நவ-27 மாவீரர் நாள் என்பது உணர்வுள்ள ஒவ்வொரு மானத்தமிழர் நெஞ்சங்களிலும் தேசவிடுதலையை பற்றவைக்கும் புனிதநாள். தமிழீழ விடுதலைக்காக தங்களை கொடையாக தந்தவர்களை நினைந்து விளக்கேற்றி அழுதுதீர்த்து தலைநிமிரும் தமிழின எழுச்சிநாள்.
ஆனால் இப்புனித நாளில் எமது தேசிய ஆன்மாவை சிதைக்கும் நோக்கோடு இந்திய-சிறிலங்கா கூட்டு புலனாய்வின் சதித்திட்டத்திற்கு துணைபோய் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தேசியத்தலைவரையும் அவர் குடும்பத்தையும் குறிப்பாக தங்கை துவாராகவின் அர்ப்பணிப்பான தியாகத்தையும் களங்கப்படுத்தி,
தங்கையின் உரையென போலி உரை வெளியீடுகளை வெளியிட்டுள்ளமையானது உடனடியாக அறுவைச்சிகிச்சை மூலம் சீர் செய்யப்பட வேண்டிய அபாய கட்டத்தை எட்டியுள்ளதை உணர்த்தி நிற்கின்றது.
இது தேசத் துரோகத்திற்கு இணையான குற்றமாகும். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது.
தெரிந்து தொட்டாலும் தெரியாமல் தொட்டாலும் நெருப்பு சுடும். அது போன்றே தெரிந்தோ, தெரியாமலோ அல்லது ஆர்வக்கோளாறினாலோ எமது இனத்தின் தேசிய ஆன்மாவைச் சிதைக்கும் இவ்வகைச் செயற்பாடுகள் தேசத்துரோக குற்றமாகும்.
வரலாறு கொடுக்கப்போகும் தண்டனையிலிருந்து இவர்கள் எவருமே தப்பிவிடமுடியாது.
போராளி புலவர்