அன்பார்ந்த போராளிகளே.!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பல வரலாற்றுச் சாதனைகளை படைத்த காலத்தில் தேசியத் தலைவரின் நேரடி வழிநடத்தலில் களமாடியவர்கள் நீங்கள். தமிழர் போராட்ட வரலாற்றில் புதிய புறநானூற்று வரலாறு படைத்த எம் ஒப்பற்ற பெருந்தலைவரின் உள்ளுணர்வாக, தேசியத் தலைவரின் வரலாற்றுப்படிமங்கள் பலவற்றை தாங்கிவரும் ஆக்கங்களை தொகுத்து நூலாக்கி,வரலாற்று ஆவணப்படுத்தல் ஒன்றினை செய்துவிட முயற்சிக்கின்றோம்.
தேசியத் தலைவரின் தன்னுணர்வுகளை, தூரநோக்கான சிந்தனையை, பட்டறிவின் பண்பினை, பல விடயங்கள் பற்றி அவாவி நிற்கும் அவரது ஆவல்களை, ஒரு பெரும் போரை நடாத்தி அதேசமயம் தமிழ் மக்களின் பல்துறை சார் வளர்ச்சிக்காக தமிழ்த்தேசத்தின் கட்டுக்கோப்பான எதிர்கால விருத்திக்கான அவரது எண்ணப்பாங்குகளை, தமிழ் மக்கள் அனைவருமே மிக்க விருப்புடன் அறியமுற்படும் அறிய விரும்பும் தேசியத் தலைவரின் ஆளுமை, அவரது தனித்த எண்ணங்கள் பற்றிய பூரண வடிவத்தையும், வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகளாக தங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இது எம் இளைய தலைமுறையினருக்கு ஒரு அதிசய நூலாக அமையப்பெறவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. ஆக்கங்கள் உண்மையானதும், ஆதாரபூர்வமானதாகவும் அமைவது மிகவும் அவசியமானது. இணைய ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ ஏற்கனவே வெளியான ஆக்கங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வடிவமைப்பு,தெளிவுபடுத்தல் நோக்கங்களுக்காக கருத்தில் மாற்றம் செய்யாமல் சில மாற்றங்களை நூலாக்க குழுவினர் மேற்கொள்வார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறோம்.
தங்கள் ஆக்கங்கள் கணனிப்படுத்தப்பட்டு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படுவதோடு, 200 சொற்களுக்கு மேற்படாதவாறு இருப்பதனை வரவேற்கிறோம்.
ஆக்கங்கள் 05 மே 2025க்கு முன்னர் அனுப்பிவைப்பது காலச்சிறந்தது.
அன்பானவர்களே! தங்களின் ஆக்கங்களுடன் தங்களைப் பற்றியதான சிறிய அறிமுக குறிப்பு ஒன்றினை எழுதி அனுப்புமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தங்களால் அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்களில் தெரிவு செய்யப்பட்டவை, எதிர்வரும் 08 மாதம் அளவில் நடக்கவிருக்கும் எமது தேசியத் தலைவரின் “வீரவணக்க நிகழ்வில்” வெளியிடப்படவுள்ள நூல் மூலம் உலகத் தமிழ் மக்களின் கைகளில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து உள்ளோம்.
தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறான ஒரு படைப்பாக்கம் வெளிவர அனைவரும் இணைந்து பயணிப்போம்.
மின்னஞ்சல் :- methaguvarikal@gmail.com
புலனம் :- +61 494 387 427
“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”
நிலவன்
தொகுப்பாளர்
நூலாக்க குழு
மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.