“ஈழத் தமிழ் நாடக அரங்க ஆளுமைகள்” பெருநூல் – 2025
“சங்கநாதம்” கலையகம் – தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் நாடக அரங்கக் கலை ஆளுமைகளின் கலையுலக வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பாக “ஈழத்து நாடக அரங்க ஆளுமைகள்” என்னும் பெருநூலினை உருவாக்க உள்ளதை தங்களுக்கு அறியத்தருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இந் நூல் ஈழத் தமிழ் நாடக அரங்கக் கலை வளர்ச்சிப்போக்கினச் சொல்லும் வரலாற்று ஆவணமாக இத்துறையில் ஈடுபட்டிருந்தோர் மற்றும் இயங்குவோரின் கலையுலக வாழ்கை வரலாற்றின் எழுத்துப் பதிவாகவே இடம்பெற இருப்பதை கவனத்திற் கொள்ளளாம். இந் நூல் ஈழத்து நாடக அரங்க ஆளுமைகளை ஒருமித்த தளத்தில் சேர்ப்பதும், அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரே நூலில் இடம்பெறச்செய்து உலகெலாம் பரவிடச் செய்வதுமே முதன்மை நோக்காகும்.
உலகெங்கும் பரந்து வாழ்ந்தாலும் ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 40 வயதிற்கு மேற்பட்ட ஈழத் தமிழ் நாடக அரங்கியல் துறைசார் கலைஞர்களாகிய நாடக நடிகர்கள் கூத்தர்கள், நாடக ஆடல் பாடல் இசைக் கலைஞர்கள், நாடக எழுத்தாளர்கள், நாடக நெறியாளர்கள், நாடக அரங்கியல் தொழிநுட்பக் கலைஞர்களாகிய ஒலி-ஒளி அமைப்பாளர்கள், வேட உடை மற்றும் ஒப்பனையாளர்கள் ,அரங்க அமைப்பு மற்றும் முகாமையாளர்கள், நாடகத் தயாரிப்பாளர்கள், மரபுவழிக் கலைகளாகிய கூத்து மற்றும் இசை நாடகக் கலைஞர்கள் அண்ணாவியார்கள் என அனைத்து ஆளுமைகளும் இப்பெரு நூலிற் பதிவாகும் வகையில் தங்களது கலையுலக வாழ்கை வரலாற்றினை அனுப்பி வைக்க முடியும்.
நாடகம் கூத்து மற்றும் இசை நாடக ஆற்றுகைக் கலைஞராக அல்லது நெறியாளர்களாக / ஆசிரியர்களாக / அண்ணாவிமார்கள் என கலைஞர்களாக வாழ்ந்து மறைந்தவர்கள் பற்றி அவர்களின் உறவினர்களோ, உரித்துடையோரோ , மற்றும் அவர்களின் மாணவர்களோ தகுந்த உறுதிப்படுத்தலுடன் அவர்களின் வரலாற்றினையும் அனுப்பிவைக்க முடியும்.
இப் பெருநூல் வாழ்க்கை வரலாறு, கலைவாழ்க்கை, நடித்த நாடகங்கள், நெறியாள்கை செய்த நாடகங்கள் கூத்துக்கள், பெற்ற விருதுகள், பட்டங்கள், பரிசுகள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய தொகுப்பாக வெளிவர ஏற்பாடாகின்றது.
ஏ4 தாளின் அளவில் 5 பக்கங்களுக்கு உட்பட எழுத்தின் அளவு 12 ஆக இருத்தல் வேண்டும். மின்னஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ, பணி மேம்படுத்துநர்கள் ஊடாகவோ கிடைக்கச் செய்யலாம்.
அனுப்புபவர் நூலில் பிரசுரிக்கத்தக்கதாக தங்களின் தனிப் புகைப்படம் மற்றும் அவர்கள் பங்கு கொண்ட நிகழ்வுகள் அவர்கள் நெறியால்கை செய்த நிகழ்வுகளின் முக்கிய 3 புகைப்படங்களையும் படக் குறிப்புக்களையும் அனுப்பிவைக்க முடியும்.
தொடர்பு கருதி தொலைபேசி எண் இடலாம். தொலைபேசி எண் பிரசுரிக்க விரும்புபவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படும்.
ஈழத்தினை மையமாகக் கொண்டு செயலாற்றும் இக்குழுமத்திற்கு உறுதுணையாக அனைத்து நாடுகளிலும் பணி மேம்படுத்துநர்களும் கலைஞர்களின் வரலாறுகளை சேகரிப்பாளர்களும் இயங்குவர்கள். இப்பெருநூலின் வெளியீட்டு விழாவானது பணி முன்னெடுப்புக் குழுமத்தினரால் தீர்மானிக்கப்படும் இடத்தில் ஒழுங்கு செய்யப்படும்.
இப்பெரு நூலில் உங்கள் நாடக அரங்கக் கலையுலக வாழ்க்கை வரலாறு பதிவாக்கம் பெற தகவல் திரட்டு பெற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி: 31.05.2025
கலையுலக வாழ்க்கை வரலாற்றுப் பதிவினை அனுப்புவதற்கான
மின்னஞ்சல் முகவரி:
மேலதிக தொடர்புகளுக்கு
புலனம் எண்
நிலவன் +61 493 502 021
மறவன் +1 (437) 448-2296
ஜீவிதன் +94 77 525 0998
கைபேசி எண் +61 493 502 021
நன்றி