இனவாதசெயற்பாடுகளை பகிரங்கமாக முன்னெடுக்கும் ஞானசார தேரரை கைது செய்வதற்குகிட்ட நெருங்குவதற்கு கூட பொலிஸாரால் முடியாதிருக்கின்ற அதேசமயத்தில் தான்முல்லைத்தீவில் மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை எழில் ராஜனைவிசாரணைக்காக அடிக்கடி அழைத்து அச்சுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் அதிருப்தி வெளியிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிதி அமைச்சின் ஒதுக்கீட்டுச்சட்டத்தின் கீழான தீர்மானத்தை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது மக்கள் தற்போது தமது உறவுகளை தேடியும், சொந்த நிலங்களை தேடியும்போராடிக்கொண்டிருக்கின்றார்கள். 92 நாட்கள் கடந்தும் தமது போராட்டத்தினைதொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் எந்தஅரச தலைவரும் கவனத்தில் கொள்ளவில்லை.
இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளை நினைவு கூருவதற்காக கடந்த 18ம்திகதி மூன்றாவது வருடமாகவும் மேற்கொண்டிருந்தோம்.
அவ்வாறிருக்கையில் தனதுபங்கு மக்கள் 500 பேரை பறிகொடுத்து அவர்களுக்காக நினைவுகூரும் செயற்பாடுகளைமுல்லை மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை எழில் ராஜன்மேற்கொண்டிருந்தார்.
உயிர் துறந்த மக்களை நினைவுகூரும் முகமாக முல்லைத்தீவு சின்னப்பர் ஆலயவளாகத்தில் நினைவு படிகத்தினை உருவாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தநிலையில் கடந்த 17ம் திகதி அவரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவிசாரணை மேற்கொண்டார்கள்.
மறுதினம் அவருடைய நினைவு கூரல் நினைவேந்தல் நிகழ்வுக்கு எதிராக நீதிமன்றதடையுத்தரவையும் பெற்றுக்கொண்டார்கள். அதற்கு அடுத்த தினமான 19ம் திகதிமீண்டும் அருட்தந்தையையும், கற்களில் பெயரினை பொறித்த சிற்பியையும்வவுனியாவுக்கு அழைத்து விசாரணைகளை நடத்துகின்றார்கள்.
இவையெல்லாம் எந்த அடிப்படையில் நடைபெறுகின்றது என்று சற்றுசிந்தித்துப்பாருங்கள்.
தமிழ்மொழி பேசும் அருந்தந்தைக்கு இவ்வாறான நிலைமைகள்இருக்கையில் இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம், சமத்துவத்தைப் பேணுவோம்என்றெல்லாம் வாக்குறுதிகளை கூறிய ஆட்சியாளர்களின் காலத்தில் பொதுபலசேனாவின்ஞானசார தேரர் மீண்டும் இனவாதச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.
ஞானசாரதேரரை கைது செய்வதற்கான அதிகாரம் பொலிஸாரிடத்தில் இருந்தும் அவரைநெருங்குவதற்கு அவர்கள் அச்சமடைகின்றார்கள். ஆனால் அப்பாவியான அருட்தந்தையைஅழைத்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துகின்றார்கள்.
இவ்வாறான பாரபட்சம் நீடிக்கின்ற நிலையில் நல்லிணக்கம் எவ்வாறு ஏற்படும்.பொருளாதாரம் எவ்வாறு மேம்படும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.