறிக்கையினை முடிந்தவரை முயற்சி செய்து படித்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்ட போராளிகள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் என்று தம்மை தாமே தீவிர செயற்பாடுகள் என்று காட்டிக்கொண்டு உலக உளவு நிறுவனங்களுடம் சேர்ந்து செயற்பட்டு வரும் இனத் துரோகிகளின் பயிற்சி மற்றும் ஆலோசனையும் அந்த பெண்மணியைப் பேசவைத்துள்ளது. போலித் துவாரகா எனத் தோன்றிய பெண் தனது சாவின் பதையில் பயணம் செய்கின்றார். தொடர் பாதுகாப்பு அச்சுறுத்தல் என அவர் அனுபவித்துவரும் சித்திரவதைகள் பெரும் உலக மாபியாக்களின் கரத்தில் உள்ளது. அதன் தொடராக மிகப்பெரும் பண மோசடிகள் நடைபெற்று வருகிறது.
இந்தச் சர்ச்சையில் தமிழ் மக்களிற்காகவும் தாயக மண்ணிற்காகவும் எந்த சுயநலமும் இன்றி பெரும் இன விடுதலைக் கனவுகளோடு தங்கள் உயிரையே மண்ணிற்கு விதையாக்கிய மாவீரர்களும் அந்த மாவீரர்களின் இழப்பை நினைத்தபடியே தினமும் கவலையோடும் கண்ணீரோடும் தங்கள் நாட்களை கடத்தும் ஒவ்வோரும் மாவீரர்களின் நினைவுகளுடன் வாழ்கின்றார்கள். புரட்சி,எழுச்சி, அஞ்சலி நிகழ்வுகள் பந்தாடப்படப் போகின்றது. இப்போது ஏற்பட்டுள்ள முரண்நிலையால் தாயத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஆதரவாளர்கள் பெரும் குழப்பம் அடைந்து உள்ளனர். அதே வேளை மிகத் துள்ளியமான தெளிவுடன் தங்கள் இன விடுதலைச் செயற்பாடுகளை செய்தும் வருகின்றார்கள்
மக்களே விழிப்பாயிருங்கள் தங்கை துவராக என்கிற பெயரில் கருத்துகளை உலகத் தமிழர்களிடையே ஆழமாக வேரூன்ற வைத்து விட்டால் அதன் பின்னர் றோ நிறுவனத்தால் உருவாக்கப்படும் போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தமிழீழ தாயகத்தில் களமிறக்குவது இலகுவானது என்று எண்ணுகிறது. இலங்கை புலனாய்வுப் பிரிவும், இந்திய றோவும் புலம்பெயர் நாட்டில் உள்ள தங்கள் கைக் கூலிகளிடம் செயல்திட்டத்தினை திட்டமிட்ட முறையில் நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் நேர்த்தியான முறையில் புலிகளின் வாழ்வியல் வரலாற்றுச் சம்பவங்களும் கற்பிக்கப்பட்டு பலர் களமிறக்கப் பட்டுள்ளார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கையில் அதிகரித்துள்ள சீன-அமெரிக்க ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு விடுதலைப் புலிகளின் பெயரால் சில குண்டுவெடிப்புத் தாக்குதல்களை மேற்கொண்டு, இந்தியாவின் பிராந்திய நலனைத் தக்கவைத்துக் கொள்ள தங்கை துவாரகாவின் பெயரை பயன்படுத்த உள்ளது. போலித் துவாரகாவை வைத்து இதன் பிரகாரம் தங்களுக்கு கிடைக்கும் இலாபநட்டக் கணக்கை பார்க்கப் போய்விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.
இலங்கையில் இந்தியா தனது மூக்கினை நுளைக்கக் கிடைத்த முதலாவது காரணம் ஈழத்தமிழரின் அவலங்கள். ஈழத்தமிழரின் அவலங்களுக்கு உதவுகிறோம் என்று உள்நுளைந்து 2009 இல் அவர்களை முற்றான தமிழ் இனப்படுகொலை ஒன்றின்மூலம் அழித்தொழித்ததுவரை இந்தியா செய்த அனைத்துமே ஈழத்தமிழரின் பெயரில்த்தான்.
அன்று ஈழவிடுதலை என்று ஆயுதம் தாங்கிப் புறப்பட்ட ஒவ்வொருவனும் தன்நலனை விட்டு மக்களுக்காக என்றே புறப்பட்டனர். எந்த நேரமும் தன்னுயிர் போகலாம் என்றே பயணத்தைத் தொடங்கினர். இதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்க இயலாது. அவர்கள் மூலம் 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளும் பிரச்சாரம் அடுத்த கட்டமாக நடைபெற ஏற்பாடாகி உள்ளதும் தெரியவருகிறது.
தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். போராட்டக் களங்களில் எமது போராளிகள் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தார்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள் மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர்.
இந்திய மேலாதிக்கவாதம் மற்றைய தேசிய இனங்கள் மீது செய்யும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு, அட்டூழியங்களையும் ஆமோதிக்கும் போலித் தமிழ் தேசிய அபிமானிகளுக்கு சொல்லிக்கொள்ளும் இந்தியா தங்கை துவாரகா என்று சொல்வது திரைமறைவின் போலித்தனம். பூனை பால்குடிக்கும்போது கண்களை இறுக மூடிக்கொள்கிறதாம், ஏனென்றால் முழு உலகும் இருண்டுவிட்டதால் தன்னை எவரும் காணமாட்டார்கள் என்று, அதுபோலத்தான் கண்களை இறுக மூடிக்கொள்கிறது இந்தியா.
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் பேரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் பெயரை களங்கப்படுத்திப், பயன்படுத்தி இனவிரோத மோசடி செயலில் ஈடுபடுவது மிகவும் மோசமான செயலாகும்.
அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது. இப்படி செயற்படுபவர்கள் தமிழினத் துரோகிகள் எனக் கருதப்படுவார்கள். எனவே மக்களும் தற்போது விழிப்படைந்துள்ளனர். எமது தேசியத் தலைவரையும் அவரது கும்பத்தையும் களங்கப்படுத்தும் சதிகளை முறியடிப்பார்கள் என பெருமை கொள்கின்றேன்.
மக்கள் மத்தியில் தேசவிரோதிகளினால் சில குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தி புலனாய்வு ரீதியாகத் தங்கள் செயற்பாடுகளை மக்கள் மீது திணிக்கின்றார்கள். துவாரகாவின் பெயரில் மக்களை ஏமாற்றிய போலி யார் என கண்டு பிடிக்கப்பட்டது. அந்தப்போலிக்கு பின்னால் செயற்படுபவர்கள் யாரென்பதும் கண்டறியப்பட்டது. அதன் பெயர் விபரங்கள் முழுமையினை விரைவில் உங்கள் பார்வைக்கு தருகின்றேன். போராளிகளில் சிலர் இன்னும் அந்தச் சதிவலையில் அகப்பட்டுள்ளார்கள் அவர்களையும் மீட்டெடுக்கவேண்டும்.
எமது தேசத்தின் வரலாற்றில் மாவீரர்கள் சங்கமமாகி நிற்கிறார்கள் தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. நாம் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக் காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்து முற்றுப்பெறுகிறது. ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- நிலவன்.