அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே!
ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இறுதிமூச்சுவரை களமாடி, தாய்மண்ணிலே விதையாகிய மாவீரர்கள் வரிசையில் எங்கள் ஒப்பற்ற தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களும் வீரவரலாறாகினார்.
தேசியத்தலைவர் படைத்துச்சென்ற வீரமிகு போராட்ட வரலாற்றை பெரும் ஆவணப் பொக்கிசமாக உருவாக்கி அதனை எம் எதிர்காலச் சந்ததிக்கும் உலகமெல்லாம் பரந்துவாழும் தமிழர் தலைமுறைக்கும் கையளிக்கும் உன்னத நோக்கோடு..
“கவிதைத்தொகுப்பு” ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே இந்த மண்ணை, மரபை, மக்களை நேசித்த அந்த மகத்தான மாபெரும் வீரத் தலைவனுக்கு…
உங்கள் கவிதைகளால் உயரிய காவியம் படைக்க தங்களிடமிருந்து…உணர்வுபூர்வமான கவிதைகளை வேண்டி நிற்கின்றோம். “இது உங்கள் தலைவனுக்கு நீங்கள் அர்ச்சிக்கும் கவிதைப் பூக்கள் ஆகட்டும்” அந்தக் கவிதைகள் எங்கள் தலைவன் மகிமைதனைக் கூறட்டும்.
சமர்ப்பிக்கும் கவிதை உங்களுடைய சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும் இணைய ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ ஏற்கனவே வெளியான ஆக்கங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
உங்கள் ஆக்கங்கள் கணனிமயப்படுத்தப்பட்டு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படுவதோடு, குறைந்தபட்ச கவிதை வரிகள் : நான்கு வரிகள் அதிகபட்ச கவிதை வரிகள் : நாற்பது வரிகள் மேற்படாதவாறு இருப்பதனை வரவேற்கின்றோம்.
தங்கள் ஆக்கங்கள் 05 மே 2025க்கு முன்னர் அனுப்பிவைப்பது காலச்சிறந்தது.
வடிவமைப்பு,தெளிவுபடுத்தல் நோக்கங்களுக்காக கருத்தில் மாற்றம் செய்யாமல் சில மாற்றங்களை நூலாக்க குழுவினர் மேற் கொள்வார்கள் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிக்கிறோம்.
தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறான ஒரு படைப்பாக்கம் வெளிவர அனைவரும் இணைந்து பயணிப்போம்.
மின்னஞ்சல் :- methagukavitai@gmail.com
புலனம் :- +61 494 387 427
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
நன்றி
நிலவன்.
தொகுப்பாளர்,
நூலாக்கக் குழு,
மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.