திருகோணமலை பகுதியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக நிலாவெளி புறாமலை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படகொன்று கவிழ்ந்ததில் குறித்த படகில் பயணித்த இருவர் காணாமல் போயுள்ளனர்.
இன்று காலை தொழில் நிமித்தம் கடலுக்கு சென்றவேளை ஏற்பட்ட காற்றுடன் கூடிய மழையின் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன இருவரும் விஜிதபுற பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த மீனவர்களை தேடும் பணிகளில் திருகோணமலை கடற்படையினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.