வலிசுமந்த விழிநிமிர்வுடன்
‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 – பாகம்01 பாகம்02
நூல் வெளியீடு.
இலங்கைத்தீவில் பரந்துவிரிந்த கொடிய போரில், வாழ்வதற்காய் போராடிவேண்டிய ஒருவரலாற்றுக் கட்டத்தில், எமது தமிழினம்சந்தித்த சவால்களும் அழிவுகளும் பெரியவை.
உலகவல்லாதிக்க நாடுகளின் ஒட்ட மொத்த ஆதரவோடு சுதந்திரத்திற்காய் எழுந்த குரல்கள் பயங்கரவாதம் என்ற ஒற்றைச்சொல்லுக்குள் சிறுமைப்படுத்தப்பட்டு, அழிக்கப்பட்டது.
சமாதானத்திற்கான போர் என விரிக்கப்பட்ட சதிவலையில், மனிதாபினமனத்திற்கான போர் என மாற்றப்பட்ட மாறுபட்டசூழலில், உலகமே மௌனமாக பார்த்திருக்க எமது உறவுகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இழந்த வரலாறும், அப்போரின் அவலங்களையும் சிறைவாழ்வையும் புலம்பெயர்ந்தும் தமது சுதந்திர வாழ்வை உறுதிப்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில், எமது மக்கள் உள்ளனர்.
உலக இராணுவ வரலாற்றில் எந்தவொரு இராணுவமும் செய்யாத மிகக் கீழ்த்தரமான, மிருகத்தனமான ஈனச் செயல்களை அங்கே எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்ததல்லவா?
அங்கே களத்திலே வீழ்ந்த பெண்களின் துயிலுரிந்த படைவீரர்களையும், பிணத்துடன் புணர்ந்த காமுகர்களையும் இறந்த பெண்களின் மார்பினை அறுத்த சிங்களத்தின் கொடுமையை யாரும் அறிந்ததுண்டா?
வயது வந்த மகனும் தாயும், வயது வந்த மகளும் தந்தையும், வயது வந்த அண்ணனும் தங்கையும், வயது வந்த மச்சானும் மச்சாளும்இ வயது வந்த அயலவனும் அயலவளும், அதிகாரியும் பணியாளரும், மருத்துவரும் தாதியும் நிர்வாணமாய் இராணுவத்திடம் சரண் அடையும் துர்ப்பாக்கிய நிலையை எம்மனித மொழிகளில் சொல்லிட முடியும்.
இன்னும் எத்தனை!
எத்தனை!! கொடுமைகள்!!!
உள்ளதோ அத்தனை கொடுமைகளும் அந்த முள்ளிவாக்கால் மண்ணிலே நடந்தேறின.
காலம்:- 14-07-2024 ஞாயிறுக்கிழமை
நேரம் :- பிற்பகல் 12.00 மணி மாலை 06.00 மணி
இடம் :- SCARBOROUGH CIVIC CENTRE
150 BOROUGH DR,
SCARBOROUGH, ON M1P 4N7
அன்பான உறவுகளே
முள்ளிவாய்க்கால் பறித்துக் கொண்டவைகளிலிருந்து மிச்சமாய் இருக்கும் அந்த நினைவுகள் இன்னமும் மௌனித்தே கிடக்கின்றது, நம்மிடம் இருக்கும் துயர் வலிமைபெறவேண்டும். முள்ளிவாய்க்கால் தந்த துயர நினைவுகளை நினந்துருகுதல் அந்த வலிமையைத் தரும் கணங்களாக இருக்கும்.
எமது அவலவாழ்வும், எமது இனம்பட்ட வேதனைகளும், உலகத்தின் கதவுகளுக்கு உரியமுறையில் சொல்லப்படவில்லை.இதனை பதிவுசெய்யவேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.
அந்தவகையிலேயே எமது மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவழிப்பு போரை நினைவுகொள்ளும் மே மாதத்தின் கனத்த நினைவுகளைச் சுமந்தவாறு இரண்டு படைப்புகளை முன்கொண்டு வருகின்றோம்.
புலம்பெயர் வாழ் ஈழப் படைப்பாளியான அறிவுச்சோலை நிலவனின் ‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 பாகம் 01, பாகம் 02 எமது உறவுகளின் குரல்களை பதிவு செய்திருக்கின்றது.
நடந்து முடிந்த பேரவலத்தின் விளைவுகளை இனியாவது கூட்டாக எதிர்கொள்ளல் வேண்டும். இதிலிருந்து கூட நாங்கள் கூட்டாக மீள எழவில்லை எனில் வரலாறு ஒரு போதும் மன்னிக்காது
இப்படைப்புகளின் வெளியீட்டு நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
நன்றி
தொடர்புகளுக்கு
திரு சிவமோகன் – 416 731 6006
திரு இராஜ முகுந்தன் – 647 702 5968
திரு ஐ . மறவன் – 437 448 229