சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், உலகக் கிண்ணத்தை வென்றுள்ள மூன்று அணிகளை பின்தள்ளி பங்களாதேஷ் அணி முதலாவது முறையாக 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளை பின் தள்ளியே பங்களாதேஷ் அணி இவ்வாறு முன்னேறியுள்ளது.
ஒருநாள் தரவரிசை பட்டியலில் தென்னாபிரிக்க அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அவுஸ்ரேலியா 118 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 117 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இதனைதொடர்ந்து, நியூசிலாந்து 114 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், இங்கிலாந்து 111 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பங்களாதேஷ் அணி 93 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், இலங்கை 93 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், 88 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 8வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 79 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 52 புள்ளிகளுடன் 10வது இடத்திலும், சிம்பாப்வே 46 புள்ளிகளுடன் 11வது இடத்திலும், அயர்லாந்து 41 புள்ளிகளுடன் 12வது இடத்திலும் உள்ளன.