பிரித்தானிய மஞ்செஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பொலிஸார் தற்போது ஏழாவது நபரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், வார்விக்ஷியரைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மஞ்செஸ்டர் அரீனா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் குறைந்தது 64பேர் காயமடைந்தனர்.
இந்த கொடூரத் தாக்குதலை 22 வயதுடைய சல்மான் அபேடி (Salman Abedi) என்பவரே மேற்கொண்டுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அபேடியின் தந்தை ரமதான் (Ramadan) மற்றும் இளைய சகோதரர் ஹாஷெம் (Hashem) ஆகியோர் லிபியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மூத்த சகோதரன் இஸ்மாயில் (Ismail) தெற்கு மஞ்செஸ்டரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.