நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில், புனே அணி பெரிய திறமையாளர்கள் இல்லாமலே இறுதிபோட்டி வரை முன்னேறியது மகிழ்ச்சியளிப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பெருமிதமடைந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிபோட்டியில், ஒரேயொரு ஓட்ட வித்தியாசத்தில் மும்பை அணியிடம் நூலிழையில் புனே அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.
இந்நிலையில் இது குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், “இது ஒரு சிறந்த இறுதிப் போட்டியாக அமைந்தது. சிறந்த திறமையாளர்களை அதிகம் கொண்டிராத அணி புனே, இறுதிபோட்டி வரை வந்திருந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
தோனி ஒரு சிறந்த வீரர். அணியால் என்ன முடியுமோ அதை செய்து முடிக்க அவர் நிறைய ஆலோசனைகள் வழங்கி ஆதரவளித்தார்” என கூறினார்.