ஈழப்படுகொலையின் சுவடுகள்- தமிழ் வாழ வேண்டும், தமிழன் சிறப்புற வாழ வேண்டும். தமிழ் மண் எதிரியிடமிருந்து மீள வேண்டும் என தம்மை அர்பணித்தவர்களை வணங்கி, மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோருக்கும் இ ந் நூலின் ஆசிரியர் திரு நிலவன் அவர்களுக்கும் மற்றும் அன்பான உறவுகளுக்கும் என் அன்பு வணக்கம். ஈழப்படுகொலையின் சுவடுகள் என்ற இ ந் நூலின் படித்தவற்றில் என்னுடைய பார்வையில் சிலவற்றை கூறலாம் என்றிருக்கிறேன்.
ஏனைய புத்தக வெளியீடுகள் நடக்கும் போது அவை பெரும்பாலும் புனைக்கதைகள், கட்டூரைகள் என ஏதோ ஒன்றைச் சொல்ல வருகிறார் என்ற ரீதியில் நோக்குவோம். ஆனால் இந்த நூல் அப்படியல்ல. கனத்த இதயத்தோடும், கண்களில் கண்ணீரோடும், அவர்களில் பலர் கடந்து வந்தவை, இறுதி யுத்தத்தில் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இறந்தவர்கல் கூட இப்புத்தகத்தைப் படிக்கும்போது அந்த நிமிடங்களை நாட்களை கண்முன்னே கொண்டுவரும் ஒரு சாட்சியாகவே இ நூலினை பார்க்க முடியும். எனக்கு நிறைய ஆதங்கமுண்டு என்னவென்றால் ஈழத்தமிழரின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்படவில்லை என்பது. எ ந் நிலையோ தமிழ் அறிஞர்களைக் கொண்ட இனம் ஈழத்தமிழர் பற்றிய வரலாறுகளை ஆவணப்படுத்த முயலவில்லை. அதனால்தன ஆசிரியர் ரீதியாக பல இன்னல்களை அனுபவிக்கிறோம். இந்தியாவிலிருந்து போய் குடியேறியவர்களுக்கு ஏன் ஈழம் என்று கேட்கிறார்கள் ஆனால் போராட்டம் ஆயுதமயப்படுத்தப்பட்டபோது தமிழர் இவற்றை உணர்ந்து அவற்றையும் ஆவணப்படுதாலானார். அதனால் இப்போது எங்களுக்கு இலகுவாக தரவுகள் கிடைக்கின்றன.
அந்த வகையில் இந்த நூல் ஒர் ஆவணப்படுத்துதல் மட்டுமின்றி போராட்ட காலத்தின் போர்க்குற்ற சாட்சியாக எழுந்து நிற்கிறது.
எவருமே தட்டிக் கழித்துவிட முடியாத அளவிற்கு புகைப்படங்கள், ஆவணங்கள் என அனைத்தும் மிகத் தெளிவாக அச்சிடப்பட்டு சிறப்பான ஒரு சாட்சியாக எம்முனே கிடக்கிறது, இதிலுள்ள புகைப்படங்களைக்கூட பார்க்கம் எமக்கு மன நிலை அத்தனை பாதிப்பை தருகிறது என்றால் அந்த இடத்தில் அந்த இன்னல்களிஅ அனுபவித்தவர்களின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பது தான் என்னை ஏதோ செய்தது.
புத்தகத்தில் உள்ள அனைத்தையும் கூற முடியாவிட்டாலும் சிலவற்றை தொட்டுச் செல்ல முயல்கிறேன்.
ஆசிரியரின் பெயரில் நிஜத்தடன் நிலவன் என்று அமைந்திருபது மிகவும் பொருத்தமே அதை உண்மையின் சாட்சி நிலவன் என்றும் கூறலாம். ஈழப் போராட்டத்தில் தமிழருக்கு இழைக்கப்பட்ட அ நீதிகளின் சாட்சியாக நிற்கிறது இ ந் நூல்.
