நிதிக்கொள்ளையை அழிக்க புலத்தில் வாளெடுத்து வீசத்துணிந்தவன் யாரடா தம்பி….!
வெள்ளையுடுத்தி கொள்ளையடிக்கும் கள்வர்கள் மீது…… புலத்தில் வாளையெடுத்து வீசத்துணிந்தவன் யாரடா தம்பி……!
புலியுக்கு வாலாகி புலத்தில் பணம்சேர்த்து திரிந்தவர்கள்…….
இன்று தாம் புலியெனக்கூறி புலம்பெயர் மக்களிடம் பணம்பறிக்க துணிந்தவேளை…..
புயலாக எழுந்து கள்வர் கைதறிக்க துணிந்த வீரபுத்திரன் புலத்தில் யாரடா தம்பி…….!
ஈழத்தில் இருந்தால் அன்று இயக்கத்தில் இணையவேண்டும்,……
ஈழத்தை விட்டுவந்தால் இயக்கமென்ன செய்யுமென்று,…….
ஈழத்தை அன்று விட்டுவந்தோர் புலத்தில் நின்றுகொண்டு,……
இறுதிப்போர் கண்டவரை உறுமிக்கொண்டு கேட்கின்றார் நீங்கள் ஏன் சாகவில்லை என்று……!
புலம்பெயர் மக்களிடம் தாம் புலிகளெனப் பொய்கூறி,……..
நிறையக்காசு பறித்தவரை…..
இறுதிப்போர் கண்டுவந்தோர் இனங்காட்டி கொடுப்பாரெண்டு ஊகித்த புலம்பெயர் கள்வர்கூட்டம்,……
வந்தவரை துரோகியெண்டு புலம்முழுக்க வசைபாடிவிட்டு,…….
நைசாக நழுவி பைசாவோடு பதுங்கிவிட்டார்.
வாளெடுத்து எவனும் புலத்தில் கேள்விகேட்க மாட்டானென்று,…….. வாய்நிறைய சிரிப்போடு புலத்தில் வீதிவலம் வந்தவர்க்கு,……….
தோலுரிக ஒருவன் புலத்தில் துணிந்துவிட்டான் என்றவுடன்,……..
தம் வாலை சுறுட்டிக்கொண்டு வாளெடுத்து வெட்டுகிறார்,……….
வாளெடுத்து வெட்டுகிறாரெண்டு,…….
இப்போ ஓலமெடுத்து கத்துகிறார்,……. புலத்துமக்களை ஏமாத்தி தம்மை புலியென்று சொன்னவர்கள்……….!
புலியாக ஒருநாளும் தாம் இருக்காத போதும்,…..
துணிவாகத் தம்மை புலியெனக்கூறி,….. புலிகளுக்கே அல்வாகாட்டும் புலத்து பூனைகளுக்கு,……
தாம் புலியெனக்கூற புலம்பெயர் மக்கள்தான் கிடைத்தார்கள்போல……..!
புலியாக்கித் தம்மை வரியாக்கி நின்ற தலைவேங்கைப் படையோடு,…….
சமமாக்கி தம்மை எடைபோடும் கள்வர்க்கு,…….
புலத்தில்தான் தாம் புலியெனச் சொல்வார்களே அன்றி,………
தாய் நிலத்தில் நின்று சொல்ல அன்று தைரியம் ஏன் வரவில்லை…….!
வலிசுமந்த வேங்கையோடு புலத்தில் பகிடிவிட்டு பார்ப்பவர்க்கு,……
வாளெடுத்துப் புலத்தில் தோள்கொடுக்கும் வீரனுக்கு,…….
நீர் யாராகிலும் பறவாயில்லை உம் காரியம் தொடரட்டும்,…….
புலக்கள்வர் தொலையட்டும்…….!
விடுதலைக்குரல்.