அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர் வெளிநாட்டுப் பயணங்களில் இருக்கிறார்.
இன்று அவர் வாடிகனில் இருக்கும் போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் உரையாடியுள்ளார்.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக குடியரசுக் கட்சி சார்பில் கடந்த ஆண்டின் நடுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்தாண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராகவும் பதவியேற்றார்.
முன்னதாக, அவரது பிரசாரத்தின்போது, கறுப்பினத்தவர்களுக்கு எதிராகவும் அகதிகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக வெறுப்பைக் கக்கும் பேச்சை உதிர்த்து வந்தார்.
இதைக் கவனித்த போப் பிரான்சிஸ், ‘வேறொரு நாட்டினரை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் எல்லையில் சுவர் எழுப்புவது பற்றி யோசிக்கும் ஒரு நபர் உண்மை கிறித்துவர் அல்ல என்று கடுமையாக சாடினார்.
இதனால் இருவருக்கும் இடையில் இணக்கமான சூழல் இல்லாத நிலை இருந்தது.
இந்நிலையில் ட்ரம்ப் மற்றும் போப் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்த சந்திப்பின்போது ட்ரம்ப், ‘நமக்கு அமைதி பயனளிக்கும். உங்களுடனான சந்திப்பை மறக்கவே மாட்டேன்.
அனைத்துக்கும் நன்றி. நீங்கள் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.