பாகம் 1ல் 42ம் பக்கத்தில் பௌத்தம் இங்கு வருவித்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வளர்ச்சியடைந்த ஒர் இனம் வாழ்ந்ததாக புதைபொருள் ஆய்வில் கண்டதாகவும், 1833ல் வலிந்த இணைப்பொன்றில் மூலம் தமிழர் தாய்கப் பகுதிகள் சிங்களப் பகுதிகளோட் இணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த கட்டமைப்பு உள் நிலை பிரித்தலினால் ஏற்படுத்தியதாகவும் அதனால் தான் தமிழர் தமக்கான அதிகாரங்களைப் பெறமுடியவில்லை, என்பதையும் விளக்கி உள்ளார். அது மிகச் சிறந்த ஒரு விளக்கமாக உள்ளது. இருப்பினும் அ ந் நாட்களில் அதிக கல்வியறிவு உள்ளவர்களாக தமிழர்களே இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரித்தானிய அரசுடன் பெரிய பதவிகளில் கூட பல தமிழர்கள் இருந்தார்கள். ஆனால் எவருமே தமிழருக்கு எதிர்காலத்தில் பல அரசியல் சிக்கல்கள் ஏற்படும் எனவே எமக்கும் அதிகாரங்கள் அடங்கிய ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழகள் சிந்திக்காதது தமிழர்களது துர்திஸ்டம் என்றே கூற வேண்டும்.
பாகம் 1ல் பக்கம் 49 தொடங்கி 52 வரை தமிழருக்கு எதிராக சிங்கள அரசாலும் அதனது கூலிப்படைகளாலும், முஸ்லீம் ஊர்காவல் படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை பட்டியிலிட்டிருக்கிறார் ஆசிரியர். நடைபெற்ற இடம், தேதி என்பனவும் குறிப்பிடப்பட்டுளன. 1956 தொடங்கி 2009 உடன் முடியவில்லை இன்றும் சில தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரே ஒற்றுமை இன்றுவரை நீதி கிடைக்கவில்லை, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதுதான்.
ஐ நா வரை சென்று முறையிட்டாலும் மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்றுதான். இங்குள்ள நடைமுறை தங்களுக்கு ஏற்றவகையில் தாளம் போட கைப் பொம்மைகள் மட்டுமே பல நாடுகளுக்கு தேவையாக இருக்கிறது. அவர்கள் எது செய்தாலும் கண்டு கொள்ளக் கூடாது என்பது எழுதபடாத சட்டம். இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் அவரையோ போரையோ நிறுத்தமுடியவில்லையே, இன்றும் எத்தனை பிள்ளைகள் உதவி தொகை வழங்கினார்கள் என்பது தான் விவாதிக்கப்படுகிறது. தொடர்ந்து பாகம் 2ல் பக்கம் 6ல் இலங்கை ராணுவத்தினர் ஆழ ஊடுருவும் படையணி LRRPயின் தொடக்கம் அவர்களின் தாக்குதல் போராட்டத்தில் ஏற்பட்ட இழப்புகள் பின்னடைவுகள் பற்றி குறிப்பிடுகிறார். பின்னாலிள் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் அந்தப் படையினர் புலனாய்வில் பலர் கொல்லப்பட்டதையும் அவர்களில் அதிகம் பேர் தமிழர்களாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதுதான் எமது போராத்திற்கு ஏற்பட்ட சாபக்கேடு தமிழனை அழிக்க தமிழனையே பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு தமிழனும் துணைபோகிறார் கோடாரிக்காம்புகளான இவர்கள்தான் எத்தகைய ஒரு போராட்டம் ஒன்று இல்லாமல் ஆக்கப்பட்டது.
பாகம் 2ல் 97ம் பக்கத்திலிருந்து தொடங்கும் சிதறிக்கிடக்கும் இனவழிப்புச் சாட்சியங்களை திரட்டுவோம் என்று தொடங்கும் பதிவுகளில் புகைப்படங்களிலோ அதில் குறிப்பிடப்பட்டவற்றையோ வாசிக்கும் போது மன உறுதி எமக்கு இல்லாமல் இருந்தது. அத்தனை கோரக் கொடூரம், வஞ்சகம், அநீதிகளை சாட்சிகளோடு விபரிக்கிறது. நீதிகேட்டு நிற்கும் தமிழினத்திற்கு நல்லதொரு சாட்சியாக ஈழப்படுகொலையின் சுவடுகலும் நிச்சயம் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதனுடன் இன்ற்ம் உள்ள இனவழிப்புச் சாட்சியஙக்ளையும் திரட்டி மூடிக்கிடக்கும் நீதி தேவதையின் கண்களையும் சர்வதேசத்தின் கண்களையும் திறக்கச் செய்வதே தமிழர்கள் அனைவரதும் கடமையாகும் எனக் கேட்டு நிலவனின் இச்சிறந்த ஆக்கத்திற்கு எமது ஆதரவை தெரிவிக்க வேண்டும் எனக் கூறி இந்தச் சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு நன்றி கூடி விடைபெறுகிறேன்,
நன்றி வணக்கம்.
- திரு. ஜெயவசந்தன் நவரட்ணம்