டென்மார்க்கில் வசித்து வரும் பெண்ணொருவர் இலங்கையிலுள்ள தனது தாயை தேடி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
38 வயதான சந்திரா ஹார்ம்ஷன் தனது தாயை தேடி வருவதாகவும், அது தொடர்பான ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சீலவத்தி காலுஹெதர என்ற பெயர் கொண்ட தாய், கண்டி வைத்தியசாலையில் பிறந்த தனது குழந்தையை, டென்மார்க் தம்பதிக்கு தத்துக் கொடுத்துள்ளார்.
சந்திரா காலுஹெதர என்ற குழந்தை 15.05.1978ம் ஆண்டில் பிறந்துள்ளார்.
1979ம் ஆண்டு ஜூலை 27ம் திகதி Birte Andersen மற்றும் Peter Harmsen தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வயது குழந்தையாக டென்மார்க் சென்றுள்ள சந்திராவுக்கு தற்போது 38 வயதாகும் நிலையில், அவரது சொந்த தாய் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் இலங்கை வந்து தனது தாயை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
தனது சிறுவயது புகைப்படம், தாயின் புகைப்படம் மற்றும் பிறப்பு அத்தாட்சி சான்றிதழ்கள் என்பவன்றை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
தனது தாய் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் தகவல் அறிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.