புதுவை இரத்தினதுரை அவர்கள் தனது கவிதைகள் ஊடாக விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்த்திருக்கின்றார். இவர் யாழ்ப்பாணம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 03.12.1948. யாழ்ப்பாணம் புத்தூர் காளி கோயிலடியையும் திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளி கோயிலடியையும் சொந்த இடமாகக் கொண்டவர். கந்தையா வரதலிங்கம், வரதலிங்கம் பாக்கியம் ஆகியோரின் புதல்வராவார். அதனால், அவரது இயற்பெயர் “வரதலிங்கம் இரத்தினதுரை”. “புதுவை இரத்தினதுரை” என்பது அவரது பட்டப்பெயர், அதில் முன்னொட்டாக வரும் “புதுவை” என்பது அவர் பிறந்த ஊரான புத்தூரைக் குறிக்கும்.
இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய “இந்த மண் எங்களின் சொந்த மண்” பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வுப் பூர்வமான பாடல். ஒரு தேசத்தின் விடுதலைக் குரலின் மூச்சாக விளங்கும் பாடல்களுக்குள் பல புரட்சிகள் செய்து இன்று புதுமைகள் படைக்கும் கவிஞராக விளங்கும் புதுவையின் கவிதைத் தொகுப்புக்கள்.
இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய “இந்த மண் எங்களின் சொந்த மண்” பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வு பூர்வமான பாடலாகும்.
இவரது ஆக்கமாக
வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்:-
1.வானம் சிவக்கிறது (1970)
2. ஒரு சோழனின் காதற் கடிதம்
3. நினைவழியா நாட்கள்
4. இரத்த புஷ்பங்கள்(1980)
5.உலைக்களம்
6.பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் வெளிவந்த ஒலிநாடக்கள்
7.களத்தில் மலர்ந்தவை ( 01.02.1989 )
இவர் எழுதிய பாடல்களில் சில:- 1. இந்த மண் எங்களின் சொந்த மண்…
2• வேர்கள் வெளியினில் தெரிவதில்லை….
3 • காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே…
4 • பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே
5• காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று….
6• தீயினில் எரியாத தீபங்களே….
7• சங்கு முழங்கடா தமிழா….
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை – போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ளச் செய்தவர்…..
“இழந்து போனவனுக்கு வாழ்க்கைத் துயரம்
எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”
“துயரம் அழுவதற்காக அல்ல…, எழுவதற்காக”
இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர்,….. ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை…
“அட மானுடனே !
தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்”
“பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.”
“அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில்தானே.
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவாவதும்
தாய்நிலத்தின் மடியில்தானே.”
“நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்!
பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்!
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”
வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது பதினான்காவது வயதில் கவிதை எழுதத் தொடங்கி,முப்பத்தேழாவது வயதில் விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர்.
“ஒரு சிற்பக் கலைஞரும்” கூட எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை,
”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ! அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்கிறார்.
“இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்
எல்லைகள் மீறி யார் வந்தவன்.
நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா”
மனிதாபிமானம் தூங்கி விட்டாலும் சரி, தமிழர்களின் வரலாறுகள் அழிக்கப்பட்டாலும் சரி, புதுவையின் கவிதைகளுக்கு தமிழ் சமூகத்தின் வரலாற்றுப் பாதையில் தனித்துவமானதொரு அடையாளம் இருக்கும்.