மான்செஸ்டர் தாக்குதலில் 8 வயது மகள் பலியானது தெரியாமல் அவரின் தாய் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் 22 பேர் பலியாகினர், 119 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த இளைய நபர் 8 வயதான Saffie Rose Roussos என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மிக கொடுமையான விடயம், மகள் இறந்தது தெரியாமல் அவரது தாய் Lisa Roussos மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மான்செஸ்டரில் நடந்த நிகழ்ச்சிக்கு Saffie Rose Roussos தனது தாய் Lisa Roussos மற்றும் சகோதரி Ashlee Bromwichயுடன் சென்றுள்ளார். தாக்குதலில் சிக்கிய Saffie Rose Roussos பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த Saffie Rose Roussosவின் தாயும், சகோதரியும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை Saffie Rose Roussosவின் தாய் Lisa Roussosக்கு நினைவு திரும்பவில்லை என குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குடும்ப நண்பர் சல்மான் படேல் கூறியதாவது, தற்போது வரை Saffie Rose Roussos இறந்தது இன்னும் Lisa Roussosவுக்கு தெரியாது, இது மிகவும் அதிர்ச்சிகரமான தருணம்.
பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.